இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2015

வறுமை விவசாயி

வறுமை விவசாயி 
------------------------------

பானை வினைபவன் வீட்டில் ....
பானை யுண்டு அரிசியில்லை ....
அரிசியை விளைவிப்பவன் வீட்டில் ....
பானையுமில்லை அரிசியு மில்லை ....
விதைத்து விதைத்து உயிர் காத்தவன் ...
விழி பிதுங்கி கிடக்கிறான் மூலையிலே .....

..........................................உண்பதும் உடுப்பதும் ...வயலிலே .......!!!
..........................................உறங்கி விழிப்பதும்........வயலிலே .......!!!
..........................................குடும்பமே உழைக்குது ...வயலிலே ......!!!
..........................................நஞ்சுடன் வாழ்கிறான் ...வயலிலே .......!!!

வறுமை ஒரு கொடுமை ........
கடுமையாய் உழைத்தும் ....
கடுகளவேணும் குறையவில்லை .....
கடன் பட்ட விவசாயி வீட்டில் .....
................................................................கை கால் மறத்துபோக......
................................................................மெய் உடல் இழைத்து போக .....
................................................................கண்கள் மறைந்து போக .....
................................................................காத்திருக்கிறான் அடுத்த போகம் ....!!!

^^^

சொல்லாடல் கவிதைகள் 
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக