இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காதலை கொல்லாதே ...!!!

உன்
காதலால் பேச்சையே
மறந்து விட்டேன் அத்தனை
வலியுடன் நீ பேசிவிட்டாய் ....!!!

நாம்
காதலில் கலக்கபட்ட
தண்ணீரும் எண்ணையும்
நீ தான் தண்ணீர் முதலில்
வெளியேறுவாய் ....!!!

ஒன்றில் நீ பேசு
அல்லது என்னை பேசவிடு
மௌனமாய் இருந்து காதலை
கொல்லாதே ...!!!

+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 730

உனக்கும் சேர்த்து அழுகிறேன் .....!!!

முள் வேலிக்குள் வாழ்ந்த ...
என்னை நந்தவனத்துக்குள் ..
கொண்டுவந்தவள் -நீ

காதல் வானத்தில்
ஜோடியாக பறக்க ஆசை
படுகிறேன் - காதல் சிறகை
உடைக்கிறாய் ....!!!

கலங்காதே கண்ணே...
சிரித்த போது என்னோடு
சேர்ந்து சிரித்தாய் ...
அழும்போது உனக்கும்
சேர்த்து அழுகிறேன் .....!!!

கஸல் 729

திங்கள், 29 செப்டம்பர், 2014

இதய தெய்வம் அம்மா ...!!!

புத்தக பை எனக்கு பாரம் ...
தான் சுமந்த அம்மா ...
கருவறையில் இருந்து ..
சுமைதாங்கியாய் வாழும் ..
இதய தெய்வம் அம்மா ...!!!

சுமைதாங்க முடியாமல் ...
சுருண்டு விழுகிறேன் தாயே ...
சுற்று முற்றும் தேடுகிறேன் ...
தாயே ஆறுதலுக்கு உன் மடி
சாய முடியாமல் அலறுகிறேன் ...!!!

என் அம்மா இல்லை ....!!!

எழுந்து நடக்க பழகிய போது ...
விழுந்து விழுந்து எழுந்தேன் ..
நான் விழும்போது மனத்தால் ..
தானும் விழுவது வேதனை ...
பட்ட என் அம்மா ....!!!

இத்தனை உறவுகள் என்னை
சுற்றி இருந்தாலும் -இப்போ
வாழ்கையில் விழுந்து விட்டேன்
எழுந்து வாடா என்று சொல்ல
அருகில் என் அம்மா இல்லை ....!!!

மூச்சு தந்தது அம்மா.....!!!

மூச்சு மூன்றெழுத்து ...
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
மூச்சு தந்தது அம்மா.....!!!
+
+
அம்மா
கடுகு கவிதை

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

துடிக்கும் துடிப்பை .....!!!

என் இதயத்தை கேட்டுப்பார்
உன் நினைவுகளை தாங்காமல்
துடிக்கும் துடிப்பை .....!!!

காதல் நரம்பில் வந்த
இன்ப இசையில்
சோககீதம் பாடவைத்தாய்.....
எப்படியோ என்னுடன் நீ
இருப்பாய் என்ற ஆசையுடன்
வாழ்ந்தேன் ....!!!

என் ஒவ்வொரு இதய
நரம்பையும் அறுத்துவிட்டு
காதல் வீணையில் ஓசை
இல்லை என்கிறாயே ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

வியாழன், 25 செப்டம்பர், 2014

என் இதயம் எங்கே ...?

என் இதயம் எங்கே ...?
இதயத்தில் நீ இருக்கிறாய் ...
உன்னை கண்ட காட்சி
கண்ணில் இருக்கிறது
இரண்டுமே
கொல்கிறது என் உயிரை ....!!!


என் காதலும் நீ
என் காமமும் நீ
என் கவிதையும் நீ
என் மூச்சும் நீ


ஒன்றை புரிந்துகொள்
உனக்கு கவிதை எழுதும்
ஒவ்வொரு நொடியும்
நான் சொர்க்கத்தில் வாழும்
நொடிகள் ....!!!

எகிப்தின் மம்மியில் வைத்தால்...!

நான் ஒன்றும் விஷம் ...
அருந்த தேவையில்லை...!
உன் நினைவே போதும்
நான் மெல்ல மெல்ல
இறப்பதற்கு ....!!!


என் உடலை எகிப்தின்
மம்மியில் வைத்தால்...!
இரண்டு நிகழ்வுகள் 
ஒன்று என் உடல் அழியாது
மற்றையது உன் நினைவுகள்
அழியாது ....!!!


நினைவு என்பது ஒரு
மலர்தான் ....
உதிக்கும் போது அழகு
வாடும் போது அழுகை ....!!!

வாழவைக்கிறாய் -நீ

எப்போது ஒரு மனிதன்
இறக்கின்றான் ....?
மூளையில் நினைவாற்றல்
நின்றவுடன் ...!!!


அன்பே
உன் நினைவாற்றல்
என்னை வாழவைக்கிறது
வாழ்கிறேன் என்பதைவிட
வாழவைக்கிறாய் -நீ


நீ பேசாத நிமிடங்கள்
நான் புதைகுழிக்குள்
வாழும் நிமிடங்கள்
என் கடவுளும் நீ
காலனும் நீ ....!!!

காதலின் தலைவிதி

நான்
காத்திருக்கிறேன்
காத்திருப்பேன் 
அன்பே உன் கனமான
வார்த்தைக்காக ....!!!

நீ
காரமாக பேசினாலும்
கண்டு கொள்ளாமல்
விட்டாலும் காத்திருப்பேன்
உன்
கனமான வார்த்தைக்கு ....!!!

காதலின் தலைவிதி
காத்திருப்பதும்
கலங்கிக்கொண்டு வாழ்வதும்
நான்
மட்டும் விதிவிலக்கா ...?

துன்பம் கூட கடுகளவுதான் ....!!!

எத்தனை முறை என்னை
கோபப்படுத்தினாலும்
பறவாயில்லை ....!!!

அத்தனை முறை உன்னை
பலமடங்கு நேசிக்கிறேன்
நீ எப்படி வேண்டுமானாலும்
இருந்து விடு ....!!!

காதலோடு இருந்துவிடு
நீ காதலோடு இருந்தால்
கடலளவு துன்பம் கூட
கடுகளவுதான் ....!!!

உன் நினைவோடு வாழ்கிறேன்

என் நினைவோடு ..
உன் நினைவுகளை
இணைத்து பார் உயிரே ....!!!

என் நினைவுகள் படும்
வேதனை உனக்கு புரியும் ...
என் நினைகளின் காயங்கள்
தெரிய வரும் ....!!!

அத்தனை காயங்கள்
வந்தபோதும் உன் நினைவுகள்
நான் வாழும் ஆலயம்

வியாழன், 11 செப்டம்பர், 2014

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

என்னவனே ..
நீ இருக்கும் தூரம் வரை 
என் எண்ணங்களும் 
நீண்டு கொண்டே செல்கிறது ....!!!

எண்ணங்கள் நீண்ட 
தூரம் போல் -என் 
கண்கள் நீ இருக்கும் 
இடத்தை சென்றிருந்தால் 
கண்கள் கண்ணீர் 
வெள்ளத்தில் நீந்தாதடா ....!!!

திருக்குறள் : 1170
+
படர்மெலிந்திரங்கல் 
+
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் 
நீந்தல மன்னோஎன் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 90

இரவுகளே நிறுத்துங்கள்

இரவுகளே நிறுத்துங்கள் 

காதல் துன்பத்தில் 
பெரும் துன்பம் விடியாத 
இரவுகள் தான் .....!!!
நினைவுகளோடு தூங்காத ..
கண்ணுக்கு விடியல் தான் 
விடுதலை .......!!!

நீண்டு போகும் 
இரவுகளே நிறுத்துங்கள் 
முடியவில்லை இதற்கு 
மேல் நினைவுகளோடு 
ஏங்கிகொண்டிருக்க .....!!!

திருக்குறள் : 1169
+
படர்மெலிந்திரங்கல் 
+
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் 
நெடிய கழியும் இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 89

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

ஓ இரவே நீயும் 
என்னைபோல் அநாதை 
எல்லோரையும் 
தூங்க வைத்திவிட்டு 
நீ -என்னோடு இருகிறாய் ...!!!

காதல் 
வலி கொண்டவருக்கு 
பகல் என்ன ..? 
இரவென்ன ..?
இரவே கவலை படாதே 
உன்னோடு நானும் 
இருக்கிறேன் ....!!!

திருக்குறள் : 1168
+
படர்மெலிந்திரங்கல் 
+
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா 
என்னல்லது இல்லை துணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 88

தத்தளிக்கிறேன் ...!!!

தத்தளிக்கிறேன் ...!!!

என்னவனே 
காதலின் துன்பம் 
நடுகடலில் தத்தளிக்கும் 
படகை போன்றது ....!!!

நடு ராத்திரியானாலும் ...
உன் நினைவோடு ....
தனித்திருந்து தவிக்கிறேன் ...
காதல் என்ற கடலின் ...
துன்பத்தை கடந்து செல்ல ....
முடியாமல் தத்தளிக்கிறேன் ...!!!


திருக்குறள் : 1167
+
படர்மெலிந்திரங்கல் 
+
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் 
யாமத்தும் யானே உளேன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 87

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

காதல் இன்பம் 
ஊற்றுப்போன்றது 
அது பெருகி பெருகி 
கடலைபோல் மாறி 
இன்பம் தரும் ....!!!

என்னவனே ...
பிரிந்து வாழ்வது 
கடலை விட கொடுமை ...
கடலின் ஆழத்தை அளந்து 
விடலாம் - நீ தந்த துயரத்தை 
அளவிடவே முடியாதடா ....!!!

திருக்குறள் : 1166
+
படர்மெலிந்திரங்கல் 
+
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் 
துன்பம் அதனிற் பெரிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86

புதன், 10 செப்டம்பர், 2014

குப்பை கடுகு கவிதை 05

எம்
அருகே வரும் போது
மூக்கை பொத்தும்
மானிடா ....!!!
நீ
இறந்தால் அடிக்கும்
நாற்றத்தைவிட நாம்
ஒன்றும் பெரிதல்லா ...!!!

குப்பை
கடுகு கவிதை

குப்பை - கடுகு கவிதை

எங்களை
எரிக்காதீர்கள்
புதைக்காதீர்கள்
அது மனிதனை செய்யும்
பணிகள் ....!!!
எங்களை மீள் சுழற்சி
செய்யுங்கள் ....!!!

குப்பை
கடுகு கவிதை

குப்பை கடுகு கவிதை 03

உங்கள்
உள்ளங்களையும்
இடங்களையும்
தூய்மை படுத்தாத
நீங்கள் தானே -குப்பை
எங்களை குப்பை
என்கிறீர்களே ....?

குப்பை
கடுகு கவிதை 03

குப்பை கடுகு கவிதை 02

சிதறி கிடக்கும் நாங்கள் ...
குப்பைகள் - அல்ல ....
உங்கள் மீது ...
தொற்ற இருக்கும் ...
பெயர் வைக்கப்படாத ..
நோய்கள் ....!!!

குப்பை
கடுகு கவிதை

குப்பை - கடுகு கவிதைகள்

எங்களை ....
தொட்டிக்குள் ஒழுங்காக .....
போடாவிட்டால் .....
நாங்கள் -உங்களை ....
பெட்டிக்குள் போடுவோம் ....!!!

குப்பை
கடுகு கவிதை

காயப்பட்டிருக்கிறேன் ....!!!

நீ
நினைவாய் தந்த
ரோஜா செடியில்
முற்கள் மட்டுமே
உதிக்கிறது ....!!!

இரவு எப்போது
வரும் காத்திருக்கிறேன்
அப்போது இனிமையாய்
வருவாயோ ...!!!

உன் அழகால்
இதயம் முழுக்க
காயப்பட்டிருக்கிறேன் ....!!!

கஸல் 728

முற்களால் பூஜை செய்கிறாய் .....!!!

உன்
நினைவுகளில் இருந்து
கவிதை எழுதிய -நான்
வலிகளில் இருந்து
கவிதை எழுதுகிறேன் ....!!!

காதல்
பூவால்  பூஜை
செய்த - நீ
முற்களால் பூஜை
செய்கிறாய் .....!!!

உன் கண்ணுக்கு
மயங்கி காதல் செய்தேன்
இப்போ உன்னை கண்டே
மறைகிறேன் ....!!!

கஸல் 727

காற்று இல்லை

சொகுசான...
நாற்காலியில் ..
இருந்து கொண்டு ...
காற்று இல்லை என்று
கதறிக்கொண்டு இருகிறாயே
மனிதா ...?

மரம்
கடுகு கவிதைகள்

என் நிழலின் கீழிருந்து ...

நான்
செய்த பெரும் தவறு ..
மனிதா உனக்கு நிழல் ..
தந்தது தானோ ...?
என் நிழலின் கீழிருந்து ...
என்னையே ....
வெட்டுகிறாய் ...!!!

மரம்
கடுகு கவிதைகள்

உங்களுக்கு உயிர் காப்பது ...!!!

எங்களில் ஒரு சில ..
மரங்களை கடவுளாக்கி ...
மற்றவற்றை விறகுகள் ...
ஆக்கியது மனிதனே தவிர ...
நாங்கள் இல்லை .....!!!
எமது கடமை ஒரே செயல்
உங்களுக்கு உயிர் காப்பது ...!!!


மரம்
கடுகு கவிதைகள்

சிரித்துகொண்டே இறக்கிறோம்

சிலுவைக்காகவும் ....
எங்களை வெட்டுகிறீர்கள்....
இறுதி ஊர்வல கட்டைக்காவும் ...
எங்களை வெட்டுகிறீர்கள் ...
சிரித்துகொண்டே இறக்கிறோம்
நாங்கள் ....!!!

மரம்
கடுகு கவிதைகள்

மரம் -கடுகு கவிதைகள்

ஏய் மனிதா ....
என் மீது இருப்பவை 
வெறும் இலைகள் என்று 
நினைத்துவிடாதே ....!!!
ஒவ்வொரு உயிர்களுக்கும் 
நான் வழங்கும் மூச்சு ....!!!

மரம் 
கடுகு கவிதைகள்

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

கண்கள் தூங்குவதோ ...?

நான் 
எங்கே தனிமையில் 
இருந்தேன் -உன் 
நினைவின் வலிகளுடன் 
தானே வாழுகிறேன் ...!!!

உன் 
மடியை ஒருமுறை 
கொடு தூங்க அல்ல 
என் மூச்சை விட ....!!!

தூங்கியதே இல்லை 
கண்ணீருடன் இருக்கும் 
கண்கள் தூங்குவதோ ...?

பகைவனாக மாறி விட்டால்...?

பகைவனாக மாறி விட்டால்...? 

போதுமடா...
நீ தரும் வலி ....
இன்பமாக இருக்கும் ....
போதே இத்தனை வலியை...
தருபவனே ....!!!

சில வேளை
பகைவனாக மாறி விட்டால் 
என்னென்ன 
வலிகளையெல்லாம் 
தருவாயோ உயிரே .....!!!

திருக்குறள் : 1165
+
படர்மெலிந்திரங்கல் 
+
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு 
நட்பினுள் ஆற்று பவர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 85

திங்கள், 8 செப்டம்பர், 2014

ஏங்கி துடிக்குது மனம் ...!!!

ஏங்கி துடிக்குது மனம் ...!!!

என் இதயம் 
ஒரு காதல் கடல் ...
வலியாலும் வெட்கத்தாலும்... 
காதல் கடல் ....
அலைமோதுகிறது ...!!!

காதல் கடலில் நின்று 
தத்தளிக்கிறேன் ..
கரை ஒதுங்க ஏங்குகிறேன் ...
ஓடமாக ஏதுமில்லாமல் ..
ஏங்கி துடிக்குது மனம் ...!!!

திருக்குறள் : 1164
+
படர்மெலிந்திரங்கல் 
+
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் 
ஏமப் புணைமன்னும் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 84

உயிர் வலிக்கிறது

உயிர் வலிக்கிறது 

இரு தலை 
கொல்லி எறும்பு போல் ...
ஒருபுறம் காதல் வலியை..
தாங்க முடியாமல் 
உயிர் வலிக்கிறது 
மறு புறம் சொல்ல முடியாமல் 
நாணம் தடுக்கிறது ....!!!

காதலால் ...
என்னை காவடிபோல் 
ஆக்கியவனே - உன் நினைவுகள் 
நாணங்கள் காவடிபோல் 
ஆடவைக்கிறது ....!!!

திருக்குறள் : 1163
+
படர்மெலிந்திரங்கல் 
+
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் 
நோனா உடம்பின் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 83

என்னவன் தந்து விட்டான் ....!!!

என்னவன் தந்து விட்டான் ....!!!

காதலின் துன்பத்தை 
மறக்கவும் முடியாது 
மறைக்கவும் முடியாது 
மறைக்க முடியாத வலியை
என்னவன் தந்து விட்டான் ....!!!

என்னவனே 
நீ தந்த காதல் வலியை 
உன்னிடமும் சொல்ல 
வெட்கம் தடுகிறது ...
அத்தனை இன்பத்தை 
தந்தவனே .....!!!


திருக்குறள் : 1162
+
படர்மெலிந்திரங்கல் 
+
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு 
உரைத்தலும் நாணுத் தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 82