இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கே இனியவனின் புதுக்கவிதைகள்

நீ
தந்த ரோஜா செடியில் ....
உணர்வேன் உன் நிலை ....
நீ ஆனத்தமாய் இருக்கும் ...
போது  வீட்டு முற்றத்தில் ...
ரோஜா சிரித்த முகத்தோடு ....
பூத்திருக்கும் .....!!!

உனக்கு என்ன நடந்தது ....?
ஒவ்வொரு ரோஜா பூவும் ....
வாடிவருகிறதே.....?
இதழ்கள் உதிர்ந்து வருகிறதே ...!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள்
-----------
உன்னை ....
ஆசை வார்த்தையால் ....
வர்ணிப்பவர்களை நம்பாதே ....
உன் அழகையே ரசிக்கிறார்கள்....!!!

நான் ...
உனக்கு முள் போல் இருந்தாலும் ....
உயிர் உள்ளவரை உன்னையே ...
நேசிப்பேன் -என்றோ ஒருனாள் ...
நீ என்னை திரும்பி பார்க்கும் ...
நான் தனிமையில் இருப்பேன் ...!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள்
--------
உன்
தந்தைக்கு பயந்து...
தாயை சமாளித்து...
அண்ணனிடம் பொய் சொல்லி
தம்பியை வசப்படுத்தி ....
தங்கையிடம் மறைத்து ....
என்னை நீ காதலிக்கும் ....
அழகோ அழகு .....!!!

--------------

மேகத்திடம்
கருநீலத்தை இரவல் வாங்கி
விழிமண்டலமாய் உருவாக்கி .....!

மழையிடம்
நீர்துளிகளை இரவல் கேட்டு.....
கண்ணீர்த்துளிகளை உருவாக்கி ....!

விண்மீன்களை ....
கடனாககேட்டு கண்சிமிட்டும்
காந்த சக்திகொண்ட கண்களே ....
என்னவளின் கண்கள் ......!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள்

”-----------

இப்படித்தான்
இந்தக்
காதல் என்னுள்
வந்தது என்று
சொல்ல முடியாமல்
இருப்பது போலவே

இப்படித்தான்
என் காதல்
கல்யாணத்தில்
முடியும் என்று
சொல்லவும்
முடியவில்லை....

கிரிக்கெட்டில்
கடைசிப்பந்து வரை
சுவாரஷ்யம் இருப்பது
போல.....
எப்போதும் எதுவும்
நடந்து விடலாம்
வாழ்வில்....!
------------

போதும் உன் கண் ஜாலம்

நீ ஒவ்வொரு முறையும் ....
கண் சிமிட்டும் போதெலாம் ....
பூக்களின் ஒவ்வொரு இதழ்களும் ....
உதிர்ந்து விழுகிறதடி.....!!!

நீ கண் சிமிட்டும் நொடி .....
பட்டாம் பூசிகள் சிறகுகள் ...
இழந்து துடிக்கிறதடி....
போதும் உன் கண் ஜாலம் ....!!!
--------


உன் கண்மடலை

எத்தனை தவறுகள் ....
செய்துவிட்டேன் நான் ....
உன் கண்மடலை .....
திறந்து பார்க்காமல்
அகராதியை .திறந்து
பார்த்து விட்டேன் .....!!!

நீ ஒரு முறை ....
கண்சிமிட்டும் போது.....
ஆயிரம் அகராதி சொற்கள் .....
உதிர்ந்து கொட்டுகிறதே ......!!!
------------


துடியாய் துடிக்கிறதடி

உன்
கண் மீன் - நானோ மீனவன் ....
எண்ணம் என்னும் வலையால் ....
உன்னை வீசி பிடிக்கப்போகிறேன் .....
வலையில் அகப்பட்ட என் காதல் .....
துடியாய் துடிக்கிறதடி.....!!!
----------

கல்லறையில் தூங்கும்

பயப்பிடாதே உயிரே ....
நான் இறந்தாலும் என் ....
இதயத்தில் இருக்கும் -நீ
பத்திரமாய் இருப்பாய் ....!!!

கல்லறைக்குள் செல்லும் ....
என் உடல் ஒன்றும் ....
சதை உடல் அல்ல ....
உன் நினைவுகளின் கூட்டு...!
என்னோடு உன் இதயமும் ....
கல்லறையில் தூங்கும் ....!!!
------------

எனக்கு இதயம் இருக்கிறது

அத்தனையும் இழந்து விட்டேன் ....
உன்னை இழப்பதாயின்....
என்னையும் இழந்துவிடுவேன் ...
நான் வாழ்வதே உன் காதல் ...
போட்டா வாழ்கையில் உயிரே ....!!!

எனக்கு
இதயம் இருக்கிறதா ....?
தெரியவில்லை -ஆனால்
என் உடலில் ஒரு பாரம் ....
இருக்கிறது அதில் நீ ...
இருப்பதால் எனக்கு .....
இதயம் இருக்கிறது ....!!!
-------------

பனித்துளியாக்கியவன்

பனித்துளியாக இருந்த ....
மனசை பாறையாக்கிவிட்டாய்....
பாறையாக இருந்த உன் மனசை ....
பனித்துளியாக்கியவன் நான் ....!!!

காதலில்
தோற்ற ஒவ்வொரு .....
இதயமும் நீர் அற்றிருக்கும் ....
பாலைவனம் தான் .....!
ஒருநாள் பாலை வனத்தில் ....
ஈரம் தோன்றும் என்ற ....
தன்னம்பிக்கை தான் ....!!!
-----------

உன்னை பற்றிய கவிதைகளே

காதலுக்கு நன்றி .....
நீ இல்லாத போதெலாம் ....
காதலோடு வாழ்கிறேன் ....
காதல் இல்லையென்றால் ....
நினைத்தே பார்க்க முடியவில்லை ....
என் வாழ்க்கையை .....!!!

நீ
காதலை மட்டும் தரவில்லை ....
காதல் வலியையும் தந்தாய் ....
காதலுக்கு ஒரு கவிதை ....
வலிக்கு ஒரு கவிதை ....
மூச்சு விடும் ஒவ்வொரு ...
நொடிக்கும் உன்னை ...
பற்றிய கவிதைகளே .....!!!
------

உன் ஒளியாக நான்

உயிரே ......
நீ தான் என் சுடர் ....
நீ தான் என் நிழல் .....
நீ முடிவெடு எதுவாய்
இருக்கப்போகிறாய் ....?

நீ சுடராக இருந்தால் ....
உன் நிழலாக நான் .....
நீ நிழலாக இருந்தால் ....
உன் ஒளியாக நான் .....!!!

தயவு
செய்து காற்றாக.....
மாறிவிடாதே ....!!!
-------------

கனவில் வந்து விடுவாயோ


முன்னர் ....
கனவு எப்போது வரும் ....
என்று தவம் இருந்தேன் .....
இப்போ ....
கனவில் வந்து விடுவாயோ ....
என்று தூங்காமல் ....
இருக்கிறேன் ....!!!

நினைவால் செத்து மடிந்த ....
நான் கனவிலாவது ....
நிம்மதியாய் இருக்கிறேன் ....!!!

-----------

கவிதையால் கிள்ளுகிறேன்


உன்
எண்ணமே என் .....
கவிதை .....
நீ என்னை கோபப்டுதினால் ....
கவிதை .....
உன்னை விரும்ப சாந்தமாய் ....
வருகிறது ....!!!

உன்னோடு ....
சின்ன சின்ன சண்டையிட ....
கவிதையால் கிள்ளுகிறேன் ....
நீ முறைக்கும் அந்த பார்வை ....
உல் மனதின் காதலை ....
படம் பிடித்து காட்டும் ....!!!

---------

மரணம் தொட்டது


உன்
பார்வை பட்டநாள்.....
நான் இறந்து பிறந்த நாள் .....
சிவன் நக்கீரரை ....
கண்ணால் எரித்தார் ....
என்பதை நம்புகிறேன் ....!!!

ஒரு நிமிடம் என்னை ....
மரணம் தொட்டது .....
உன் கண்ணில் இருந்து ....
பாய்ந்த கண் மின்சாரத்தால் ....!!!

-----------


நினைத்துகொண்டிருப்பாய்

நீ
பார்க்கும் பார்வையில் ....
விடை கிடைத்துவிட்டது ....
நீ
இதுவரைகாலமும்
பார்க்காமல் இருந்ததன் ....
காரணத்தை ....!!!

உயிரே ,,,,
கோபித்துக்கொண்டே இரு
அப்போதென்றாலும்
நினைத்துகொண்டிருப்பாய் .....!!!
-------------

மண்குழிக்குள் முடிகிறது


நீ
சிரிக்கும் போது .....
கன்ன குழியின் ....
அழகில் விழுந்தவன் ....
நான் .....!!!

கன்ன குழியின் ....
ஆழம் கண்ணீர்வரை ....
செல்லும் என்று புரிந்தேன் ....
காதல் கன்னகுழியில் தோன்றி .....
மண்குழிக்குள் முடிகிறது ....!!!
-------------

காதலரால் விரும்பப்படும்

அன்பே ...
உனக்காக காத்திருந்த ....
காலத்தில் காதலை மட்டும் ....
இழந்திருக்கவில்லை .....
ஆயுள் காலத்தையும் .....
இழந்துவிடேன் ......!!!

காதலில்
தோற்றவர்களுக்கு .....
நினைவு சின்னம் அமைத்தால் ....
நம் சிலைதான் உலகில் ....
காதலரால் விரும்பப்படும்
-------------

தினம் தினம்

உயிரே ....
என்னிடம் இருக்கும் ஒரு ....
உயிரையும் ஒரே உடலையும் ....
எத்தனை முறைதான் நான் ....
செத்து செத்து பிழைப்பது ....?

மறு பிறப்பு இருக்கிறதோ ....?
தெரியவில்லை - ஆனால் ...
தினம் தினம் நான் ....
மறு பிறவி அடைகிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக