இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மே, 2015

காதலித்து விடு ....!!!

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!

மூச்சு உள்ளவரை ...

மூச்சு உள்ளவரை ...
நினைவிருக்கும் ஒரே ...
விடயம் காதல் ....
பிரிந்தது இரு முரண்பட்ட ....
உடல்கள் மட்டுமே ....!!!

இதயம் ....!!!

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!!!

காதல் சிறு கவிதைகள்

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!

^^^^^^^^^^^

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!

^^^^^^^^^^

என்ன
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து
விட்டோம் என்கிறாயே ....!!!

புதன், 20 மே, 2015

நீ போகும் பாதை உன் பாதை ....!!!

இளைஞா...  இளைஞா....
தமிழ் இளைஞா காத்திடு காத்திடு
நம் பண்பை போற்றிடு போற்றிடு ...
தமிழ் தாயை பேணிடு பேணிடு ...
தமிழன் வரலாற்றை- தமிழன் ...
வெல்வான் தமிழன் வெல்வான் ....
உலகம் ஒருநாள் நிச்சயம் பார்க்கும் .....!!!

(இளைஞா...  இளைஞா....)

உன்னிலிருக்கும் உன்னத திறனை ....
உன் எண்ணத்தால் திறந்துவிடு .....
உன்னை நீயே ஏளனப்படுத்தும் .....
உன் எண்ண தீயால் எரித்துவிடு ....
போகும் பாதையை தேடாதே ....
நீ போகும் பாதை உன் பாதை ....!!!

(இளைஞா...  இளைஞா....)

ஆலம் விழுது மண் நோக்கி விழும் ...
எண்ண விழுதை விண் நோக்கி எறி ....
ஆண்டவன் சாட்டி ஒதுங்கும் -நீ
அடங்கியிருக்கும் சங்கிலியை உடை ....
நாளை என்பது சோம்பேறியின் சொல் ....
இன்றே என்பது வீரனின் செயல் .....!!!

(இளைஞா...  இளைஞா....)

அனுபவிக்கிறேன் ....!!!

என் காதலுக்கு ...
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!

நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!

நீ காதலை விட ..
அழகானவள்
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;802

நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!

இதயமும் கருகும் ....
இதயத்தில் இருப்பவர் ....
வெளியேறினால் ....!!!

மூச்சும் தீயாய் சுடும் ...
மூச்சாக நினைத்தவர் ...
முடிவு கட்டினால் ....!!!

நான் கோயில் ....
நீ அதில் தெய்வம் ...
அருள் தான் இல்லை ....
நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;801

அதிகம் கொல்கிறாய் ...!!!

எனக்கு
தனிமை பிடிக்கும் .....
உன்னை மட்டும் நினைக்கும் ...
அந்த தனிமை ரொம்ப ....
பிடிக்கும் .....!!!
+
sms கவிதை

-------

மீண்டும் என்னை ....
விரும்பிவிடு ...
பிரிவில் தான் என்னை ...
அதிகம் கொல்கிறாய் ...!!!
+
sms கவிதை

sms கவிதை

நெருப்பு  இல்லாமல் ...
அடுப்பு எரியாது ...
என் இதயம் எரிகிறது ...
உன் நினைவுகளால் ....!!!
+
sms கவிதை

-----------

காதலுக்கு முன் ....
கற்பனையில் வாழ்கிறோம் ...
காதலுக்கு பின் ...
கண்ணீரில் வாழ்கிறோம் ...
+
sms கவிதை

கண்ணீராய் வருகிறாள் ....!!!

பலவகை வர்ணத்தில் ....
கனவுகளாய் வந்தவளே ...
இப்போ ஒரே ஒரு திரவமாய் ....
கண்ணீராய் வருகிறாள் ....!!!
+
sms கவிதை

செவ்வாய், 19 மே, 2015

வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

உரிமைக்காக போராடிய போராட்டம் ....
உலகறிய செய்த நம் போராட்டம் ....
உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....
உயிரை தியாகம் செய்த போராட்டம் ....
உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!!

தமிழனுக்கு சிறப்பு பண்புண்டு .....
தன்மானத்தை இழக்கமாட்டான் ....
தனிப்பட்ட விலைக்கு போகமாட்டான் ....
தன் உறவுகளை விற்கமாட்டான் ....
தலைவன் நாமத்தை மறக்கமாட்டான் ....!!!

வலிக்குதடா இப்போ இதயம் .....
கயவர்களின் கவர்ச்சிக்கு போதையாவதும் ....
பேதைகளை போதையாக பார்ப்பதும் ....
போக்குவரத்து பாதைக்காய் போராட்டத்தை ....
மறந்ததும் வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை +02

தமிழனாய் பிறப்பது கொடியது ....

என்ன
பாவம் செய்தமோ ...?
ஈழ தமிழார் என்றால்  ...
துன்பம் ஒரு தொடர் கதை ....!!!

அதோ
தெரிகிறது வெளிச்சம் ....
இதோ வருகிறது விடிவு ....
என்று நினைக்கும் போது....
வெளிச்சத்துக்கு முடிவு ....
வந்துகொண்டே இருக்கிறது ...!!!

கொடியது  கொடியது ...
மனிதபிறவி கொடியது  ...
அதனிலும் கொடியது .....
தமிழனாய் பிறப்பது கொடியது ....
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பிறந்தது கொடியது ...
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ...
கொடியது .....!!!

+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை

நான் சொல்லும் தீர்ப்பு ....!!!

கொடுமை கொடுமை ....
காட்டுமிறான்டிகளின்
உச்ச கட்ட கொடுமை ....
ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ...
கொடூரமாய் கொல்லப்படும்...
கொடூர கொடுமை ......!!!


அந்நிய
படையின் ஆதிக்கத்தில் ...
கற்பிழந்த ஈழச்சிகள் .....!
ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ...
செம்மணி வெளியில் ....
வேம்படி மாணவி ....!!!
வெறி நாய்களிடம் அகப்பட்ட ...
வெள்ளை முயல்போல் ....
புங்குடுதீவில் வித்தியாவின் ....
கொடூர கொலை ...!!!


நான் சொல்லும் தீர்ப்பு ....!!!


வெறிகொண்ட ....
காட்டுமிறாண்டிகளை....
உடன் கொல்ல கூடாது ....
அணுவணுவாய் அனுபவித்து ....
சாகவேண்டும் .....!!!


இவர்கள் பெற்றெடுத்த பெண் ....
குழந்தைகளை இவர்களிடம் இருந்து .....
பாதுகாக்க வேண்டும் ....!!!
இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே ....
இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!!


பெண் குழந்தை இருந்தால் ...
இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ...
காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ...
என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!!
சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை
பறிக்க வேண்டும் ......!!!
தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ...
பறிக்க வேண்டும் ....!!!


சட்டத்தால் இவர்களை தண்டிப்பதை விட ...
உறவுகளால் இவர்கள் தண்டிக்க படவேண்டும் ...
நடைபிணமாய் இவர்கள் அணுவணுவாய் ...
சாக வேண்டும் .....!!!


இவர்களை காப்பாற்ற முனையும் ....
சட்டத்தரணிகளின் உரிமையை ...
பறிக்கவேண்டும் .இல்லையேல் ....
இவர்களையும் கயவரின் பட்டியலில் ....
சேர்த்து அவர்களுக்கான தண்டனையை ...
இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .....
இவர்களை காப்பாற்ற நினைக்கும் ...
ஒவ்வொருவனும் தமிழின துரோகி ....!!!



வியாழன், 14 மே, 2015

குறுஞ்செய்திக்கு( SMS ) கவிதை

காதல்
எல்லோருக்கும் வரும்
எனக்கு போய்விட்டது
+
sms கவிதை

-------

பூக்கள் வாசனைக்காக
பூக்கவில்லை
தன் வாழ்க்கைக்காக
பூக்கிறது - காதலும்
அப்படித்தான் ....!!!
+
sms கவிதை

------

நீ காதலிக்காது
விட்டாலும் எனக்கு
காதல் வந்திருக்கும்
உன்னை பற்றிய
கவிதை ...!!!

