இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஆன்மீக கவிதை - எனக்குன்னை காட்டிவிடு........!!!

அரியும் சிவனும் சேர்ந்து....
"அரிசி" ஆனாய் .......
உடலும் உயிரும் சேர்ந்து......
கோயிலானாய்.........
உணர்வும் செயலும் சேர்ந்து.....
இறைவனானவனே.......
என்னுள் இருப்பவனே.......
எனக்குன்னை காட்டிவிடு........!!!

என்னவனே.......
நீ ஒளிவடிவமானவனா.....?
நீ ஒலிவடிவானவனா.........?
நீ தீ வடிவானவனா.........?
நீ காற்று வடிவானவனா .....?
நீ திண்ம வடிவானவனா......?
நீ திரவடிவமானவனா ....?

உன் வடிவம் என்னவென்று......
அறியாமல் என்னை பாடாய்.......
படுத்துபவனே..........
நீ என்னவாகவும் இருந்துவிடு......
என்னை எப்போதும் உன்னோடு.....
வைத்துகொண்டே இரு..........!!!

&
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதை

வெள்ளி, 28 அக்டோபர், 2016

இனியவனின் இனியதீபாவளி வாழ்த்து

தீப திரு நாளில் .....
தீய எண்ணங்கள் தீயாகட்டும்.....
தீய செயல்கள் தீயாகட்டும்.....
தீய குணங்கள் தீயாகட்டும்......!!!

தீயை போல் நிமிர்ந்து நிற்ப்போம்.......
தீயவற்றுக்கு தீயை மூட்டுவோம்......
தீண்டாமைக்கு தீயூட்டுவோம்......!!!

தீபாவளி அன்று......
தீனி இல்லாதோருக்கு .....
தீனி போடுவோம்....
தீபத்தை ஏற்றும்போது ....
ஒளிரட்டும் அகம்......
அகம் மட்டுமல்ல உள்ளகமும் ......
ஒளிரட்டும்.............!!!

&
இனிமையான.......
இன்பமான.......
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


இனியவன்

வியாழன், 27 அக்டோபர், 2016

இன்னும் இதயக்கதவை .....

நீ
என்னை மறந்ததை ....
நினைத்து கவலைப்படவில்லை .....
நீ மறந்து விட்டாய் என்று ....
பல முறை இதயத்துக்கு ....
சொல்லி விட்டேன் .....
இன்னும் இதயக்கதவை ......
திறந்து காத்துக்கொண்டு ....
இருக்கிறது ..............!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

ஒருமுறை சொல்லிவிடு

எத்தனை
முறை கவிதை .....
எழுதுகிறேன் சம்மதம் ....
கேட்டு ............!!!

கவிதைக்கு
பதில் சொல்கிறாய் ......
எனக்கு எப்போது பதில் .....
சொல்வாய் ......?

ஒருமுறை என்றாலும் .....
சொல்லிவிடு உன் கவிதையை ....
மட்டுமல்ல உன்னையும் .....
காதலிக்கிறேன் என்று ......!!!

&
என்னவளே என் கவிதை 47
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

புதன், 26 அக்டோபர், 2016

காயப்படுத்த தேவையில்லை .....!!!

எப்போது ஒருவருக்கு .....
எம்மை புரியவில்லையோ.....
அப்போது அவர்களை ....
விலகுவது நன்று ........!!!

காதலை புரியாதவர்கள் .....
வாழ்க்கையில் எதையும் .....
புரியப்போவதில்லை ......
இவர்களிடம் காதலை ....
எதிர்பார்த்து காதலை .....
காயப்படுத்த தேவையில்லை .....!!!

&
காதல் வெறுப்பு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

காதல் வெறுப்பு கவிதைகள்

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

என் கண்ணுக்குள் -நீ

நீ வல்லினமான
சொல்......!!!

மெல்லினமான
செயல் ......!!!

இடையினமான
வலி ...........!!!

@@@
கவிப்புயல் இனியவன்

உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ
வானவிலாய் இருக்கிறாய் ....!!!

@@@
கவிப்புயல் இனியவன்

இனியது இனியது
தனிமை இனியது
அதனிலும் இனியது
உன்னால் நான்
தனிமையானது

@@@
கவிப்புயல் இனியவன்

என்னை காதலித்து பார் ...

ஒருமுறை
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்

@@@

காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

@@@

காதல்
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

என் பிரியமான மகராசி......!!!

முழு ......
நிலா வெளிச்சத்தில் ......
கருவானவள் .........!!!

பூக்கள் மலரும் போது......
பிறந்தவள் .............!!!

தென்றல் வீசியபோது ......
பேசியவள்...........!!!

விண்மீன்கள் துடித்த போது.....
சிரித்தவள் ...........!!!

கொடி அசைந்தபோது .....
நடந்தவள் .........!!!

புல் நுனியில் பனி படர்கையில் ......
பருவமடைந்தவள் .........!!!

இத்தனை அழகுகொண்டவளே .....
என் பிரியமான மகராசி......!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை

வெள்ளி, 21 அக்டோபர், 2016

தந்தை கவிதை

உயிருடன் வாழும் .....
காலத்தில் தந்தையின் .....
அறிவுரைகளை .....
செவிசாய்க்க மனம் ....
விரும்புவதில்லை .....
கட்டிளமை பருவம் ......
தன்முனைப்போடு ......
பேசும் ,கருதும்.......!!!

தந்தையின் மறைவுக்கு .....
பின்னர் அவரின் அறிவுரை .....
மனதை கொல்லும்......
வாழ்க்கையின் ஒவ்வொரு .....
துன்பமும் வரும்போது .....
தந்தையின் அறிவுரைகளை ....
ஞான கூற்றாய் தெரியும் ......!!!

&
குடுப்ப கவிதைகள்
தந்தை  கவிதை
கவிப்புயல் இனியவன்

அம்மா கவிதை

பிஞ்சு விரலை பஞ்சு......
போல் நினைத்து மெல்ல .....
மெல்ல அமர்த்தி சுகம் .....
காணும் உயிரே .........!!!

மார்பிலே ......
போட்டுக் கொண்டே...
மனம் நிறைந்து மகிழ்ந்து
மனத்தால் வளர்த்த உயிரே ....!!!

மளமளவென வளர்ந்தேன் ..
மணமுடித்து வைத்தாள்...
நான் விரும்பிய உயிரை..!!

அன்னை அவள் கண் மூடியதால்...
அனாதையானேன் அன்பென்னும்
உறவிலிருந்து ...!!!

உள்ளத்தால்  சொல்லுகிறேன்...
தாயை நினைத்து கவிதை
எழுதும் எந்த கவிஞனும் ......
கண்ணீரை சிந்தாமல் .......
எழுதவே முடியாது ........!!!

&
குடுப்ப கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்

உயிரும் வேண்டாம்.....!!!

இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!
என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை .....
மட்டும் துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு .....!!!
+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

வியாழன், 20 அக்டோபர், 2016

எல்லாமே நட்புதான்

மழலைப் பருவத்தில் நட்பு :
-------------
உனக்கு என்னைத்தெரியாது .......
என்னை உனக்கு தெரியாது...........
நீயும் கையசைத்தாய் நானும் ......
கையசைத்தேன் .......
அதில் புரியாத சுகம்.........!!!

குழந்தைப் பருவத்தில் நட்பு :
------------
நீயும் நானும் விளையாடுவோம் .....
கிடைத்தவற்றால் அடிபடுவோம்....
மீண்டும் சந்திப்போம் ......
பகமையென்றால் ....
என்ன என்றே தெரியாத நட்பு ..!!!

காளைப் பருவத்தில் நட்பு :
----------
சுற்றுவதற்கு நட்புத்தேவை .....
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!

வாலிபப் பருவத்தில் நட்பு :
_________
என் வலியையும் சுகத்தையும் ....
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் ....
தரவும் நட்புத்தேவை ....!!!

முதிர்ந்த பின் நட்பு :
------------
வாழ்க்கையின் துன்பங்கள் ...
துயரங்கள் இழப்புக்களை ...
அனுபவங்களைப்பகிர்ந்து ....
கொள்ளஒரு நட்பு தேவை ..!

&
நட்புடன்
உங்கள்
கவிப்புயல் இனியவன் 

காதலில்லாமல் வாழ்ந்திடாதே

காதல் ஒரு காவியம்.......
காவியகதைகளில்.........
சோகங்கள் உண்டு........
சோகத்தை தாங்க .........
தயாராக இரு .............!!!

காதல் ஒரு சமுத்திரம்......
விழுந்தால் மூழ்குவாய்.......
மூழ்காமல் இருக்க.........
கற்றுக்கொள் .............!!!

காதல் ஒரு கத்தரிக்காய்.......
சிலவேளை புரியும் ...............
சில வேளை ருசிக்கும் ...........
சில வேளை கருகும் ............!!!

காதல் ஒரு கானல் நீர்....
உண்மைபோல் .....
சில விடையங்கள் தெரியும் ........
ஆனால் அது முழுப்பொய்..........!!!

காதல் ஒரு கண்ணாடி ........
உன்னையே நீ பார்த்து........
சிரிப்பாய் அழுவாய் ........!!!

காதல் ஒரு கற்பூரம்............
காதல் வெற்றியோ தோல்வியோ............
அடைந்தால் இறுதியில் ................
ஒன்றுமே இல்லை என்று ...............
உணரப்பண்ணும்.........!!!

காதல் ஒரு காற்று..............
தென்றலும் உண்டு ..............
புயலும் உண்டு ...............!!!

காதல் ஒரு நட்பு ...........
தியாகம் செய்யத்தயாராக ............
இரு நட்புதான் கலங்காமல்..........
தியாகம் செய்யும்..............!!!

காதல் ஒரு கற்பு ...........
உடலும் உணர்வும் தண்டவாளம்...........
போன்றது காதலிக்கும் ............
போது இவை இணையக்கூடாது ......!!!

காதல் ஒரு கலாச்சாரம் .........
காதலின் பண்பாடும் ............
பழக்கங்கலும் மரபு வழியாக ..............
கடத்தும் பண்போடு..............
காதலிக்கவும் .................!!!

காதல் ஒரு ஆசான் .......
வலியாலும் வெற்றியாலும்...............
வாழ்க்கை வரும் அதனால் ...............
உனக்கு கவிதையும் வரும்..............
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!

காதல் தான் ...............
உலக வாழ்க்கை ................
காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............
வாழவும் முடியாது ............!!!

&
கவிப்புயல் இனியவன் 

நண்பா அறிவுரை கேட்பாயா ...?

நண்பா ....
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

வலிக்கிறதா

இதயத்தை .....
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!

இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!

இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!

&
கவிப்புயல் இனியவன்

முன்னோர் சொன்னது ..!!!

இயந்திர உலகில் .........
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!

நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!

&
சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன் 

புதன், 19 அக்டோபர், 2016

வறுமையின் நிறம் கொடுமை

வறுமையின் நிறம் கொடுமை
-------------
பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!
&
வறுமையின் நிறம் கொடுமை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

சமூதாய கவிதை

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!

வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்

தமிழ்ப் பெயர் சூட்டுவோம்

1) அடியார்
2) அதியமான்
3) அந்திவண்ணன்
4) அம்பலக்கூத்தன்
5) அம்பலவாணன்
6) அரங்கண்ணல்
7) அரங்கநம்பி
8) அரங்கவாணன்
9) அரசு
10) அரவணை
11) அரிமுகநம்பி
12) அரியணைநம்பி
13) அருட்கடல்
14) அருட்கோ
15) அருட்சுடர்
16) அருட்செல்வன்
17) அருண்மணி
18) அருண்மொழி
19) அருமறைநம்பி
20) அருளரசன்
21) அருளரசு
22) அருளழகன்
23) அருளாளன்
24) அருள்
25) அருள்நந்தி
26) அருள்நம்பி
27) அருள்மாமணி
28) அருள்முரசு
29) அருள்வேந்தன்
30) அலர்மணி
31) அலர்வாணன்
32) அலையண்ணல்
33) அலைவாணன்
34) அழகண்ணல்
35) அழகியநம்பி
36) அழல்வண்ணன்
37) அறவாணன்
38) அறிவழகன்
39) அறிவுக்கரசு
40) அறிவுடைநம்பி
41) அறிவொளி
42) அறுமுகநம்பி
43) அனல்வேந்தன்
44) அன்பரசன்
45) அன்பரசு
46) அன்பழகன்
47) ஆடலரசு
48) ஆடலழகன்
49) ஆடல்வேந்தன்
50) ஆடவல்லான்
51) ஆழிவேந்தன்
52) ஆளவந்தார்
53) ஆற்றலரசு
54) ஆனைமுகவன்
55) இசைப்பித்தன்
56) இசைமணி
57) இசைமாமணி
58) இசைமுரசு
59) இசையரசு
60) இசைவாணன்
61) இசைவேந்தன்
62) இமயவரம்பன்
63) இமையவன்
64) இயல்வாணன்
65) இருமுடிவேந்தன்
66) இலக்கிய ஒளி
67) இலக்கியச்செல்வன்
68) இலக்கியநம்பி
69) இலக்கியவாணன்
70) இலக்கியன்
71) இலக்குவன்
72) இளங்கண்ணன்
73) இளங்கதிர்
74) இளங்கிள்ளி
75) இளங்கோ
76) இளங்கோவன்
77) இளஞ்சுடர்
78) இளஞ்சோழன்
79) இளந்திரையன்
80) இளந்தென்றல்
81) இளந்தென்னன்
82) இளந்தேவன்
83) இளமதி
84) இளமாறன்
85) இளமுருகு
86) இளம்பரிதி
87) இளம்வழுதி
88) இளவரசன்
89) இளவரசு
90) இளவல்
91) இளவழகன்
92) இளவேந்தன்
93) இளவேனில்
94) இறைக்குருவன்
95) இறைமுடி
96) இறையண்ணல்
97) இறையொளி
98) இனியன்
99) இன்பக்கூத்தன்
100) ஈகவேந்தன்
101) ஈகைநம்பி
102) ஈர்ங்கதிர்நம்பி
103) ஈழவேந்தன்
104) உமையவள்நம்பி
105) உரைமாமணி
106) உரைவாணன்
107) உரைவேந்தன்
108) உலகநம்பி
109) உலகமுதல்வன்
110) உவகையரசு
111) உழவர்ச்செம்மல்
112) உறைவாணன்
113) ஊதாமாயவன்
114) ஊரன்
115) ஊருணிவேந்தன்
116) ஊர்காவலன்
117) ஊழிமுதல்வன்
118) ஊழொளி
119) எழிலரசன்
120) எழிலரசு
121) எழில்மணி
122) எழில்மதி
123) எழில்வாணன்
124) எழிற்பித்தன்
125) எழினி
126) எழினிவேந்தன்
127) எழுகதிர்
128) எழுஞாயிறு
129) எழுமதி
130) எழுமலைவாணன்
131) ஏடகநம்பி
132) ஏந்திசைவாணன்
133) ஏழிசைநம்பி
134) ஏழிசைவாணன்
135) ஏற்றணைநம்பி
136) ஐங்கணைச்செம்மல்
137) ஐங்கணைநம்பி
138) ஐங்கரன்
139) ஐஞ்சுடர்
140) ஐந்திணையரசு
141) ஐந்தெழுத்தன்
142) ஐம்முகநம்பி
143) ஐயாறப்பன்
144) ஐயாறு
145) ஒட்டக்கூத்தன்
146) ஒப்பிலியப்பன்
147) ஒழுகிசைவாணன்
148) ஒளிமணி
149) ஒளிமதி
150) ஒன்றிமுத்து
151) ஓரி
152) ஓரிவேந்தன்
153) ஓலைவாணன்
154) ஓவியன்
155) ஔவைச்செல்வன்
156) கடலரசு
157) கடல்வண்ணன்
158) கண்மணி
159) கதிரவன்
160) கதிரொளி
161) கதிர்மணி
162) கதிர்மாமணி
163) கரிகாலன்
164) கலைக்குன்றன்
165) கலைச்செல்வன்
166) கலைநம்பி
167) கலைநேயன்
168) கலைப்பித்தன்
169) கலைமணி
170) கலைமாமணி
171) கலைமுரசு
172) கலையண்ணல்
173) கலையரசன்
174) கலையழகன்
175) கலைவாணன்
176) கலைவேந்தன்
177) கவிக்கோ
178) கவிதைப்பித்தன்
179) கவிமணி
180) கவிமாமணி
181) கவிமுரசு
182) கவியண்ணல்
183) கவியரசன்
184) கவியரசு
185) கவியழகன்
186) கவிவாணன்
187) கவிவேந்தன்
188) கனிச்செல்வன்
189) கனிமொழி
190) கனியழகன்
191) கனிவண்ணன்
192) காங்கேயன்
193) காந்தன்
194) காப்பியமணி
195) காராளன்
196) காரி
197) கார்முகில்
198) கார்வண்ணன்
199) கார்வேந்தன்
200) காவிரிச்செல்வன்
201) காவிரிநம்பி
202) காவிரிநாடன்
203) கிழக்கொளி
204) கிள்ளி
205) கிள்ளிவளவன்
206) கீற்றுநிலவன்
207) கீற்றுமதி
208) குஞ்சு
209) குடியரசு
210) குயிலன்
211) குரு
212) குலோத்துங்கன்
213) குவலயன்
214) குழகன்
215) குழல்வாணன்
216) குறட்செல்வன்
217) குறள்பித்தன்
218) குறிஞ்சிவேந்தன்
219) கூடலரசு
220) கூடல்மாமணி
221) கூடல்வேந்தன்
222) கூத்தரசன்
223) கூத்தன்
224) கூர்மதி
225) கெழுதகைநம்பி
226) கேண்மையரசு
227) கைத்தலம்
228) கைம்மலை
229) கைவளம்
230) கொங்குநாடன்
231) கொடியரசு
232) கொடுமுடி
233) கொடையரசு
234) கொல்லிவெற்பன்
235) கொள்கைவேந்தன்
236) கொற்கை வேந்தன்
237) கொற்றவன்
238) கொன்றைவேந்தன்
239) கோடிச்செல்வன்
240) கோப்பெருஞ்சோழன்
241) கோமகன்
242) கோவலன்
243) கோவூர்கிழார்
244) கோவேந்தன்
245) சங்கத்தமிழன்
246) சங்குவண்ணன்
247) சங்கேந்தி
248) சந்தன வண்ணன்
249) சமரன்
250) சாதனைச்செல்வன்
251) சாமந்திவண்ணன்
252) சாலை இளந்திரையன்
253) சிந்தனைச்சிற்பி
254) சிந்தனைச்செல்வன்
255) சிலம்பன்
256) சிலம்புச்செல்வன்
257) சிவநேயன்
258) சிவமணி
259) சிவன்
260) சிற்பி
261) சிற்பி
262) சிற்றம்பலம்
263) சிற்றம்பலன்
264) சிற்றரசன்
265) சிற்றரசு
266) சீராளன்
267) சுடரொளி
268) சுடர்க்குன்றன்
269) சுடர்மணி
270) சுடர்மாமணி
271) சுடர்வேந்தன்
272) செங்குட்டுவன்
273) செங்குன்றன்
274) செங்கோல்
275) செங்கோன்
276) செஞ்சுடர்
277) செந்தமிழ்ச்செல்வன்
278) செந்தமிழ்வேந்தன்
279) செந்திலண்ணல்
280) செந்தோழன்
281) செம்பியன்
282) செம்மணி
283) செல்வமணி
284) செல்வம்
285) செவ்வேள்
286) செழியன்
287) சென்னி
288) சேக்கிழார்
289) சேந்தன்
290) சேரலன்
291) சேரலாதன்
292) சேரவேந்தன்
293) சேரன்
294) சொல்லரசன்
295) சொல்லழகன்
296) சொல்லின்செல்வன்
297) சொல்வேந்தன்
298) சொற்கோ
299) சோலைமலை
300) சோழவேந்தன்
301) சோழன்
302) தணிகைச்செல்வன்
303) தணிகைநம்பி
304) தணிகையண்ணல்
305) தணிகைவேந்தன்
306) தண்மதிநம்பி
307) தமிழண்ணல்
308) தமிழரசன்
309) தமிழரசு
310) தமிழருவி
311) தமிழழகன்
312) தமிழொளி
313) தமிழ்,
314) தமிழ்எழிலன்,
315) தமிழ்க்கடல்
316) தமிழ்க்கதிர்
317) தமிழ்க்கனல்
318) தமிழ்க்கனி
319) தமிழ்க்கிழான்
320) தமிழ்க்குன்றன்
321) தமிழ்க்கோ
322) தமிழ்ச்சித்தன்,
323) தமிழ்மணி,
324) தமிழ்ச்செல்வன்
325) தமிழ்ச்செழியன்
326) தமிழ்த்தம்பி
327) தமிழ்த்தென்றல்
328) தமிழ்த்தேவன்
329) தமிழ்த்தேறல்,
330) தமிழ்த்தொண்டன்,
331) தமிழ்நம்பி
332) தமிழ்நாடன்,
333) தமிழ்நாவன்,
334) தமிழ்நிலவன்,
335) தமிழ்நெஞ்சன்,
336) தமிழ்நேயன்
337) தமிழ்ப்பரிதி
338) தமிழ்ப்பழம்
339) தமிழ்ப்பித்தன்
340) தமிழ்ப்புயல்
341) தமிழ்ப்புனல்,
342) தமிழ்ப்பொழில்
343) தமிழ்மகன்
344) தமிழ்மணி
345) தமிழ்மதி
346) தமிழ்மலர்
347) தமிழ்மல்லன்
348) தமிழ்மறை
349) தமிழ்மறையான்
350) தமிழ்மாமணி
351) தமிழ்மாறன்
352) தமிழ்மாறன்
353) தமிழ்முகிலன்.
354) தமிழ்முகில்
355) தமிழ்முடி,
356) தமிழ்முதல்வன்,
357) தமிழ்முரசு
358) தமிழ்வண்ணன்,
359) தமிழ்வழுதி
360) தமிழ்வளவன்
361) தமிழ்வாணன்
362) தமிழ்வென்றி
363) தமிழ்வேந்தன்
364) தமிழ்வேலன்,
365) தவமணி
366) தாமரைக்கனி
367) தாமரைச்செல்வன்
368) தாமரைநம்பி
369) தாமரைமணி
370) தாமரைவாணன்
371) திருப்புகழ்
372) திருமலைநம்பி
373) திருமலைவாணன்
374) திருமாவளவன்
375) திருமுடிவேந்தன்
376) திருமொழி
377) திருவளர்நம்பி
378) தில்லைமாமணி
379) தில்லையண்ணல்
380) தில்லைவாணன்
381) தில்லைவேந்தன்
382) தீம்புனல்நம்பி
383) தூயஒளி
384) தூயதமிழ்
385) தூயமணி
386) தூயமதி
387) தூயமாங்கனி
388) தூயோன்
389) தென்முகநம்பி
390) தென்னரசு
391) தென்னவன்
392) தென்னன்
393) தேமாங்கனி
394) தேவநேயன்
395) தேவன்
396) தொல்காப்பியன்
397) நக்கீரன்
398) நடவரசன்
399) நரமடங்கல்
400) நலங்கிள்ளி
401) நள்ளி
402) நற்றமிழ்நம்பி
403) நன்னெறிநம்பி
404) நாவரசு
405) நாவலர்நம்பி
406) நாவாணன்
407) நாவுக்கரசன்
408) நாவுக்கரசு
409) நாவேந்தன்
410) நித்தலின்பன்
411) நீடூழிவாணன்
412) நீலமணி
413) நீலவண்ணன்
414) நெடுஞ்செழியன்
415) நெடுவேள்
416) பகலவன்
417) பரங்குன்றன்
418) பரிதி
419) பரிமேலழகன்
420) பல்லவன்
421) பழங்குன்றன்
422) பாண்டியன்
423) பாரி
424) பாரிமைந்தன்
425) பாரிவேந்தன்
426) பாரிவேள்
427) பாவரசு
428) பாவலன்
429) பாவாணன்
430) பாவேந்தன்
431) பிறைசூடி
432) பிறைமுடி
433) பிறையொளி
434) புகழேந்தி
435) புகழொளி
436) புகழ்
437) புகழ்மணி
438) புகழ்மாமணி
439) புதுமைப்பித்தன்
440) புயல்மணி
441) புரவலன்
442) புலமைப்பித்தன்
443) புவியரசன்
444) புவியரசு
445) புவியழகன்
446) புவிவேந்தன்
447) புள்ளரசன்
448) புள்ளரசு
449) புனல்வேந்தன்
450) புனிதன்
451) பூங்குன்றன்
452) பூந்தமிழ்
453) பூவழகன்
454) பூவாணன்
455) பூவேந்தன்
456) பெருஞ்சித்திரன்
457) பெருந்தகை
458) பெருவழுதி
459) பேகன்
460) பேரரசன்
461) பேரரசு
462) பேரறிவாளன்
463) பேராசிரியன்
464) பேரின்பம்
465) பேரொளி
466) பைந்தமிழரசு
467) பைந்தமிழ்ப்பாரி
468) பைந்தமிழ்வாணன்
469) பைந்தமிழ்வேந்தன்
470) பொய்கைநம்பி
471) பொய்யாமொழி
472) பொழிலரசு
473) பொழில்
474) பொற்குன்றன்
475) பொற்கோ
476) பொற்செல்வன்
477) பொன்மணி
478) பொன்மதிச்செல்வன்
479) பொன்முடி
480) பொன்வண்ணன்
481) பொன்னம்பலம்
482) பொன்னம்பலன்
483) பொன்னரசன்
484) பொன்னரசு
485) பொன்னழகன்
486) பொன்னித்துறைவன்
487) பொன்னியின்செல்வன்
488) பொன்னிவளவன்
489) மங்கைபங்கன்
490) மணிக்கொடி
491) மணிமொழி
492) மணியரசன்
493) மணியரசு
494) மணிவண்ணன்
495) மதியரசன்
496) மதியரசு
497) மதியழகன்
498) மதியொளி
499) மதிவாணன்
500) மதிவேந்தன்
501) மயிலண்ணல்
502) மயிலரசன்
503) மயிலரசு
504) மயிலழகன்
505) மயிலுடைநம்பி
506) மயிலூர்தி
507) மயில்வாகனன்
508) மயில்வாணன்
509) மருதவாணன்
510) மருத்துவமணி
511) மரையண்ணல்
512) மரைவாணன்
513) மரைவேந்தன்
514) மலர்மணி
515) மலர்மன்னன்
516) மலர்வாணன்
517) மலர்வேந்தன்
518) மலைமகன்
519) மலையண்ணல்
520) மலையழகன்
521) மலைவாணன்
522) மறைமணி
523) மறைமலை
524) மறையண்ணல்
525) மன்றவாணன்
526) மன்னர்மன்னன்
527) மாசிலாமணி
528) மாதவன்
529) மாமல்லன்
530) மாயவன்
531) மாயழகன்
532) மாயன்
533) மாவேந்தன்
534) மாறன்
535) மீனவன்
536) முகிலரசு
537) முகிலன்
538) முகில்மணி
539) முகில்வண்ணன்
540) முக்கண்ணன்
541) முடியரசன்
542) முடியரசு
543) முதுகுன்றன்
544) முத்தமிழ்
545) முத்தமிழ்ச்செல்வன்
546) முத்தமிழ்நம்பி
547) முரசொலி
548) முருகவேல்
549) முருகவேள்
550) முல்லைவாணன்
551) முல்லைவேந்தன்
552) மூவேந்தன்
553) மெய்யழகன்
554) யாழ்வேந்தன்
555) வணங்காமுடி
556) வரம்பிலின்பன்
557) வல்லத்தரசு
558) வல்லரசு
559) வழுதி
560) வளநாடன்
561) வளவன்
562) வளனரசு
563) வள்ளல்
564) வள்ளிமணாளன்
565) வாகைவேந்தன்
566) வாய்மையழகன்
567) வாரணன்
568) வாலறிவன்
569) வானமாமணி
570) வானமாமலை
571) வானவரம்பன்
572) வானவராயன்
573) வான்மணி
574) விண்மணி
575) வில்லவன்கோதை
576) வில்லழகன்
577) வில்லாளன்
578) வில்வேந்தன்
579) வெண்மணி
580) வெண்மதிச்செல்வன்
581) வெற்றிச்செல்வன்
582) வெற்றியழகன்
583) வெற்றிவேந்தன்
584) வேந்தன்
585) வேல்மணி
586) வேழவேந்தன்
587) வைகறைச்செல்வன்
588) வைகைச்செல்வன்
589) வைகைத்துறைவன்
590) வையகம்

- தொகுப்பு : தமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம்