இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 மார்ச், 2016

முள்ளும் ஒரு நாள் மலரும்

மலர்போல் வந்து ....
முள்ளாய் போன 
காதலும் உண்டு....!!!

முள்போல் வந்து ....
மலராய் மலர்ந்த ...
காதலும் உண்டு....!!!

காதலை காதலால் ...
காதல் செய்தால் ...
முள்ளும் ஒருநாள் ...
மலராகும் ....!!!

^
முள்ளும் ஒரு நாள் மலரும் 
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

சிலுவை சுமக்கும் மனிதன்

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........சிலுவை சுமக்கும் மனிதன்.......

^^^^^^^^^^^^^^^^^

மனிதனின் எல்லா செயல்களும் ....
சிலுவையாக மாறுகின்றன ....
எல்லா விளைவுகளும் ஆணியாக....
அறையப்படுகின்றன....!!!

குடும்பம் என்னும் உறவை ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
அன்பு என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

கல்வி, பதவி, என்னும் ....
சிலுவையை சுமக்கிறான் .....
அதிகாரம் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

உழைப்பு, வருமானம் எனும் ...
சிலுவையாய் சுமக்கிறான் ....
விரத்தி நோய் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

போட்டி வெற்றி என்னும் ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
பகைமை ,பொறாமை ,ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

அத்தனை சுமைகளையும் ....
சுமக்கும் மனிதனுக்கு ....
விடுதலை ஒன்றே விடுதலை ....
ஓடும் புளியம்பழம் போல் ....
வாழ்வதே விடுதலை .....!!!

&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்

தப்புக்கணக்கு

தப்புக்கணக்கு
-----
தூரத்தில் இருப்பதிலும் ....
மறை பொருளாய் இருப்பதிலும் ....
எப்பவுமே மனித மனத்துக்கு .....
ஒரு இச்சையுண்டு....!!!

எனக்கு அது விதிவிலக்கல்ல ....
நிலாமீது ஒரு காதல் ....
விண்மீன்கள் மீது மோகம் ....
இரண்டையும் ரசிப்பதற்கு ....
கனவு விமானத்தில் ...
விண் மண்டலம் சென்றேன் .....!!!

நிலவருகே சென்றேன் ....
வா என்று அழைகவில்லை .....
அவள் மென்மை அழகில் ....
மயங்கினேன் என்னை ....
மறந்து கவிதை எழுதினேன் .....!!!

மெல்ல சொன்னது நிலா ....
அதிகம் என்னில் காதல் ....
கொள்ளாதே - எனக்கும் ...
இருட்டு உண்டு என்னுள் ...
இருளும் உண்டு .......!!!

நிலா அருகில் துடித்து ....
நடித்துகொண்டிருந்த ....
விண் மீன்கள் கண்களை ...
சிமிட்டி சிமிட்டி என்னை ....
அழைத்துக்கொண்டிருந்தன .....
அருகில் சென்றேன் .....
தள்ளி போய்விடு என்று ...
கத்தியது .....!!!

திகைத்து நின்றேன் ....
நீதானே என்னை கண்ணால்...
சிமிட்டி சிமிட்டி வா வா ...
என்றாய் இப்போ திட்டுகிறாயே ....?

போடா மூடனே ....
என் குணவியல்பு அதுவே ....
நீ தப்பாக நினைத்தது -என்
தப்பில்லையே ...???

மனித மனம் இப்படித்தான் ...
அருகில் உள்ள அழகை ரசிக்காது ...
தொலைவில் உள்ளத்துக்கு ஆசைபடும் ....
அவமானமும் படும் ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**தப்புக்கணக்கு **
+
கவிப்புயல் இனியவன்

காரணம் சொல்வேன்

உன்னையேன்....
எனக்கு பிடிகிறது ...
என்பதற்கு ஆயிரம் ...
காரணம் சொல்வேன் ...!!!

உன் 
ஒவ்வொரு செயலும் ....
எனக்கும் பிடிக்கும் ...
நேற்று ஒருகாரணம் ...
இன்று ஒருகாரணம் ...
சொல்கிறாயே என்கிறாய் ....!!!

நீயும் அப்படிதானே ....
நேற்று ஒரு செயல் ....
இன்று ஒரு செயல் ....
செய்துகொண்டிருகிறாய்....!!!

^
என் காதல் பைங்கிளியே -05
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

உன் மீது நான் வைத்த காதல்

நீ ...
எத்தனை... 
முறை திட்டுகிறாயோ...?
அதன் இருமடங்கு உன்னை ...
நான் திட்டுவேன் ....
நிச்சயம் 
உனக்கு கோபம் வரும் ....
அதுதான் எனக்கு தேவை ....!!!

கோபம் தணிந்தபின் ....
நிச்சயம் என்னை நினைப்பாய் ....
அப்போது புரியும் ....
உன் மீது நான் வைத்த காதல் ,,,,!!!

^
என் காதல் பைங்கிளியே -04
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

இனியவா என அழைதுப்பார்

ஒருமுறை என்னை ....
இனியவா என அழைதுப்பார் ....
உன் இதயத்தில் ஆயிரம் ....
பூக்கள் பூக்கும் அழகை பார் ....!!!

என்னை நீ 
அழைக்கும் நாள் வெகு ....
தூரத்திலில்லை ....
அன்று நான் இறந்து ...
பிறப்பேன் உனக்காக ...!!!

^
என் காதல் பைங்கிளியே 
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

என்னை காதலித்துப்பார்

நீ ...
எத்தனை...
முறை மறுத்தாலும் ....
நான் ..
அதற்கு பலமுறை ....
முயற்சிப்பேன் ....

ஆனால் ...
உன் அனுமதியில்லாமல் ....
உன்னை ஏற்க மாட்டேன் ....
ஒருமுறை என்னை ....
காதலித்துப்பார் .....
பலமுறை என்னையே ....
வணங்குவாய் ....!!!

^
என் காதல் பைங்கிளியே
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

என் காதல் பைங்கிளியே

நீ 
எனக்காக பிறந்தவள் ....
என்னை காதலிக்க.... 
எதற்காக தயங்குகிறாய் ...?
கவலையை விடு ....
நான் உனக்காகவே ....
பிறந்தவன் ......!!!

என் 
காதல் பைங்கிளியே ....
அவனவன் காதல் ...
அவனால் .....
தீர்மானிக்கபடுவதில்லை ....
எல்லாம் வல்ல அவனே ...
நிச்சயிக்கிறான் ....!!!

^
என் காதல் பைங்கிளியே 
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

தப்புக்கணக்கு

தப்புக்கணக்கு 
-----
தூரத்தில் இருப்பதிலும் ....
மறை பொருளாய் இருப்பதிலும் ....
எப்பவுமே மனித மனத்துக்கு .....
ஒரு இச்சையுண்டு....!!!

எனக்கு அது விதிவிலக்கல்ல ....
நிலாமீது ஒரு காதல் ....
விண்மீன்கள் மீது மோகம் ....
இரண்டையும் ரசிப்பதற்கு ....
கனவு விமானத்தில் ...
விண் மண்டலம் சென்றேன் .....!!!

நிலவருகே சென்றேன் ....
வா என்று அழைகவில்லை .....
அவள் மென்மை அழகில் ....
மயங்கினேன் என்னை ....
மறந்து கவிதை எழுதினேன் .....!!!

மெல்ல சொன்னது நிலா ....
அதிகம் என்னில் காதல் ....
கொள்ளாதே - எனக்கும் ...
இருட்டு உண்டு என்னுள் ...
இருளும் உண்டு .......!!!

நிலா அருகில் துடித்து ....
நடித்துகொண்டிருந்த ....
விண் மீன்கள் கண்களை ...
சிமிட்டி சிமிட்டி என்னை ....
அழைத்துக்கொண்டிருந்தன .....
அருகில் சென்றேன் .....
தள்ளி போய்விடு என்று ...
கத்தியது .....!!!

திகைத்து நின்றேன் ....
நீதானே என்னை கண்ணால்...
சிமிட்டி சிமிட்டி வா வா ...
என்றாய் இப்போ திட்டுகிறாயே ....?

போடா மூடனே ....
என் குணவியல்பு அதுவே ....
நீ தப்பாக நினைத்தது -என் 
தப்பில்லையே ...???

மனித மனம் இப்படித்தான் ...
அருகில் உள்ள அழகை ரசிக்காது ...
தொலைவில் உள்ளத்துக்கு ஆசைபடும் ....
அவமானமும் படும் ....!!!

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
**தப்புக்கணக்கு **
+
கவிப்புயல் இனியவன்

சிலுவை சுமக்கும் மனிதன்

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........சிலுவை சுமக்கும் மனிதன்.......

^^^^^^^^^^^^^^^^^

மனிதனின் எல்லா செயல்களும் ....
சிலுவையாக மாறுகின்றன ....
எல்லா விளைவுகளும் ஆணியாக....
அறையப்படுகின்றன....!!!

குடும்பம் என்னும் உறவை ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
அன்பு என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

கல்வி, பதவி, என்னும் ....
சிலுவையை சுமக்கிறான் .....
அதிகாரம் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

உழைப்பு, வருமானம் எனும் ...
சிலுவையாய் சுமக்கிறான் ....
விரத்தி நோய் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

போட்டி வெற்றி என்னும் ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
பகைமை ,பொறாமை ,ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

அத்தனை சுமைகளையும் ....
சுமக்கும் மனிதனுக்கு ....
விடுதலை ஒன்றே விடுதலை ....
ஓடும் புளியம்பழம் போல் ....
வாழ்வதே விடுதலை .....!!!

&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 29 மார்ச், 2016

சிலவேளைபுரிகிறாயே இல்லை

நீ 
அகராதி... 
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!

மீனைப்போல்... 
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!

நீ 
நிலா 
நான் நட்சத்திரம் 
அமாவாசையிலும் 
உன்னை நினைப்பேன் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986

என் காதல் பைங்கிளியே

நீ
எனக்காக பிறந்தவள் ....
என்னை காதலிக்க....
எதற்காக தயங்குகிறாய் ...?
கவலையை விடு ....
நான் உனக்காகவே ....
பிறந்தவன் ......!!!

என்
காதல் பைங்கிளியே ....
அவனவன் காதல் ...
அவனால் .....
தீர்மானிக்கபடுவதில்லை ....
எல்லாம் வல்ல அவனே ...
நிச்சயிக்கிறான் ....!!!

^
என் காதல் பைங்கிளியே
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் 

திங்கள், 28 மார்ச், 2016

பிறப்பும் இறப்பும் சமன்

பிறப்பும் இறப்பும் சமன்
---
இறந்த பிணத்தை .....
இறக்கப்போகும் பிணங்கள் ....
ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!!

இறந்த பிணம் ...!!!
கோபத்தில் பேசத்தொடங்கியது ......
இறக்கபோகிறவர்களே....
வாருங்கள் இறக்கபோவதற்காக....?

பிறப்பு இனிமையானது ....
இறப்பு கொடுமையானது ....
என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் ....
பிறப்பு இயற்கை தந்த பரிசு ....
இறப்பு இயற்கை தந்த கொடை.....
புரிந்து கொண்டவனே ஞானி ....!!!

எல்லா உயிரும் ஒருநொடி ....
தொடக்கம் எல்லா உயிரின் ....
அடக்கமும் ஒரு நொடி தான் .....
அந்த ஒருநிமிடத்தில் தான் ....
உலகமே இயங்குகிறது ......!!!

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
** பிறப்பும் இறப்பும் சமன் **
+
கவிப்புயல் இனியவன்

சிந்திக்க ஹைக்கூக்கள்

மூக்கை பொத்துகிறான்
மனம் முழுக்க குப்பையுடன்
சாக்கடை சிரிக்கிறது
^
ஆன்மீக ஹைக்கூ கவிதை

@@@

நச்சுகளை உள் வாங்கி
அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம்
பசுமை மரங்கள்
^
இயற்கை ஹைக்கூ கவிதை

@@@

ஆசீர் வாதம் பெற்றவள்
ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள்
விதவை பெண்

^
சமூக ஹைக்கூ கவிதை

@@@


வானத்து நீரை
வடிகட்டி உள்ளே எடுக்கிறது
ஓட்டை குடிசை

^
வறுமை ஹைக்கூ கவிதை

@@@

சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை
வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது
ஊழியச்சுரண்டல்

^
பொருளாதார ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

வெள்ளி, 25 மார்ச், 2016

ஹைக்கூ கவிதை

ஹைக்கூ கவிதை
-----
சூரியன் உதயமாகிறான்
கோழி சேவலின் வாயை மூடியது
அருகில் இறைச்சி  வியாபாரி

^
கவிப்புயல் இனியவன் 

வியாழன், 24 மார்ச், 2016

முடிவு சாதனையாக இருக்கும்

காகித
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன் 

காட்டு மரமும் வீட்டு மரமும்

காட்டு மரமும் வீட்டு மரமும்
-----
வேகமாக வெட்டப்பட்டு ....
வருகின்றன காட்டு மரங்கள் ...
விறக்குக்காக அல்ல ....
கோடரிக்கு பிடிகளாக ....
கூடி போராடமுடியாத ....
காட்டு மரங்கள் முடிவுக்கு ....
வீட்டு மரங்களுடன் ....
கலப்பு திருமணம் செய்வதற்கு ....!!!

காட்டு மரங்கள் கொஞ்சம் ....
வீரம் நிறைந்தவை வலிமையானவை  ...
அவை வளர்க்கப்படும் வளரும் சூழலே ....
கொடிய மிருகங்கள் ஊர்வன மத்தியில் ...
வாழும் சூழலே அவற்றின் குணத்துக்கு ...
காரணமாக இருக்குமோ ....?

வீட்டு மரங்கள் மிகவும் ....
மென்மையானவை வீரமும் ...
வலிமையையும் குறைந்தவை ....
மனிதர்கள் மத்தியில் வளர்வது ....
காரணமாக இருக்குமோ ....?

காட்டு மரம் வீட்டு மரத்தை ....
பார்க்க வந்தது வீட்டு மரங்கள் ...
பயத்தால் நடுங்கின மௌனமாகின ....
நாங்கள் உங்களோடு கலப்பு ...
திருமணம் செய்ய விரும்புகிறோம் ...
எங்களை காப்பாற்ற வேறு வழியில்லை ....!!!

வீட்டு மரங்கள் கடுமையாக ....
எதிர்த்தன உங்களை மணந்தால் ...
நாங்களும் இறக்க நேரிடும் ...
முடியாது முடியவே முடியாது .....
காட்டு  மரம் கவலை படவில்லை ....
மனிதர்கள் மத்தியில் வளரும் ...
வீட்டு மரங்களுக்கு எப்படி ...?
சுயநலம் இல்லாமல் போகும் ...???

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**காட்டு மரமும் வீட்டு மரமும்**
+
கவிப்புயல் இனியவன் 

ஒரு நிமிட உலகம்

கூடு திறந்தால் காடு
-----
அந்த மரண வீட்டில் ....
அப்படி ஒரு சனக்கூட்டம் ....
ஆராவாரமான மரணவீடு ....
ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ...
சொல்பவர்கள் நிறைந்து ...
காணப்பட்டனர் .....
மூன்று நாட்களாக ...
கண்ணீர் விழா ....!!!

சடலம் இருக்கும் பெட்டி ...
அலங்காரத்தால் ஜொலிக்கிறது ....
குளிரூட்ட பட்ட ஊர்தியில் ...
சடலம் வைக்கப்படுகிறது ....
மந்திரி வந்து அஞ்சலி செலுத்த ....
வீதியெங்கும் வாகன நெரிசல் ....
வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ...
பறை சத்தம் காதை கிழித்தது ....!!!

சடலம் போகும் பாதையில் ....
விபத்தில் இறந்த எருமைமாட்டு ...
சடலத்தை நாய்களும் காகங்களும் ....
குதறி எடுத்தபடி இருந்தன ...
இறந்தபின்னும் மற்றவைக்கு ...
உதவும் அந்த எருமையின் இறப்பு ....!!!

இறப்புக்கு முன்னரே ....
மனிதனும் மிருகமும் ....
இறந்துவிட்டால் எல்லாமே ...
சடலம் தானே .....!
எல்லா உயிரினத்தின் வாழ்வும் ...
அடுத்த ஒரு நிமிடம் கூட ....
உத்தரவாதம் இல்லை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**கூடு திறந்தால் காடு **
+
கவிப்புயல் இனியவன்


அந்தரங்க கட்டிலுக்கு

அந்தரங்க கட்டிலுக்கு
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன் 

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

@@@


நான் உன்னை காணவில்லை

நான்
உன்னை காணவில்லை....
கண்டிருந்தால் கண்ணோடு....
கலந்து கண்ணீரோடு ...
வெளியேற்றி இருப்பேன் ....!!!

நான்
உன்னை தொட்டிருந்தால் ...
உடலோடு கலந்து ....
உறவோடு விலகியிருப்பேன் ....

உன்னை ...
மனத்தால் காதலிக்கிறேன் ....
வெளியேற்றுவதென்றால் .....
என் இதயத்தை இழக்கவேண்டும் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

இறைவனோடு ஒரு தொடர்பாடல்

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......

^^^^^^^^^

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு  தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர்
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் ....
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

இறைவா தயவு செய்து ...
இணைப்பை துண்டித்துவிடாதே....
உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு ....
நீ துண்டிக்கும் வரையும் நான் ...
துண்டிக்கபடமாட்டேன் என்றார் ...
இறைவன் ......!!!
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

உன் படைப்பில் ஏன் இத்தனை ....
வேறுபாடுகள் - அறிவாளி ...
அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ...
படித்தவன் படிக்காதவன் ....
இன்னும் இன்னும் எத்தனையோ ....
ஏன் இத்தனை வேறுபாடுகள் ....?

இறைவன் சிரித்துகொண்டு ...
சொன்னார் என் படைப்பில் ...
வேறுபாடு என்றும் இல்லை ...
உங்கள் எண்ணத்தாலும் ....
செயலாலும்தான் இத்தனை ...
வேறு பாடுகள் நீங்கள் தான் ...
வேறு படுத்தினீர்கள்
வேறுபடுகிறீர்கள் என்றார் ....!!!

இப்போதும் பார் நீ கூட
இறைவனோடு பேசுகிறாய் ...
என்று உன்னோடு ஆழ்மனதோடு ....
பேசுகிறாய் -கண்டு பிடித்துவிட்டாய் ....
கடலின் பாதையை  .....!!!
ஒன்றுமே சொல்லாமல் இறைவன் ...
போய் விட்டார் - மன்னிக்கவும்
என்னுள் அடங்கிவிட்டார் .....!!!
எத்தனை உண்மையான வசனம் இது ....!!!
&
கடல் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்

கடல் வழிக்கால்வாய்

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இயற்கையோடு ஓட்டபந்தையம் .......

^^^^^^^^^^^^^^^^^

எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!

போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!

நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திரும்பி பார்த்து சொன்னேன் ....
படைத்தது நீயாக இருக்கலாம் ....
உனக்கு படைக்கத்தான்தெரியும் ....
முயற்சிக்க தெரியாது .....!!!

இன்னும் நீ ஒன்பது கோள்...!
உன்னால் பெரிதாகவும் முடியல்ல ....
சிறிதாகவும் முடியல்ல .வேகத்தை ...
கூட நீ இன்னும் மாற்றல்ல என்றேன்...
இயற்கை மௌனமானது ....!!!

திடீரென எங்களின் பின்னான் ....
பலத்த காற்று வீச இயற்கை ....
வேகமாக முன்னேறியது -நான்...?
பஞ்சல்ல -மனிதன் -காற்றோடு ...
போக முடியாது ......!!!

இயற்கை என்னை ஏளனமாக ....
பார்த்தது - புரிகிறதா என்பலம் ...?
அதேநேரத்தில் மீண்டும் ஒரு ....
பலத்த காற்று இப்போ எங்களுக்கு ....
முன்னாள் வீசியது -இயற்கை ...
எனக்கு பின்னால் சென்றுவிட்டது .....!!!

ஏய் இயற்கையே ...
உனக்கு ஆக்கவும் அழிக்கவும் ...
முடியும் - சொந்த முயற்சியால் .....
மீள முடியாது . மனிதனால் தான் ....
மீள உருவாக்கும் திறன் இருக்கிறது ....!!!

எல்லை கோட்டில் .....
இயற்கை சொன்னது ....
மனிதா நீ கூறிய
அனைத்தையும் -நான்
ஏற்கிறேன் -ஆனால்
இருவருக்கும் தோற்றங்கள் ....
வேறுபடலாம் ஆனால் இருவரும் ...
இயற்கையே .......!!!

நீயும் நானும் பயணிக்கும்
கால்வாய்கள் வேறுபடுகின்றன ....
சங்கமம் கடல் ஒன்றே தான் ....!!!

&
கடல் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன் 

புதன், 23 மார்ச், 2016

என்னவளின் பக்கம்- 18

பள்ளி பருவத்தில் ....
கல்வி சுற்றுலா போனோம் .....
மற்றவர்கள் எல்லோரும் ....
சுற்றி பார்த்தார்கள் ...
நீ என்னை சுற்றி சுற்றி ....
வந்தாய் ,,,,,,,!!!

எனக்கு சிறிதாய் 
காலில் கல் அடிபட்டது ....
துடித்துப்போனாய் ....
இன்று உன் இதயத்தில் ...
காயத்தை தந்துவிட்டேன் ....
என்ன பாடுவடுவாய் ....
மன்னித்து விடு மன்னவா ....!!!

^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 18

கவிப்புயல் இனியவன்