இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

அடம் பிடிக்கிறது ....!!!

வாழ்க்கையில் எத்தனையோ
வேசங்கள் போட்டு விட்டேன்
அத்தனை வேஷங்களும் கலைந்து
விட்டன -என் பாவம்
காதல் வேஷம் மட்டும்
என்னை விட்டு
கலையமாட்டேன் என்று
அடம் பிடிக்கிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

விட்டு போய் விடுவாள் ...!!!

எந்த வயதிலும் காதல்
வரலாம் -ஆனால்
கண்ட வயதிலும் காதலி
வரகூடாது ...!!!
காதலுக்காக வாழ்கிறேன்
காதலி வேண்டாம் -பாதகி
விட்டு போய் விடுவாள் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

துடித்து கொண்டிருக்கிறது ....!!!

எல்லோரையும் மீறி
என்னை காதலித்தாய்
அது எனக்கு தெரியும்
இப்போ என்னையும் மீறி
எங்கே சென்றாய் ..?
என் இதயம்
உன்னைப்போல் நடிக்க
தெரியாமல் துடித்து
கொண்டிருக்கிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காத்திருக்கிறேன் ...!!!

தெரியாமல் உன்னை காதல்
கொண்டேன் என்று -நீ
வருத்தப்படாதே ....!!!
காதலும் திருமணமும்
இறைவன் இணைப்பு ...!!!
இறைவன் கிருபை
இருந்தால் இணைவோம் ...
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

உன் நினையுகளுடன் நான் ...!!!

கடல் அலைபோல் உன் ...
எண்ணங்கள் அலைமோதி ...
கடற்கரை மணலை அலை ....
அள்ளி செல்வதுபோல் -நீயும் ..
என் இன்பத்தை அள்ளி....
சென்றுவிட்டாய் -இருந்தும் ....
ஒட்டி இருக்கும் மணல் போல்....
உன் நினையுகளுடன் நான் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்