இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 அக்டோபர், 2016

தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல்

தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல்
----------------------

தொலை பேசிக்கும் ....
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!

தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!

பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!

கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு .....
சிம்மா ஒல்லியா சின்னனாய் ......
இருக்கிறேன் ..........!!!

உனக்கு வயத்தில் மூத்தவள் .......
சொல்கிறேன் எனக்கு ......
வாய் காட்டிடாதே ................
உன்னால் எல்லோரும் .....
துன்பப்பட்டுக்கொண்டே .......
இருக்கிறார்கள் ..............!!!

மாணவர்களின் கல்வி பாழ்......
காதலனின் பணப்பை பாழ் ......
உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......
தொடர்ந்து பட்டியல் இட்டது .....
தொலைபேசி ......................!!!

அக்கா என் கொக்கா ........
யாரும் யாரை கொடுப்பதில்லை ......
அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......
அளவோடு பயன்படுத்தினால் ....
எல்லாம் அமிர்தமே .......
அளவுக்கு மிஞ்சினால் ......
அமிர்தமும் நெஞ்சே .................!!!

%
நகைச்சுவைக்காக ஒரு கவிதை


கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக