கவிப்புயலின் புதிய கவிதைகள்
------------
நீ
தனியாக வந்த காலத்தில் ..
தாங்க முடியாத என் இதயம் ...
காதலையும் சுமந்து வருகிறாய் ...
எப்படி முடிகிறது என் இதயத்தையும் ..
சுமந்து கொண்டு வருவதற்கு ....!!!
நீ
பார்க்கும் போது அழகுதான் ...
அதைவிட அழகு நீ என்னை ...
பார்க்காததுபோல் பார்த்து போவது ...
தூரத்தில் சென்று பார்க்க துடிப்பது ...!!!
+
இது தொடர் கவிதை அல்ல
தொடரும் கவிதை - 03
--------------
முத்தான மூன்று வரி கவிதைகள்
காலம் எல்லாம் காதல் வேண்டாம் ...
என்னை காலன் அழைக்கும் வரை
காதல் செய் ....!!!
***********
காதலுக்கு கவிதை தேவை ....
கவிதை எழுத காதல் தேவை ....
காதல் செய் கவிதை வரும் ....!!!
***********
புரிந்துபார் காதல் புரியும்
பிரிந்து பார் காதலின்
வலி புரியும் ....!!!
************
காதல் தவிர்ப்பில் உள்ளது ..
தவிர்ப்புக்களின் வார்த்தையே ...
கவிதை ....!!!
************
இதயம் இருக்கு என்பதற்காக ...
காதல் செய்யாதே ...
இதயமாக காதல் செய் ....!!!
------------------
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
---------------
நீ
சுடிதாருடன் அழகோ அழகு
பாவாடை தாவணியில்மிக அழகு
சேலையுடன் அழகுக்கு தேவதை
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?
------------
உன்
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய்
என்று கவலைப்படுகிறேன்
---------------
------------
நீ
தனியாக வந்த காலத்தில் ..
தாங்க முடியாத என் இதயம் ...
காதலையும் சுமந்து வருகிறாய் ...
எப்படி முடிகிறது என் இதயத்தையும் ..
சுமந்து கொண்டு வருவதற்கு ....!!!
நீ
பார்க்கும் போது அழகுதான் ...
அதைவிட அழகு நீ என்னை ...
பார்க்காததுபோல் பார்த்து போவது ...
தூரத்தில் சென்று பார்க்க துடிப்பது ...!!!
+
இது தொடர் கவிதை அல்ல
தொடரும் கவிதை - 03
--------------
முத்தான மூன்று வரி கவிதைகள்
காலம் எல்லாம் காதல் வேண்டாம் ...
என்னை காலன் அழைக்கும் வரை
காதல் செய் ....!!!
***********
காதலுக்கு கவிதை தேவை ....
கவிதை எழுத காதல் தேவை ....
காதல் செய் கவிதை வரும் ....!!!
***********
புரிந்துபார் காதல் புரியும்
பிரிந்து பார் காதலின்
வலி புரியும் ....!!!
************
காதல் தவிர்ப்பில் உள்ளது ..
தவிர்ப்புக்களின் வார்த்தையே ...
கவிதை ....!!!
************
இதயம் இருக்கு என்பதற்காக ...
காதல் செய்யாதே ...
இதயமாக காதல் செய் ....!!!
------------------
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
---------------
நீ
சுடிதாருடன் அழகோ அழகு
பாவாடை தாவணியில்மிக அழகு
சேலையுடன் அழகுக்கு தேவதை
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?
------------
உன்
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய்
என்று கவலைப்படுகிறேன்
---------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக