இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

கனவு

படித்தவனுக்கு வேலைவாய்ப்பு - கனவு
பள்ளி மாணவனுக்கு விடுமுறை -கனவு 
பக்கத்துவீட்டாருக்கு என் வீட்டில் -கனவு 
பருவ வயதில் காதலில் -கனவு 
பருவ மங்கைக்கு திருமணத்தில் -கனவு 
பட்ட கடனுக்கு வட்டி செலுத்துல்-கனவு 
பண்பாடு இல்லாதவனுக்கு வார்த்தை -கனவு 
பட்டியில் பசுவுக்கு காளைமேல் -கனவு 
பட்டினியில் இருப்பவனுக்கு உணவு -கனவு 
அடுத்தென்ன 
அடுத்தென்ன 
என்பதே கனவு .....!!!

பொருளாதார கவிதை

விலையேற்றம் விலையேற்றம் 
தலை சுற்றும் விலையேற்றம் 
தலையை சற்று திரும்பி பார் 
விலையேற்றத்துக்கு நீ தான் காரணம் ..? 
உன் வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார் 
உணவு சாலையில் கொட்டப்படும் சோற்றை பார் 
திருமண வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார் 
சோற்றையே வீணாக்கும் உன் காலாச்சாரம் 
நீ கொண்டு வந்தாதால் விலையேற்றம் 
இந்த கலாச்சாரத்தை மாற்றாத வரை 
விலையேற்றத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது 
எல்லாவற்றையும் நுகரும் உலகமயம் 
உன்னையும் நுகர்ந்துகொண்டிருக்கிறது 
வீண்விரையத்தை குறை விலை குறையும்


கூலிக்கும் காதல் வரும்

கூலி வேலை செய்தேன்
 உன் வீட்டில்
யார் கண்டது நீ கண்ணில்
படுவாய் -என்று ?
கூலிக்கும் உன்மீது ஆசை .
உனக்கும் தான் .
கூடி ஒருநாள்கூட போசமுடியாத
-தினக்கூலினான் .
வீட்டுவேலை முடிந்ததும்
-முடிந்தது என் காதல்
கண்ணே முடியவில்லை
உன் நினைவுகளை மறக்க
முடியவில்லை யாருக்கும் சொல்ல .
கூலிக்கு தேவையா?
இந்தக்காதல் என்பார்கள் .
கூலிக்கும் இதயம் இருக்கு
 என்று ஏன் புரிவதில்லை
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் போதும் ....

காதலில் தோல்வி

காதலில் தோல்வி கண்ட 

ஒவ்வொரு இதயமும் மயானம் தான் 

சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும் 

இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை

இறந்த காதலும் திரும்பி வருவதில்லை 

இதயம் உள்ளவன்

அன்பே .... 

உனக்காக வசந்த மளிகை கட்ட 

நான் வசதியானவன் அல்ல 

தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல 

இதயக்கோயில் கட்டுவேன் .. 

இதயம் உள்ளவன்


எனக்கு சுகம்தான்

நீ 
கிடைக்க மாட்டாய் என்று 
நன்றாகத்தெரியும் 
என்றாலும் உன் 
துன்பநினைவுகளும்
 எனக்கு சுகம்தான் 
எப்போதும் உன்னை 
நினைத்துக்கொண்டே
 இருப்பதற்கு....!!

காதலை காதலிக்கிறேன்..05

உயிர் கொல்லி நோயால் ஒருநாள் இறப்பாய் ...!!! காதலும் உயிர் கொல்லி நோய் தான் 
உயிரோடு கொல்லும்...!!!
*************************

என்னிடம்
காதல் கண்ணாடி 
இருப்பதால் உன்னையும் 
உன் காதலையும் காதலிக்கிறேன் 
அன்பே 
உன் இதயத்தில் இன்னும் 
நான் வரவில்லை -காத்திருப்பேன் 
அதுவரை 
காதலை காதலிப்பேன் ...!!!

காதலை காதலிக்கிறேன்..04

காதல் என்றவுடன் ஏன்..? இதயத்தை சொல்கிறார்கள் 
என்று எனக்கு ஒரு சந்தேகம் ...? காதல் மனதோடு சம்பந்தத பட்டது நினைவோடு சம்பந்தப்பட்டது ..!!!
இதற்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு ...?இதயம் தான் உடலின் எல்லா இடத்துக்கும் இரத்தத்தை கடத்துவதற்கு உதவுவதுபோல் ..காதல் எல்லாஇடத்திலும் உண்டு . இதயத்தைபோல் ...!!!

***********************************
கண்ணே உன்னை மட்டும் 
காதலிக்க வில்லை ...
உன் உடையை காதலிக்கிறேன் 
நீ அணிந்துள்ள பூ வை 
காதலிக்கிறேன் 
நீ தந்த பரிசை  காதலிக்கிறேன் 
காதல் உடலில் மட்டும் 
வந்தால் தோற்கும் 
பலத்தில் வந்தால் வெல்லும் 
காதலிக்க போகிறவர்களே ..
இதை கவனமாக புரிந்து 
கொள்ளுங்கள் ....!!!

காதலை காதலிக்கிறேன் 03

உங்களை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது .
என்று இதுவரை கண்டிராத பேசாத நபர் ஒருவரை 
பார்த்து சொல்கிறோம் . காதல் கவிதைகளும் இதுபோல்தான். நான் உனக்காக எழுதிய கவிதையை 
உன் தோழி பார்த்துவிட்டு தனக்கு எழுதியதுபோலும் 
தான் இப்படி கவிதையை பார்த்ததுபோலும் கூறுகிறாள் என்கிறாய் ...!!! காதல் எல்லோர் மத்தியிலும் இருப்பதால் அப்படிதான் தோன்றும் தெரியும் ....!!!

**********************************************

உன்னை காதலிக்க ஆசைப்பட்டதை ...
காட்டிலும் ஆயத்தப்படுத்தினேன் ...
என்பதில் தான் சுகம் அதிகம் ...!!!

என் வீட்டுக்கண்ணாடியே 
என்னை காதலிக்க 
தொடங்கி விட்டது ....!!!

காதல் எண்ணம் எப்போது 
தோன்றுகிறதோ அப்போதுதான் 
ஒரு மனிதன் பூரணமடைகிறான் 
வாசித்துபார் பூரணமடையாய் 
என்பதை போல் ...
காதலித்துப்பார் பூரணமடைவாய் ...!!!

காதலை காதலிக்கிறேன்..02

காதலை தவிர உனக்கு வேறு கவிதை தெரியாதா ..?
என்று கேட்கும் காதல் உள்ளங்களே ..உங்களில் காதல் இல்லை என்றும் இதுவரை காதல் வந்ததில்லை என்றும் எக்காலத்திலும் காதல் காதல் வராது என்றும் உறுதிப்படுத்து .நான் காதல் கவிதையை நிறுத்துகிறேன் .
.........................................!!!

தொடர்கல்விக்கு காதல்தேவை 
எனக்காகபடித்த காரணத்தைவிட 
அவளால் படித்த சந்தர்ப்பமே 
அதிகம் ....!!!

காதல் 
கற்கவும் வைக்கும் 
கற்பிக்கவும் வைக்கும் 
கற்பித்தும் காட்டும் .....!!!

காதலை காதலிக்கிறேன்..01

மூச்சு விடும் ஒவ்வொரு உயிரினத்தின் செயலும்
காதல் தான் ,....காதல் நிற்கும்போது மூசும் நின்றுவிடும் ....
நான் காதலையே காதலிக்கிறேன் ..!
.......................................

காதல் இல்லாமல் உலகம்
இயங்கட்டும் -நான்
காதலை விடுகிறேன் ....!!!

காதலை விட்ட அடுத்த நொடி
கல்லறையில் இருப்பேன்
நான் காதல் பித்தன் தான்
பெண்ணை
மட்டுமல்ல உன்னையும் ...!!!

காதல் என்பது மென்மை
பெண்மை கொண்டது
அதனால் தான் மரத்தை கூட
உன்னை கூட காதலிக்கிறேன் ...!!!


( இது தொடர் கவிதையல்ல ஆனால் தொடரும் )

பூவை தராதே ..!!!

நீ வீட்டுக்கு வந்து 
சிரிக்காதே ...!!!
என் வீட்டு பூக்கள் 
கருகுகின்றன ...!!!
காதலுக்கு சின்னமாய் 
பூவை தராதே ..!!!
பூக்கள் உன் கையை 
கடித்துவிடும் ...!!!

மூன்று எழுத்து

நீ -ஒரு எழுத்து
நான் -இரண்டெழுத்து
காதல் -மூன்றெழுத்து
நீயும் நானும் சேர்ந்தால்
மூன்று எழுத்து
காதல் தானே (1+2)

காதல் நூல் நிலையம்...!!!

நான் படித்த பாடத்தில்
புத்தகம் வெளியிடுகிறேனோ
சொல்ல தெரியாது ...?
ஆனால் நீ எனோடு
இருப்பதால் -காதல் நூல்
நிலையம் திறப்பேன் என்பது
நிச்சயம் உறுதி ....!!!

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

காதலுக்கு நீ சொல்லும் விதி...?

என்னை
காதலித்தது
உன் தலைவிதி என்கிறாய்
காதலுக்கு
நீ சொல்லும் விதி...?

உன்னில் காதல்
தெரியும் என்று
இருக்கிதேன் -என்னை
ஏமாற்றி விட்டாய் ...!!!

வானத்தில்
அசைந்த முகில் -நீ
அசைந்துகொண்டே இரு
வானம் அப்போதான் தெரியும்

கஸல் 425


தூண்டில் போட்டு பிடிக்கபோகிறாயா...?

காதலின் அதி உச்ச பரிசு
நீ தந்திருக்கிறாய் ...!!!
மறக்க முடியாத வலி ...!!!

வண்டுக்கு பூபேல்
ஆசை பூவுக்கு வண்டுமேல்
ஆசை - உனக்கு என் மீது
எப்போதும் இருந்ததில்லை
காதல் ...!!!

ஆகாயத்தில் நான்
விண்மீன் - நீ
தூண்டில் போட்டு
பிடிக்கபோகிறாயா...?

கஸல் ;424

நட்பு ஏன் தேவை ...?

நட்பு ஏன் தேவை ...?

தவறு செய்தால் கட்டிக்கேட்க ...!!!
செய்த தவறுக்கு ஆலோசனை கேட்க ...!!!
செய்த தவறை உணரப்பண்ண ...!!!
உணர்ந்தபின் உன்னதமாக வாழ ...!!!

நகைச்சுவை செய்து 
சிரிக்க வைக்க ...!!!
சின்ன சின்ன - என் 
குறும்பை ரசிக்கவைக்க ..!!!
ரசித்த குறும்பை 
வாழ்நாள் முழுதும் சொல்ல ..!!!

இத்தனையும் நிகழனும் என்றால் ...?

நட்பை புரிந்து கொள் ...!!!
நண்பனை புரிந்து கொள்...!!!
உண்மையாக பழகிக்கொள் ...!!!
உயிராக மதித்துக்கொள் ...!!!

நல்ல உறவை தேடிவிடு ...

வெளிச்சம் வரும் போது 
நிழல் வருவதுபோல் 
வசதி வரும் போதுதான் 
உறவுகள் பெருகும் ...!!!

வறுமையில் இருந்த போது 
பார்க்காத உறவு -வசதியில் 
வருவது வினோதமல்ல ...!!!

உறவுகள் இருக்கும் போதே 
நல்ல உறவை தேடிவிடு ...
நல்ல உறவென்பது -நீ 
அழுதால் அழும் உறவல்ல ..!!!
நீ அழுதால் கண்ணீரை 
துடைத்துவிடும் உறவு ...!!!

தேர் திருவிழா

நினைத்து பார்க்கிறேன் 
கோயில் திருவிழாவை 
பத்து நாள் திருவிழாவில் 
படாத பாடு பட்டத்தை ...!!!

முதல் நாள் திருவிழாவிற்கு 
குளித்து திருநீறணிந்து 
பக்திப்பழமாய் சென்றேன் 
பார்ப்பவர்கள் 
கண் படுமளவிற்கு....!!! 

இரண்டாம் நாள் திருவிழாவில் 
நண்பர்களுடன் கோயில் வீதி 
முழுவதும் ஓடித்திரிவதே வேலை 
பார்ப்பவர்கள் எல்லோரும் 
திட்டும் வரை ....!!!

மூன்றாம் நாள் திருவிழாவில் 
மூண்டது சண்டை நண்பர்கள் 
மத்தியில் - கூட்டத்துக்குள் 
மறைந்து விளையாட்டு ....!!!

நாளாம் நாள் திருவிழாவில் 
நாலாதிசையும் காரணமில்லாது 
அலைந்து திரிவேன் ...!!!

ஐந்தாம் நாள் திருவிழாவில் 
சேர்த்துவைத்த காசை 
செலவளித்து விட்டு 
வெறும் கையோடு இருப்பேன் ...!!!

ஆறாம் நாள் திருவிழாவை 
ஆறுதலான நாளாக கருதி 
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!

காத்திருப்பேன் 
தேர் திருவிழாவை -அப்பாவின் 
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு 
அப்பாவும் படியளர்ப்பார் 
அம்மாவும் படியளப்பா ....!!!

தேர் திருவிழா இறைவனின் 
அழித்தல் தொழிற்பாடாம் 
அழித்துவிடுவோம் 
முன்னர் ஏற்பட்ட 
நண்பர் பகையையும் 
கொண்டு சென்ற காசையும் ...!!!

காலம் தான் மாறினாலும் 
அந்த நினைவுகள் -காலம் காலமாய் 
திருவிழா வரும் போது 
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!

எப்படி சேமிப்பது ...?

கை 
வண்டியிழுத்து பிழைத்தேன் 
ரிட்சா வந்தது 
வண்டி பிழைப்பு போனது 

ரிச்சா வாங்கினேன் 
டாக்சி வந்தது 
ரிச்சா பிழைப்பு போனது 

டாக்சி வாங்கினேன் 
ஆட்டோ வந்தது 
டாக்சி பிழைப்பு போனது 

புதுமையை நானும் 
விரும்புகிறேன் 
புதியத்தற்கு என்னையும் 
தயார் படுத்துகிறேன் 
வீடுதான் பழையதாக 
இன்னும் இருக்கிறது ....

சேமியுங்கள் சேமியுங்கள் 
என்கிறார்களே எப்படி சேமிப்பது 
புதுமையின் வேகத்துக்கு ...?

காதலிப்பதாக இல்லை ...!!!

என்
நினைவுதான் உனக்கும்
வாழ்க்கை என்றே
சொல்வாய் -இப்போ
காதலை வெறுக்கிறாய் ...!!!

உனக்கு தெரியாது
உன்னைவிட காதலை
நேசித்தேன் - நீ
என்னை கூட
காதலிப்பதாக இல்லை ...!!!

நிலவில் காதல் கதை
கூறுவாய் என்றிருந்தேன்
உச்சி வெயில்லில் காதல்
கதை சொல்கிறாய் ...!!!

கஸல் ; 423

காதலுக்கு உன் கண்

எல்லா பூக்களும் பூத்து
குலுங்கும் போது -நீ
மொட்டாய் இருக்கிறாய் ...!!!

காதலுக்கு உன் கண்
நீராக இருக்கும்
என்றிருந்தேன் -நீயோ
மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!!

பூவின் மேல் பனித்துளி
இருந்தால் பூவுக்கு இன்பம்
கல் துண்டிருந்தால் ....?

கஸல் 422

காதல் கடிதத்தை

இறந்தால் தான் சமாதியா ...?
உன் நினைவுகள்
என்னை கொல்கிறது...!!!

காதல்
கேட்டால் கிடைக்கும்
கடைப்பொருள் இல்லை
நீ கேட்டால் தருகிறாய் ...!!!

காதல் கடிதத்தை
வர்ணங்களால்
எழுதுகிறேன் -நீ
கறுத்த மையால்
எழுதுகிறாய் ....!!!

கஸல் ;421

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கண்ணீராய் வெளியேறுகிறாய்...?

உணர்வைப்போல்
உனக்கும்
வரைவிலக்கணம்
இல்லை ....!!!

உடலில் எங்கு
இருக்கிறது உயிர் ...?
இதயத்தில் எங்கு
இருக்கிறாய் நீ ....?

என் கண்ணில்
இருக்கும் நீ
ஏன் கண்ணீராய்
வெளியேறுகிறாய்...?

கஸல் 370

நீ என்னை விட்டு

நீ
வைரக்கல்
வடிவாகவும்
விசமாகவும் இடுக்கிறாய் ....!!!

ஞாபங்கள் எனக்கு
கற்கள் -உனக்கு
பஞ்சு .....!!!

நீ  என்னை விட்டு
விலகமுதல் -உன்
நினைவுகள் என்னிடம்
உறங்கிவிடுகின்றன ....!!!

கஸல் ;368

உன்னோடு பழகிய

உறக்கத்தை தொலைத்து
இத்தனை இரவுகள்
ஏன் என்பதை கண்டறிய
என்னும் எத்தனை
நாட்களோ ...?
உன்னோடு பழகிய
நாட்கள் வரையும்
தொடரும் போல் ...!!!

இன்றைய ஹைக்கூகள்

கடவு சீட்டில்லாமல்
உலகை சுற்றிவரும்
பறவை
*************************
மலர்
ஈசல்
ஒருநாள் ஆயுள்
**************************
இரண்டு குரலை
இணைக்கும் தரகர்
தொலைபேசி

சனி, 17 ஆகஸ்ட், 2013

காதல் ஒரு கணிதம்

கண்ணால் ஓவியம் 
வரைந்தவள் 
ஓலமிடிக்கிறாள் ....!!!

காதல் ஒரு கணிதம் 
வேதனை கூட்டல் 
போதனை கழித்தல் 

உன்னை கண்டநாள் 
முதல் -என் கவிதை 
அழுகிறது ....!!!

கஸல் 367

கவிதையை விடுவதும்

காதலை விடுவதும்
கவிதையை விடுவதும்
உன்னை விடுவதும்
ஒன்றுதான் ......!!!

சந்தனக்கட்டையில்
வாசம் வரவேண்டும்
இங்கு விறகுதான்
வருகிறது .....!!!

தண்ணீரில் உப்பை
கொட்டுவதும் ஒன்றுதான்
உன்னை காதலிப்பதும்
ஒன்றுதான் ....!!!

கஸல் 366

சினிமா பைத்தியம்

நீ
பேசிய வார்த்தைகள் தான்
பாடல் வரியாக வருகின்றன

நீ
செய்த நளினங்கள் தான்
பட காட்சியாக வருகின்றன

நீ
உடுத்த உடைகள் தான்
ஆடை அலங்காரமாக இருக்கின்றன

நீ
இப்பவும் அதேபோல் இருக்கிறாய்
உன்னை சினிமா பைத்தியம்
என்கிறது சமூகம் ...!!!

தன்னம்பிக்கை ....!!!

சிப்பிக்குள் முத்து
இருப்பதுபோல்
தோல்விக்குள்
இருக்கிறது -வெற்றி ...!!!

குப்பைக்குள்
குண்டுமணி
இருப்பதுபோல்
உன் மனதினுள்
இருக்கிறது
தன்னம்பிக்கை ....!!!

நிறைய அண்ணன்களின் ...?

உன்னை கண்டவுடன்
காதலிக்கவே தோன்றியது
என் மனம் ...........!!!

என்னசெய்வது -உணர்வை விட ...
என் குடும்பக்கடமை தடுக்கிறது.....
திருமணமாகாத தங்கைகள்....
முதுமையில் இருக்கும் பெற்றோர் ...
என்னையே நம்பி படிக்கும் தம்பி ...
இப்படிதான் ......
எத்தனையோ அண்ணன்கள்
காதலை புதைத்துவிட்டார்கள் ....
நிறைய அண்ணன்களின் ...
இதயம் மயானம் தான் .....!!!

முற்களையல்ல...!!!

உன்னை 
பார்க்காமல் 
போக முகத்தை 
திருப்பினேன் 
இதயம் உனக்கும் 
கைகாட்டுகிறது ...!!!

பூக்களை தேடித்தான் 
தேனிவரும் 
முற்களையல்ல...!!!

காதல் கிணறில் 
இருந்து ஊற்று 
வரவேண்டும் -இங்கு 
காற்று வருகிறது ....!!!

கஸல் 365

உனக்கு அந்திநேரம் ....!!!

நம் காதல்
அமர்முடுகளில் செல்ல
வலிகள் ஆர்முடுகளில்
செல்கிறது ....!!!

காதல் ஒன்றும்
விஞ்ஞானம் இல்லை
நிரூபித்துக்காட்ட ...!!!
நம் ஞானம் ....!!!

காதல் எனக்கு
விடியல் காலை
உனக்கு அந்திநேரம் ....!!!

கஸல் 364

நினைவு கலவைதான் காதல் .....!!!

பூக்களும் 
முற்களும்
கலந்த நினைவு 
கலவைதான் 
காதல் .....!!!

காதலுக்குள் 
நீந்தி கரை சேர்ந்தவர் 
யாருமில்லை ....!!!

நான் 
கடலாக இருந்தால் 
நீ 
அலையாக 
இருக்க வேண்டும் 
மணலாக இருக்கிறாய் ...!!!

கஸல் ;362

மறக்க கூடிய காதல்


மறந்த காதல் 
என்ற ஒன்று இல்லை 
மறக்க கூடிய காதல் 
இதுவரை வரவில்லை ....!!!

இளநீருக்குள் உள்ள 
தண்ணீர் போல் 
என் இதயத்துக்குள் -நீ 

வார்த்தையும் 
இசையும் சேர்ந்தால் 
பாடல் வரவேண்டும் 
உனக்கு ஏன் இன்னும் 
வரிகள் கூட வரவில்லை ...?

கஸல் ;361

நம் கண்களை நம்மாலே நம்பமுடியவில்லை......


Enlarge this imageமேலே உள்ள புகைபடத்தின் மூக்கில் உள்ள சிகப்பு கலர் மார்க்கை
30 வினாடிகள் கண்களை இமைக்காமல் பாருங்கள்.
பிறகு உங்கள் பார்வையை வேறு பக்கம் (சுவரின் மீது)திசை திருப்பி 
கண்களை வேகமாக மூடி மூடி திறங்கள்.

இப்போ நீங்கள் காண்பது மிக அதிர்ச்சியாக இருக்கும்.
கருப்பு வெள்ளை புகைப்படம், கலர் படமாக..........

--நன்றி 
முகநூலில்

கவிதைக்கேற்ற காதலி

என் காதலி-கவிதை..!
நீயல்ல....!!!
என்
கவிதைக்கேற்ற காதலியும் 
நீயல்ல....!!!
என் கவிதைக்கேற்ற
காதலி கிடைக்கும்
வரை காத்திருப்பேன்
காதலி இல்லாது போனாலும்
கவிதையாவது மிஞ்சும் ...!!!

இளவட்டங்களே...

இளவட்டங்களே...
காதல் என்பது 
அடகு கடைதான் 
முதலில் சிரிப்பின் 
மூலம் அடகுக்கடை 
திறக்கப்படும் ....!!!

அடுத்து நீ சிரிப்பை 
அடகுவைப்பாய் ...!!!
இதயத்தை அடகுவைப்பாய் ...!!!
வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!!
கடைசியில் வெறும் 
கையுடன் நின்று விடாதே ....!!!

பகல் எது...? இரவு எது ..?


கட்டியதுணைவியும் 
பெற்ற பிள்ளைகளும் 
வந்த உறவுகளும் 
கைவிட்டு போய்விட்டது 
சும்மாவா சொன்னார்கள் 
காதற்ற ஊசியும் கூட 
வராது என்று ...!!!
பகல் எது...? இரவு எது ..?
தெரியாது காத்திருக்கிறேன் 
கைலாயம் செல்ல ....!!!

பரிதாப நிலை இது ....!!!

வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில் 
நிற்கும் வெட்டப்படாத மரத்தின் 
பரிதாப நிலை  இது ....!!!

அடுத்த மரணதண்டனை 
தனக்கு தான் என்று தெரிந்த 
தூக்கு தண்டனை கைதிபோல் 
துடித்துக்கொண்டு இருக்கிறது 
வெட்டுப்படாத மரம்...!!!

காற்றடிக்கிறது 
மரம் அசையாமல் இருக்கிறது 
சாகப்போகிறவனுக்கு 
தென்றலென்ன புயலென்ன ...?
காற்றடிக்க அசைந்து கவர்ச்சி காட்ட ...!!!

அந்தோ ஒரு வாகன இரைச்சல் 
இன்று எனக்கு மரணதண்டனையோ 
கருணைமனுக்கூட கொடுக்க முடியாத 
கொடும் பாவியாகி விட்டேனே ...?
நான் விட்டதவறு 
வெட்ட வருபவனுக்கு மூச்சுவிட 
காற்று  கொடுத்ததுதான் ....!!!

உனக்கு புரியும் .....!!!

என் குளிர்ந்த நினைவுகளால்
உன் பதிலை எதிர்பார்த்து
என் இதயம் உறைபனியாக
விறைத்து விட்டது ....!!!
ஒரு வார்த்தை சொல்லி
என் இதயத்தை காப்பாற்று ...!!!
இதயத்தை வெளியில் பார்க்கும்
சக்தி மட்டும் இருக்குமென்றால்
என் இதயத்தின் உறைந்த நிலை
உனக்கு புரியும் .....!!!

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கடின உழைப்பாளிகள்

முச்சக்கர வண்டியோடி 
மூன்று வேளை உண்டிக்காக 
முக்காலமும் பாடுபடும் 
கடின உழைப்பாளிகள் 
நாங்கள் .....!!!

கைதட்டுதல் வெற்றியின் 
சின்னம் - எங்கள் சின்னமே 
கைதட்டல் தான்- நீங்கள்
தட்டும் ஒவ்வொரு தட்டலும் 
எங்கள் வீட்டில் பல வயிறுகள் 
நிரப்பப்படுகின்றன ....!!!

தட்டுங்கள் திறக்கப்படும் 
என்றார் -பிரான் 
நீங்கள் தட்டுங்கள் 
நிறுத்தப்படும் முச்சக்கர வண்டி 
என்கிறோம் நாங்கள் ...!!!
எங்கள் வண்டி சிறிது 
ஆனால் நாங்கள் செய்யும் 
சமூக சேவையோ பெரிது ....!!!

கண்ணிலே காந்தத்தையும் ...

கண்ணிலே காந்தத்தையும் ...
கண்ணிமையிலே.... 
குண்டூசியையும் .....
வைத்திருந்தவளே ...!!!

காந்த கண்ணால் கவர்ந்து 
கண்ணிமைத்தபோது 
குண்டூசியால் 
குற்றி விட்டாய் ...!!!

ஒரு நாள் காதலா ....?

என்ன நடந்தது உனக்கு 
நேற்று சிரித்தாய் 
இன்று முறைக்கிறாய் 
ஈசலின் ஒருநாள்
வாழ்க்கைபோல் 
உன் ஒரு நாள் 
காதலா ....?

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

காகிதப்பூ தந்தவள் நீ தான்

காதலில் 
காகிதப்பூ 
தந்தவள் நீ தான் 
வாடாமல் இருக்கிறது ....!!!

உன் முன்னால் -நான் 
பிச்சைக்காரன் தான் 
கனவிலாவது வந்துவிடு ...!!!

ஓடத்தில் போவோம் 
காதல் சுகமாக -நீ 
ஓட்டையிட்டு வேடிக்கை 
பார்க்கிறாய் ....!!!

கஸல் 360

காதலில் தூண்டல் நீ

காதலில் தூண்டல் 
நீ 
துயரம் நான் ....!!!

எல்லா வாசனை 
இல்லாத பூக்களில் 
உருவாக்கிய 
வாசனை பூ நீ ....!!!

கடிவாளத்துடன் 
காதலித்தேன் -நீ 
கடிவாளத்தை தூக்கி 
எறிகிறாய் ....!!!

கஸல் 359

கள்ளிபூவாக இருந்தாலும் ...?

கள்ளிபூவாக 
இருந்தாலும் 
அழகாக இருக்கிறாய் ...!!!

நீ பேசிய 
ஒவ்வொருவரியும் 
என் பாடபுத்தகத்தின் 
வரிகள் 

பார்த்தவுடன் 
காதல் வரவேண்டும் 
நீ பார்த்தவுடன் 
பயம் வருகிறது ....!!!

கஸல் 358

நீ உதிர்ந்த பூவை தருகிறாய் ....!!!

நீ தந்த காயங்கள் 
எல்லாம் இப்போ 
காதல் வலி 
கவிதைகள் ....!!!

உன் பார்வையில் 
சிக்கிய நான் 
புலம்பிக்கொண்டு 
திரிக்கிறேன் ....!!!

உன்னிடம் அழகான 
மலரை எதிர் பார்த்தேன் 
நீ உதிர்ந்த பூவை 
தருகிறாய் ....!!!

கஸல் ;357

காதல் சோகம் ....!!!

நிலவில் புள்ளி 
நிலாவுக்கும் 
காதல் சோகம் ....!!!

தண்ணீரால் 
தாகம் தீரவேண்டும் 
தண்ணீரே 
தாகமாகிவிடக்கூடாது 

நான் உன்னை ஜோதியாக 
பார்க்கிறேன் 
நீயோ 
புகையாக இருக்கிறாய் 

கஸல் ;356

ஒற்றை ரோஜா என் சின்னம்

அவள் என்னை ஏமாற்ற
மாட்டாள் ...!!!
நானும் அவளிடம்
ஏமாற மாட்டேன் ....!!!
காதல் என் உயிர் உள்ளவரை
இருக்கும் ....!!!
காதலில் கண்ணீர் வராது
ஆனால் துடிப்பு இருக்கும் ...!!!
ஒற்றை ரோஜா என் சின்னம்
இப்போது புரியும் உங்களுக்கு
என் காதல் .....!!!

என்னருகில் யாருமில்லையே ....!!!

ஓ வெண்ணிலாவே
உன் காதல் கதையும்
என் காதல் கதையும்
ஒன்றுதான்
என்னவனும்
பதினைந்து நாள்
சந்திக்கிறான்
பதினைந்து நாள்
மறுக்கிறான் ...!!!
உன் அருகில் ஆயிரம்
நட்சத்திர  தோழிகள்
என்னருகில் யாருமில்லையே ....!!!