இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 டிசம்பர், 2013

உலக மொழி

தமிழ் முதல்
முதல் மொழி
உன் விழிகள் பேசும்
மொழி
உலக மொழி 

காரணத்தை ...!!!

நீ
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!

வரமாட்டேன் என்கிறதே ....!!!

சிரித்த
போது கன்னக்குழி
நீ என்னை
திட்டும்போதுகூட
கண்ணில் குழி

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

எதுவும் இல்லை ....!!!

நீ
என்னை பார்த்தநாள்...!!!
மரணம் தாண்டி
வாழ்கிறேன்
இனி...............
நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!!!

அவளின் கண்ணால் ....!!!

மரணம் எல்லோருக்கும் வரும்
மண் ஆசையால்
பொன் ஆசையால்
பெண் ஆசையால்
எனக்கும் ஒரு நொடி
மரணம் வந்தது -பெண்ணால்
அல்ல அவளின் கண்ணால் ....!!!

சின்ன சிந்தனை 05

ஒருவனின் சந்தோசமான வாழ்க்கையும் 
சிக்கலான வாழ்க்கையும் -நாளாந்தம் 
ஒருவன் மனதில் ஏற்படும் எண்ண 
அலையே தான் ....!!!

சின்ன சிந்தனை 04

ஒரு மரத்தை வெட்டுவதால் 
ஒரு சமுதாயம் வெட்டப்படுகிறது

சின்ன சிந்தனை 03

ஆயிரம் நண்பர்கள் இருப்பது 
அவசியமில்லை
ஆறுதல் கூறும் ஒரு நட்பு 
போதும் வாழ்நாளில் ...!!!

சின்ன சிந்தனை 02

அரசனின் தலையில் கிரீடம் 
இருப்பதை விட -உன் இதயத்தில் 
தூய அன்பிருப்பது அரசன் வணங்கும் 
இறைவனுக்கு ஒப்பானது ....!!!

சின்ன சிந்தனை 01

ஒருவன் பிறப்பின் போது கொண்டுவந்த 
பெரும் பாக்கியம் பொறுமையும் விட்டு மன்னிப்பும் தான் -
இவைதான் மகான்களை தோற்றுவித்ததே 
தவிர மகான்கள் பிறப்பதில்லை .உருவாகிறார்கள்

நிச்சயம் வருவாய் ...!!! (கஸல் 615)

புகையிரத பாதைபோல்
நம் காதல் இடைக்கிடையே
இணைகிறது ....!!!

நீ கோபப்படும் போது
என் கவிதையும்
கோபப்படுகிறது ....!!!

உனக்காக
காத்திருக்கிறேன்
வீதியில் அல்ல
கனவில் நிச்சயம் வருவாய் ...!!!

கஸல் 615

கலங்க வைக்கவில்லை ....!!!

காதலுக்காய் துடிக்கும்
மண்புழு நான்
நீ தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!!!

உன் கண் உனக்கு
பார்வைக்கு -எனக்கோ
பாடைக்கு ....!!!

உன்னை காதலிக்கும்
போதே கவிதையை
காதலித்ததால் உன்
பிரிவு என்னை கலங்க
வைக்கவில்லை ....!!!

கஸல் 614

தவிக்கிறேன் .....!!!

நீ காதல் நினைவாக
தந்த ரோஜா செடி
பூக்கிறது -நீ தான்
இப்போ வாடிவிட்டாய் ...!!!

நீ கனவில் வருவாய்
என்பதற்காக தூங்காமல்
இருக்கிறேன் -கொஞ்சம்
நிம்மதிக்காக ....!!!

நீ என்னை பார்த்ததனால்
என் கண்கள் பார்வை
இழந்து தவிக்கிறது
நான் காதலுக்காய்
தவிக்கிறேன் .....!!!

கஸல் 613

என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!

என் கவிதைகள்
உனக்கு வரிகள்
எனக்கு நீ தந்த
வலிகள் -என்றாலும்
தொடரும் -என்
காதலைப்போல் ...!!!

வா ......!!!!!!
காதல் இல்லாத
கிரகத்தில் போய்
காதலிப்போம் -அப்போது
என்றாலும் உனக்கு காதல்
வருமா என்று பார்ப்போம் ....!!!

உன் பார்வையால்
பாடையில் போனவன் நான்
மீண்டும் ஒருமுறை பார்த்து
என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!

கஸல் 612

என் கண் மூடும் வரை ....!!!

இறைவனை வணங்குவது 
போல் காதலை வணங்கினேன் 
அவனிடன் இருந்துதானே 
காதல் பிறந்தது ....!!!

வாடி விழும் பூவை 
போல் ஆக்கிவிட்டாய் 
காதலை -என்றாலும் 
என்னில் தளிர் இருக்கிறது ...!!!

நீ கண் சிமிட்டும் 
ஒவ்வொரு நொடியும் 
எனக்கு இதய வலிதான்
என் கண் மூடும் வரை ....!!!

கஸல் 611

திங்கள், 30 டிசம்பர், 2013

கூடுதான் மிஞ்சிவிடும் ....!

இதயம் எனும் தேன் கூட்டில் ....
நினைவுகள் எனும் தேனீக்களை ...
கொண்டு கட்டிய கூட்டை யாரோ ....
இடைக்கிடையில் கல்லெறிகிறார்கள் ...
இடம் கொடுக்காதே அன்பே ...
இறுதியில் தேன் இல்லாமல் ....
கூடுதான் மிஞ்சிவிடும் ....!

மரத்தை மாற்றிவிடு ...!

பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன பயன் ..?
என்னை ஒரு காதல் ..
பட்ட மரமாக்கி விட்டது ....!
நீயோ
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி ...!
உன் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும் ..
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து
மரத்தை மாற்றிவிடு ...!

உன்னை அறிந்து கொள்வது ..?

நீ சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!

சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!

முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?

நீ கவிதையை எப்படி எழுதுகிறாய் ..?

இரு இதயங்கள் கண்ணீரால் 
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வியென்று அர்த்தம் ....!

இரு இதயங்கள் சிரித்துக்கொண்டு 
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி யென்று அர்த்தம் ....!

ஒரு இதயம் சிரித்துக்கொண்டும் ....
ஒரு இதயம் அழுதுகொண்டும் ...
கவிதை எழுதினால் ..
காதல் ஊடலென்று அர்த்தம் ....!

ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால் 
ஒருதலைக்காதல் என்று அர்த்தம் ...!

மெல்ல இனி சாகும் .. உன் உயிர் ...!

ஒவ்வொரு இளையனும் ...
காலத்தால் குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....
இது தேவர்களும் கடையவில்லை...
அசுரர்களும் கடையவில்லை.....
உன்னை காப்பாற்ற நீலகண்டனும் ..
வரப்போவதில்லை ....!
ஆனாலும் பயப்பிடாதே ...!
காதல் விஷம் உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!

எனக்கு தெரியும் ...

எனக்கு தெரியும் ...
உன்னை இனி தொடர்ந்து
காதலிப்பது .எனக்கு நானே
கல்லறைக்கு குழி கிண்டுவதுபோல் 
என்றாலும் தொடர்ந்து உன்னை
ஏன் காதலிக்கிறேன் தெரியுமா ..?
உன்னிடம் இனியாரும் காதலில் 
வந்து விழுந்திடக்கூடாது..
என்பதற்காக மட்டும் தான்...!

காதலர்களே கவலைப்படாதீர் ...!

நீ என்னை பார்த்து 
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து 
அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..! 
காதலில் வலியென்பதே இல்லை ...
காதலில் வலிஎன்பதன் 
ஒத்தகருத்து சுகம் ...
காதலில் சுகமும் சோகமும் 
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம்  அதிகரிக்கும்.... 
காதலர்களே கவலைப்படாதீர் ...!

மனம் போய்விடும் ....!!!

பறிக்கப்பட்ட பூவில் 
மணம் போய்விடும் ....!!!

பறிக்கப்பட்ட காதலில் 
மனம் போய்விடும் ....!!!

ஜீவன் நான் ....!!!

உன் இமை துடிப்பில் 
வாழ்ந்து கொண்டிருக்கும் 
ஜீவன் நான் ....!!!

தாங்கும் இதயம்

நீ தந்த ஒவ்வொரு நினைவின் வலி 
நான் விடும் ஒவ்வொரு துளி கண்ணீர் 
தாங்கும் இதயம் இருப்பதால் வாழுகிறேன் ...!!!

சடலமாக வாழ்ந்திருக்கிறேன்

உன் கன்னம் கிள்ளிய நாள் 
என் மறு பிறப்பின் நாள் -அதுவரை
சடலமாக வாழ்ந்திருக்கிறேன்

காதலை உணராத நம்

நீயும் நானும் பார்த்தது 
தவறில்லை....!

ஒருவர் மீது கொண்ட
காதலும் தவறல்ல ...! 

காதலை உணராத நம் 
குடும்பத்தில் பிறந்ததுதான் 
தவறு ...!!!

திங்கள், 23 டிசம்பர், 2013

முடியாமல் தவிக்கிறேன் ...!!!

உடல் வலி வரும் போது
அம்மா என்று கத்துவேன்
அம்மா வலியை ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!

தெருவில் திரியும்
போது சிறுகாயம்
வரும் அந்த வலியை
நண்பன் ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!

நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ...!!!

கண்ணாக இருந்தாய் ...!!!

கண்ணாக இருந்தாய்
கண் இமையாக -நான்
இருந்தேன் ....!!!
நான் கண்ணாக இருந்த
வேளை - நீ
கண்ணீராக
வெளியேறுகிறாய் ....!!!

நம்பிக்கையுடன் ....!!!

நீ என்னுடன் சிரித்து 
சிரித்து பேசியதை 
அடிக்கடி என்னோடு 
கோபித்ததை எனலாம் 
நினைத்தே 
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் 
விரைவில் நியமாக 
நடக்கும் என்ற 
நம்பிக்கையுடன் ....!!!

ஒருபக்க வலியுடன் ...?

கவிதை எழுத கூடாது 
என்று நினைப்பேன் 
நீ கூட பார்த்து விடுவாய் 
என்ற பயம் ...?
நீ என்னை ஏற்பாயா ..?
நிராகரிப்பாயா என்ற 
தயக்கம் ...?
எத்தனை நாள்தான் 
இந்த ஒருபக்க வலியுடன் ...?

ஒருபக்க வலிக்கவிதை

உன்னை பற்றி எழுதிய
கவிதைகள் ஒன்றும்
உன்னிடம் வந்து
சேரவில்லை - என்
குப்பை தொட்டியே
என்னை பார்த்து
சிரிக்கிறது ....!!!
அதற்கு தெரியுமா ..?
உன் எண்ணம்
என்னவென்று ..?

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பூ அழகு வாடாதவை

பூ அழகு வாடாதவை
நீ அழகு என்னை நீக்காதவை
காதல் அழகு உலகம் இருக்கும் வரை

காதல் உள்ளங்களுக்கு அழகு ...!!!

பனித்துளியில் சூரிய ஒளி பட்டால் அழகு ...
என் கண்ணில் நீ பட்டதால் நீ அழகு
காதல் உள்ளங்களுக்கு அழகு ...!!!

ஏன் இப்போ மின் வெட்டு ..?

உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?

சனி, 21 டிசம்பர், 2013

மருந்தும் நீதான் ...!!!

நீ பிரிந்தாய்
காதல் இலைதான்
உதிர்ந்ததே தவிர
காதல் மரமல்ல ....!!!

உன் நினைவுகளை
கனவு வலையாய்
பின்னி வைத்திருக்கிறேன்
நீ சிக்காமலா விடுவாய் ...!!!

உன் மௌனம்
தான் என் இதயத்தில்
காயத்தை ஏற்படுத்தியது
மருந்தும் நீதான் ...!!!

கஸல் 610

நீ சொல்வதெல்லாம் தாங்கும் ....!!!

உன்னை கண்டவுடன்
நான் களவு போன
பொருளானேன் ....!!!

காதல் தோல்வியால்
விஷம் அருந்தினேன்
அதிலும் நீ
நிறுத்திவிட்டேன்
விஷ குடிப்பை ...!!!

இதயம் ஒரு
இரும்பென்றால்
நீ சொல்வதெல்லாம்
தாங்கும் ....!!!

கஸல் 609

கண்ணீரைப்போல்

என் பெயரின் ஒவ்வொரு
எழுத்தும் நீ
எழுத்து பிழை இல்லாமல்
இருந்தால் ....!!!

கண்ணீரைப்போல்
திடீரென வருகிறாய்
வழிந்தே போய்
விடுகிறாய் ...!!!

பகலில் இருக்கும்
நட்சத்திரம் போல்
இருக்கிறது உன்
ஞாபகம் .....!!!

கஸல் 608

இருப்பேன் - காதலோடு

உன்னை கணட நாள்
என் இறந்த நாள்
உன்னை பிரிந்த நாள்
உனக்கு பிறந்தநாள் ....!!!

காதல் எல்லோர் மனதில்
இருக்கும் அது  போது விதி
இதையேன் புரியவில்லை- நீ

நான் இயற்கை காற்று
நீ இருக்கும் வரை
நானும் உன்னோடு
இருப்பேன் - காதலோடு

கஸல் 607


நான் வெளிமூச்சானேன் ....!!!

என் முகத்தை
தொலைத்தேன்
உன் முகம் வருமென்று
என் முகமே இருந்தது ....!!!

ஞாபகங்களுக்கு
ஒரு வீடு கட்டினால்
அதில் நீ ஒரு ஒட்டறை
தட்டினாலும் வருவாய் ....!!!

என் உள் மூச்சு நீ
அதனால் தான்
வாழுகிறேன் உனக்கு
நான் வெளிமூச்சானேன் ....!!!

கஸல் 606

வெள்ளி, 20 டிசம்பர், 2013

அழும்போது உறவுகளை புரிந்து கொள்....!!!

சிரிக்கும் போது கூட்டத்துடன்
சேர்ந்து சிரி
அழும்போது தனியாக இருந்து
அழு -அய்யா கண்ணதாசன்
சொன்ன தத்துவம் இது ....!!!

என் சிந்தனை ...!!!

சிரித்தபோது கூடி இருந்த
உறவுகள்
அழும் போது தனிமையாக்கி
சென்று விட்டன ...!!!

உணர்ந்தேன் இப்போ ....?
சிரிக்கும் போது
உறவுகளை ரசித்துக்கொள்
அழும்போது உறவுகளை
புரிந்து கொள்....!!!

அதுதான் என் துணை ....!!!

உன்னை கண்டவுடன்
என்னை மறந்தேன்
என்பது பழையவார்த்தை
உன்னை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேன் என்பது
புதிய வார்த்தை ....!!!

எவருடன் பேசும் போது
மீண்டும் மீண்டும்
பேச தூண்டுதோ அவர்
எனக்கான -ஞானி
எவளை  கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேனோ அதுதான்
என் துணை ....!!!

துடித்தே இறந்துவிடுவாய்...!!!

இன்று தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை
காத்திருப்பேன்
சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
என் மௌன மொழி
துடித்தே இறந்துவிடுவாய்...!!!

வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!

வாழ்க்கையில்... 
நடந்து வந்தபாதையை  
திரும்பி பார்க்கிறேன் 
வாழ்ந்த காலத்தில் 
வாசமும் இருந்தன 
துர் நாற்றமும் இருந்தன 
வலிகளும் இருந்தன 
துடிப்புகளும் இருந்தன ....!!!

பாசத்தோடு உறவாடிய உறவுகள்.... 
பாசத்தை ஒரு முகமூடியாய் 
அணிந்து உறவாடிய உறவுகள்..... 
தோள் கொடுக்கும் நண்பர்கள்.... 
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!

கண்ட இடத்திலே கைகுலுக்கி 
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது 
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள் 
இப்படியே ஏராளம்.....!

பிறந்த உடன் பிறப்புக்களை 
சொல்லாமல் விடுவேனா ..?
பேசி திருமணம் செய்த அக்கா 
குடும்பம் பாசத்தில் இமயம் 
பாசத்தின் இமயத்தில் கொடுத்த 
சீர்வரிசை .....!!!

ஓடிப்போய் திருமணம் செய்த 
தங்கையின் குடும்பத்தில் 
பாசத்தை காணோம் ...
கொடுத்தால் தானே பாசம் வர ...!!!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் தம்பியின் 
குடும்பம் ....!!!

தங்களை விட உயர்ந்திட  கூடாது 
என்பதில் மிக கவனமாக இருக்கும் 
அண்ணியின் குடும்பம் ....
சற்று உயந்தால் என் மனைவியின் 
குறையை குத்திக்காட்டும் அண்ணி 
இப்படியே ஏராளம்.......!!!

இத்தனையை பார்த்துகொண்டு 
பேசவும் முடியாமல் -நியாயத்தை 
சொல்லாவும் முடியாமல் 
இன்றோ நாளையோ என்று 
ஏங்கிகொண்டிருக்கும் பெற்றோர் 
அக்காவின் வீட்டில் வசிக்கும் 
உயிர்கள் .....!!!

இத்தனை துயரங்களுக்கும் 
அவர்கள் தான் காரணம் என்று 
சொல்லிவிட மாட்டேன் ...
எனது பங்கு என்ன என்பதை 
அறியாமலும் இல்லை ...
மனதுக்குள் வெந்து துடிக்கும் 
எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!! 

வியாழன், 19 டிசம்பர், 2013

ஒரே விடயம் நட்பு நட்பு ...!!!

முகம் பார்ப்பதில்லை
முகநூலில் பேசுவோம்
ஊர் பேர் தெரியாது
உண்மையோ பொய்யோ
தெரியாது
என்றாலும் ஊற்றெடுக்கும்
கிணறுபோல்
ஊறிக்கொண்டே இருக்கும்
ஒரே விடயம்
நட்பு நட்பு ...!!!

இதுதான் நட்படா ....!!!

அவன் இவனிடம்
என்னை பேசியபோதுதான்
உணர்ந்தேன் அவன்
அவனுக்காக வாழவில்லை
எனக்காக வாழுகிறான்
வாழ்ந்திருக்கிறான்
இதுதான் நட்படா ....!!!

நட்பையும் புரியதெரியவில்லை...!!!

இத்தனை நாள்
பழகி விட்டு
உன்னை காதலிக்க
வில்லை நட்போடுதான்
பழகினேன் என்கிறாயே
உனக்கு காதலையும்
மதிக்க தெரியவில்லை
நட்பையும்
புரியதெரியவில்லை...!!! 

உயிர் தோழன் நீ

தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்

ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்

எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!

நட்பு கவிதை ...!!

மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...!!!
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!!!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!!!

காதலும் கவிதையும் ...?

நான் உனக்கு தந்த
கவிதைகளையெல்லாம்
நீ காகித கப்பல் செய்து
விளையாடி விட்டாய் ....!!!

நீ எனக்கு தந்த
கவிதை
உன் பெயர் தான்
அதை கொண்டே நான்
ஒரு அகராதி
அமைத்து விட்டேன் ...!!!

காதலும் கவிதையும்
யார் யாருக்கு
என்று புரிந்து கொள்ள
வேண்டும் ....!!!

மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!

நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!

நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும்  சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!

உன் இதயத்துக்கு ..?

வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!

வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!

நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!

காதல் எப்படி வெல்லும் ...?

பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!

நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!

எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!

காதல் பிரிவுக்கு காரணம்

நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கேட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!! 

புதன், 18 டிசம்பர், 2013

நம்பிவிட்டேன்

சொல்
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர்
உனக்கு...?

ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!

நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!

கசல் 605

உணர்ந்து கொண்டேன்

காதல் உனக்கு
கற்பூரம் எனக்கு
தீபம்
நிலைத்திருக்கிறேன் ...!!!

யோசித்து வருவதில்லை
காதல்
யோசிக்காமல் உன்னை
சந்தித்தேன்
உணர்ந்து கொண்டேன்
தவறை ....!!!

இளநீர் போல் உன்னை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!

கஸல் 604

செவ்வாய், 17 டிசம்பர், 2013

எனது கவிதைகள்

எழுத்து .கம்
அமர்க்களம் .நெட்
தமிழ் தோட்டம் .இன்
தமிழ் நண்பர்கள் .கம்
தமிழ் வேர்ல்ட் .கம்
லங்கா ஸ்ரீ .கம்
சேனை தமிழ் உலா .கம்
நட்பு வளையம் .கம்
கே இனியவன் முக நூல்
கே இனியவன் blogspot  .கம்

என்பதில் எனது கவிதைகளை பார்க்கமுடியும் 

காதலால் காதல் செய்கிறேன் 10

நீ என்
கொலுசு அணிகிறாய் ..?
உன் மூச்சே
நீ வருவதை
தந்திப்போல்
சொல்லுகிறதே ....!!!

காதலால் காதல் செய்கிறேன் 09

எறும்பு கடித்து
அழுகிறாய்
நானும் அழுகிறேன்
அந்த எறும்பாக
பிறக்கவில்லையே ..?

காதலால் காதல் செய்கிறேன் 08

எப்படி அன்பே
நீ
பூவை பறிப்பாய் ...?
பூவே பூவொன்றை
பறிப்பது
ஒரு இன
அழிப்புத்தானே

காதலால் காதல் செய்கிறேன் 07

நீ
மனதில் விழுந்த
மழைநீர் - முத்தாகி
விட்டாய்
முத்தை எடுத்து
முத்து மோதிரம்
அணிந்திருக்கிறேன்
அன்பே ...!!!

காதலால் காதல் செய்கிறேன் 06

அதிகாலை சூரியன்
வரும் போது பூக்கள்
மலர்வதுபோல்
நீ வரும்போது
நான் மலர்கிறேன் ...!!!

காதலால் காதல் செய்கிறேன் 05

நீ
தாவணியில் வரும்
போது -தாவும்
என் மனம்
சேலையில் வரும்
போது
செத்தே போகிறேன்....!!!

காதலால் காதல் செய்கிறேன் 04

எல்லோருக்கும் இதயம்
சதையால் இருக்கும்
எனக்கோ - உன் முகம்
தான் இதயமாக
இருக்கிறாய் ....!!!

காதலால் காதல் செய்கிறேன் 03

உன்னை வர்ணிக்க‌ வெறும்
வார்த்தைகள் போதும் 
காமம் எதற்கு 
வேண்டாம் என்று 
அதை விட்டு விட்டேன்
காதல் தான் வேண்டும் ....!!!

காதலால் காதல் செய்கிறேன் 02

நீ 
கண் சிமிட்டும் ஒவ்வொரு
முறையும் நான் 
பிறந்து பின்
இறந்து கொண்டிருக்கிறேன்

காதலால் காதல் செய்கிறேன்

நீ 
மார்கழியில் தான்
பருவமடைந்திருக்கிறாய்
அதுதான் உன்னை கண்டவுடன்
உடம்பு சிலுக்கிறது....!!!

சனி, 14 டிசம்பர், 2013

ஆண் அழுதால்

பெண்ணின் அழுகை
வலிமையானது
ஆணின் அழுகை
கொடூரமானது
ஆண் அழுதால்
அந்த குடும்பமே
அழும் ....!!!

நண்பனையும் பார் ...!!!

கூடி இருந்து சிரிக்கும்
நண்பனையும் பார் ...!!!
தனியே இருந்து நான்
அழுதபோது தன் சுட்டு
விரலால் துடைத்த
நண்பனையும் பார் ...!!!
சிரிக்கும்  நண்பர்கள்
நிலைப்பதில்லை ....!!!

சிந்தனை கவிதைகள்

எரித்தால் ஒரு பிடி சாம்பல்
பிடித்தால் ஒருபிடி இதயம்
இடையில் ஆயிரம் ஆயிரம்
சுமைகள் ....!!!

வெள்ளி, 13 டிசம்பர், 2013

அழுது காதலை பெற்றேன்

நிறைவேறாத ஆசையால்
காதல் வேதனை படுகிறது
உன்னை நினைத்து வேதனை
படவில்லை ....!!!

நான் அழுது காதலை
பெற்றேன் நீ
அழுது காதலை
தொலைக்கிறாய் ....!!!

உன் அழகை கிளியுடன்
ஒப்பிட்டேன் அப்போ
கிழிந்து போனது காதல் ....!!!

கஸல் 603

காதல் முழிக்கிறது ....!!!

வா கண்ணே
காதல் வழியே சென்று
காதலை மறப்போம்
நிம்மதியாக காதல் செய்வோம் ....!!!

பாவம் நம் காதல்
நேற்று நீ தவறாக
புரிந்த கற்பனையால்
விபத்துக்குள் சிக்கி விட்டது ....!!!

தண்ணீராய் நீ
பன்னீராய் நான்
பாவம் காதல் முழிக்கிறது ....!!!

கஸல் 602

காதல் தீபத்தை

இதயத்தில் இருந்த
காதல் தீபத்தை அணைத்து
விட்டாய் - கரும் புகையாய்
நான் ....!!!

உன்னிடம் சேர்த்துவைத்த
நினைவுகள் எல்லாம்
வழிந்தோடுகிறது
இதயத்தில் இருந்து ....!!!

நீ
பிரிந்த போது
இழந்தவற்றை பெற்றேன்
காதல் மட்டும் உன்னிடம் ....!!!

கஸல் ;601

உன் நினைவுகள் ....!!!

சுவாசிக்கும் என் மூச்சு  நீ என்பேன்
உள்மூச்சு என் உள்ளத்தை தொடும் நேரம்
வெளிமூச்சாய் உன் நினைவுகள் ....!!!

சாதிக்காமல் இருந்ததில்லை ...!!!

காதலிக்காதவர்கள் காலத்தில்
எதையும் சாதித்தவர்கள் இல்லை
காதலித்தவர்கள் சாதிக்காமல் இருந்ததில்லை ...!!!

காதலை தானம்

காதலை தானம் செய்வதும்
உயிரை தானம் செய்வதும்
ஒன்றுதான் இழந்தால் சடலம் ...!!!

நான் உணர்ந்தேன் ....!!!

காதலியே உன்னை உயிர் என்பேன்
காதல் என்னில் வந்தபின் தான்
என் உயிரை நான் உணர்ந்தேன் ....!!!

உன் மூச்சு

என் இருப்பிடம் உன் இதயம்
என் பேச்சு உன் மூச்சு
இதற்கு மேல் என்ன வேண்டும் ...?

எடுத்து விடாதே ...!!!

என்ன வேண்டுமென்றாலும் எடுத்து கொள்
எப்படி வேண்டுமென்றாலும் பேசிக்கொள்
உன்னை என்னில் இருந்து எடுத்து விடாதே ...!!!

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

என் தனிமை ....!!!

நீ இல்லாத வேளை -தன்
விருப்பப்படி கொல்லுகிறது
என் தனிமை ....!!!

உன் கண் ....!!!

உன்னை காட்டி தந்தது என் கண் ...
என்னை கட்டிப்போட்டு விட்டது ..
உன் கண் ....!!!

உயிர் துறக்க போவதில்லை ...!!!

நீ என்னை ஒரு கனமேனும்
காதலிக்காமல் நான் உயிர்
துறக்க போவதில்லை ...!!!

எறிந்து விட்டாயே ...!!!

என் காதல் நினைவுகளை
வீட்டின் ஒட்டடைபோல்
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

வலியை சுமக்கிறேன் ...!!!

நான் உன் கண்ணில் மயங்கினேன் 
இதயத்தில் சுமர்ந்தேன் -இப்போ 
இரண்டாலும் ஏற்பட்ட வலியை சுமக்கிறேன் ...!!!

ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!

உன்னை கண்ட நாள் முதல்
என் உள்ளங்கையில் இருக்கும்
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!

சனி, 7 டிசம்பர், 2013

உயிரே அழைக்கிறேன் 05

காதற்ற ஊசியும் கூட
வராது என்பது
உண்மைதான் ...!!!
நீ காதோரம் பேசிய
வார்த்தைகள்
கல்லறை வரை
தொடருதே ....!!!

உயிரே அழைக்கிறேன் 04

என் உயிரே ...
காதலில் விழுந்ததால் தான் ....
நான் மனிதனானேன்......
உனக்கான கவிஞனும் ஆனேன்....
நினைக்க நினைக்க இனிக்கும்.....
உன் நினைவுகளில் தான்....
நான் இன்னமும் ...
உயிர் வாழ்கிறேன்...!

உன்னை விட்டு நான்
விலகும்  தூரம் தான்
அதிகம் .......!!!
மூச்சுக்காற்று
விலகுவதில்லை
என் மூச்சே உன்னிடம் தானே
இருக்கிறது

உயிரே அழைக்கிறேன் 03

காதல் என்பது இதய கோவில்.....
அதில், கனவு என்பது தீப ஒளி .....
நினைவு என்பது அர்ச்சனை.....
முத்தம் என்பது பிரசாதம்....
வலிகள் என்பது நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா
பிரிவு என்பது மடை சார்த்தல் ...!!!

உயிரே அழைக்கிறேன் 02

காதலில் அதிகம் பேசுபவர்கள் ..
அதிகம் பேசாதவர்கள்
இருவரும் தோற்கிறார்கள்
பேசுவதற்கு ஆயிரம்
வார்த்தைகள் இருந்தும்
பேசாமல் துடிக்கும் தூண்டில்
மீன்கள் தான் காதலர் ....!!!

உயிரே அழைக்கிறேன் 01

உன்னை நியத்தில் காண்பதை ....
காட்டிலும் நினைவில் காண்பதே.....
இன்பம் நியத்தில் நீ அருகில்.....
நானும் அருகில் -நினைவில் .....
நான் உன் அருகில் அங்கிருப்பேன் .....
நீ என் அருகில் இங்கிருப்பாய் .....
விருந்தாளியாக சென்றால் .....
தனி மதிப்பு தானே ....!!!

வெள்ளி, 6 டிசம்பர், 2013

என்னை தவிர ...?

உன்னை இழந்த பின்
நான் இன்னும் இழக்க
என்ன இருக்கிறது ..?
என்னை தவிர ...?

தொடக்கமும் முடிவும் ஒன்றுதான் ...!!!

உன்னை
நினைத்து  கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ  மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!

நான் வலியால் இறக்கிறேன்

வலையில் அகப்பட்டு
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன் 

உயிராக இருக்கவில்லை ....!!!

நீ பிரிந்து விட்டாய்
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!

மீண்டு வந்து விடுவேன் .....!!!

நான் இறந்த பின் கூட
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!

வியாழன், 5 டிசம்பர், 2013

என் 600 வது கஸல்

காக்கை தூக்கிய வடை 
நீ வைத்திருப்பாயா ..?
போடுயாயா என்ற 
ஏக்கத்தில் நான்....!!!


நரிக்கு 
எட்டாத திராட்சை நீ 
புளிக்கும் என்று போக 
முடியவும் இல்லை 
எட்டுகிறாயும் இல்லை ....!!!


இரண்டுபேரும் ஊதிய 
இதயபலூன் -நீ 
அளவுக்கு மீறி ஊதி 
வெடித்த பலூனை பார்த்து 
சிரிக்கிறாய் .......!!!


கஸல் ;600

நீ வா இல்லை போ

நினைவு கனவு காதல்
எல்லாம் உனக்கு
பறக்கும் பட்டம்
நான் காற்றில்லாமல்
தடுமாறுகிறேன் .....!!!

நீ வா இல்லை போ
நான் வதை உதை
படுகிறேன் காதலால் ....!!!

மூச்சு விடுகிறேன்
என்றால்
உன்னால் இல்லை
நீ தந்த காதலால் .....!!!

கஸல் 599
கண்ணீரில் ஊற்று

ஆமை வேகத்தில்
அசுர காதலில் நீ
முயல் வேகத்தில்
ஆமை காதல் நான் ...!!!

நினைவுகள்
இனிக்க வேண்டும்
புளிக்க வேண்டும்
நீ எரிக்கிறாய் ....!!!

கிணற்றில் ஊற்று
தாகம் தீர்க்கும்
கண்ணீரில் ஊற்று
தாகம் கூட்டும் ....!!!

வருவதும் போவதும்
இறைவன் கையில்
அதை காதலில்
பயன் படுத்திகிறாய் ....!!!

கஸல் 598

காதலால் சாகிறது உயிர் ....!!!

என்னை பார்க்காமல்
நீ ஒதுக்குகிறாய்
என் இதயத்தை
வைத்து கொண்டும் ....!!!

உன் பார்வைகள்
கவிதை ஆகின
இப்போ கவிதை
கண்ணிழந்து விட்டது ....!!!

காதல் வேண்டாம்
என்கிறது அனுபவம்
காதலால் சாகிறது
உயிர் ....!!!

கஸல் ;597 

காதலும் வராது

காற்றைப்போல் நீ
எப்போது எப்படி
வருவாய் என்று தெரியாது
நாணல் நான் ....!!!

இதயத்தில்
இருப்பதற்கு இடம்
காதல் இல்லை
இறக்கும் வரை
இருக்கணும் காதல்
நீ பட்டாம் பூச்சியாய் ....!!!

நினைத்த நொடியில்
கனவும் வராது
காதலும் வராது
கண்ணீர் மட்டும் வருகிறது ...!!!

கஸல் 596

நிறுத்தி விடாதே

என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!

காயத்தை மறந்து ....!!!

விழியால் எய்த அம்பால்
இதயத்தில் துவாரம்
வந்ததில்லை வியப்பு
என் இதயம் உன்னிடம்
போகவேண்டும் என்று
துடிக்கிறது காயத்தை
மறந்து ....!!!

கவிதையாய் ...!!!

கவலையுடன் கவிதை
எழுதினேன் கவலையை
மறக்க -அங்கும் நீ
கவிதையாய் ...!!!

காதலில் எப்படி வேறுபடும் ...?

நான் சுவாசிக்கும் மூச்சாய் நீ
நான் பேசும் பேச்சாய் நீ
நான் சிரிக்கும் சிரிப்பாய் நீ
நான் காணும் கனவாய் நீ
நான் விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?

சுறண்டுது இதயம் ...!!!

உன்னை பார்க்க மாட்டேன் 
என்கிறது -கண் 
பாரடா பாரடா என்று 
சுறண்டுது இதயம் ...!!!

புதன், 4 டிசம்பர், 2013

காதல் ஒன்று பிரியும் போது ...?

உயிர் ஒன்று பிறக்கும் போது
உயிர் ஒன்று இறக்கும் போது
வரும் வலியை விட
காதல் ஒன்று பிரியும்
போது வரும் வலி
அதிகம் தொடர்ந்து
இருப்பதால் ...!!!

வெறும் வயிற்றோடு துடிக்கும் ...?

ஆடம்பர மாளிகையில்
அலங்கார மின் விளக்குகளே 
அவர்கள் வீட்டு நட்சத்திரங்கள் 
எம் வீட்டில் நட்சத்திரங்களே 
அலங்கார விளக்குகள் 
வீட்டு கூரையில் பிரகாசமாய் 
ஒளிந்துகொண்டிருக்கும் 
எங்கள் வீட்டு மின் விளக்குகள் ....!!!

ஒரு கடி கடித்து விட்டு 
ஓரமாய் கிடக்கும் ஆப்பிள் பழம் 
அந்த வீட்டின் அநாதை பிறப்பு 
எப்போது எங்கள் வீட்டுக்கு 
அப்பிள் பழம் வரும் என்பது 
அப்பிளுக்கு எங்கள் வீடு 
பிரதம விருந்தினர் .....!!!

பழங்கஞ்சிதான் எங்கள் 
தினம் தோறும் ஊட்டப்பாணம் 
எம் குழந்தையின் அழுகை ஓசை 
அடங்கும் வரை ...
"குழலினிது யாழினிது " என்ற 
குறள் கூட வியப்புடன் தான் 
பார்க்கிறோம் .......!!!

சப்பாத்து இல்லையே என்று 
கவலைப்படாதே -கால் 
இருக்கே என்று சந்தோசப்படு 
என்றான் ஒரு தத்துவ ஞானி 
பழங்கஞ்சியாவது கிடைக்கிறதே 
என்று சந்தோசப்படுவதன் மூலம் 
வெறும் வயிற்றோடு துடிக்கும் 
குடும்பத்தை விட எம் குடும்பம் 
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ....!!!