இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கே இனியவன் ஹைக்கூகள்

தகுதி இல்லை 
விழுந்து விட்டேன் 
பதவி கிடைத்தது 


@@@


நான் பணக்காரன் 
பாலில் குளிப்பேன் 
சுவாமி சிலை 


@@@


நான் இரட்டை பிறவி 
உருவத்தில் வேறுபாடில்லை 
முன் கண்ணாடி 


@@@


சின்ன உரசல் 
உடல் சூடாகியது 
தீக்குச்சி 


@@@


அழகில் கிள்ளினேன் 
மயங்கி விழுத்தது 
மலர் 
+
கே இனியவன் ஹைக்கூகள் 

------
நாம்  பிரிந்து வாழ்கிறோம் 
இணைந்து வாழ்ந்தால் இறப்பீர் 
தண்டவாளம் 

@@@

தீயில் எரிகிறேன் 
சாம்பலகமாட்டேன் 
மெழுகுதிரி 

@@@

கண்ணீர் வருகிறது 
கவிதை வருகிறது 
வலி 

@@@

பிணியில் பணி செய்தவர் 
பிணியிலும் பணி செய்தவர் 
அன்னை திரேசா 

@@@

சிறகடித்து பறக்குறது 
சிறு கருவியால் பிறக்கிறது 
கற்பனை 

+
கே இனியவன் ஹைக்கூகள்
எண்ண தொகுப்பு - 02

---------
இல்லாவிட்டாலும் பிரச்சனை 
இருந்தாலும் பிரச்சனை 
பணம்
*******************************
உடல் சுத்தம் 
உள்ளச்சுத்தம்
தியானம் 
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும் 
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி 
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை 
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது 
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான் 
போராளிக்கு இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக