இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

பிலவ வருடமே வருக

 2021 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் - பிலவ வருடம்
-----------------------------------------

வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!

போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
மேலும் மேலும் தாங்க முடியவில்லை....!

அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!

இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....

அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...

உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...

நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம்

சனி, 13 மார்ச், 2021

கண்கள் மிரட்டுகிறது

 எங்கள்பாரதி
........................
கவிஞன் இறப்பதில்லை
வாழ்க்கையோடு
கலந்திருப்பான் //

மீசையை  முறுக்கினால்
பாரதி வருகிறார்//

தலைப்பாகை சொல்கிறது
தமிழனின் திமிரை//

கண்கள் மிரட்டுகிறது
பிறமொழி கலப்பை//

கவிதை வரிகள்
நரம்புகளைத் தூண்டும்//

அடக்குமுறை தோன்றினால்
பிறந்திடும்
கவிஞன்  //

வறுமையில் வாழ்ந்தாலும்
தன்மானத்தை
இழக்காதவர்//

குழந்தைப் பருவத்துக்கு
முதலாவது   கவிஞன் //

கடுமையும் கனிவும்
இரண்டறக் கலந்தவர்//

கவிஞர்களில் ஞானி
எங்கள் பாரதியே //

@
கவிப்புயல் இனியவன்
(யாழ்ப்பாணம்)

பெண்மனம் ஒரு பூமனம்

 பெண்மனம்
ஒரு பூமனம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிறர் குழந்தைக்கும்
உணவூட்டும் குணம்//

பசியோடு அழும்
உயிருக்காக அழுவாள்//

தனக்கில்லாமல் உணவை
எளியோருக்கு  கொடுப்பாள் //

உறவுகளின் குற்றத்தை
தானாகவே   ஏற்பாள் //

கிள்ளிக் கொடுக்காமல்
அள்ளிக் கொடுப்பாள் //

கணவன் துவண்டால்
வாடி விடுவாள்//

தலைவனோடு துணைநின்று
தூங்காமல்  உழைப்பாள் //

பெரியோரை மதித்து
மகிழ்வோடு வாழ்வாள்//

குழந்தைப் பருவத்தில்
சகோதரத்தை காப்பாற்றுவாள் //

முழுவிழி தூங்காது
அரைவிழி தூங்குவாள் //

பூவைப்போல் மென்மை
கசங்கி போகமாட்டாள் //

பூமனத்தை கிள்ளினால்
 பூகம்பமாய்
 வெடிப்பாள் //

@

கவிப்புயல் இனியவன்

இது மாலை நேரத்து மயக்கம்

 இது மாலை நேரத்து  மயக்கம்  
🌹

 சிவந்த மேனியுடன்
சில்லென்ற காற்று//

அலைந்து திரியும்
வான் முகில்கள்
//

தங்கத் தகடுபோல்
படர்ந்திருக்கும் வானம் //

மௌனமாக வீடு
திரும்பும் பறவைகள்//

சூரியன் பணியை
சந்திரனிடம் கொடுக்கிறது//

 மெல்ல நினைவில்
வருகிறாள் தேவதை//

@

கவிப்புயல் இனியவன்

பெண்ணெனும் ஓவியம்

பெண்ணெனும் ஓவியம்
.......

விரும்பிய கோடுகளால்
 வரைவதே ஓவியம்//

விரும்பிய எண்ணத்தில்
ரசிப்பதே ஓவியம்//

என்னவள் கோடாகவும்
 எண்ணமாகவும்
 இருக்கிறாள்//

இறைவனின் படைப்பில்
விசித்திர படைப்பு//

நடமாடித் திரியும்
ஓவியம் நங்கைகள்//

ஓவியத்தின் அழகு
 ராசிப்பவன் பார்வையில்//

ரசித்துப் பார்த்தால்
பெண் ஓவியம்//

சீண்டிப் பார்த்தால்
கிறுக்கல் சித்திரம்//

அழகான ஓவியத்தை
 அலங்கோலம் ஆக்காதீர்//

வரைந்தவன்
வந்தாலும்
 திருத்த முடியாது//

பெண் உயிரோவியம்
கிறுக்கினால் இறந்துவிடும் //

மதிப்போடு பார்த்தால்
 வணங்கும் சாமி//

@


கவிப்புயல் இனியவன்