யோகா கவிதை
...........
வலது மூச்சு.....
சூரிய கலை.... !
இடது மூச்சு....
சந்திர கலை.... !
இருதுவாரம்....
சுழுமுனை..... !
சூரிய கலையில்....
தியானம் செய்.... !
சந்திர கலையில்...
பயணம் செய்... !
சுழுமுனையில்....
அமைதியாக இரு.... !!!
@
கவிப்புயல் இனியவன்
யோகா கவிதை
...........
வலது மூச்சு.....
சூரிய கலை.... !
இடது மூச்சு....
சந்திர கலை.... !
இருதுவாரம்....
சுழுமுனை..... !
சூரிய கலையில்....
தியானம் செய்.... !
சந்திர கலையில்...
பயணம் செய்... !
சுழுமுனையில்....
அமைதியாக இரு.... !!!
@
கவிப்புயல் இனியவன்
தத்துவக்கவிதை
....
ஞாபக
சக்தி குறைவானவர்கள் ....
காதலில் பொய்சொல்ல ....
முயற்சிக்க கூட்டாது ....
அதுவே சந்தேகமாக ....
உருப்பெற்று விடும் ....!!!
பெற்றோர் காதலித்து ....
திருமணம் செய்தாலும் ...
பிள்ளைகளின் காதலுக்கு ....
தடையாகவே இருப்பார்கள்
இல்லையேல் விருப்பம் ....
இன்றி ஏற்கிறார்கள் ....!!!
காதலின் பின்னால் ஓடாதீர் ....
காதல் இல்லாமலும் வாழாதீர் ....
காதல் பேச்சை கூட்டி ....
மூச்சை நிறுத்தும் ,,,,,!!!
+
கவிப்புயல் இனியவன்
காதல் தத்துவ கவிதை
15) பழமொழியும் கவிதையும்
.......
காக்கை
அன்னநடை......
நடக்க போய்
தன்நடையை.....
கெடுத்ததுபோல்.....!
உன் உறவை......
நம்பி -என் உறவுகள்......
எல்லாவற்றையும்.......
இழந்து தவிக்கிறேன்.....!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
....
ஆற்றில் போட்டாலும்......
அளந்து போடு.........!
அளவில்லாமல்........
காதல் கொண்டேன்.......
அவஸ்தையையே.....
வாழ்க்கையாக......
பெற்றுக்கொண்டேன்......!
ஆற்றின் ஆழத்தை........
கண்டுவிடலாம்......
காதலின் அழத்தை.....
படைத்தவன் கூட......
அழக்க முடியாதே........!
^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்
14) கானா கவிதை
......
அறிமுகம் செய்தவர் : கவிப்புயல் இனியவன்
....
Sep 17, 2015 10:53 pm
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?
குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குதுகால் எங்கே ...?
கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குதுகைப்பை எங்கே ...?
கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
உன் முகம் எங்கே .....?
முகம் இருக்குது அழகு எங்கே ..?
கானா கவிதை
கவிப்புயல் இனியவன்
13) காதல் வெண்பா
.....
இனியவன் காதல் வெண்பா
.....
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!.
....
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!
.....
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!
....
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?
....
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா
....
முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும்
12) கதைக்கு கவிதை
.......
கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்
!!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!
இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில்
வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த
வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!
!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!
கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........
..........எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................
பத்திர காளிமீது பக்தி கொண்டவள் .................
..........பத்தினியாள் பக்தியாள்............................
சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........
.........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............
சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்..........
.........சீற்றம் கொண்டாள் சிங்கம்போல் ............
சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!!
!!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!!
தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்.......
..............காதலன் பெயரோ கருணாகரன் ............
மங்கையர்கரசியை மனதால் மணந்தவன் ........
......மங்கையர்கரசியும் மனதால் மணந்தவள் ......
கட்டழகன் காளைபோல் உடலழகன் வீரன் .........
.....சிங்கம் போன்றவன் சேனைகளை வென்றவன் .......
அவனது நடையோ மேகத்தின் கதிர்போன்றவன் .....
....அவனது கண்ணோ காந்த கண்னழகன்.....!!!
!!!............மங்கையர்க்கரசியும் மார்த்தாண்டனும் .................!!!
மங்கையர்கரசியாரை மயக்க நினைத்தவன் ....
....சித்தப்பனால் மாப்பிள்ளையாக வந்தவன் .....
மங்கையர்கரசியாரை அடைய துடித்தவன் ........
....மங்கையர்கரசியாள் வெறுத்து ஒதுக்கப்பட்டவன் .......
கருணாகரனை வஞ்சகமாக கொண்டவன்
....மங்கையர்கரசியால் கொலைசெய்யப்பட்டவன்.....!!!
!!............மார்த்தாண்டனை மங்கயர்க்கரசி வர்ணித்தது ..............!!!
சித்தப்பனால் திருமணத்துக்கு வடிவமைகக்பட்டவன் .....
....மார்த்தாண்டனை மணந்துவிடு அரசியே .....
வேறு ஒரு வழியில்லை உனக்கு நான் தருவதற்கு .....!
....சீறி எழுந்தாள் மங்கயர்க்கரசி கொட்டி தீர்த்தாள்.....
சிங்கத்தை பார்த்தகண்னால் செந்நாயை பார்ப்பதா ......
...சேனை படையெல்லாம் வென்ற என்னைவனை.......
இன்னோடு ஒப்பிடுவதா வெட்கம் வெட்கம் ..........!!!
!!!........மங்கையர்க்கரசி காதலனுக்காய் காத்திருத்தல் .................!!!
காதலனுக்காய் காத்திருந்தாள் காளிகோயிலில் ....
....தூரத்து திசைவரை கண் விட்டு தேடினாள்...........
காத்திருந்த காதலனை காணாது துடித்தாள் ...........
....காரிருள் மேகத்தில் முழுசந்திரன் நிற்க ......
தூரத்தில் புலியும் கரடியும் நரியும் ஊளையிட ....
.....காத்திருந்தாள் காத்திருந்தாள்..........
கருணாகரனுக்காக காத்திருந்தாள் அரசி .......
.....சட்டென்றே துர் செயல்கள் தோன்றின .....
முழுசந்திரனை கார்மேகம் மறைத்தது ......
.....பலமாகிய காற்று பலமிழந்தது ...........
ஊளையிட்ட மிருகங்கள் மௌனமாகின .....
....ஆலயத்தின் மீதிருந்த ஆந்தை அலறாமல் ....
அத்தனையும் சற்று நேரத்தில் நிசப்தமானது.....
...தனித்தே தவித்துகொண்டிருந்தாள் கன்னி ......!!!
!!!..........மங்கையர்க்கரசி காதலனை காணாது துடித்தாள்.........!!!
கருணாகரனே எனவனே கருணாகரனே ......
....இன்னும் எதற்கடா என்னை வதைக்கிறாய்.....
குறித்த நேரத்தில் சற்று மீறினாலும்........
....இறந்துவிடுவேன் என்று அறியாதவனா நீ ......
வந்துவிட்டா கண்ணாலனே கருணாகரனே .....
...வெந்து துடிக்கிறேன் கருணாகரனே .......
தேவியே காளியே நான் வணங்கிய தெய்வமே ....
...உன்சந்நிதானத்தில் ஒன்றுசேரவே தனித்து வந்தேன் ....
என்னவனை காணாது நெஞ்சு துடிக்கிறது ....
....என்னாச்சோ ஏதாச்சோ என் தேவியே காளியே ....!!!
!!!...................கருணாகரன் கொலைசெய்யப்படுதல்.............!!!
என்னவன் எங்கே என்னவன் எங்கே தாயே .....
...புலம்பிகொண்டிருக்கையில் வந்தான் மாத்தாண்டன் .....
புலம்புவதை நிறுத்து கருணாகரன் என்று அழைபப்தை நிறுத்து ,,,,,
....அவன் இனி வரமாட்டான் அவன் குரல் இனிகேளாது.....
மங்கையர் திலகமே உன்னில் நான் கொண்ட காதலால் ....
....அவனை தனிவழியில் என் வாளால் துண்டித்துவிட்டேன் ......
இனி நீ கண் கலங்காதே என் கயல் விழியாளே உன் கண்ணில் ....
....இனிமேல் கண்ணீர்வடிந்தால் என் இதயம் வெடிக்கும் ......
அவனை விட நான் உன்னை அதிகமாய் காதலிக்கிறேன் .....
...உன் அருள் கண்ணால் ஒருமுறை என்னை பாராயோ ....
என் உடல் பொருள் ஆவியெல்லாம் உனக்கே சமர்பிக்கிறேன் ....
,,,ஏற்றுக்கொள் என்னை ஏற்றுக்கொள் என் கெஞ்சினான் ....!!!
!!!..............மங்கையர்க்கரசி சற்று நேரம் அசைவற்று விட்டாள்......!!!
மாத்தாண்டா முதலில் என்னவன் இறந்த இடத்தை காட்டு .....
...கத்தினாள் கதறினாள் ஓலமிட்டாள் கூட்டிபோ என்றாள்.....
சென்றார்கள் இருவரும் தனிவழியில் சென்றார்கள் .....
....நிசப்தம், நிசப்தம், எங்கே பார்த்தாலும் நிசப்தம்......
மேகம் சற்று விலகியது மெல்லிதாய் சந்திரன் தென்பட்டான் .....
.....மார்த்தாண்டன் திடீரென நின்றுவிட்டான். கன்னியும் நிற்கின்றாள்......
அவள் பெருமூச்சைத் தவிர அங்கே வேறு சப்தம் இல்லை........!!!
.......இருண்ட மரத்தடியில் மினிங்கிகொண்டது ஒரு பொருள் .....
அங்கே சென்றாள் அதிர்ச்சியடைந்தாள் அதிலேயே ஓலமிட்டாள் ....
....'கருணாகரா! கருணாகரா! என் காதல் கணவனே.......
எங்கே சென்றுவிட்டாய்! உனக்கு மாலையிடலாம் என்று வந்தேனே!
....ஒரு நிமிஷத்தில் வீர சுவர்க்கம் சென்றுவிட்டாயே........
இனி இந்த உலகத்தில் அன்புக்கும் வீரத்துக்கும் யாரே உளர்?
...உன்னை என் உயிர் எனவே நினைந்திருந்தேனே.....
நீ போன பிறகு எவ்விதம் நான் இருந்து என்னபயன் ,,,,,,
.,,,,,என் நாதா, உன் உதடு அசைகிறது போல் இருக்கிறதே!
என்னை அழைக்கிறாயோடா..வந்தேன்...வந்தேன்.....!!!
......நெடுநேரம் புலம்பி கருணாகரன் மீது விழுந்தாள் .....!!!
!!!...........மாத்தாண்டனை கொல்லுதல்.................!!!
மங்கையர்க்கரசி எழுந்தாள் அவள் முகம் காளியானது.....
......மேகங்கள் சந்திரனை மூடின அவள் ரெளத்திராகாரமாள் ....
மார்த்தாண்டனை ஏற எடுத்துப் பார்த்தாள்.நாகத்தைக் கண்ட ....
......பறவைபோல் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை....
பாதகா! என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்று விட்டாயே.......
....என்னை மணக்கதானே செய்தாய் வா வா என்னை ......
மணந்துகொள் வா வா அருகே வா கத்தியபடி ஈட்டியை ....
.....மாத்தாண்டவன் மீது செருகி அவனை கொன்றாள்....... !!!
!!!................மங்கையர்க்கரசி மரணித்தல் .......................!!!
கருணா உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை ....
....காளியே அம்மா என் உடலை ஏற்றுகொள்.....
என்னவன் என்னை அழைக்கிறான் நான் போகிறேன்.....
....இனியும் தாமதியேன் இதோ வந்துவிட்டேன் ......
என் கடமை தீர்ந்தது உன்னை கொண்டவனை கொன்றுவிட்டேன் .....
....என் உயிரும் உடலும் உன்னையே நினைத்து வாழ்ந்தது .....
இதோ என் உடலும் உயிரும் உனக்கே அர்பணிக்கிறேன் .....
...அவனருகே சென்றாள் தன்னை தானே குத்தினால் ....
அவன் மீது வீழ்ந்து தன்னுயிர் நீத்தாள் மங்கையர்க்கரசி....!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
குறிப்பு ; இந்த கதையை கவிதை வடிவில் அமைக்க எனக்கு பலமணிநேரம் ஆகியது மாணவர்களுக்கு
மற்றும் ஆர்வலருக்கு இது பயன் பட்டால் அதுவே என் திருப்பதி
^
நன்றியுடன் ;கே இனியவன் -யாழ்ப்பாணம்
11) இரண்டு வார்த்தையில் கதை
.......
கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.
-------------
தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில்
குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் .
கதை ; செலக்சன் சரியில்லை
@
கவிப்புயல் இனியவன்
....
இவ்வாறு 10 கதை எழுதியுள்ளேன்
10) அணுக்கவிதை
....
உன்
பார்வைக்கு அஞ்சி
நீ அருகில் வரும்போது
மறு தெருவுக்கு போகிறேன்.
.....
உன்னை நான் நேரில்
ரசிப்பதை விட கவிதையில்
ரசிப்பதே அழகாய் இருகிறாய்.
....
ஒவ்வொருவனுக்கும்
அவனவன் காதல் தான்
ஆயுள் பாசக்கயிறு.
.....
இதயம் மட்டும்
வெளியில் இருந்திருந்தால்
நிச்சயம் நீ அழுதிருப்பாய்
என்னை ஏற்றிருப்பாய்.
.....
பெண்ணை பற்றி நான்
கவிதை எழுதியதில்லை
உன்னை பற்றியே கவிதை
எழுதுகிறேன்.
வித்து....
விதைக்கப்பட்டு..
மரமாகிறது..... !
மரத்தின் இலைகள்....
புதைக்கப்பட்டு....
உரமாகிறது.... !
விதைத்தாலும்...
புதைத்தாலும்....
பயன் இருக்கிறது.... !
நம் மண்ணில்.....
உடலங்கள்...
இலட்சக்கணக்கில்.....
புதைக்கப்பட்டன....
ஆயிரக்கணக்கில்...
விதைக்கப்பட்டன...!
புதைத்ததால் நம்..
இனத்தை உலகறிந்தது... !
விதைத்ததால் நாம்...
தலைநிமிர்ந்து...
வாழ்கிறோம்..... !!!
@
கவிப்புயல் இனியவன்
எங்கே போகிறாய்....
என்று கேட்டது...
ஆழ்மனம்...... !
தெரியாமல்.....
தத்தளிக்கிறேன்....
என்றது சுழல்மனம்..... !
என்னோடு வா....
என்றது ஆழ்மனம்...... !
உன்னோடு வரமாட்டேன்..
என்றது சுழல்மனம்..... !
என்னோடு இணைவதே..
உன் பிறப்பின் நோக்கம்
என்றது ஆழ்மனம்.... !
உன்னோடு வந்தால்..
என்னை சித்தனாக்கி...
விடுவாய் என்றது...
சுழல் மனம்..... !
அதனால் என்ன..?
என்றது ஆழ்மனம்... !
அதற்கு வயது இருக்கிறது என்றது...
சுழல்மனம்.... !
சிரித்து கொண்டே...
அடங்கியது....
ஆழ்மனம்...... !!!
@
கவிப்புயல் இனியவன்
உரத்து அழைத்தேன்
அல்லா வரவில்லை.... !
மௌனமாக செபம்...
சொன்னேன்....
ஜேசுவும் வரவில்லை.... !
அலங்காரத்தோடு...
மந்திரம் உச்சரித்தேன்...
சிவனும் வரவில்லை..... !
முத்திரையோடு...
தியானம் செயதேன்....
புத்தனும் வரவில்லை.... !
வியந்தேன்....?
டேய் சும்மா இரு...
என்றான் சித்தன்
சிரித்தேன்....... !!!
@
கவிப்புயல் இனியவன்
என்...
கருத்துக்கள்.....!!!
சிறுபிள்ளைத்தனமாகவோ .....
குழந்தைத்தனமாகவோ ..... !!!
செத்ததாகவோ......
இத்ததாகவோ........
இருக்கலாம்..... !!!
என்றாலும் ஒருமுறை பாருங்கள்......!
அதிலிருந்து உங்களுக்கு....
புதிய கருத்துக்கள்..
தோன்றலாம்..... !!!
@
கவிப்புயல் இனியவன்
வசனக்கவிதை
.....
அதிசய குழந்தை அவன் ...
ஆசான் நான் ...
என்னைவிட அவனே முன்னுக்கு " அ "
நான் "ஆ "
இந்த குழந்தை இப்படியெல்லாம் ....
பேசுமா....? சிந்திக்குமா ...?
நம்ப முடியவில்லை என்போர் ...
இந்த கவிதையை மூடிவிட்டு
போகலாம் ....!!!
இந்த குழந்தை என்னதான்
சொல்லப்போகிறது என்பதை ...
பார்க்க விரும்புவோர் ....
பொறுமையோடு காத்திருந்து ....
தொடராக வரும் வசனக்கவிதையை ....
பாருங்கள் .....!!!
அதிசயக்குழந்தை ....
எப்படி இருப்பான் ...?
ஆசான் நேரான சிந்தனையில் ...
பேசினால் அவன் எதிர் சிந்தனையில்
பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில்
பேசினால் அவன் நேர் நித்தனையில் ...
பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!!
ஆன்மீகம் பேசுவான்
அரசியில் பேசுவான்
இல்லறம் பேசுவான்
எல்லாமே பேசுவான்
இலக்கண தமிழில் உரைப்பான்
இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும்
பேசுவான் ....
கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ...
இனிப்பான பொய்களையும் சொல்வான் ...
மொத்தத்தில் அதிசய குழந்தை
இடையிடையே அதிர்ச்சியை ....
தருவான் என்பது மட்டும் உண்மை ....!!!
^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
திருக்குறள் கவிதைகள்
.........
திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்"
எனும் பகுதியை கவிதை ஆக்கியுள்ளேன் இதனை முதல்
முயற்சியாக அடியேன் வடிவமைத்துள்ளேன்.
....
பெண்ணே நீ யார் ....?
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01
....
இவ்வாறு அனைத்தும் வடிவமைத்துள்ளேன்
நன்றி
திருக்குறள் கவிதைகள்
.......
திருக்குறள் சென்றியு
..........
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
கவிப்புயல் இனியவன் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
.....
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (02)
****
கவிப்புயல் இனியவன் திருக்குறள் -சென்ரியூ 02
**********
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
.....
இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட சென்றியு எழுதியுள்ளேன்
நன்றி
கஸல் கவிதை
.....
இக் கவிதை பல மொழிகளை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுகிறது. இங்கு யான் இது எவ்வாறு எழுதுவது என்று பார்க்கிறேன்
....
தமிழில் கவிகோ அப்துல் ரகுமான் அவர்கள் நல்ல வடிவம் கொடுத்தார். அதனையே பெருமளவு பயன்படுகிறது.
.....
பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )
இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும்
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும்
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .
அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....
உதாரணத்துக்கு ஒரு கவிதை
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
----- 01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அடியேன் 1800 கஸல் எழுதியுள்ளேன்
...
காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட மாட்டாய் .......!
உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!
என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
....
ஐம்புலனை ....
அடக்கும் ஆமையின் ...
ஆற்றல் எனக்கில்லை ...(-)
நான் .....
ஆறறிவு மனிதன் (+)
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
....
நீந்த துடிக்கும்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)
வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
...
சமுதாய கஸல் கவிதை
சண்டை போடுவதாயின்...
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
---------------------------------
விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!
நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!
விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
சீர்க்கூ கவிதைகள்
......
காலந் தோறும் அடிவரையறையைக் கொண்டு தமிழ் இலக்கியங்களை வகைமை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீர்க் கவிதைகள் ஒரே ஒரு அடியில் முடிந்துவிடுவதால் அடிக் கவிதை எனப் பெயர் சூட்டாமல் ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க்கூ எனப் பெயர் சூட்டியுள்ளேன். ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தக் கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை / கூடார்த்தம் ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்புகிறேன்.
- ம. ரமேஷ்
( இவர் எனது மதிப்புக்குரிய முனைவர் ம. ரமேஷ். கவிதையை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர் )
.....
கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள்
01) மரம் உயிர்களின் நுரையீரல்
02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள்
03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி
04) மனம் குரு இல்லாத தியானம்
05) கவிதை காதலின் தலையெழுத்து
ஹைபுன்
......
ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.
தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன.
.....
இதன் மரபு.....
ஒரு கதை, சிறுகதை, கட்டுரை, பேட்டி, விமர்சனம், இதில் ஏதாவது ஒன்றை எழுதி அதற்கு பொருத்தமான ஹைக்கூ ஒன்றை உருவாக்கவேண்டும்
கவிப்புயல் இனியவன் ஹைபுன்
காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல்
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது
^
பள்ளி காதல் தொடரும்
பள்ளிவரை இல்லை
பள்ளி படலை வரை
.....
கவிப்புயல் இனியவன் ஹைபுன் 02
...........
தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!!
தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!!
மதியம் சாப்பாட்டு நேரம் பேரன் வந்தான் வயது 18 இருக்கும் வந்தவுடன் அவன் தாய் நித்திய பூசையை ஆரம்பித்தாள் நேத்து எங்கடாபோண்ணி ஸ்கூலுக்கு போறாண்டு
விஜய் படத்துக்கு போனது தெரியாதா எனக்கு அப்பா வரட்டும் ...
அப்பாவரட்டும் ......தாத்தா சிரித்தார்
போடா போ கைகாலை கழுவிட்டு சாப்பிடு ....!!!
தான் பொய் சொல்லி நாடகத்துக்கு போனதும் தனக்கு அடிவிழுந்ததையும் எண்ணி சிரித்தார் .....!!! தாத்தா
அன்று தண்டனையாக இருந்தவை வேதனையாக இருந்தவை இன்று இனிமையாக இருந்தது அவருக்கு ...!!!
*
இளமையின் இனிமை
தாமதமாக இனித்தது
முதுமை
குறட்கூ கவிதைகள்
............
புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது.
குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார்.
....
திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.
காதல் கரிநாள் ஆனது
.....
2) உறவுகள் பறிபோனது.
காதல் வந்தது.
....
3) நொடி மூச்சு நிலையில்லை.
காதல் நிலையானது.
...
4) கண்ணால் காதல் வந்தது.
இதயம் நொறுங்கிப்போனது.
...
5) நித்திரையில் சிரித்தேன்.
திட்டி எழுப்பினார் அம்மா
@
கவிப்புயல் இனியவன்
லிமரைக்கூ (லிமரிக் )
ஆங்கிலத்தில் லிமரிக் என்பது ஒரு கவிதை வடிவம் ஆகும். 5 அடிகளை கொண்ட இந்த கவிதையை தமிழில் ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ளார்.
....
வேடிக்கை, வினோதம், நகைச்சுவை, சமூக விழிப்புணர்வு வகையில் எழுதலாம்.
....
ஹைக்கூ மற்றும் சென்றியு என்ற இரண்டும் கலந்தது
....
இதன் மரபு
1) மூன்று அடிகளை கொண்டது.
2) முதல் அடியில் 3 சொற்கள்
3) இரண்டாம் அடியில் 4சொற்கள்
4) மூன்றாம் அடியில் 3சொற்கள்
5) முதல் அடியின் இறுதி சொல்லும் 3ம் அடியின் இறுதி சொல்லும் "ரைமிங்கில் " வரவேண்டும்
...
முற்களின் நடுவே ரோஜா
இரத்தம் கையில் வடிய பறித்து
கொடுத்தார் காதலியின் ராஜா
^^^
மாப்பிளைக்கும் பணம்
காலமாய் காதல் செய்தவரின்
மாறியது குணம்
...
அரச துறையில் தனியார்
தொழில் சங்க தலைவர் இரட்டை வேஷம்
இவரை கேட்போர் இனியார்
....
ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி
கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு
இழைத்து போனது உடல் ஒல்லி
.....
இழுத்து கொன்றது உன் பார்வை
விழித்து படித்து கண்டதொன்றுமில்லை
இழந்து விட்டேன் பள்ளி தேர்வை
சென்றியு
.........
இதுவும் ஜப்பான் கவிதை மொழி மூன்று அடிகளை கொண்ட ஹைக்கூ முறை. இதனை சிலேடை, நகைச்சுவை, கிண்டல், என்ற முறையில் எழுதலாம்
....
ஜப்பான் கவிஞர் கராய்ஹச்சிமேன் என்பவர் 18 நூற்றாண்டு அறிமுகம் செய்தார்
....
இவரின் புனை பெயர் சென்றியு என்பதால் அதையே கவிதை பெயர் ஆனது..
....
தமிழில் ஈரோடு தமிழன்பன் தான் முதல் முதல் எழுதினார்
.....
கவிப்புயல் இனியவன் சென்ரியூ
உறவினருக்கு தேனீர்
இடைக்கிடையே பேச்சு
விளம்பர இடைவேளை
^^^
பணம் பாதாளம் பாயும்
பாதாள அறைக்குள்
பணம்
^^^
பணம் பத்தும் செய்யும்
கடன் கொடாதவன் கையில்
பத்து
^^^
முகநூலில் காதல்
நான் யாரையும் காதலிக்கவில்லை
மறுபக்கத்தில் பழைய காதலி
^^^
தொடர்ந்து பாடும்
தொண்டைகட்டாது
ரேடியோ
^^^
சத்தியம் கேட்டு
சலித்துவிட்டார் கடவுள்
குடிகாரன்
^^^
நவீன சுயம்பரம் நடைபெறுகிறது
கல் பல் உடைக்கும் போட்டி
போட்டியில் முதியவர்
^^
நேர அட்டவனை படி.
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
பள்ளி மாணவர்.
.....
பகலிரவு ஆட்டம்.
இரவு சூதாடம்.
பகல் கிரிக்கெட் ஆட்டம்.
அடியேன் 100 க்கும் மேற்பட்ட ஹைக்கூ எழுதியுள்ளேன் அவற்றில் சில....
............
இட்ட முட்டை சுடுகிறது.
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்.
ஏக்கத்தோடு பார்த்தது கோழி.
^^^
கடத்தல்காரன் கையில் பணம்.
வன அதிகாரிகள் பாராமுகம்.
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்.
^^^
காடழிப்பு.
ஆற்று நீர் ஆவியானது.
புலம்பெயரும் அகதியானது கொக்கு.
^^^
குடும்ப தலைவர் மரணம்.
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்.
கருத்தடை நாயின் சாபம்.
^^^
சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை
^^^^^
வியர்வை சிந்தாமல் வேண்டாம்.
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்.
ஊதியம்.
@
கண் வரைதல் ஓவிய போட்டி.
முதல் பரிசு பெற்றான் மாணவன்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி
@
தொட்டிக்குள் இலை குவிகிறது.
தூய்மையானது சாப்பாட்டுக்கடை.
ஏழை வயிறு நிரம்பியது.
@
பூமி உருண்டை
அதுதான் சிறிதாக இருக்கிறது
தொட்டிக்குள் மீன்
தொண்டன் தீக்குளிப்பு.
கட்சி தவைவர் பெரும் சோகம்.
ஒரு வாக்காள் தோல்வி
....
இவ்வாறு முடிவு எதிர் பாராத திருப்பமாய் இருக்க வேண்டும்
01) ஹைக்கூ
.........................
இது ஜப்பான் கவிதை மொழி என்று சகலரும்b அறிந்ததே. தமிழில் 3அடி கவிதையை 1974 ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் முதல் முதலில் எழுதினார்.
......
ஹைக்கூ மரபுகள்
1) தமிழில் 3அடி கவிதையே பயன் படுகிறது. மூன்று அடியும்
மூன்று வாக்கியமாக இருக்க வேண்டும். 3 சொல் அல்ல
2) தலைப்பு இடக்கூடாது
3) முதல் அடி ஒரு கூறு. மூன்றாம் அடி ஒரு கூறு
மூன்றாம் அடியே மிக மிக பிரதானம். இது திடீர் திருப்பமாக, உணர்வாக இருக்க வேண்டும்.
4) படைப்பாளிகள் வார்த்தையை விளக்கக் கூடாது.
5) ஈற்றடி பெயர் சொல்லாக இருக்க வேண்டும்.
.....
மரபு கவிதைக்கு அடுத்து
சற்று கடினமானது. ஹைக்கூ ஆகும். சிலர் 3 வரி எழுதினால் ஹைக்கூ என தவறாக நினைத்து விடுகிறார்கள்
கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன்
@
கவிப்புயல் இனியவன்
1) ஹைக்கூ
2) சென்றியு
3) லிமரைக்கூ
4) ஹைபுன்
5) குறள்கூ
6) சீர்க்கூ
7) கஸல்
என்பவை முதலில் வருகின்றன