இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 செப்டம்பர், 2016

ராஜ நடை .........!!!

நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -10
தொடரும் ...

மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -09
தொடரும் ...

சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -08
தொடரும் ...

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

என் காதலின் கருவி மட்டுமே ..........!!!

உன்னை வர்ணித்து ....
எழுத நான் உன் மீது ....
காதல் மோகம் ....
கொண்டவனல்ல ......
காதல் மீது காதல் ......
கொண்டவன் .......
நீ -என் காதலின் ......
கருவி மட்டுமே ..........!!!

உன் இதழ்களை வர்ணித்து .....
எழுதிய கவிதைகள் எல்லாம் ....
சிறப்பு கவிதை ......
சிறப்பிதழ் கவிதை .....
பக்கத்தில் சிறப்பாய் வருகிறது ......!!!

நீ
சேலை உடுத்து வந்தால் ....
அன்றைய கவிதை தலைப்பு ....
கவிதையாகிறது .....
பாவாடை தாவணியில் வந்தால் .....
பார்வையில் அதிகம் பெற்ற .....
கவிதை பகுதிக்குள் வருகிறது ....!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 05

பூட்டி வைத்திருக்கிறாயே....?

மனை கதவை திறந்து ..... 
வைத்திருக்கிறேன் ..... 
எப்போது வருவாய் என்று ..... 
நீயோ மனக்கதவை .... 
பூட்டி வைத்திருக்கிறாயே....? 

உன்னை நினைத்து கவிதை ..... 
எழுத சற்று கண்ணை மூடினேன் ..... 
அந்த நொடிக்குள் ஆயிரம் ..... 
பட்டாம் பூச்சியாய் வருகிறாய் ..... 
அருவியாய் வருகிறது கவிதை .....!!! 

நீ என்..... 
இதயத்தை கண்ணாடியாய் ...... 
பார்க்கிறாயா .....? 
வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!! 


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 04