இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

நட்பிலும் காதலிலும் ...!!!

இதயத்தை பற்றிக்கொண்டால் ....
காதல் .....
இதயத்தில் பசுமையாய் இருப்பது ....
நட்பு .......!!!

கஸ்ரப்பட்டு இதயத்துக்குள் 
காதல் வரும் .....
இஷ்ரப்பட்டு இதயத்துக்குள் ....
நட்பு வரும் .....!!!

துயரத்தில் இருக்கும்போது ....
காதல் சுகம் தரும் .....
துயரத்தை துடைத்தெறிய ....
நட்பு கை கொடுக்கும் ....!!!

கட்டுப்பாட்டை தளர்த்தினால் ....
காதல் தோற்கும் ....
கட்டு பாட்டை  தளர்த்தினால் ....
நட்பு கேள்வி கேட்கும் ....!!!

காதல் சிலவேளை இலக்குகளை ....
கனவாக்கிவிடும் .....
காதல் சிலவேளை கனவுகளை .....
இலக்காக்கி விடும் .....!!!

காதல் திருமணத்தில் வெற்றி பெறும் ....
நட்பு கல்லறை வரை  வெற்றி தரும் ....!!!

------
நட்பிலும் காதலிலும் 
இதயத்தில் இரண்டு வரிகள் .. 
பழகும் வரை உண்மையாய் இரு .. 
பழகிய பின் உயிராய் இரு ...!!!

நட்பிலும் காதலிலும் ....
வார்த்தையில் இரண்டு தன்மை ....
அளவாக பேசு ....
உணர்ந்த பின் பேசு ....!!!

நட்பிலும் காதலிலும் ....
தோல்விக்கு இரண்டு காரணம் ....
அதிகமாக ஆசைப்படுவது ....
அளவுக்கு மீறி கோபப்படுவது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக