இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 ஜனவரி, 2017

சிந்திக்க சில வரிகள்

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!!

*******

எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்.....
கடல் கரைக்கு தெரியும் அலையின்.....
அன்பும் அரவணைப்பும் .....!!!

*******

சிந்திக்க சில வரிகள்
கவிப்புயல் இனியவன் 

சின்ன சின்ன கவிதைகள்

யாருக்கு யார்....
என்பதை இறைவன்....
சொல்லியிருந்தால்...
உன்னை நான்.....
விலக்கிஇருப்பேன் ....!!!

*****
அழகை....
நேசித்தவன் அறிவை...
இழக்கிறான்......
பணத்தை .....
நேசித்தவன் பாசத்தை ....
இழக்கிறான்.....
குணத்தை
நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!!

******

சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

ஒரு வரியில் கவிதை

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்
********
தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல்
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல்
********
தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

வெள்ளி, 20 ஜனவரி, 2017

கைபேசி வெளிச்சத்தில் ....

கை பேசியில் .....
அரட்டை அடித்த ....
இளைஞன்......
கைபேசி வெளிச்சத்தில் ....
மிரட்டி வருகிறான்
அடக்கு முறையினரை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 

பீட்டாவுக்கு தெரியுமா ...?

உணர்வின் வழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் வலி
தெரியுமா....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் மொழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

வழி, வலி, மொழி.....
தெரிந்தான்
இளைஞன்......
திரண்டான்.........
புறப்படான்.......
போராடுகிறான்.....
தமிழன்.................!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

படாத பாடு படும் மனம் ...!!!

நீ
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!

பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 16 ஜனவரி, 2017

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 05

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே
பூசகரும் பூரண சைவம்
கோயிலில் மச்ச அவதார சிலை

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

--------

பண்பாடுகள் பாழாய் போகிறது
கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

----------

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள் 
தாயின் கையை தட்டி விட்டது குழந்தை 
நிலா சோறு 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

----------

வயல் நிலங்கள் வெடித்தது 
வறட்சியால் பயிர்கள் இறப்பு 
வெட்டிய மரங்களின் சாபம் 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

-------

நிலத்தில் கோடுகள்
வறுமை கோடானது 
நீடிய வறட்சி 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

எனக்கு சூரிய உதயம்....!!!

நீ என் ...... 
நேரே வரும் நேரமே...... 
எனக்கு சூரிய உதயம்....!!! 

நீ என்னை விட்டு 
மறையும் தூரம் 
தான் 
சூரிய அஸ்தமனம் ....!!! 

அன்பே........... 
உன்னை சக்தியாக............ 
பார்ப்பதால் தான்............ 
தினமும்.......... 
உன்னை கண்டவுடன்......... 
சக்தியோடு........... 
இருக்கிறேன் ....!!! 


சின்ன (S) மன (M) சிதறல் (S) 
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S)

இதயத்தில் இருந்த - நீ
இடம் மாறி விட்டாய்.....
இதயம் வலிக்கிறது ....!!!

கண்ணில் இருந்து......
இடம் மாறி விட்டாய்.....
கண்ணீராய் வடிகிறாய் ...!!!

ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்......!!!

&

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

இரைதேடும் மீன் குஞ்சுபோல் ...!!!

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!!

இனிய பொங்கல் வாழ்த்துகள்
இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்
இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!

இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....
இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...
இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......
இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து......
இல்லறம் நல்லறமாக செழித்திட.......
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!

இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு......
இல்லத்தாரோடும் உறவுகலோடும்.....
இன்முகத்தோடு பொங்கலை உண்டு.....
இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......
இனிய உறவுகளுக்கு  இனியவனின்......
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!!

இரவு பகலாய் வயலில் புரண்டு......
இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....
இன் முகத்தோடு அறுவடை செய்து.....
இவுலகுக்கே உணவு படைக்கும்.....
இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு.....
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!


புதன், 11 ஜனவரி, 2017

காதலில் எப்படி வேறுபடும் ...?

சுவாசிக்கும் மூச்சாய் நீ
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?

&
கவிப்புயல் இனியவன் 

என் இதயம் உன்னிடம்

விழியால் எய்த அம்பால்.........
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!

என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

உன் நினைவலையில்..........

வலையில் அகப்பட்டு...........
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!

&
கவிப்புயல் இனியவன்

வலிகள்நேர்த்திக்கடன் ..

காதல்
இதய கோவில்.....
அதில், கனவு  தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு  மடை சார்த்தல் ...!!!

&
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

கல்லறை வரைதொடருதே ....!!!

காதற்ற ............
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!

உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185

உயிர்துறக்க போவதில்லை ...!!!

நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!

என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

​&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

சனி, 7 ஜனவரி, 2017

கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்

மனதில் இருள்
ஆடையில்  வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் காயவில்லை
கிழிந்த ஆடை

@@@

கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கி வந்தது நாய்

@@@

கவிப்புயல் இனியவன்
ஹைக்கூகள்  

வெள்ளி, 6 ஜனவரி, 2017

இதய சேதவிபரம் தெரியவில்லை .....!!!

மெல்லிய .....
வலியால் பிரசவித்ததே ......
கஸல் கவிதை ..........!!!

கவிதையை .....
ரசிக்கிறாய் என்றால் .....
நீயும் என்னைப்போல் ....
வலியை சுமக்கிறாய் .....!!!

அவள் கண்ணில் ....
இப்போ தான் பட்டாள்......
இதய சேதவிபரம் ......
இன்னும் தெரியவில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல்
மெல்லிய வலி கவிதை

இறந்தும் துடிக்கும் இதயம் 04

உயிரை வதைப்பது .....
தண்டனை குற்றம் .....
உயிரே உனக்கு .....
தெரியுமா .............?

கண் இமைக்கும் ....
கணப்பொழுதில் ....
நடக்கும் விபத்து .....
காதல் .......................!!!

காதல் ....
இல்லாத இடத்திலும் .....
இருக்கும் ......
காதல் இல்லாத .....
இடமே இல்லை ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல்
மெல்லிய வலி கவிதை

இறந்தும் துடிக்கும் இதயம்

கண்கள் .....
சந்திக்கமுன் ....
யாவரும் .....
சந்தோசமாய் ....
இருந்தோம் .......!!!

நான்
புகையிரதம் .....
நீ தண்டவாளம் .....
அனுமதித்தால்.....
பயணம் தொடரும் ....!!!

உயிர் கூட .....
இரட்டை வேடம் ....
போடுகிறது ......
இருந்தால் உயிர் ....
மறைந்தால் சாவு .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல்
மெல்லிய வலி கவிதை 

இனியவனின்அன்பு வணக்கம்.......!!!

அழகியே என் உயிரானவளே........
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....!!!

அகலவன் பொழுதினில்........
அன்றட பணியை தொடரும்.....
அனைவருகும் இனியவனின்....
அன்பு வணக்கம்.......!!!

வியாழன், 5 ஜனவரி, 2017

என் கவிதைகள் விரும்புகிறது ...!!!

உனக்காக எழுதவா ..?
உன்னையே எழுதவா ..?
உனக்கா எழுதி.........
உன்னோடு இருக்கவே .....
என் கவிதைகள் ..
விரும்புகிறது ...!!!

கவிதை ..
எழுதிக்கொண்டே இருப்பேன் ..
வார்த்தை தேவையில்லை ...
என்னிடம் உந்தன் நினைவுகள்
இருக்கும் வரை
என்னுள்கவிதையாய் . . .
பொழிந்து கொண்டே..
இருப்பேன் ...!!!

&
என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

நான்வாழ்வது உனக்காக..!!!

கனவு என்பது ........
கண் திறக்கும் வரை...
நினைவு என்பது .....
கண் இறுதியாக ......
மூடும் வரை ...!!!

நீ
பேசுவது எனக்காக
சிரிப்பது எனக்காக
அழுவது எனக்காக
ஏன் தெரியுமா நான்..
வாழ்வது உனக்காக..!!!

&
என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

என்னுள் உன் நினைவுகள்

விண்ணில் நட்சத்திரம் ...
நடனமாடுகிறது .....!!!

மண்ணில் மழை ...
நடனமாடுகிறது.......!!!

என்னுள்
உன் நினைவுகள்  ....
நடனமாடுகின்றன ...!!!

&
என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

தேடிக்கொண்டிருக்குதடி....!!!

உயிரே ......
உன்னை பார்க்க ..
என் விழிகள்
படும் பாட்டைப்பார் ...!!!

நீயோ இதயத்தில் ...
மறைந்திருப்பதை ....
மறந்துபோய் ....
தேடிக்கொண்டிருக்குதடி....!!!

&
என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

நம்பிவிட்டேன்.........!!!

கண்ணீர் .....
காதலின் வலியின்.....
திரவம் ........
தண்ணீர் தான்.....
மருந்து...........!!!

முதலை கண்ணீரை.....
நிஜக்கண்ணீரென்று....
நம்பிவிட்டேன்.........!!!

காதலில் போடும்....
முடிச்சு திருமணத்தில்....
அவிழ்க்கபடுகிறது.........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம் 02
மற்றுமொரு காதல் கஸல்

புதன், 4 ஜனவரி, 2017

இறந்தும் துடிக்கும் இதயம்




காதல்.......
ஆனந்த கண்ணீரில்...
ஆரம்பித்து.......
ஆறுதல் கண்ணீரில்.....
முடிகிறது..........!!!

முகில்களுக்கிடையே....
காதல் விரிசல்.......
வானத்தின் கண்ணீர்......
மழை..........................!!!

நான்
வெங்காயம் இல்லை....
என்றாலும் உன்னை.....
பார்த்தவுடன் கண்ணீர்....
வருகிறது................!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 

செவ்வாய், 3 ஜனவரி, 2017

சமுதாய கஸல் கவிதை

தொழிலாளியை .....
சுரண்டுவதற்கு  அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!

குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!

நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

உயிருள்ள மெழுகுதிரி .......!!!

ஒவ்வொரு பிறந்த நாள் .....
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!

நீ
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!

மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 2 ஜனவரி, 2017

அன்புள்ள காதலே

அன்புள்ள காதலே .....!!!
உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!

காதலிக்க
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 183

காதலில் தவிர்ப்பும் அழகு......!!!

எனக்காக கவிதை எழுது....
என்று அடம் பிடிகிறாய்.....
எழுதிய கவிதையில் நீ
இல்லாத ஒரு கவிதையை....
சொல் பார்க்கலாம்........?

போராட்டம் தான் காதல்......
எனக்கு உன்னை பார்க்காத....
பொழுதெல்லாம் போர்க்களம்....
ஆகுறது மனசு.........!!!

உன்னை சந்திக்கும்.....
நேரமெல்லாம் உன் அருகில் ....
இருக்கவே தோன்றுகிறது......
காதலில் தவிர்ப்பும் அழகு......!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 182

இதயம் நொறுங்கும்சத்தம்

என் ........
காதலின் வலிமை ......
உனக்கு  புரியவில்லை .....
என்றோ  என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

 &
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 181