இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 மார்ச், 2014

உயிர் மூன்றெழுத்து ,,02

கல்லை செதுக்கினேன் உன் உருவம் 
கண்ணால் செதுக்கினேன் நம் காதல் 
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி

உயிர் மூன்றெழுத்து ..01

என் இதயத்தில் குடியிருப்பவளே 
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என் 
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி

இன்று காதலித்தேன்

காதல் ஒரு ஊன்று
கோல் தடி நம்பிக்கை
குறைந்தவனுக்கு
நீ காதலையே
தரமறுக்கிறாய்...!!!

உலகில் ஊட்டசத்து
நிறைந்த உணவு
காதல் -உன்னிடம்
சத்து குறைவாக
இருப்பது ஏன்...?

நேற்று பார்த்தேன்
இன்று காதலித்தேன்
நாளை தோற்றேன்
என்பது காதல் இல்லை ...!!

கஸல் தொடர் 665

ஞாயிறு, 16 மார்ச், 2014

காதல் என்ன பாவம் செய்தது ....!!!

முன்னோக்கிய காதல்
பின்னோக்கி  செல்ல
காதல் என்ன பாவம்
செய்தது ....!!!

வெளிச்சத்தில் நின்று
காதலை பார்க்கிறேன்
நீ இருட்டில் நிற்பதை
மறந்து விட்டேன் ....!!!

எத்தனை நாள் தான்
சொல்வாய் இன்று போய்
நாளை வா என்று
மௌனத்தால் ....?

கஸல் தொடர் 663

காதலியும் நீதான்

காதலின் அமிர்தத்தை
நான் தருகிறேன்
நீ விசத்தை தருகிறாய்
இனிக்கிறது ....!!!

இரட்டை வீதியில்
அலங்கரித்து சென்ற
காதல் -இப்போ
ஒற்றையடி பாதையில்
ஒடுங்கியுள்ளது ....!!!

நான்  கண்ட
காதலியும் நீதான்
சண்டாலியும் நீதான்
காதலில் வாழ்கிறேன் ...!!!


கஸல் தொடர் 662