இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 அக்டோபர், 2017

காற்றுள்ள போதே தூற்றிவிடு...

 நீந்த மறந்த மீன்கள்
----------------------------
வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை........

தவறவிட்டஒவ்வொருவனும்.......
நீந்த மறந்த மீன்களே.......
பறவையின் வாயில் அகப்பட்ட......
மீனைப்போல் துடிக்கிறான்.......!

இளமைப்பருவத்தில்கல்வியை.......
கற்க தவறியவன் வாழ்க்கை......
காலத்தில் வறுமையோடு.......
பறவையின் வாயில் அகப்பட்ட......
மீனைப்போல் துடிக்கிறான்.......! 

பெற்றோரை காக்கவேண்டிய......
காலத்தை தவறவிட்டவன்.......
இறந்தவுடன் அவர் நினைவால்.......
துவண்டு கருகிப்போய்.....
நாள்தோறும் துடிக்கிறான்.........!

முதுமை காலத்துக்காய்.......
சேமிக்க தவறியவன்.......
கண்ணீர் கதையுடன்.....
அனாதை இல்லத்தில்.........
ஆயுளை முடிக்கிறான்........!

காற்றுள்ள போதே தூற்றிவிடு......
நீந்தும் சந்தர்ப்பத்தில் நீந்திவிடு.....!

&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக