இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

நிகழ்கால ஹைக்கூ

 நோய் எதிப்பு சக்தி குறைகிறது
விலை விண்ணை தொடுகிறது
மஞ்சள்
.........................

வியக்க வைக்கும் சிகிக்சைகள்
மார்புதட்டி பெருமைபேசும் மருத்துவ ர்
சிரிக்கிறது கொரோனா
..........................

மறந்த வாழ்வியல் முறை
தண்டனை கொடுத்து வருகிறது
கொரோனா
..........................

உயிர் கொல்லி நோய்
சற்று நம்பிக்கை தருகிறது
மிளகு ரசம்

காதல் ஒரு... முக்கோணம்

 உன் நெற்றியில்...
பொட்டு உனக்கு....
திலகம் - எனக்கு...
கலகம்....... !!!

காதல் ஒரு...
முக்கோணம்.....
உடைந்தால்...
குப்பைத் தொட்டி.... !!!

என் வீட்டு அறை...
நினைவு அறையாக...
இருந்து....
நினைவு கல்லறையாக...
மாறுகிறது...... !!!

ஆழ்மனம்

 எங்கே போகிறாய்.... 
என்று கேட்டது... 
ஆழ்மனம்...... !

தெரியாமல்..... 
தத்தளிக்கிறேன்.... 
என்றது சுழல்மனம்..... !

என்னோடு வா.... 
என்றது ஆழ்மனம்...... !

உன்னோடு வரமாட்டேன்..
என்றது சுழல்மனம்..... !

என்னோடு இணைவதே.. 
உன் பிறப்பின் நோக்கம் 
என்றது ஆழ்மனம்.... !

உன்னோடு வந்தால்.. 
என்னை சித்தனாக்கி... 
விடுவாய் என்றது... 
சுழல் மனம்..... !

அதனால் என்ன..? 
என்றது ஆழ்மனம்... !

அதற்கு வயது இருக்கிறது
என்றது... 
சுழல்மனம்.... !

சிரித்து கொண்டே... 
அடங்கியது.... 
ஆழ்மனம்...... !!!

புதன், 20 ஜனவரி, 2021

காதல் கவிதை


என்
மூச்சு காற்றே ...
ஒரு உதவிசெய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
ஒருமுறை தேடிவா ....!!!

முகம்
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல் எனக்கு தொழிலில்லை ....
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன்
அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!
🌹
கவிதையால் காதல் செய்கிறேன்
🌹
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

வெள்ளி, 15 ஜனவரி, 2021

இதயங்கள்

 நீ....

காதலை.... 

மறுத்த அந்த நொடியே.....

இதயம் கல்லறைக்கு... 

சென்றுவிட்டது.....!


மூச்சு மட்டும்.......

பேச்சுக்காக இயங்குகிறது.....

தோற்றுப்போனாலும்.....

தேடிக்கொண்டிருக்கிறேன்.....

உன் அழைப்புக்காய்.....!


எனக்காக ஒருமுறை....

வந்துவிட்டு போ......

இல்லை வந்து என்னை.....

கொண்றுவிட்டு போ....!


*****

வலிக்கும் இதயத்தின் கவிதை 

*****

கவிப்புயல் இனியவன்

புதன், 13 ஜனவரி, 2021

இனிய பொங்கல் வாழ்த்துகள்

 

 இனிய பொங்கல் வாழ்த்துகள்

.......

இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்
இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!

இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....
இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...
இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......
இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து......
இல்லறம் நல்லறமாக செழித்திட.......
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!

இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு......
இல்லத்தாரோடும் உறவுகலோடும்.....
இன்முகத்தோடு பொங்கலை உண்டு.....
இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......
இனிய உறவுகளுக்கு  இனியவனின்......
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!!

இரவு பகலாய் வயலில் புரண்டு......
இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....
இன் முகத்தோடு அறுவடை செய்து.....
இவுலகுக்கே உணவு படைக்கும்.....
இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு.....
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! 

@

கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 12 ஜனவரி, 2021

அகத்திய பெருமானின் சிறப்புப் பெயர்கள்

↕️அகத்திய பெருமானின் சிறப்புப் பெயர்களும் அதற்கான காரணங்களும் ↕️
.....

தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)

மாதவ முனிவர் (அதிக தவம் செய்ததால்)

மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)

குருமுனி (முனிவர்களுக்கெல்லாம் குருவானவர்)

திருமுனி (உயர்வுக்குரியவர்)

முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)

பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)

அமரமுனிவர் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)

பொதியவரை முனிவன் (பொதிகைமலை)

குடமுனி (குடத்தில் பிறந்தவர்)

நன்றி : தொகுப்பாளர்

திங்கள், 11 ஜனவரி, 2021

இனிய அணுக்கவிதை

உன்.... 

சிரிப்பில் கருகாமல்.....

நெருப்பில் கருகியிருக்கலாம்....

காயம் தான் இருந்திருக்கும்....

வலி காலத்தால்  இறந்திருக்கும்....


@

கவிப்புயல் இனியவன்

 அணுக்கவிதை

[1/11, 2:23 PM] KR.Uthayan sir: இதயத்தில் முள்....

கண்ணில் மலர்....

காதல்.... பலாப்பழம்...

அனுபவித்தால்....

இனிக்கும்.... 


நான் தூரத்தில்.......

இருப்பதுதான் உனக்கு....

சந்தோசம் என்றால்.....

தூரவே இருந்து விடுகிறேன்....

உன் அருகிலிருந்த ......

நினைவுகலோடு....!


@

நெஞ்சை கிள்ளும் நினைவோடு

கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

தன்னம்பிக்கை கவிதை

தன்னம்பிக்கை கவிதை


---------------


தனக்கிருக்கும்.....

உறுதியான சக்தி ......

தன்னம்பிக்கை..............!


தன்மானம் காத்திட .....

தலைசாயாத சக்தி ....

தன்னம்பிக்கை.............!


எல்லாமே இழந்தாலும் ....

எஞ்சியிருக்கும் சக்தி ....

தன்னம்பிக்கை...............!


உயிரே போனாலும் .............

உயிர்த்தெழும் சக்தி ...........

தன்னம்பிக்கை...........!


இரக்க பார்வையை ......

இல்லாதொழிக்கும் சக்தி .....

தன்னம்பிக்கை............!


எல்லாம் சாத்தியமே என்று ......

அறிவை நம்பும் சக்தி ........

தன்னம்பிக்கை.............!


^^^

கவிப்புயல் இனியவன்

தன்னம்பிக்கை கவிதை

சனி, 9 ஜனவரி, 2021

என் உயிர் ரசிகனே

 என் அன்புள்ள ரசிகனுக்கு


கவிப்புயல் எழுதும் கவிதை

---------------------------------------

ஒரு

கவிஞன் தன் வலிகளை....

வரிகளாய் எழுதுகிறான் ....

ஒரு

ரசிகன் அதை ஆத்மா ...

உணர்வோடு ரசிக்கிறான் .....

கவிதை அப்போதுதான் ...

உயிர் பெறுகிறது .....!


#


என் உயிரை உருக்கி ....

நான் எழுதும் கவிதைகள்

என்னை ஊனமாக்கி மனதை ...

இருளாக்கி இருந்தாலும் ....

கவிதைகள் உலகவலம் வருகிறது ...

உலகறிய செய்த ரசிகனே ...

உன்னை நான் எழுந்து நின்று ....

தலை வணங்குகிறேன் .....!


#


என்இரவுகளின் வலி......

விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....

பகலின் வலி அவள் எப்போது ....

இரவில் கனவில வருவாள் ....?

ஏங்கிக்கொண்டிருக்கும்.....

இதயத்துக்கு புரியும் .....

ரசிகனே உனக்குத்தான் புரியும் ....

நான் படுகின்ற வலியின் வலி ......!


#


ஒருதலையாக காதலித்தேன் ...

காதலின் இராஜாங்கம் என்னிடம் ....

காதலை சொன்னேன் ....

என் இராஜாங்கமே சிதைந்தது .....

காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....

பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....

காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....

கண்டு கொல்லாதே ரசிகனே .....!


#


என்

காதலுக்கு காதலியின் முகவரி ...

இன்னும் தெரியவில்லை ...

அதனால்தான் இதுவரை .....

என்னவளில் பதில் வரவில்லை ...

வெறுத்தவள் மறுத்தவளாகவே....

வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...

என் கவலையை சொல்லாமல் ....

யாரிடம் சொல்வேன் .....?

என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!


#


வேதனையில்

சாதனை செய்யப்போகிறேன் ....

என்னை விட தாங்கும் இதயம் ...

இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....

வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....

என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....

அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....

என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!


#


என்னை உசிப்பி விட்டு ....

வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....

என்னை காதல் பைத்தியம் ....

வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...

இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....

என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!

ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...

என்னை பைத்தியம் போல் ....

அவர்களுக்கு காட்டுகிறது ....

காதல்கிழியாமலே இருக்கிறது .....!


#


பள்ளி

பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....

பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....

காதலியால் வாழ் நாள் முழுவதும் ....

முதலிடம் அருமையான வேஷம்.....!

பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....

கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...!!!


செவ்வாய், 5 ஜனவரி, 2021

காதல் கஸல் கவிதை (1803)

  உன்னை மறந்து
ஒரு வருடம்
காதல் உறுதியாகி
ஒருவருடம் ....!!!

நீ....
அழகில்லை....
உன்னில் காதல்..
இருப்பதால்...
நீ....
அழகு...... !

வெள்ளத்தில்...
அடித்துச்செல்லும்.
கல்போல்...
உன் உள்ளத்தில்..
இருந்து சென்று...
விட்டேன்.... !

காதல் கஸல் கவிதை
(1803)

"""கவிநாட்டியரசர்""
கவிப்புயல் இனிவன்
  (யாழ்ப்பாணம்)

காதல் கஸல் கவிதை (1802)

 கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!

காதல் இதயத்துக்குள் ..
நான்..... !
என் இதயத்துக்குள் ....
காதல்.... !
நீ...
வேடிக்கையாக  பார்க்கிறாய்.... !

எந்த திசை...
சென்றாலும்...
சொல்லெறிகிறாய்..
மைய திசை செல்கிறேன்.... !!!

காதல் கஸல் கவிதை
(1802)

"""கவிநாட்டியரசர்""
கவிப்புயல் இனிவன்
  (யாழ்ப்பாணம்)

காதல் கஸல் கவிதை (1801)

உன் காதலை ..
பெற்றபோது...
திரியாகவும்...
இப்போ கரியாக
இருக்கிறேன்.... !!!

விளக்காக வந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக வந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

என் இதயத்தில்
காதல் ஒட்டடை நீ...
எவ்வளவு தட்டினாலும்....
போகிறாயில்லை... !!!

+++

காதல் கஸல் கவிதை (1801)

"""கவிநாட்டியரசர்""
கவிப்புயல் இனிவன்
  (யாழ்ப்பாணம்)

திங்கள், 4 ஜனவரி, 2021

அகராதி -ச - வரிகள்

 

 அகராதி தமிழ் சொற்கள் கவிதை 

"ச " வரிகள் 

....... 


சதியை மதியால் வெல்... 

சங்கடங்களை திறனாய்வு செய்...

சகுனம் பார்த்து வீணாகாதே.... 

சாத்தியம் தவறாமல் வாழ்... 

சங்கற்பம் கொள் வெற்றி நிச்சயம்.... !!!


சத்துருவை நீயே உருவாக்காதே... 

சந்தர்ப்பங்களை தவறவிடாதே... 

சந்தேகம் கொண்ட செயல் செய்யாதே... 

சமூக நோக்குடனும் வாழ்.... 

சந்ததி வழி நீடுடுடி வாழ்வாய்.... !!!


சம்பிரதாய சடங்கில் மூழ்காதே.... 

சரணடைந்து மானம் இழக்காதே.... 

சரீரம் கெடும் பொருள் தொடாதே.... 

சவால்களை எதிர்கொள்...

சரித்திரம் படைப்பாய் பாரினில்.... !!!


@

கவிநாட்டியரசர், 

கவிப்புயல் இனியவன் 

(யாழ்ப்பாணம்)

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்

 

  உன்னில்..... 

அதிகமாக அன்பு... 

வைத்தேன்.... 

அவதிப்படுகிறேன்.... !


அதிகமாக.... 

நம்பிக்கை வைத்தேன்.... 

துடிக்கிறேன்..... !


என் தவறு... 

என்னில்

அதிகமான அன்பையும்... 

நம்பிக்கையும்... 

வைக்க தவறிவிட்டேன்....!


காதல்... 

காதலிக்க மட்டும்... 

அல்ல.... 

வாழ்க்கையையும்.

கற்றுத்தரும்..... !!!

.........


உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01)

..... 

காதல் கவிதைகள் 

..... 

கவிப்புயல் இனியவன் 

யாழ்ப்பாணம்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

நீ ஒரு முறை

 நீ ...

ஒருமுறை....

கண் சிமிட்டினால்....

ஓராயிரம் கவிதை....

எழுதுகிறேன்....!


ஒரு நொடி ......

பேசாது இருந்தால்

ஆயிரம் முறை இறந்து

பிறக்கிறேன் ....!


உயிரே ......

மௌனத்தால்.....

கொல்லாதே ...

உன் நினைவால்....

துடிக்கிறேன்.........!


&

கவிநாட்டியரசர், கவிப்புயல்

இதயம் கவரும் கவிதைகள்