இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

மரணம் -கவிதை

இன்பமாக வாழ்ந்து .....
இல்லற வாழ்க்கையை .....
இறுதிவரை வாழ்ந்தவனுக்கு .....
இறைவன் கொடுக்கும் ....
இன்ப அன்பளிப்பே ....
மரணம் .....!!!

நோயினால் அவத்திப்பட்டு.....
எப்போது தனக்கு மரணம் ....
காத்திருக்கும் நோயாளிக்கு .....
இறைவன் கொடுக்கும் .....
அளப்பரிய வெகுமதி ....
மரணம் .......!!!

தெரியாமல் மனிதனாய் ....
பூவுலகில் பிறந்தவனின் ....
முட்டாள் தனமான செயல் ....
தற்கொலை மரணம் .....!
இறைவன் தந்த உடலையும் ....
உயிரையும் -அனுமதியின்றி ....
பறிக்கும் செயலே தற்கொலை.... 
மரணம் ...!!!

மரணத்தை விரும்புபவன் ....
மரணத்தோடு வாழ்பவன் .....
மரணம் இயற்கையின்கொடை.....
மரணத்தை உணர்ந்து வாழ்பவன் ....
மரணத்தை தவமாய் கருதுபவன் ....
பிரபஞ்சத்தில் ஞானி .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக