இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஜூன், 2013

என்கவிதையில் உள்ள
உயிர் எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
உயிர் விட கேட்கும் 
அன்பே ...!!!

என்கவிதையில் உள்ள
மெய் எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
மெய் மறந்துவிடும் 
அன்பே ...!!!

என் உணர்வுகள்
ஒவ்வொண்றும்
வார்த்தகளால்
எழுதிகின்றேன்
உனக்கு வார்த்தை 
எனக்கு வாழ்க்கை ...!!!
அன்பே 
நான் எழுதும்
கடிதம் -உனக்கு 
கவிதை!

அன்பே நீ 
எனக்குக் கொடுக்கும் 
கவிதை
காதல்!!

கவிதையை ..
நீ ரசிக்க ரசிக்க 
என் கவிதை 
உயிர் பெறுகிறது ..!!!

கண் சிமிட்டாமல் 
உன்னைப் பார்க்க 
ஆசைப் பட்டேன்... 
பார்த்தேன் ...
ஆனால், 
இப்போதெல்லாம் 
கண் சிமிட்டும் நேரமாவது 
உன்னைப் பார்க்க 
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன்னை பார்க்க ....
முடியவில்லை ..!!!

சனி, 29 ஜூன், 2013

வெல்லும் வரை தோல்விக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை கண்ணீருக்கு விடுதலை ...
உதிரும் வரை பூக்களில் அழகிருக்கும் ....
மறையும் வரை நிலவு அழகிருக்கும் ... 
மரணம் வரை தான் காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!!

நட்பைப் பற்றிப் புரிந்து கொள்ள
நல்ல மனது வேண்டும்
என்னைப் போல...

நல்ல மனதைப் புரிந்து கொள்ள
நல்ல நட்பு வேண்டும்
உன்னைப் போல...

இருகை தட்டினால் ...
தான் ஓசை...!!
 நம்மைப்போல்...
இருவர் சேர்ந்தால் தான் ...
உயிர் நட்பு ....!!!
என்...
மனம் எனும் பந்தலில்....
உன் நினைவுகளை...
மலர்க் கொடியாய்....
மலரவிட்டேன்...
இப்போது
பூத்துக்கிடக்கின்றன
என்னுள்
அன்பு மலர்கள்
நீ பறித்துச் சூட...

தயவு செய்து ..
பூவை உன் பூக்கையால் 
பறித்துவிடு ...
கோடரியால் ...
பறித்துவிடாதே ..

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
எங்கே எங்கே எங்கே
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!
உன் மௌனம் தான் 
என்னை கல்லறைவரை 
கொண்டு சென்றது ...
அது தெரியாமல் என் ..
கல்லறைக்கு ..
ஆயிரம் மலர்கள்
அலங்க்காரிக்கிறாய் ...
உன் ஒரு சொட்டு
கண்ணீருக்காக
காத்திருக்கும்
என் கல்லறை ...
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா 
உன் ஓர் உயிர் போதும்...!!!
நட்பே நீ மட்டும் 
****************
உலகுக்கு ஒளி தரும் 
சூரியனே..தன கடமையை 
முடித்து விட்டு 
உறங்க சென்று விட்டது...! 
என் 
உயிருக்கு ஒளி தரும் 
நட்பே நீ மட்டும் 
ஏன் விழித்திருக்கிறாய்? 
போய் கண் உறங்கு...! 
விடியல் நமக்காகத்தான் ...!!!
அன்பு என்பது
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் தான் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
முத்துக்கள் கிடைக்கும்
உன்னைப் போல...
உன்னால் பிறருக்கு.... 
தீபமாக..... 
இருக்கமுடியுமென்றால் .....
நீ, தீக்குச்சியாய்.....
இருப்பதில்....
ஆனந்தப்படு!!!
அனுபவத்தால் வந்த கவி ...
********************
சிலரை, நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்...
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து கொள்ள
மறுக்கிறோம்...

வெள்ளி, 28 ஜூன், 2013

தென்றல் காற்று, 
அர்த்தமுள்ள கவிதை, 
அறியாத பொருள், 
கலையாத கனவு, 
இன்னும் எவ்வளவோ
அத்தனையும் கண்டேன்
உன் காதலில் ...!!!

விழுந்தவுடன் மறைந்து விட
நான் மழைத் துளி அல்ல...
இறுதிவரை உன்னுடன்
இருக்கும் கண்ணீர் துளி...!!!
உன்னில் இருக்கும்
மனிதன் எங்கே எங்கே ..??
ஏன் அதை வெளியில் தேடுகிறாய் ...???
மனிதம் என்ற பொருள் தெரியாது ..
மாறி மாறி ஆடையை மாற்றுகிறாய் ...
நீ மனிதனை காணவில்லை என்கிறாய் ...!!!
மனித நீ மனிதம் ஆகும் வரை..
மனிதனை தேடிக்கொண்டே இருப்பாய் ...!!!

இந்த வலி போதும் அன்பே ...!!!


யாரோ ஒருவன் சொன்ன ...
வார்த்தையை கேட்டு ...
சத்தியம் கேட்கிறாய் ...
உன்னை தவிர என் இதயத்தில் ..
யாரும் இல்லை என்கிறேன் ..
அப்பவும் மௌனமாக ..
இருக்கிறாய் ....

(இந்த வலி போதும் அன்பே ...!!!)

என்னை கண்டவுடன் ..
முகம் திருப்பிகிறாய் ..
நான் தந்த பொருட்களை திருப்பி ..
தருகிறாய் ....!!!
என்னை உனக்கு தெரியாது ..
என்று ஊர்முழுவதும் ..
சொல்லுகிறாய் ..!!!

(இந்த வலி போதும் அன்பே ...!!!)

வியாழன், 27 ஜூன், 2013

நீ அருகில் இருக்கும் போது 
காதல் என்றால் என்ன என்றே 
புரிவதில்லை...! 
சும்மா கதைப்பேன் ... 
அலட்டுவேன் ... 
உன்னை பிரிந்திருக்கும் போது 
காதலை தவிர வேறு ஏதும் 
தெரிவதில்லை...!


கதையோடு கலந்திருந்தால் 
பேச்சோடு விட்டிருப்பேன் ....!!! 

கண்ணோடு கலந்திருந்தால் 
கண்ணீரோடு விட்டிருப்பேன்...! 

இதயத்தோடு கலந்திருப்பதால் ... 
என் உயிரோடு நீ கலந்ததால்.... 
என் மூச்சோடு கலந்திருப்பதால் ... 
உன்னை பிரிவது எப்படி?


நான் எழுதும் கவிதைகளில்... 
யோசிக்க வைத்த வரிகள் நீ! 
நேசித்த இதயத்தில்... 
சுவாசிக்க வைத்த இதயம் நீ! 
காதல் என்பது கவிதையால் . 
வடித்துவிட முடியாத கடல் .. 
இருந்தும் கவிதையை தவிர 
வேறு கருவியும் இல்லை .. 
அதை விளக்க ...!!!

புதன், 26 ஜூன், 2013

உன் ...
உள்ளச் சிறையில் நான்...
நான் என் விடுதலையை...
விரும்பவில்லை.....
நீ என் விடுதலையை .....
விரும்பினால்,....
என் உடல் என் உயிரின் .....
விடுதலையை விரும்பும்.....
ஒரே ஒரு கவலை ...
என் உள்ளத்தில் உன்னை ..
சிறைபிடித்து வைத்திருக்கிறேன் ...
காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...

நான் கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
உன்னைக்கொண்டுதான் ..
எழுதுகிறாய் ...!!!

கஸல் 177

சொல்லமுடியாது ..
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!

உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...

நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...

கஸல்..176
எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..

நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...

பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு இருக்கமுடியுமா ...??

கஸல் 175

செவ்வாய், 25 ஜூன், 2013

உறக்கத்தில் 
உன் சத்தம் கேட்டு 
எழுந்து விட்டேன்... 
ஆனால், 
கனவில்லை
நினைவில்லை 
நீயும் இல்லை... 

என் இதயத்துக்குள் ...
ஓடி விளையாடியபோது ..
தடக்கி விழுந்த சத்தம் ...
அன்பே வலிக்கிறதா ...???

நீ இல்லாத நேரங்களில்...

உன் கோபம் 
உன்னை புரிந்தவர்களையும் 
யோசிக்க வைக்கும்... 
ஆனால், 
உன் அன்பு, 
உன்னை புரியாதவர்களையும் 
நேசிக்க வைக்கும்...

பிறப்பை 
நான் தாயிடம் 
உணர்ந்தேன்... 
இறப்பை 
நான் இறக்காமல் 
உணர்ந்தேன்... 
நீ இல்லாத நேரங்களில்...
நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...
நீ அருகினில் இல்லாத போதும்
உன்னையே
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...

அழும் போது கண்ணீர்.. 
துடைப்பதில்லை ...
காதல்...
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...

எனக்கு பின் நீ இறக்ககூடாது ...
உனக்கு பின் நான் இறக்க கூடாது ...

அன்னையை பார்க்கும் போது, 
உன்னை மறந்து போகிறேன்...
ஆனால்,
உன்னை பார்க்கும் போது
அன்னையை நினைவுபடுத்துகிறாய்...
அன்னையும் நீயும் என் கண்ணில் வாழும் ...
தெய்வங்கள் ....
அன்னையையும் காதலியையும் ...
மதித்த காதல் தோற்றதே இல்லை ...!!!
நீ இல்லாத நேரங்களில்,
என் இதயத்தோடு தான்
பேசிக்கொள்கிறேன்...
எனக்காக,
துடிப்பது அது தானே...
உன்னைப் போல...
காதல் என்பது ..
இரு உடல் ஒரு இதயம் ..
என்பதுதானே உண்மை ...!!!
என் ஊர் மாரியம்மனுக்கு 
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
 அதற்கு சமன் .....

நங்கூரம் உடைந்த 
கப்பல் தடுமாருவதுபோல் 
நானும் தடுமாறுகிறேன் ...

காதல் எல்லோரிடமும் 
வெற்றி பெறுவதும்மில்லை 
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!

கஸல் 172

நான் உன்னை 
கண்டவுடன் தான் ..
என்னைக்கண்டேன் ...
அதுதான் காதலின் ..
அடிப்படைவிதி ...!!!

காதல் மட்டும் தான் 
தனித்துவமானது 

காதலித்து ...
தோற்றவர்களைவிட ..
காதலை சொல்லாமல் ..
தோற்றவர்களே அதிகம் ...!!!
நானும் இதற்குள் அடங்குகிறேன் ...!!!

திங்கள், 24 ஜூன், 2013

அன்பே! 
பிரிவென்ற வலைக்குள் 
நாம் சிக்கிக்கொண்ட போதும் 
நினைக்க நினைக்க இனிக்கும் 
உன் நினைவுகளில் தான் 
நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன்...! 

கடல் ஆவியாகி 
மலை இடிந்து விழுந்து 
பாலைவனம் பற்றி 
எரிந்து போனாலும் 
அழியாது காதல் ஒன்றுதான் ..!! 
அதிலும் நிலையானது நம் .. 
நினைவுகள் தான் ...!!!


மலருக்கும் ஆசை 
மண்ணில் விழாமல் இருக்க...! 

நிலவுக்கும் ஆசை ... 
அமாவாசையில் மறையாமல் 
இருக்க .. 

எனக்கும் ஆசை 
நீ என்னை மறவாமல் இருக்க...!

_________
காற்றும் இசை ஆகும்
நீ அதை சுவாசித்தால்...
வார்த்தைகளும் கவிதை ஆகும்
நீ அதை வாசித்தால்...
இந்த உலகமே உனதாகும்
நீ உன்னை நேசித்தால்...
முடிந்தால் என்னை
காதலித்துப்பார் ....
முடியாது என்றால் ...
மீண்டும் முயற்சித்துப்பார் ....!!!

என்பார்வை தந்து .. 
இதயத்தில் பூவாய் மலர்ந்து 
உன் கொஞ்சும் தமிழ் 
பேச்சினில் எனை மயக்கி .. 
என்னை பித்தனாக்கியவளே ... 
உனக்காக கவிதை 
படைக்கிறேன். 

உன் ஓரப்பார்வையால் 
உள்ளம் கிளர்ந்து 
உடல் சிலிர்த்து.... 
உன் வசமாகிறேன்... 
நித்தமும் தேவி தரிசனம் .. 
பக்கனுக்கு கிடைக்க ... 
காதல் தேவதையே ... 
நில்லாத வரம் தா ...!!!

கண்ணுக்கு இமை அழகு 
விண்ணுக்கு இறை அழகு 
பல்லுக்கு வெண்மை அழகு 
சொல்லுக்கு உண்மை அழகு 
பொருளுக்கு மதிப்பு அழகு 
புலிக்கு வீரம் அழகு 
உனக்கு நானே அழகு 
எனக்கு நீயே அழகு

நான் 
சிறு சண்டைக்கு உன்னை.. 
வேண்டுமென்றே இழுத்து.... 
பேசுகின்ற பொழுதெல்லாம்.... 
கொண்டுவிடுவேன் என்று... 
அடிக்கடி சொல்கின்றாயே...!!! 

காதலியால் கொல்லப்படுவது .. 
எத்துணை சந்தோசம் எனக்கு .. 

அன்பே.... 
நீ மட்டும் என்னை 
கொல்வாயானால் நான் 
நான் எத்தனைமுறையும் 
இறக்க தயார் ...!!! 

காதலில் இப்படி பேசுவது .. 
ஒன்றும் புதிரில்லை ...!!!
திருக்குறள் சென்ரியூ -50
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும் 

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...50
****************************** 

சிறந்த இல்தலைவன்
போற்றப்படுவான் 
+தேவர்ற்கும் மேல் + 

திருக்குறள் சென்ரியூ -49
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
அறன்எனப் பட்டதே இல் வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...49
****************************** 

இருவகை அறம்
சிறப்பு இல்லறம் 
+பிறர் பழி கேளாமை +

திருக்குறள் சென்ரியூ -48
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...48
****************************** 

அறவாழ்க்கைக்கு பிறர் அழைப்பு 
தன் வாழ்க்கை அறவாழ்க்கை 
+தேவர்களில் மேலானவன் +

திருக்குறள் சென்ரியூ -47
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...47
****************************** 

முறையான இல்லற தலைவன் 
முறையற்று வாழ்பவனுக்கு 
+சீர் தலைவன் +


சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
+நிலத்துக்கு முத்தம் +

******************
காதுகளை கௌவும்
காற்றின் ஆவிகள் 
+இசை+

*********************
சிந்தனை கதவை
திறக்கும் சாவி
+அறிவு +

********************
இருட்டு குடிசை 
விரட்டும்பேய் 
+ஒளி +

*********************

உயிரின் கதவை
இறுக்கும் பூட்டு.
+சாவு +
***************
வீணாய்ப்போகிறது மழை.
குறுக்கும் நெடுக்குமாய்
+ வெள்ளம் +
*****************--------

இந்த சுகம் போதும் அன்பே 


அதிகாலை வேளை....
அகிலமே அமைதியாய் ...
இரு விழியை அகன்றேன் ...
வான் குருவிகள் வானிசை ..
சில்லென்ற காற்று உடல் பட ...
எனைமறந்து உன்னை நினைத்தேன் ...

(இந்த சுகம் போதும் அன்பே ...)

தண்ணிரை மோர்ந்தேன் ....
பன்னீரை போல் உன் மென்மை..
ஒருதுளி உடலில் பட ...
இணைந்துவிட்டேன் உன் ...
நினைவில் ......

(இந்த சுகம் போதும் அன்பே ...)

ஒற்றையடி பாதையிலே 
ஓற்றைசடை முடி தேடி ...
பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
பற்றை செடிகள் ஆடியது ...
காற்று அசைக்க வில்லை ..
என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!

(இந்த சுகம் போதும் அன்பே ...)

கண் மூடினால் கனவாய் ..
கண் திறந்தால் நினையாய் ...
கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
வந்தது உன் குறுஞ்செய்தி ...
நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
கனவில் வர நான் தயார் என்று ...!!!

(இந்த சுகம் போதும் அன்பே ...)

துன்பத்தில் சுகம் ..
தருகிறது ...!!!



உன் கண் புருவத்தின் ..
ஒவ்வொரு முடியும் ..
எனக்கு ஒவ்வொரு ..
கவிதைகள் ....

உன் கண் இமைகள் ..
ஒவ்வொன்றும்
கறுப்பு வானவில் ...

கண்ணீரால் -நீ
தரும் துன்பம் ..
கூட இன்பத்தை ..
தராவிட்டாலும் ..
துன்பத்தில் சுகம் ..
தருகிறது ...!!!

கஸல் 170

அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!


இறைவா என் காதலியை ..
மன்னித்துவிடு ...
அவள் எனக்கு ;;;
வலிதரவேண்டும்
என்று தருவதில்லை ...

சிறுவயதில் கண்ட கனவில்
முகம் தெரியாமல் ..
முழித்ததுபோல் ...
உன் நினைவு..
 இடைஇடையே ...
வந்து போகிறது ....

போக்கு வரத்து நெரிசல்
எனக்கு பிடிக்கும் ..
அதில் தான் உன்னை ..
அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!

கஸல் ;169

கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...


கண்ணீர் என்னும் நீரால் ...
காதல் என்னும் மரம் ..
வளர்கிறது ....
உதிரும் இலைகள் கூட ..
உன் பெயரையே உச்சரிக்கிறது .....

உன்னை நினைக்கும் போது 
வரும் கண்ணீரை விட 
உன்னை மறக்கும் போது வரும் 
கண்ணீர் குறைவுதான் ...

உன் கண்கள் என்னை 
கடக்கும் போது -நான் 
கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...

கஸல் ;168

எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)

சோகம் தணிக்கும் தோழன் தோள்கள் ...
கண்ணீர் துடைக்கும் தோழியின் விரல்கள் ...

நானாக கோபம் தணிக்கும் தருணம் ...
தனியாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...

வியப்பை ஏற்படுத்தும் வெற்றிகள் ....
சற்றும் எதிர் பாராத இழப்புக்கள் ....
விட்டுக்கொடுத்த தோல்விகள் ....
விடை தெரிந்தும் எழுதாத வினாக்கள் ...

(தொடரும் ....)

ஞாயிறு, 23 ஜூன், 2013

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்
*************************************
துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்
*************************************
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும் விரட்டுகிறது
*************************************
அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்
*************************************
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
***********************************
பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!
***********************************
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது
***********************************
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது
***********************************
நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே
************************************
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை
************************************
பறக்க விரும்புபவனால் படர முடியாது
*************************************
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்
************************************

படித்ததில் பிடித்தது
 துடிக்கும் நினைவுகள்

ஒரு தியானம் போல்
உள்ளிழுத்து  நிறுத்தி
காற்றை மூச்சாக்கி
கண்மூடி களிக்கையில்
மெல்ல.. மெல்ல..
எட்டிப் பார்க்கிறது
உன் நினைவுகள்
உனக்காக எழுதிய வரி
ஒன்று என்னை
விட்டு வர மறுக்கிறது
 காதல் நீ

அங்குமிங்கும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
காற்று வெளியெங்கும்
கவிதை.
ஒரு தென்றலாய்.
உன்னைப்போல் ...!!!
சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
+நிலத்துக்கு முத்தம் +

இனியவன் ஹைக்கூ ...


******************
காதுகளை கௌவும்
காற்றின் ஆவிகள்
+இசை+

*********************
சிந்தனை கதவை
திறக்கும் சாவி
+அறிவு +

********************
இருட்டு குடிசை
விரட்டும்பேய்
+ஒளி +

*********************

உயிரின் கதவை
இறுக்கும் பூட்டு.
+சாவு +

காதலின் பிறப்பிடத்துக்கு .. 
சென்று கொண்டிருக்கிறேன் .. 
நீயோ .. 
திரும்பி வரப்போகிறேன் .. 
என்கிறாய் ...!!! 

நீ வராவிட்டால் 
எனக்கென்ன -உன் 
நினைவோடு 
போவேன் 
வாழுவேன் 
காதலின் உச்சத்தை 
அடைவேன் ...!!! 

காதல் உச்சத்தை தேடி 
அலைந்த மடையர்களில் 
நானும் ஒருவன் .....!!! 

கஸல் 165