இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 டிசம்பர், 2015

கனி என்றால் க(ன்)னி

கனி என்றால் க(ன்)னி

-------------

கனியென்றால் கன்னி ....
முக்கனி மா, வாழை, பலா .....
முக்கனிபோல் இனித்திடு ...
பெண்ணே....!!!

வாழையடி வாழையாய் ...
வாழைபோல் வாழவைக்கும் ....
ஆற்றல் கொண்டவள் பெண் ....!!!

புறத்தோற்றத்தில் பலாவின் முள் ...
அகதோற்றத்தில் பலாவின் சுவை ....
தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....
இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!!

சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா
சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....
இனத்தை பெருக்கும் -மா
பெண்ணே நீ நினைக்க நினைக்க .....
இன்பம் தருபவள் - வருங்கால
சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!!


.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக