இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 அக்டோபர், 2017

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்
--------------------------
பணம்
கருகிக்கிடக்கிறது
பட்டாசு

@@@

சந்தோசப்படுத்தி
சந்ததியை அழிக்கிறது
பட்டாசு

@@@

எங்களிலும்
பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள்
வெடிக்காத பட்டாசு

@@@

ஒவ்வொரு வீடும்
ஏவுகணை மையமாகிறது
ஈக்குபட்டாசு

@@@

மனதுக்குள்
பலவர்ணங்களுடன் வெடிக்கிறது
ஏழைவீட்டில் பட்டாசு

&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக