இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 அக்டோபர், 2016

நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!

ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி  ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

பாழடைந்த கிணற்றுக்குள்  ......
நுனிவிரலில் நின்றுஉன்னை
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?

உன்னை ......
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக