இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 பிப்ரவரி, 2016

நட்பென்றால் இதுதான் நண்பா

நட்பென்றால் இதுதான் நண்பா
----------------
நட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....
படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....!
காவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....
இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....
மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....
நான் சொல்லிவிடப்போகிறேன் ....?
எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!!

புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....?
புனித பைபிளில் சொல்லாத நட்பா ....?
மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....?
இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...?
நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...?
சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....
விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...?

முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....?
பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!!

மனைவியிடம் எதையும் மறைக்காமல் .....
பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....
புரிந்தும் உண்மையை சொல்லும் கணவன் ....
" குடும்ப நட்பின் தலைவன் " ....!!!

அவனுக்கு அவளுக்கு தலைவலித்தால் ....
இவனுக்கு இதயம் வலிக்கும் என்று ...
உள்ளத்தால் வேதனை படும் உயிர் ....
" உறவு நட்புக்கு தலைவன் ".....!!!

தடக்கி தடம் புரண்டு விழும்போது .....
கை கட்டி நின்று பார்க்காமல் ....
கைகொடுத்து தோள் கொடுத்து ....
தூக்கிவிடுபவன் நட்புகளின் ....
"உதவும் கரங்கள் நட்புக்கு தலைவன் "....!!!

நண்பனின் மலர்ச்சியில் மனம் ....
மகிழ்ந்து அவனின் வளர்ச்சியில் ....
மனம் நெகிழ்ந்து - அவன் உயர்ச்சியில் ....
உச்சி குளிர்ந்து உள்ளத்தால் வாழ்த்துபவன் ....
நட்புக்கெல்லாம் தலைவன் என்றார் ...
கண்ணதாசன் ஐயா.....!!!

திருவள்ளுவர் கூறும் நட்பு .....
குர்ரான் கூறும் உன்னத நட்பு .....
பைபிள் கூறும் அன்பு நட்பு .......
கடை பிடிக்க முயற்சி செய் ....
முடியாவிட்டால் அவற்றை....
வாசித்து பயிற்சி செய் ......
உலகமே உன் வசப்படும் .....!!!

என் பைந்தமிழ் மூதாதைகள் ....
நட்புக்கு வகையே கூறியுள்ளார்கள் .....!!!

" தலையாய நட்பு " - ஒருமுறை தண்ணீரில் ....
வளரும் பனைமரம் போல நட்பு கொண்ட ....
நொடிமுதல் உயிர்வரை தொடரும் .....!!!

" இடையாய நட்பு" - இடைக்கிடையே ...
தண்ணீரூற்றினால் வளரும் தென்னைபோல்....
நட்பை வளர்க்கும் நட்பாகும் .....!!!

" கடையாய நட்பு " தினம் தோறும்....
தண்ணீரூற்றினால் வளரும் பாக்குமரம்போல் ....
நட்பை வளர்க்கும் நட்பாகும் .....!!!

எந்த நட்பு எப்படி வரும் என்பதை ...
யார் அறிவார் பராபரமே என்பதுபோல் ...
வரும் நட்பை காப்பற்றுவதே நல் நட்பாகும் ....!!!

இவனுடன் இவளுடன் பழகினால் ....
இது இது கிடைக்கும் என்று கணக்கு....
போட்டு பழகுவதும் - துன்பம் வரும்போது ...
விலகி நின்றுவிட்டு நான் இருந்திருந்தால் ....
உன்னை விட்டிருக்க மாட்டேன் என்று ....
பாசாங்குடன் பழகும் நட்பும் கூடா நட்பு ....!!!

இறுதியில் யான் கூறுவது ....
பருவத்துக்கு காய்க்கும் மாங்காய்போல்...
மாங்காய் நட்பை காட்டிலும் ....
காலமெல்லாம் காய்க்கும் தென்னை போல் ...
தேங்காய் நட்பு சிறப்பு .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக