Thursday, August 7, 2014

ஒரு தலைப்பில் ஹைகூக்கள்

மென்மையாகவும் இருப்பேன் 
வன்மையாகவும் இருப்பேன் 
ரோஜா 

@@@@

காதல் இன்ப மலராக இருப்பேன் 
மலர் வளையமாகவும் இருப்பேன் 
ரோஜா 

@@@

மென்மையாக அழகாக இருப்பேன் 
மயங்காதே ஆபத்தையும் தருவேன் 
ரோஜா 

@@@

அகம் அழகாக இருக்கும் 
புறம் வலியாக இருக்கும் 
ரோஜா 

@@@

அழகாக இருக்கிறேன் 
விரைவாக இறக்கிறேன் 
ரோஜா 


கே இனியவன் 
ஹைகூக்கள்

சிறப்பு இடுகை

முதுமையின் வலிகள்

முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்...