இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 மார்ச், 2014

கே இனியவன் - கடந்து வந்த பாதைகள்


கடந்து வந்த பாதைகள் 
-----------------------------------
நான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் ..சொல்லில் அடங்காது சிறு வயதில் வறுமை ..இளவயதில் வாழ்க்கை போராட்டம் ..வாழ்க்கை வயதில் நாட்டு பிரச்சனை ...என்று சொல்லிக்கொண்டே போகலாம் ..இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உள்ள பிரச்சனைதான் என்றாலும் ஆளுக்காள் வேறுபாடும் இந்த துன்பத்தில் 
என் மன பதிவை கவிதையாக தருகிறேன் ....
------------------------------------------------------------

படிக்கும் 
பருவத்தில் பொருளாதர தடை 
விளக்கு எரிய எண்னை இல்லை 
நாங்களும் ஆபிரகாம் லிங்கன் தான் 
தெரு வெளிச்சத்தில் நானும் 
படித்தேன் ....!!!

அன்று 
பொருளுக்கு தான் தடை 
மனதுக்கு இல்லை...!!!

இன்றோ 
பொருளுக்கு தடையில்லை 
மனதுக்கு தான் நிம்மதில்லை...!!!
வீட்டில் நான்கு பக்கமும் அலங்கார
விளக்கு ...என்றாலும் 

எந்த விளக்கு எந்த நேரத்தில் 
உடையும் ..? எந்தமூலையால்
எவன் வருவான் ...?
விளக்கெரியுது அதனோடு 
என் நிம்மதியும் எரியுது ...!!!

இனிப்போ 
வரும் நானும் 
என் பிள்ளைகளும் நடு சாமம் 
விளக்கில்லாமல் 
வெளிச்சம் இல்லாமல் 
தனியே நடமாடும் சுதந்திரம் ...?

மீட்டுப்பார்க்கிறேன் 
என் கடந்து வந்த பாதையை 
நிச்சயம் சொல்வேன் 
இனி அது போல் சுதந்திரம் 
வரவே வராது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக