இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 அக்டோபர், 2015

என் காதல் மீது - நீ

உன் வெட்கம் என்னை ....
தலை குனிய வைக்கிறது ....
உன் பார்வை என்னை ....
மனிதனாக்கியது....!!!

என் காதல் மீது - நீ ...
ஏறிநின்று குதிக்க
ஆசைப்படுவதேன் ...?

காதலில் ....
வலி -ராகம் ..
கண்ணீர் - மது ....
பிரிவு - வாழ்கை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 880

அணைந்து விடாதே ....!!!

எட்ட
முடியாத காதலர் நாம் .....
சூரியனும் சந்திரனாய் ...
வானமும் நிலமுமாய் ...!!!

காதலை விதைத்தேன் ...
வதையாகும்  உணர்ந்தேன் ...
காதல் ஆழ்கடல் -நீ
துறைமுகம் ....!!!

நான்
வெறும் நெருப்பு ...
நீயே வெப்பம் ...
நீயே ஒளி....
நீயே கரி ....
நீ தணல் .....
அணைந்து விடாதே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 879

விதி மதி இரண்டும் இழப்பாய்

கண்ணில் பட்டு கதலானாய் ....
கல்லறைவரை தொடருமென்றாய்....
கண்மூடி தனமாய் நம்பினேன் ...
கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!!

கிட்டவா காதல் பரிசு தா ....
கிள்ளி விட்டு போனபோது ....
கிள்ளியது என் இதயம் என்பதை ....
கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது ....
கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!!

காத்திருந்தேன் கவிதை வந்தது ....
காணாமல் போனாய் கவிதை வந்தது ....
காதல் பைத்தியம் என்றார்கள் ....
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 877

ஆருயிரே என்றாய் ....

இறந்த காலம் தான் ....
இனிமையான காலம் ....
இனிமையாய் நீ பேசி ....
இளமையை ரசித்தேன் ....
இப்போ தனிமையில் ....!!!

உனக்காய் வாழ்வேன் ...
உறுதியாய் கூறினாய் ....
உயிரை மறந்து வாழ்ந்தேன் .....
உயிர் வலிக்கிறது இப்போ ....!!!

அன்பே என்றாய் ....
அனைத்தையும் இழந்தேன் ....
ஆருயிரே என்றாய் ....
ஆவியாய் அலைகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 876

நண்பன் -வாழ்த்தியது

7000ம் பதிவுகள் தொட்ட
கவிப்புயல் இனியவன் ஐயா
அழகிய கவிதைகளை 
பனி மழையாக தூவி

சேனையெங்கும் பரவச்செய்த

கவிப்புயலே உமது பணி இனிதே தொடர

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன்

உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ
கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்
தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு
குழந்தைச்செல்வங்கள் பெருகி
என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல
ஊரார் பாராட்ட கலந்து மகிழ
இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் 
ரோஜா ரோஜா ரோஜா நன்றியுடன் நண்பன்ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

+
கவிதைக் களஞ்சியமாய் 
தொட்டதெல்லாம் கவிதையாக்கி 
உலகவலம் கவிதைகளால் உருவாக்கி
தமிழுக்கு ஆற்றும் தொண்டினை 
பதிவுகளாக்கி சேனையில் கடந்துவிட்டீர்கள் 7000
உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் 
தொடருங்கள் என்றும் சேனை உலாவுடன் 
எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உங்கள் வழியில் 
நன்மை செய் பலனை எதிர்பாராதே 
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்

செவ்வாய், 27 அக்டோபர், 2015

உயிரே நீ தான் சொல்லணும் ...?

கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )

கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும்  நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

என் காதல் எப்படி அழகில்லை ...?

என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!

உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

நீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

திங்கள், 26 அக்டோபர், 2015

உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா....
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

உனக்காக என் உயிர்

அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!

வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!

தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!

எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!

இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

உனக்காக என் உயிர்

அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!

வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!

தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!

எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!

இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

பட்டமரம் தழைப்பதில்லை ....

மரத்தடியில் இருந்து பேசிய ....
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!

மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்.....
நினைவு வருகிறது ....!!!

பட்டமரம் தழைப்பதில்லை  ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

யாரையுமே நேசிக்காது ...♥

உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

தாயே உனக்கு முன்

தாயே....
உனக்கு முன் .......
நான் இறந்தால் .....
என் கல்லறையில்......
உன் பெயரை எழுதி வை
கல்லறையில் இருந்து .....
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உனக்கே மகனாய் ....
பிறப்பதற்காக .....!!!

+
கவிப்புயல் இனியவன்
குடும்ப கவிதைகள்
(அம்மா கவிதை )

எப்படி சென்றாய் ...?

கண்ணில் விழுந்து
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?

நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

உனக்கு தெரியும்

தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!

தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!

நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!

உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!

காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!

மற்றவை எல்லாவற்றிலும்
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

நிலவே பகலில் வரமாட்டாயா

நிலவே நீ பகலில் ...
வரமாட்டாயா ...?

பகலில் அவளை நீ 
அருகில் வைத்திருகிறாயே....
எனக்கென்ன வேலை ....?
உன்னுடன் பகலில் ...?

சக்களத்தி சண்டையை ....
மூட்டிவிடவா என்னை ...
பகலில் வரசொல்கிறாய் ...?

+
கே இனியவன் 
குறுங்கவிதை

நீ எழுதும் கடிதம் ...

நீ
எழுதும் கடிதம் ...
பேனாவால் எழுதுவதாக ..
தெரியவில்லை -வலிக்குது ...!
முள்ளால் தான் எழுதுகிறாய் ..!!

இதயம் ....
மென்மையானது ..
எத்தனை முறைதான் ....
உன் வலிகளை தாங்கும் ..?
+
கே இனியவன்
குறுங்கவிதை

கே இனியவன் குறுங்கவிதை

உணர்ந்துகொள் ..
பிரிவது ஒரு நொடி ....
அணுவணுவாக ...
இறக்கபோகிறாய் ..
பல்லாயிரம் நொடி ....!!!
+
கே இனியவன்
குறுங்கவிதை

கே இனியவன் குடும்ப கவிதை

என் அப்பாவே ..!
சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
நடை பழகினேன் ....
மிக விரைவாய் ஓடினேன் ....
காலம் அதிவேகத்தில் ....
என்னையும் அப்பாவாக்கியது ....!!!

என்
குழந்தைக்கும் நடை பழக்கினீர் ....
விடைகொடுத்தது உங்கள் நடைக்கு ....
முதுமை என்னும் காலம் ....!!!

இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி ....
காட்டும் பாக்கியத்தை பெற்றேன் ....
மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ...
உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் ....
முதுமையின் நடையிலும் ஒரு அழகு ....
இருக்கத்தான் செய்கிறது .....!!!

+
கே இனியவன்
குடும்ப கவிதை

சனி, 24 அக்டோபர், 2015

உலகம் அழிய வாய்பேயில்லை ....!!!

இதயம்  ....
இறக்க நேர்ந்தாலும்...
அதில் இறவா வரம்பெற்றது....
உன் நினைவுகள் மட்டும்தான்...
கண்மணியே...!!!

உலகம் ஒருநாள் ....
அழியும் என்கிறார்கள் ...
எனக்கு நம்பிக்கைஇல்லை ....
காதல் இருக்குவரை உலகம் ....
அழிய வாய்பேயில்லை ....!!!

+

கே இனியவன்
காதல் கவிதைகள்

உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

அலைகளை பார்த்தேன் ...
காதலின் தத்துவம் வந்தது ....
காதலில் விழுவது பெரிதல்ல ...
விழுந்தால் உடனே எழவும் ...
கற்று தந்தது ....!!!

அவள் 
உதறிவிட்டு சென்றாள்....
என்று சொல்லமாட்டேன் ....
காதலை தந்துவிட்டு -கையை 
உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

பறிக்க முடியாத பரிசு ....!!!

பிரிவு
நமக்கு தவிர்க்கவும் ....
மறக்கவும்  முடியாத வலி…
நினைவு என்பது யாராலும்
என்னிடமிருந்து உன்னால் ....
பறிக்க முடியாத பரிசு ....!!!

நீ ....
எனக்காக மூச்சு விடும்போது ....
நான் .....
உனக்காக இறப்பதில் ....
என்ன தப்பு ...?

+

கே இனியவன்
காதல் கவிதைகள்

காலத்தாலும் மறக்க முடியாது ....!!!

உன்
உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது ....!!!

நீ
பேசிய வார்த்தைகளை -நீ
மறந்துவிடலாம் ....
நாம் வாழ்ந்த காதலை ....
காலத்தாலும் மறக்க முடியாது ....!!!

+

கே இனியவன்
காதல் கவிதைகள்

காதல் தத்துவ கவிதை

ஞாபக 
சக்தி குறைவானவர்கள் ....
காதலில் பொய்சொல்ல ....
முயற்சிக்க கூட்டாது ....
அதுவே சந்தேகமாக ....
உருப்பெற்று விடும் ....!!!

பெற்றோர் காதலித்து ....
திருமணம் செய்தாலும் ...
பிள்ளைகளின் காதலுக்கு ....
தடையாகவே இருப்பார்கள் 
இல்லையேல் விருப்பம் ....
இன்றி ஏற்கிறார்கள் ....!!!

காதலின் பின்னால் ஓடாதீர் ....
காதல் இல்லாமலும் வாழாதீர் ....
காதல் பேச்சை கூட்டி ....
மூச்சை நிறுத்தும் ,,,,,!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞர் 
காதல் தத்துவ கவிதை

காதலிக்கதெரியாத உள்ளம்

காதல் மலர் போல் ....
காலையில் அழகாய் ....
மாலையில் வாடிவிடும் ....
என்றாலும் காதல் ...
அழகும் மென்மையும் ....!!!

மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ உள்ளூர் மயானத்தில் ...
நான் வெளியூர் மயானத்தில் ....!!!

உன்னைப்போல் காதலிக்க ...
தெரியாத உள்ளமும் ஒரு ....
அங்கவீனம் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 875

நம் பிரிவு

ஓராயிரம்...
நினைவுகளுடன் ....
ஆழமான  துயரத்துடன்...
நிகழ்ந்து விட்டது ...
நம் பிரிவு......!!!

நீ
என்னை மறந்து போய்
நினைத்திருக்கலாம்
இப்போதான் உனக்கு ...
காதல் புரிந்திருக்கும் ....!!!

ஒப்பாரி என்றால் என்ன ...?
இப்போது புரிந்தது எனக்கு ...
உன் ஒவ்வொரு செயலும் ...
என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 874

பலஜென்மம் காதலிப்பாய்

உன்னை காதலித்து ...
நானும் கற்றுகொண்டேன் ....
எப்படி வலிக்காமல் ....
மறப்பதென்று ....!!!

உன்னை நினைக்காமல் ....
கவிதை எழுத முயற்சித்தேன் ...
வெற்றிபெற்றது -நீ 

இக்கரைக்கு 
அக்கரை பச்சை - நீ 
அடிக்கடி இப்படிதான் ,,,
ஏமாற்றுகிறாய் ,,,,,
ஒருமுறை என்னை 
காதலித்துப்பார் ,,,,
பலஜென்மம் என்னை ...
காதலிப்பாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 873

நீடூடி காதல் வாழ்க

நீ
என் மூச்சாக இருந்த ....
காலமெல்லாம் நான் ....
உன் உயிராக இருந்தேன் ....
நீ மூச்சை நிறுத்தினாய் ...
காதல் இறந்தது ....!!!

இதயத்தில் ரோஜாவை ....
வளரவிடாமல் -எதற்கு ..?
முள்ளை வளர்கிறாய் ....?

நீடூடி வாழ்க ....
வாழ்த்துவோர் உள்ளார் ...
நீடூடி காதல் வாழ்க ...
வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 872