இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - க-கி

கண்ணில் காந்த சக்தியுடன் ....
கடமையை மூச்சாய் கொண்டு....
கதிரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
கண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

கட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
கடப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
கண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
கண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

கரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
கதிரவன் போல் மனதில் ஒளிமையும் .........
கற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
கல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

கம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
கண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
கருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
கடவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!
---------

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம்
இயற்கை கவிதை
--------

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக