இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஏப்ரல், 2014

காதல் முத்தாய் வந்து விட்டது ...!!!

நீ 
சிரிக்கும் சிரிப்பு ...
முத்துப்போல் இருக்கிறதோ ...
இல்லையோ - உன் சிரிப்பு ...
என் இதயத்தில் பதிந்து ...
காதல் 
முத்தாய் வந்து விட்டது ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை

நீ அதற்கு அருகில் வரும் ..?

பூ
மலரும் போது அழகில்லை
நீ அதற்கு அருகில் வரும்
போதுதான் அழகு பெறுகிறது ...!!!

மலையில் இருந்து
வரும் அருவியால் அழகில்லை
நீ அதற்கு அருகில் செல்வதால்
அழகு பெறுகிறது ....!!!
*
*
நீயே என் காதல் கவிதை

நீயே என் காதல் கவிதை

உன்
கொழுசு சத்தத்தில் ...
கொஞ்சும் கவிதைகள்
எழுதுகிறேன் ...!!!

நீ
தாவணியை
சரிசெய்யும் போது
தாகமான கவிதை
எழுதுகிறேன் ...!!!

நீ
கண் சிமிட்டும் போது
மெய் சிலுக்கும் கவிதை
எழுதுகிறேன் ...!!!
*
*
நீயே என் காதல் கவிதைஇன்று கொண்டாடும் நாளில்லை ...இன்று கொண்டாடும் நாளில்லை ...
தொழிலாளர்களின் திண்டாட்டத்தை ..
உலகறிய வைத்த நாள் ....!!!

தொழிலாளியை இயந்திரம் போல்.... 
பலமணிநேரம் வேலை வாங்கிய ...
முதலாளிகக்குக்கு எதிராக 
போராடிய நாள் ....!!!

தொழிலாளி ஒரு அடிமையில்லை 
அது ஒரு உணர்வுள்ள பந்த பாசம் 
உள்ள உயிர் ஜீவன் என்பதை 
சோசலிச வாதிகளால் உலக்குக்கு 
உணர்த்திய உணர்வு பூர்வ நாள் ...!!!

இன்று தொழிலாளர்களுக்கு 
முதலாளி வர்க்கம் ஓரளவேனும் 
சலுகையை கொடுக்க வேண்டும் 
என்பதை சிந்திக்க வைத்த நாள் 
சலுகைகள் கிடைக்கவும் வைத்த நாள் ..!!!

எங்கையா தொழிலாளருக்கு சலுகை 
கிடைத்தது என்று கேட்கும் உறவுகளே 
மேதின புரட்சிக்கு முன் தொழிலாளர் 
சுரண்டலை பாருங்கள் நாம் பெற்ற
சலுகைகள் புரியும் .....!!!

சப்பாத்து இல்லையே என்று 
கவலை படாதே - கால் இருக்கு 
என்று சந்தோசப்படு என்பது போல் 
கிடைத்த சலுகையை மதிப்போம் 
மேலும் கிடைக்க போராடுவோம் ....!!!

இன்றைய தினத்தில் அரசியல் 
கூட்டங்களும் பொறிபறக்கும் 
பேச்சுக்களும் இல்லை தொழிலாளர் 
தேவை - பெற்றதை இழக்காமலும் 
பெற வேண்டியதை பெற்றுக்கொடுப்பதும் 
சமூக பற்றுள்ள அரசியல் வாதிகளின் 
தலையாய கடமை ....!!!

ஆதலால் அரசியல் வாதிகள் ...
முதலாளி வர்க்கங்கள் ..
தொழிலாளர்கள் எவருமே ..
கொண்டாடும் நாளில்லை இது ..
தொழிலாளர்களின் திண்டாட்டத்தை 
தீர்த்து வைக்க போராடும் நாள் ....!!!

உயிர் நட்பு - உயிர் காதல் 02

உடன் பிறப்பு போல்
உடனிருக்கும் -நட்பு
உள்ளதை உள்ளபடி
கூறிடும் நட்பு ...!!!

உள்ளத்தில்
உயிரோட்டம்
தரும் காதல் ...!!!
உள்ளத்தை மேன்மை
ஆக்கிடும் காதல் ...!!!

உயிர் நட்பு - உயிர் காதல்

உயிர் நண்பன்
தோளில் தட்டி

தருவான்
உயிர்
காதலி
இதயத்தில் இருந்து
தட்டி தருவாள் ....!!!


****************
 என் இரண்டு கண்
ஒன்று நட்பு
மற்றையது காதலி
துன்பத்தில் துடிக்கும்
போது ஆறுதல் சொல்வான்
நண்பன் -துன்பமே வராமல்
ஆறுதல் சொல்வாள் காதலி

என்னை கொல்வதால் ...!!!

நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் 

என்னை
கொல்வதால் ...!!!

என் இதயம் கதறுகிறது ...!!!

அன்பே நீ
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்

விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

உன் தலைகுனிவு சொல்கிறது ....!!!

என்னை
கண்டு தலை
குனிந்து செல்கிறாய்
தெரியாததுபோல்
செல்கிறாய் - எனக்கு
கவலையில்லை ...!!!

என்னை
நீ மதிக்கவில்லை
என் காதலை
மதித்துத்தானே
தலை குனிந்தாய்...!!!

நான் உன்னை
காதலித்தது உண்மை
நீ என்னை காதலித்தது
உண்மை என்பதை
உன் தலைகுனிவு
சொல்கிறது ....!!!

நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!

என் கண்ணில் வடியும்
கண்ணீர் உனக்கு பன்னீர்
என்றால் அழுவதில் சுகம்
தான் ....!!!

தயவு செய்து நீ
அழுது விடாதே -நான்
உனக்கு தெரியாமல்
போய் விடுவேன் ....!!!

சில வேளை நீ
அழனும் என்று
ஆசைப்படால் - என்னிடம்
சொல் உனக்காக நான்
அழுகிறேன் .....!!!

காதலின் உன்னதத்தை காட்டும் ...!!

காத்திருந்து காதலிப்பது
காதலின் தியாகத்தை
காட்டும் ....!!!

காதலித்த பின்
காத்திருப்பது காதலின்
உன்னதத்தை காட்டும் ...!!!

நாம்
இரண்டும் செய்தோம்
காதல் கற்கண்டாய்
இனிக்கிறது ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

நினைவுகள் இருக்கும் வரை..!

என்னை மறந்து விடுவியா ..?
என்று அடிக்கடி கேட்கிறாய்
மறப்பதற்க்காகவா
காதலித்தோம்......?

மறக்கும் அளவுக்கா -உன்
நினைவுகளை கனவுகளை
தந்திருகிறாய்...?

யாராலும் யாரையும் மறக்க
முடியாது
நினைவுகள் இருக்கும் வரை..!


-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

மூச்சாக மாறிவிட்டது ....!!!

உன் காதல் மூச்சு
காற்று என்னில் பட்டபோது
உணர்ந்தேன் மூச்சை ...!!!

இதுவரையும் சுடும்
மூச்சாக இருந்த காற்று
இப்போ உன்னை சுடும்
மூச்சாக மாறிவிட்டது ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

சின்ன காதல் கவிதை

அவள் என் உயிரை
சுமக்கப்போகிறாள்
அதற்காகவே -நான்
அவளை உயிராய்
சுமக்கிறேன் ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

இந்த ஜென்மம் போதாது

நீ மௌனமாக பேசிய
வார்த்தையே இன்னும் நான்
மொழிபெயர்க்க வில்லை ..
நீ என்னோடு காதல்
மொழி பேசினால் -இந்த
ஜென்மம் போதாது
மொழிபெயர்க்க ...!!!
-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

விழுந்து விட்டேன் நான் ....!!!

வெட்கம் வந்து
தலை குனிந்து
அருகில்
இருந்த பூக்கண்டை
கிள்ளி எறியும்
போது -என்
இதயம் துள்ளுகிறது
அந்த பூகண்டாக
மாறுவதற்கு ....!!!

நீ வெட்கத்தால் கீறிய
வட்டத்துக்குள் விழுந்து
விட்டேன் நான் ....!!!
-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

தயங்காதே கண்ணே

உதட்டால் நீ கூற ....
தயங்கும் உன் காதலை ....
கண்ணால் -என் முன்னால்...
கூறிவிட்டு நீ படும் ...
தடுமாற்றம் தான் என்னை...
கவர்ந்ததடி ....!!!

தயங்காதே கண்ணே
உன் கண் கலங்குமாறு
என்றும் செயல்படேன்....!!!

------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

திங்கள், 28 ஏப்ரல், 2014

உயிரே வார்த்தையால் கொல்லாதே ....!!! 03

உன்
தொலைபேசி அழைக்கும்
போது இதயம் படபடக்கிறது ...!!!

நீ
என்ன வார்த்தை
சொல்வாயோ கேட்பாயோ ..?
முன்பெல்லாம் உன் தொலைபேசி
அழைத்தால் ஓடிப்போய் எடுப்பேன்
இப்போ பயமாக இருக்கிறது ...!!!

உலகில் காதல் தோல்விக்கு
வார்த்தைதான் காரணம்
காதலர்களே காதலில்
வார்த்தையால் கொல்லாதீர்கள்...!!!
*
*
உயிரே வார்த்தையால்
கொல்லாதே ....!!!

உயிரே வார்த்தையால் கொல்லாதே ....!!!

நீ
என்னை நம்பாமல்
சந்தேகப்பட்டு ஒரு
வார்த்தை சொன்னாய் ...!!!

உனக்கு
அது ஒரு வார்த்தை
எனக்கு வாழ்நாள் வலி ..!!!

இனி நீ
ஆயிரம் வார்த்தைகள்
அன்பாக‌ பேசினாலும்
அந்த‌ ஒரு வார்த்தை
ஆயுள் கால‌ வார்தை ...!!!
*
*
உயிரே வார்த்தையால்
கொல்லாதே ....!!!

உயிரே வார்த்தையால் கொல்லாதே ....!!!

நீ
என்னை மறந்து விடு
என்ற வார்த்தையை
மறக்கவே இந்த
ஜென்மம் போதாது ...!!!

உன் நினைவுகளை
எப்படி மறப்பது
நீ என்னை மறந்து காட்டு ...!!!
நான் உன்னிடம்
பயிற்சி எடுத்து
மறக்க முயற்சிக்கிறேன் ...!!!
*
*
உயிரே வார்த்தையால்
கொல்லாதே ....!!!

நினைவுகள் கலையாமல் ...!!!

இமைகளின் ஒவ்வொரு முடியும் உன் நினைவுகள் .!!
சிமிட்டினால் உன் நினைவுகள் பறந்து விடும் ..!!!
விழித்திருகிறேன் நினைவுகள் கலையாமல் ...!!!
-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

என் இதயம் வலிக்கிறது .!

கை கோர்த்து திரிந்தபோது கால் வலித்தது ..!!!
உன்னை காத்து காத்து நின்றபோது கண் வலித்தது..!!!
நீ இதய கதவை மூடியதால் என் இதயம் வலிக்கிறது .!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

காதல் செய்யாமல்..?

காதல் செய்ய வழிகேட்டேன்
உனக்கு விளங்கவில்லை போலும்
காதல் செய்யாமல் வலி தருகிறாய் ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

நீ சிரித்தபடி இருக்கிறாய்

நீ வார்த்தையால்
காதலை மறுக்கிறாய்
உன் இதயம் என்னை
பார்த்து சிரிக்கிறது ....!!!

காதல் என்றால்
கெஞ்சல் இருக்கும்
கொஞ்சல் இருக்கும்
நீ அதை கொலையாக‌
பார்கிறாய் ...!!!

எழுதிய‌ என் கவிதைகள்
கண்ணிர் விடுகின்றன‌
நீ
சிரித்தபடி இருக்கிறாய்

கஸல் 690

வேதனையில் சாதனை செய்கிறேன் ....!!!

என் கவிதையை
தூக்கி எறிகிறாய் என்றால்
உனக்கு காதல் இல்லை
முதலில் காதல் செய் ...!!!

பருவ வயதில்
எல்லோருக்கும் காதல்
ஒரு வரம் -எனக்கு
அது வதம் ....!!!

காதலில் எல்லோரும்
சாதனை  செய்தனர்
உன்னை காதலித்து -நான்
வேதனையில் சாதனை
செய்கிறேன் ....!!!

கஸல் 689

என்னை விட்டு விடு

நம் காதல்
பட்டாம் பூச்சியின்
அழகும்
ஈசலின் வாழ்க்கையும்
போல் ஆகிவிட்டது ...!!!

காதல் பலவர்ண
கனவுடன் வாழும் கலை
எனக்கு கறுப்பும்
வெள்ளையுமாக வருகிறது

நீ ஒன்றில் காதலை
விட்டு விடு -இல்லை
என்னை விட்டு விடு
இரண்டையும் வதைக்காதே ..!!!

கஸல் 687

ஓராயிரம் முறை துடிக்கிறேன்

காயத்தை காயத்தால்
மறைக்கும் காதல் -நம்
காதல் தான் ...!!!

உன்னை
ஒருமுறை சந்தித்தேன்
ஓராயிரம்
முறை துடிக்கிறேன்

காலத்தால் அழியாத
காதல் - உன் கவலை
கொண்ட இதயத்தால்
அழிந்து கொண்டிருக்கிறது ...!!!

கஸல் 687

நீ போய் விடு ....!!!

காதல்
மென்மையும் உறுதியையும்
கொண்டிருக்க வேண்டும் ..
பட்ட மரத்தால் பயன் என்ன ..?

நீ தூரே வரும்போது
உன் இதயம் ஓடி வந்து
என்னை தடுக்கிறது
அவள் வருகிறாள்
நீ போய் விடு ....!!!

உன் சிரிப்பால் வந்த
காதல் இப்போ
அழுது கொண்டே போய்
விட்டது ....!!!

கஸல் 686

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

இந்த காதல் தான் ....!!!

உன்னை என் போல்
மாற்றுவதும்
என்னை உன் போல்
மாற்றுவதும்
காதல் தான் ....!!!
உன்னை என்னில்
இருந்து மாற்றியதும்
என்னில் உன்னை
மாற்றியதும் -இந்த
காதல் தான் ....!!!

ஒன்றும் இல்லாததுபோல் ...!!!

நீ
அருகில் இருக்கும்
போது நான்
இழந்தவற்றை
பெறுவதுபோல்
ஒரு உணர்வு ....!!!

நீ அருகில்
இல்லாதபோது
எல்லாம் இருந்தும்
ஒன்றும்
இல்லாததுபோல் ...!!!

மௌனமாய் இருக்கிறாய் ....!!!

கண்ணில் தூசி
விழுந்து கண்ணீர்
வந்தபோது துடி துடித்த -நீ
இப்போ கண்ணீரே
என் வாழ்க்கை என்று
ஆக்கி விட்டு மௌனமாய்
இருக்கிறாய் ....!!!

மௌனமாய் இருக்கிறாய் ....!!!

என்
இதயத்தில் இருப்பவளே
ஒரு நிமிடம் மூச்சு விடாமல்
இரு என்றால்
இருந்து விடுவேன்....!!!
ஒரு நொடி உன்னை
நினைக்காமல் இரு
என்று நீ கேட்டால் ....
மரணத்தின் வலிக்கு
ஒப்பானது அந்த நொடி ...!!!
***********************
கண்ணில் தூசி
விழுந்து கண்ணீர்
வந்தபோது துடி துடித்த -நீ
இப்போ கண்ணீரே
என் வாழ்க்கை என்று
ஆக்கி விட்டு மௌனமாய்
இருக்கிறாய் ....!!!

உனக்கு எங்கு தெரியபோகிறது ...!!!

உன்னோடு பேசி பேசி
என் எத்தனை இரவுகளை
தொலைத்து விட்டேன் ...!!!

நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தையும்தான்
என் இதய வானில்
நட்சத்திரங்கள் ...!!!

நான்
சென்று வருகிறேன்
சொல்லும் போது என்
இதயம் படும்
வேதனையை உனக்கு
எங்கு தெரியபோகிறது ...!!!

சனி, 26 ஏப்ரல், 2014

அணுக்கவிதை

நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

அணுக்கவிதை

நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

அணுக்கவிதை

நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

சுமந்து வாழ்கிறான்

நாம்
நடந்து திரிந்த‌ கால்
சுவடுகளை கேட்டுப்பார்
உன் காதலுக்காக‌ பட்ட‌
வேதனை புரியும்...
பாதையிலே சுவட்டையும்
இதயத்தில் வடுவையும்
சுமந்து  வாழ்கிறான் 
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காதல் மூச்சுடன் காத்திருகிறேன்

நாம் காதலித்தது ஒரு
சில‌ நாட்கள் ‍‍‍_காதலில்
வலி தந்தது பலமணி நேரம்
காதல் தோற்று பல‌ மாதங்கள்
ஆனாலும் காதல் வாழும்
இறுதி மூச்சு வரை ...!!!
காதல் மூச்சுடன்
காத்திருகிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

உன் கண் குழிக்குள்

காதல் செய்தேன்
நான் மரணத்தை
நோக்கி செல்கிறேன்
அவள் மறதியை நோக்கி
செல்லவதால் ...!!!
உன் கண் குழிக்குள்
விழுந்தேன் - இப்போ
மண் குழியை நோக்கி
செல்கிறேன் ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

வியாழன், 24 ஏப்ரல், 2014

எப்போதும் .. என்னை பார்ப்பதற்கு ....!!!

என் உயிரே ....
என் வீட்டுமுகம் பார்க்கும்....
கண்ணாடியாக ..வந்து விடு
உன்னில் எப்போதும் ..
என்னை பார்ப்பதற்கு ....!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

எப்போது உணர்வாய் என் உயிரே ....!!!

உனது
மெல்ல நடை 
மெல்ல பார்வை
மெல்ல சிரிப்பு -எல்லாம்
என்னை மெல்ல கொல்வதை
எப்போது உணர்வாய் என் உயிரே ....!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

என்னை பார்ப்பதற்கு ....!!!

என் உயிரே ....
என் வீட்டுமுகம் பார்க்கும்....
கண்ணாடியாக ..வந்து விடு
உன்னில் எப்போதும் ..
என்னை பார்ப்பதற்கு ....!!!

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----


காதல் கவிதை பூக்கள்

ஆகாயத்தில் பறவைதான் பறக்கும் ...
என்றுதான் இதுவரை நம்பினேன் ...
உன்னை கண்டவுடன் -என் இதயம் ....
பறப்பதை உணர்கிறேன் உயிரே ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

காதல் கவிதை பூக்கள்

நீ பார்த்தது ஓரக்கண் ....
பார்வைதான் என் உயிரே .....
காதல் மழையில் நனைந்து ....
நடுங்குகிறது என் இதயம்...!!!

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

காதல் நூலகமே இருக்கு ...!!!

மற்ற காதலருக்கு ஒரு காதல்
புத்தகம் தான் இருக்கும் -உனக்கும்
எனக்கும் காதல் நூலகமே இருக்கு ...!!!

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்

காதலே மூச்சு

மூச்சு போனால் மனிதன் சாவதில்லை
காதல் போனால் தான் சாகிறான்
காதலே மூச்சு என்பதால் ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

காதல் கவிதை பூக்கள் 03

ஒவ்வொரு பெண்ணுக்கும் 
ஒவ்வொரு அழகு உண்டு 
உன்னிடம் நான் எதிர் பார்க்கும் 
எல்லா அழகும் கொட்டிக்கிடக்கிறது 

----
கே இனியவன் 
காதல் கவிதை பூக்கள் 
----

கே இனியவன் காதல் கவிதை பூக்கள் 02

இருப்பதற்கு இருப்பிடம்
கேட்கிறேன் -நீ உன் வீட்டை
தருகிறேன் என்கிறாய்
எனக்கு உன் இதயம் வேண்டும் ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

நீ கண் தானம் செய்தாய்
நான் இதயதானம் செய்தேன்
காதல் பூக்களாய் மலர்கிறது ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

புதன், 23 ஏப்ரல், 2014

நீயே என் காதல் கவிதை...!!!

-ண்ணசைவில் கவிதை புத்தகம் ..
வி-ழி திரையில் உன் புகைப்படம் ...
-ன்னலோரம் நின்று நீ என்னை தேட ...
-ணகணமாகிறது என் இதயம் ....
சி-ன்னவரிகள் கவிதையாய் பிறக்கிறது ...  
*
*
உன் பெயரே கவியாக இருப்பதால் 
நீயே என் காதல் கவிதை...!!!

நீயே என் காதல் கவிதை

நீ வாரி இழுத்துவரும்...
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!

நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது
கவிதை வரிகள்
*
*
நீயே என் காதல் கவிதை

உயிராய் நினைத்தோம் ...!!!

காதல் தோல்வியில் இருந்து கற்றேன்
உயிராய் இருக்கும் எதுவும் என்னுடையது இல்லை
பிறருக்கு உரியதை உயிராய் நினைத்தோம் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

என் இதயத்தை ஏனடி ..?

இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு ..
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

தமிழ் கிறுக்கன் ....!!!

க-ண்ணை இமை காப்பதுபோல்
கா-தலில் உன்னை காதலிக்கிறேன்
கி-ள்ளிய கன்னசிவப்பழகி....!!!
கீ-தமாய் என்னில் ஒலிப்பவளே...!!!
கு-ன்றிளிருந்து நீர் வழிபதுபோல்
கூ-ந்தல் அழகை கொண்டவளே ...!!!
கெ-ட்டியாக என்னை கட்டிபிடி
கே-ட்போருக்கு  பதில் சொல்ல ....
கை-பொம்மைபோல் நானிருக்கிறேன் .
கொ-ண்டை கடலை தலையழகி ...!!!
கோ-மாதாவின் கொடையழகி ...!!!

என் உயிர் தமிழிச்சியே
என் உயிர் மடியும் வரை
உன் உயிர் காதலன் நான்தான்
உன் சிறு கடைக்கண் பார்வை
என் மீது படுமானால் அன்று
முதல் நான் ஒரு கவிஞன்
அதுவரை உன் மீது ஒருதலை
காதல் கொண்ட சின்ன கிறுக்கன்
தமிழ் கிறுக்கன் ....!!!


தமிழிச்சியை காதல் செய்கிறேன்

அ-ண்டமதில் காணப்படும்
ஆ-யிரம் மொழி அழகிகளில்
இ-னிமையான உவமைகளை
ஈ-ன்றெடுத்த தமிழ்த்தாயின் மகளை
உ-யிருக்கு உயிராய் காதலிக்கிறேன்...!!!

ஊ-ன் இன்றி உறக்கமின்றி
எ-ண்திசையும் கருத்து தேடி
ஏ-டுகளையும் சுவடுகளையும்
ஐ-ம்புலன்ககையும் செலவு செய்து
ஒ-ரே ஒரு குறிக்கோளுடன்
ஓ-யாமல் காதலிக்கிறேன் 

என் உயிர் தமிழிச்சியே
என் உயிர் மடியும் வரை
உன் உயிர் காதலன் நான்தான்
உன் சிறு கடைக்கண் பார்வை
என் மீது படுமானால் அன்று
முதல் நான் ஒரு கவிஞன்
அதுவரை உன் மீது ஒருதலை
காதல் கொண்ட சின்ன கிறுக்கன்
தமிழ் கிறுக்கன் ....!!!

இ-ன்பத்தை தந்து விடு

கா-தலை தந்த தேவதையே
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!

இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்

ஆயுள் பறிக்கும் பாச கயிறு ...!!!

உனக்கு இது சிறு
விபத்து -எனக்கு இது
அவசர விபத்து பிரிவில்
கோமா நிலை - நான் கோமாவில்
இருப்பதால் தான் உன்னோடு
பேசவில்லை - நீயோ நான்
கோபித்து கொண்டிருக்கிறேன்
என்று நினைக்கிறாய் ....!!!

என் உயிர் பிரிய முன்
என் உயிரே நீ வந்து பேசு
உன் உயிர் நான் தான் என்று
காதலுக்கு காத்திருத்தல் சுகம்
காதல் தோல்விக்கு காத்திருத்தல்
ஆயுள் பறிக்கும் பாச கயிறு ...!!!

வாழ்நாள் வரை ....!!!

நம் காதலில்
நடந்தவை ஒரு சின்ன
விபத்து என்றால் என்
காதலி -நீயும் தவறு விட்டாய்
நானும் தவறு விட்டேன்
தவறு விட்டவர்கள்
திருந்துவதில்லையா ...?

உயிரே
உடலில் பெரிய காயம்
கூட மாறிவிடும் சிலகாலம்
ஆனால் உளத்தில் வந்த சிறு
துளி காயம் வடுவாக இருக்கும்
வாழ்நாள் வரை ....!!!

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

உயிரால் எழுதும் காதல் வரிகள்

உன் நெற்றி முன்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!

நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!

கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்

உயிரால் எழுதும் காதல் வரிகள்

நீ சூரியன் மறையும்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!

அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1

உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்

உயிரால் எழுதும் காதல் வரிகள்

உன்னை
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!

இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!

இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்