இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

எப்படி தாங்குவேன் ......?

வீணையின் நரம்புகள் .....
அசைந்தால் இசை .....
உன் கூந்தலின் முடிகள் ....
அசைந்தால் எனக்கு இசை .....!!!

இதயத்தில்- நீ
இரு-தாங்கி கொள்வேன் .......
நீயோ .......
குருதி இருக்கிறாய் .....
உடல் முழுதும் ஓடினால்.....
எப்படி தாங்குவேன் ......?

யானைக்கு இரண்டு ....
தந்தம் தான் மவுசு ......
உன் முத்து பற்கள்......
ஒவ்வொன்றும் தந்தத்தின் .....
மவுசு ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 03

என் பிரியமான மகராசி 02

போதும் உன் கண் .....
எறிகணை வீச்சு .....
இதயத்தை தவிர .....
உடல் முழுதும் ......
கருகி விட்டேன் .....!!!

நான் ......
கடவுளின் படைப்பு ......
நீ கடவுளாகவே .......
படைக்க பட்டவள் ......
அழகு தேவதைகளின் ....
வதனக்கடவுள் .........!!!

பூ என்றால் மரத்தில் .....
இருந்து பூக்க வேண்டும் ......
நீயோ பூவிலிருந்து பூத்தவள்......
பூமகள் ..........!!!

என்னை புதைத்த இடத்தில் ......
புல் தான் முளைக்கும் .....
உன்னை புதைக்கும் இடத்தில் .....
பூக்கள் மலரும் ........
அப்படியொரு அதிசயபிறவி ......!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 02

திங்கள், 5 செப்டம்பர், 2016

முழு முதல் கடவுள் .....!!!

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -07
தொடரும் ...

தேசிய விருது பாடல்

பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -06
தொடரும் ...

பொன் விழா .........!!!

நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -05
தொடரும் ...