என் அப்பாவே ..!
சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
நடை பழகினேன் ....
மிக விரைவாய் ஓடினேன் ....
காலம் அதிவேகத்தில் ....
என்னையும் அப்பாவாக்கியது ....!!!
என்
குழந்தைக்கும் நடை பழக்கினீர் ....
விடைகொடுத்தது உங்கள் நடைக்கு ....
முதுமை என்னும் காலம் ....!!!
இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி ....
காட்டும் பாக்கியத்தை பெற்றேன் ....
மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ...
உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் ....
முதுமையின் நடையிலும் ஒரு அழகு ....
இருக்கத்தான் செய்கிறது .....!!!
+
கே இனியவன்
குடும்ப கவிதை
சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
நடை பழகினேன் ....
மிக விரைவாய் ஓடினேன் ....
காலம் அதிவேகத்தில் ....
என்னையும் அப்பாவாக்கியது ....!!!
என்
குழந்தைக்கும் நடை பழக்கினீர் ....
விடைகொடுத்தது உங்கள் நடைக்கு ....
முதுமை என்னும் காலம் ....!!!
இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி ....
காட்டும் பாக்கியத்தை பெற்றேன் ....
மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ...
உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் ....
முதுமையின் நடையிலும் ஒரு அழகு ....
இருக்கத்தான் செய்கிறது .....!!!
+
கே இனியவன்
குடும்ப கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக