இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

இதயத்தின் அழகே காதலின் அழகு

மலர்களே 
மறைந்து விடுங்கள் ....
என்னவளின் 
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!

நட்சத்திரங்களே 
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண் 
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர் 

தென்றலே 
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!

பனிதுளிகளே 
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!

குயில்களே 
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...! 

மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!

-----
கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!

இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!

மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!

கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என் 
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!

இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம் 
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!


-----
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...

சரியா தவறா ...?
ஏற்போமா ஏற்பாளா ....?
இதயத்தில் ஆயிரம் ....
கேள்விகள் சந்தேகங்கள் ....
காதல் என்றால் சந்தோசம் ...
இல்லை என்றால் என்னில் ....
எனக்கே சந்தேகம் .....?

காதல் 
கிடைப்பது பெரித்தில்லை ....
காப்பாற்றுவதே பெரிது .....
திருமணமாகாமல் இறக்கலாம் ....
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
பிறப்பின் பிறவிபயனே....
இறந்து விடும் .......!!!

---------
ஒருமுறை சிரி உயிரே ....
உன் கன்னகுழியின்....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை திட்டு .....
உதடுகளின் அசைவை ....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை .....
முறைத்து பார் உயிரே ....
உன் கண்கள் கதகளி....
ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!!

ஒரு முறை கோபித்துவிடு.....
உன் மௌனத்தின் வரிகளை ...
கவிதையாக வடிப்பதற்கு ....!!!


-------------

நினைத்-தேன் கேட்டதை தந்தாய் ...!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!

சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!

சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!

துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!


---------------
அழைத்தேன் நின்றாய் பார்த்தேன் 
பார்த்தேன் என்னை மறந்தேன் 

மறந்தேன் உன்னிடம் விழுந்தேன் 
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன் 

மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன் 
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன் 

சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன் 
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன் 


------
நீ சிரித்து பேசினால் ...
நட்சத்திரம் மின்னும்......!!

நீ முறைத்து பேசினால் 
மேகம் கறுக்கும்....!!

நீ மறைத்து பேசினால் 
சூரியன் மறையும்...!!

நீ துன்பப்பட்டு பேசினால் 
இடி இடிக்கும்...!!

நீ உருக்கத்தோடு பேசினால் 
தென்றல் வீசும்...!!

நீ பேசாமல் இருந்தால் 
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!

நீ 
தான் என் பருவகாலமாயிற்றே...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக