இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

நீ நினைப்பதை நான் எழுதுகிறேன்

உன்னை தொலைவில் 
பார்க்கும் தொலை நோக்கி 
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும் 
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!

இதயத்தால் பேசக்கூடியது 
பார்க்கக்கூடியது 
உன்னையும் உன் 
காதலையும் தான் ....!!!

நீ நினைப்பதை 
நான் எழுதுகிறேன் 
நான் நினைத்தவற்றை 
நீ வீசுகிறாய் .....!!!

கஸல் ; 332