இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 செப்டம்பர், 2017

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
---------------------------------------------------------
2016 மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது கிடைக்கப்பெற்றது .
எனக்கு பெரு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது இவ் விருது
எனக்கு இன்று 14 .09 .2017 அன்றுதான் அன்பர் மெய்யன் நடராஜன் (வத்தலை இலங்கை) அவர்கள் இந்தியா சென்று வந்தபோது மதிப்புக்குறிய எழுத்து தளம்
நிர்வாகி திரு "அகன்" அவர்கள் அவரிடம் கொடுத்து என்னிடம் சேர்க்கும்படி சொன்னதுக்கேற்ப கிடைக்கப்பெற்றது.
திரு அகன் அவர்களுக்கு மிக்க நன்றி மகா கவி ஒருவரின் பெயரில் விருது சான்றிதழுக்கு என்னை தெரிவுசெய்தமைக்கும். அந்த மஹா போட்டியில் எனக்கு
விருது வழங்கி மதிப்பளித்தமைக்கும் நன்றி நன்றி.....!
இலங்கையில் இருக்கும் எனக்கு சிரமம் பாராமல் இந்த விருது கேடயத்தை அனுப்பிமதிப்பளித்தமைக்கு மீண்டும் நன்றி. இலங்கை எழுத்தாளர்களுக்கு இந்திய எழுத்தாளர்கள் பெரும் ஒத்துழைப்பு தருகிறார்கள் . ஆனால் விருதுகள் கிடைப்பது மிக மிக அரிது. ஒரே காரணம் விருதுகளை சான்றிதழ்களை அனுப்பி வைப்பதில் சிரமம் இருப்பதே ஆகும். இவை எல்லாவற்ரையும் கடந்து ஒரு வரலாற்றில் அழியாத ஒரு கேடயமாக வடிவமைத்து எத்தனையோ சிரமத்தின் மத்தியில் என்னை சென்றடைய செய்த எழுத்து தளம் அகன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
இப்போது நான் பெருமை அடைகிறேன். நான் முதல் முதல் எழுதிய கவிதை தளம்
எழுத்து தளம் என்பதில். இன்று 30 தளங்களுக்கு கவிதை எழுதினாலும் எழுத்து தளம் இந்த மதிப்பு மிக்க விருதை வழங்கி என்னை கெளரவித்தமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
கவிப்புயல் இனியவன்
கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக