இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 டிசம்பர், 2015

கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்

!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!

இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை 
பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .
என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!

!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!

கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........
..........எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................
பத்திர காளிமீது பக்தி கொண்டவள் .................
..........பத்தினியாள் பக்தியாள்............................
சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........
.........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............
சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்..........
.........சீற்றம் கொண்டாள் சிங்கம்போல் ............
சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!!


!!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!!

தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்.......
..............காதலன் பெயரோ கருணாகரன் ............
மங்கையர்கரசியை மனதால் மணந்தவன் ........ 
......மங்கையர்கரசியும் மனதால் மணந்தவள் ......
கட்டழகன் காளைபோல் உடலழகன் வீரன் .........
.....சிங்கம் போன்றவன் சேனைகளை வென்றவன் .......
அவனது நடையோ மேகத்தின் கதிர்போன்றவன் .....
....அவனது கண்ணோ காந்த கண்னழகன்.....!!!


!!!............மங்கையர்க்கரசியும் மார்த்தாண்டனும் .................!!!

மங்கையர்கரசியாரை மயக்க நினைத்தவன் ....
....சித்தப்பனால் மாப்பிள்ளையாக வந்தவன் .....
மங்கையர்கரசியாரை அடைய துடித்தவன் ........
....மங்கையர்கரசியாள் வெறுத்து ஒதுக்கப்பட்டவன் .......
கருணாகரனை வஞ்சகமாக கொண்டவன் 
....மங்கையர்கரசியால் கொலைசெய்யப்பட்டவன்.....!!!

!!............மார்த்தாண்டனை மங்கயர்க்கரசி வர்ணித்தது ..............!!! 

சித்தப்பனால் திருமணத்துக்கு வடிவமைகக்பட்டவன் .....
....மார்த்தாண்டனை மணந்துவிடு அரசியே .....
வேறு ஒரு வழியில்லை உனக்கு நான் தருவதற்கு .....!
....சீறி எழுந்தாள் மங்கயர்க்கரசி கொட்டி தீர்த்தாள்.....
சிங்கத்தை பார்த்தகண்னால் செந்நாயை பார்ப்பதா ......
...சேனை படையெல்லாம் வென்ற என்னைவனை.......
இன்னோடு ஒப்பிடுவதா வெட்கம் வெட்கம் ..........!!!

!!!........மங்கையர்க்கரசி காதலனுக்காய் காத்திருத்தல் .................!!!

காதலனுக்காய் காத்திருந்தாள் காளிகோயிலில் ....
....தூரத்து திசைவரை கண் விட்டு தேடினாள்...........
காத்திருந்த காதலனை காணாது துடித்தாள் ...........
....காரிருள் மேகத்தில் முழுசந்திரன் நிற்க ......
தூரத்தில் புலியும் கரடியும் நரியும் ஊளையிட ....
.....காத்திருந்தாள் காத்திருந்தாள்..........
கருணாகரனுக்காக காத்திருந்தாள் அரசி .......
.....சட்டென்றே துர் செயல்கள் தோன்றின .....
முழுசந்திரனை கார்மேகம் மறைத்தது ......
.....பலமாகிய காற்று பலமிழந்தது ...........
ஊளையிட்ட மிருகங்கள் மௌனமாகின .....
....ஆலயத்தின் மீதிருந்த ஆந்தை அலறாமல் ....
அத்தனையும் சற்று நேரத்தில் நிசப்தமானது.....
...தனித்தே தவித்துகொண்டிருந்தாள் கன்னி ......!!!


!!!..........மங்கையர்க்கரசி காதலனை காணாது துடித்தாள்.........!!!

கருணாகரனே எனவனே கருணாகரனே ......
....இன்னும் எதற்கடா என்னை வதைக்கிறாய்.....
குறித்த நேரத்தில் சற்று மீறினாலும்........
....இறந்துவிடுவேன் என்று அறியாதவனா நீ ......
வந்துவிட்டா கண்ணாலனே கருணாகரனே .....
...வெந்து துடிக்கிறேன் கருணாகரனே .......
தேவியே காளியே நான் வணங்கிய தெய்வமே ....
...உன்சந்நிதானத்தில் ஒன்றுசேரவே தனித்து வந்தேன் ....
என்னவனை காணாது நெஞ்சு துடிக்கிறது ....
....என்னாச்சோ ஏதாச்சோ என் தேவியே காளியே ....!!!


!!!...................கருணாகரன் கொலைசெய்யப்படுதல்.............!!!

என்னவன் எங்கே என்னவன் எங்கே தாயே .....
...புலம்பிகொண்டிருக்கையில் வந்தான் மாத்தாண்டன் .....
புலம்புவதை நிறுத்து கருணாகரன் என்று அழைபப்தை நிறுத்து ,,,,,
....அவன் இனி வரமாட்டான் அவன் குரல் இனிகேளாது.....
மங்கையர் திலகமே உன்னில் நான் கொண்ட காதலால் ....
....அவனை தனிவழியில் என் வாளால் துண்டித்துவிட்டேன் ......
இனி நீ கண் கலங்காதே என் கயல் விழியாளே உன் கண்ணில் ....
....இனிமேல் கண்ணீர்வடிந்தால் என் இதயம் வெடிக்கும் ......
அவனை விட நான் உன்னை அதிகமாய் காதலிக்கிறேன் .....
...உன் அருள் கண்ணால் ஒருமுறை என்னை பாராயோ ....
என் உடல் பொருள் ஆவியெல்லாம் உனக்கே சமர்பிக்கிறேன் ....
,,,ஏற்றுக்கொள் என்னை ஏற்றுக்கொள் என் கெஞ்சினான் ....!!!

!!!..............மங்கையர்க்கரசி சற்று நேரம் அசைவற்று விட்டாள்......!!!

மாத்தாண்டா முதலில் என்னவன் இறந்த இடத்தை காட்டு .....
...கத்தினாள் கதறினாள் ஓலமிட்டாள் கூட்டிபோ என்றாள்.....
சென்றார்கள் இருவரும் தனிவழியில் சென்றார்கள் .....
....நிசப்தம், நிசப்தம், எங்கே பார்த்தாலும் நிசப்தம்......
மேகம் சற்று விலகியது மெல்லிதாய் சந்திரன் தென்பட்டான் .....
.....மார்த்தாண்டன் திடீரென நின்றுவிட்டான். கன்னியும் நிற்கின்றாள்......
அவள் பெருமூச்சைத் தவிர அங்கே வேறு சப்தம் இல்லை........!!!

.......இருண்ட மரத்தடியில் மினிங்கிகொண்டது ஒரு பொருள் ..... 
அங்கே சென்றாள் அதிர்ச்சியடைந்தாள் அதிலேயே ஓலமிட்டாள் ....
....'கருணாகரா! கருணாகரா! என் காதல் கணவனே.......
எங்கே சென்றுவிட்டாய்! உனக்கு மாலையிடலாம் என்று வந்தேனே!
....ஒரு நிமிஷத்தில் வீர சுவர்க்கம் சென்றுவிட்டாயே........
இனி இந்த உலகத்தில் அன்புக்கும் வீரத்துக்கும் யாரே உளர்? 
...உன்னை என் உயிர் எனவே நினைந்திருந்தேனே.....
நீ போன பிறகு எவ்விதம் நான் இருந்து என்னபயன் ,,,,,,
.,,,,,என் நாதா, உன் உதடு அசைகிறது போல் இருக்கிறதே! 
என்னை அழைக்கிறாயோடா..வந்தேன்...வந்தேன்.....!!!
......நெடுநேரம் புலம்பி கருணாகரன் மீது விழுந்தாள் .....!!!

!!!...........மாத்தாண்டனை கொல்லுதல்.................!!!

மங்கையர்க்கரசி எழுந்தாள் அவள் முகம் காளியானது.....
......மேகங்கள் சந்திரனை மூடின அவள் ரெளத்திராகாரமாள் ....
மார்த்தாண்டனை ஏற எடுத்துப் பார்த்தாள்.நாகத்தைக் கண்ட ....
......பறவைபோல் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை....
பாதகா! என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்று விட்டாயே.......
....என்னை மணக்கதானே செய்தாய் வா வா என்னை ......
மணந்துகொள் வா வா அருகே வா கத்தியபடி ஈட்டியை ....
.....மாத்தாண்டவன் மீது செருகி அவனை கொன்றாள்....... !!!

!!!................மங்கையர்க்கரசி மரணித்தல் .......................!!!

கருணா உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை ....
....காளியே அம்மா என் உடலை ஏற்றுகொள்.....
என்னவன் என்னை அழைக்கிறான் நான் போகிறேன்.....
....இனியும் தாமதியேன் இதோ வந்துவிட்டேன் ......
என் கடமை தீர்ந்தது உன்னை கொண்டவனை கொன்றுவிட்டேன் .....
....என் உயிரும் உடலும் உன்னையே நினைத்து வாழ்ந்தது .....
இதோ என் உடலும் உயிரும் உனக்கே அர்பணிக்கிறேன் .....
...அவனருகே சென்றாள் தன்னை தானே குத்தினால் ....
அவன் மீது வீழ்ந்து தன்னுயிர் நீத்தாள் மங்கையர்க்கரசி....!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

குறிப்பு ; இந்த கதையை கவிதை வடிவில் அமைக்க எனக்கு பலமணிநேரம் ஆகியது 
மாணவர்களுக்கு மற்றும் ஆர்வலருக்கு இது பயன் பட்டால் அதுவே என் திருப்பதி 

நன்றியுடன் ;கே இனியவன் -யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக