இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 பிப்ரவரி, 2016

கனவாய் கலைந்து போன காதல் 02

பூவழகன் ....
ஒரு கிராமிய இளைஞன் ....
நவ நாகரீகம்  தெரியாதவன் ....
அதிகம் பேசாதவன் .....
பெரும் படிப்பு என்றுமில்லை ....
படிப்பு இல்லையென்றுமில்லை ....
ஆனால் வறுமை என்றால் ....
நன்கு தெரிந்தவன் ....!!!

கிராம புறத்தில் சாதாரண ....
படிப்பை முடித்து நகர்புறம் .....
உயர் கல்விக்காய் போகிறான் .....
நகர புறத்தில் இருபால் பாடசாலை .....
பொதுவாகவே பெண்கள் என்றால் ....
பூவழகனுக்கு ஒருவித பயம் .....
பாடசாலையோ கலவன் .....
புதிய முகங்கள் நகர்புற பெண்கள் ....
பூவழகனை காட்டிலும் உசார் ....!!!

முதல் நாள் பாடசாலை வாழ்க்கை .....
கிராம புறத்திலிருந்து நகர்புறம் .....
இடம்மாறிய பதட்டம் ,பயம் ....
பூவழகனை சுற்றி நண்பர்கள் ....
குசலம் விசாரிப்பதில் மும்மரம் ....
பயத்தோடும் அசட்டை துணிவோடும் ...
அன்றைய நாள் முடிவுக்கு வந்தது ....!!!

^^^

தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல்
வசனக்கவிதை....!!!

^^^

கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக