Sunday, December 11, 2016

இனிய காதல் வெண்பா

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!! 

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா

சிறப்பு இடுகை

உன் தாலி........!

பாவம் என் காதல்.... புண்ணியமாய்..... கிடைத்த உன்னை ....... இழந்துவிட்டது.....! என்னை ஏமாற்றிய....... அடையாள சின்னம்...... உன் தாலி.....