இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
--------------------------------------------------
மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)

கவிப்புயலின் ஹைக்கூக்கள்
--------------------------------------------

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை
கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு
அடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.



^^^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்


" குடும்ப தலைவர் மரணம் " வழமையான ஒரு நிகழ்வு "ஒன்பது பிள்ளைகளும் ஓலம் " இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. " "கருத்தடை செய்த நாய் சாபம் " தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.

மேலும் தொடரும்.........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக