Wednesday, February 3, 2016

உன்பார்வையை வீசமறுக்கிறாய்

உன்னை
என் தேவதையென
நினைத்து காதலிக்கிறேன் ...
நீ தினம் தோறும்
கட்சிதருவாய் என்றுதானே
காதலிக்கிறேன் ...!!!

நீயோ ..
என்னைக்கண்டவுடன்
பேசாமல் போகிறாய்
தூரத்தில் நின்று
திரும்பி பார்க்கிறாய்...
உன்பார்வையை வீச
மறுக்கிறாய்
ஒரு புன்னகை கூட தர
மறுக்கிறாய்
சரி போகட்டும் விடு ... !!!

ஒரு கல்லையாவது
எடுத்து வீசி ஏறி
அதுவாவது என்மீது
வந்து படட்டும்
நீ தரும் எதையும் ஏற்க
தயாராக இருக்கிறேன்....!!!

சிறப்பு இடுகை

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்ச...