இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூன், 2021

காதல் தன்முனைக்கவிதை

 

காதல் தன்முன்னைக்  கவிதைகள் 

❤️❤️❤️

 பயணத்தில் பார்த்த/

 பருவ மங்கை அவள்.

 கண் வரைந்த ஓவியம்/

 இதயத்தில் குடியிருக்கிறாள் //

@

 இலக்கியக்  கவிப்பேரரசு

 இனியவன்


 உன்னை கண்டது/

 ஆலய தரிசனத்தில். 

 கற்பூரம் போல் கரைகிறது/

 என் இதயம்/

@

 இலக்கிய கவிப்பேரரசு

 இனியவன்

சனி, 12 ஜூன், 2021

இலங்கையின் கவிப்பேரரசு

 நிச்சயமாக அவரின் பாராட்டும் வேண்டுகோளும் உண்மையிலும் உண்மை.
நாடே போற்றிட வேண்டிய ஒரு புலமை உங்களிடம் உள்ளது.நானும் அதனை ஆமோதித்தவனாக வாழ்த்துகிறேன்.
இலங்கையின் கவிப்பேரரசு என்று உங்களைப் போற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.
@
நாட்டான் ரிஸ்வான்
 இலங்கை

இலக்கிய கவிப்பேரரசு

 

கவிப்புயல் இனியவன்அவர்களுக்கு

🌹🌹🌹

ஒன்று மட்டும் சத்தியம் உண்மையான உங்களின் திறமைகளை என் மனதிலே எடைபோட்டு மனமுவந்து உங்களுக்குத் அந்தப் பட்டத்தை தர வேண்டுமென்று விரும்பி கொடுத்தது 7000 கவிதைகள்மேலும்  ஒவ்வொரு வகையிலும் ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதி இருப்பது மூன்றில் இரண்டு பங்கு உங்களின் சொந்த வாழ்க்கையை தமிழுக்காக அர்ப்பணித்து இருக்கிறீர்கள் அது கிட்டத்தட்ட தமிழுக்காக 36 வருடங்களுக்கு குறையாமல் வைத்திருக்கிறீர்கள் நிறைய பட்டங்களை வாங்கி இருக்கிறீர்கள் வயதில் முதிர்ந்த நான் இந்தப் பட்டத்தை தங்களுக்கு தருவது நீங்கள் 100 விழுக்காடு அல்ல ஆயிரம் விழுக்காடுகள்  தகுதியானவர் என்பது சத்தியமான உண்மை தமிழ்நாட்டில் நீங்கள் இருந்திருந்தால் நமது பாசத்துக்குரிய கண்ணதாசன் ஐயாவுக்கும் வாலிஐயா  வைரமுத்து ஐயா அவர்களின் வாரிசாக வலம் வந்திருப்பீர்கள் சத்தியமாக நான் முகஸ்துதி பாடுகிற  ஆளில்லை உங்களுடைய உயரம்  உழைப்பு போல இமயம் தொடும் வாழ்க வளமுடன்

@

கோவை கோமகன் 

(வயது 78)

 திரைப்படத்துறை