இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 அக்டோபர், 2016

சின்ன கிறுக்கல்கள்

நீ .....
அருகில் இருந்தால் ...
நீதந்த வலி கூட .......
தெரியவில்லை ......!!!

நீ அருகில் ....
இல்லாததால்.....
இதயத்தின் துடிப்பு
கூடவலிக்கிறது ...!!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

-----

நீ
பேசுவது எனக்காக ...
நீ
சிரிப்பது எனக்காக ...
நீ
அழுவது எனக்காக ....
ஏன்
தெரியுமா நான்.. ..
வாழ்வது உனக்காக..!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

திங்கள், 3 அக்டோபர், 2016

சென்றியூ - கவிப்புயல் இனியவன்

நகைத்தாள்
நகையை இழந்தேன்
நகை திருட்டு

$
சென்றியூ
கவிப்புயல் இனியவன் 

கற்றுதந்த விலங்குகள்

கற்றுதந்த விலங்குகள்
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை


இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

இறந்த பின்னரும் 
நிம்மதியில்லை
மர்ம மரணம்

&

மனித வடிவில் சுற்றும்
எமதர்மர்கள்
போலி டாக்டர்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சின்ன (S) மன (M) சிதறல் (S) 04

சிலநேரம் .....
கனவு கன்னியாய் ....
வருகிறாய்....
சில நேரம் ....
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!

@@@

நீ
என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!

@@@

நீ
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
என்று நம்பி விட்டேன் ....!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்