இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ

ஒரு கதை        தொடர் 05
*********
அந்த ஊரில் நடுத்தர வருமானம் உழைப்பவர் -நல்ல தம்பி -தனது வருமானத்தில் சிறு தொகையேனும் நன்கொடை செய்யாமல் இருந்ததில்லை .நல்லதம்பிக்கு இரண்டு பெண் 
பிள்ளைகள் இருவருக்கும் சிறப்பாக திருமணமும் முடிந்து விட்டது .அவர் வீட்டில் சம்மந்தியாக பலர் போட்டியிடும் சரிவரவில்லை .அந்தளவுக்கு அவர் வீட்டில் சந்தோஷம் மதிப்புக்கும் குறைவில்லை 

நல்ல தம்பி வாழ்ந்த ஊரில் பிரதேச தலைவர் தேர்தல் வந்தது .ஊர் மக்கள் எல்லோரும் 
நல்லதம்பியை ஏகமனதாக தலைவராக்கினார் மக்கள் ....!!! நல்லதை செய்து வந்தால் 
நன்மைகள் தாமாகவே தேடி வரும் ....!!!

ஒரு குறள் 
*********
அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது                                ( குறள் 45 )

ஒரு ஹைகூ 
**********

அன்பு செய் 
அறம் செய் 
நீ தலைவன்