இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

தோழியே மன்னித்துவிடு

தோழியே மன்னித்துவிடு
உன் தோழியே என் காதலி
அவளிடம் என்ன இருக்கிறது
என்னிடம் என்ன இல்லை
என்று கேட்கிறாய் ....?
என் உயிர் அவளிடம்
அவளுயிர் என்னிடம்
ஆனால்
உன் பார்வை மட்டுமே
என்னிடம் இருக்கிறது
உயிர் .......?

வியாழன், 19 செப்டம்பர், 2013

நட்பு என்பது பொதுவுடமை

காதல் என்பது தனியுடமை 
நட்பு என்பது பொதுவுடமை 
எல்லோரையும் காதலித்தால் 
நோய் ...!!!
எல்லோரையும் நட்பு செய்யாது 
விட்டால் நோய் ...!!!

மறையாது -நட்பு

பெற்ற வெற்றி தோல்வியால்
மறையும் ....!!!
இருந்த சிரிப்பு சோகத்தால்
மறையும் ....!!!
வட்டநிலா அமாவாசையால்
மறையும் ....!!!
கண்ணோடு காதல் தோல்வியால்
மறையும் ....!!!
மறையாது மறையாது மரணம்
வரை மறையாது -நட்பு 

கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்



கடும் உழைப்பாளிகள் 
காலுக்கு கீழ் மிதிக்கப்படுவார் 
மிதித்தாலும் பறவாயில்லை 
தூக்கியும் வீசப்படுவார் 
மனிதா -காற்றுக்க போது 
தூற்றிக்கொள் விசுவாசம் என்று 
என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!

கண்ணீர் என்ற ஒன்று இல்லாவிட்டால்



கண்ணீர் என்ற ஒன்று 
இல்லாவிட்டால் காதல் 
தோல்விக்கு முடிவு 
மரணம் தான் -நல்ல 
வேளை இறைவன் கண்ணீரால் 
கவலையை அழித்துவிடுகிறான்