இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ஆயிரம் முத்தங்கள்..!

உன் தந்தைக்கு பயந்து... 
தாயை சமாளித்து... 
அண்ணனிடம் பொய் சொல்லி 
பட்டும் படாமல்.... 
அந்த இரவில் நீ கொடுத்த 
ஒற்றை முத்தம் போல்
இல்லையடி..
இன்று என் அருகில் இருந்து
நீ தரும் ஆயிரம் முத்தங்கள்..!

எதுவும் நடந்து விடலாம் வாழ்வில்....!

இப்படித்தான் 
இந்தக் 
காதல் என்னுள் 
வந்தது என்று 
சொல்ல முடியாமல் 
இருப்பது போலவே 

இப்படித்தான் 
என் காதல் 
கல்யாணத்தில் 
முடியும் என்று 
சொல்லவும் 
முடியவில்லை.... 

கிரிக்கெட்டில் 
கடைசிப்பந்து வரை 
சுவாரஷ்யம் இருப்பது 
போல..... 
எப்போதும் எதுவும் 
நடந்து விடலாம் 
வாழ்வில்....!

சோகமாக இருக்காத்தீர்கள்

காதலிக்கும் போது
சோகமாக இருக்காத்தீர்கள்
சிரித்து கொண்டே இருங்கள்
அப்போதுதான் ....!!!
காதலில் தோல்வி
வரும் போதும்
என்னை போல் சிரித்து
கொண்டிருக்கலாம் ...!!!

திருமண முடிவால் ...!!!

எப்படியாவது அவளை
காதலிப்பது என்ற
அவஸ்தையில்
தொடங்கிய  காதல்

இப்போ எப்படி ...?

மறப்பது என்பதில்
மனம் துடிக்கிறது
பெற்றோரின் நிச்சயத்த
திருமண முடிவால் ...!!!

அவஸ்தையை நீயும் பட நேரிடும்….!!!

நீ
என்னை நேசிக்க
விட்டாலும் பரவாயில்லை
வேறு யாரையும் நேசித்து
விடாதே!

ஏனெனில் உன்னை
நேசித்து நான் படும்
அவஸ்தையை
நீயும் பட நேரிடும்….!!!