+
sms கவிதை

-------

கவிதைக்கு கற்பனை.....
வேண்டும் -உன்னை....
நினைத்தால் கற்பனை.....
வரமுன் கண்ணீர் ....
வருகிறது ....!!!
+
sms கவிதை

-------

காத்திருப்பது காதலுக்கு
அழகுதான் -ஆனால்
இதயத்துக்கு வலி ...!!!
+
sms கவிதை

தாயின் கணச்சூடு -சிறுகதை

தாயின் கணச்சூடு ( 3ம் இடத்தை பெற்ற சிறுகதை )

--------------------------

பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை )  ஆதவன்  அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி
என்   கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......!


என்  குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும்   காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி  வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு  வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் .


ஒரு நாள்  அம்மா " மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் " நீ கோபிக்கவும் கூடாது
இல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில்
போய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...?
அப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார்
அம்மா .....!!!


சும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க..? பராமரிக்க..? இங்கே எண்டாலும் என்
மனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினம் உங்களை பார்க்க ..? இருந்த
சொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந்து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் ..? நீங்க அங்கே போய் இருக்க ...?
என்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் .


இரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம்
சென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும்
சின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி
வந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில்
அப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் .


அம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை .


ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு
போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி
அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு
புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .


சில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து
கொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை
பார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே
தெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது .
யார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா .


வைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .
அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .
நான் மெல்ல மேலும் அழுத்தினேன் .


யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில்
சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .
எத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத
அம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான்  அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன்
என்று கண்டு பிடித்தார் ...? அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு  . ஒரு குழந்தை பிறந்தபோதும்  தாய் தூக்கும் போதும்  ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் .


அம்மாவின்   எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி
மூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை
இருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....!!!


------------

திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை  மூன்றாம்  இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழ் சேனை உலா தளம் நடார்த்திய போட்டியில்
3ம் இடத்தை பெற்ற சிறுகதை

புதன், 13 மே, 2015

ஊட்டி விடுமாம் தாய் ....!!!

கூடி
சாப்பிடுமாம் ....
காக்காய் ....!!!
தான்
சாப்பிடாமல் ...
ஊட்டி விடுமாம் ...
தாய் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை

அம்மாவே ஒளி ...!!!

அம்மா ....
வீட்டின் சூரியன்
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள்
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா
கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை

திரு வாசகம் போதாது ...
தாயே உன்னை பற்றி ...
எழுத பெரு வாசகம் ....
வேண்டும் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை

மண்ணுலக வெண்ணிலாவை .....

மண்ணுலக வெண்ணிலாவை .....
--------------------------------------------

காரிருள்
வானத்தில் பளிச்சிடும் நிலாவே ....
காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் ....
என்னவளின் வதனமும் .....
மண்ணுலக நிலாதானடி ....
விண் நிலவே - நீ தான் ....
என்னவளை படைத்தாயோ ....!!!


நீ படைத்த என்னவளோ ....
தரையில் உலாவரும் முழுநிலா .....
விண் நிலவே வந்துவிடாதே .....
வெட்கப்படுவாய் வேதனை படுவாய் ....
மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!


அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவை ....
அருகில் இருக்கும் அற்புதம் பார்த்தேன் ......
தேய்ந்து வளரும் வெண்ணிலாவை ....
தோளோடு சார்ந்திருக்கும் வரமும் பெற்றேன் ....
விண்ணுலக வெண்ணிலாவே .....
மண்ணுலக வெண்ணிலாவை .....
என்னவளாக தந்தமைக்கு நன்றி ....!!!

நிலவே இறங்கிவா ....!!!

நிலவே ....
உன்னை உவமையாக கூறி ....
காதல் செய்தும் காதலரை ....
வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..?
உன்னையே உவமையாக கூறி ....
காதலியை ஏமாற்றிய ....
காதலனை சுட்டெரிக்க ....
ஒருமுறை வருவாயோ ..?

நிலவே உன்னிடம் ..
நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..?
தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....!
பூலோகத்திலோ உன்னால் ...
நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!!
நிலவே ஒருமுறை வருவாயோ ..
சூழலை மாசுபடுத்தும் இவர்களை ....
எச்சரிக்க மாட்டாயோ ...?

நிலாவில் 
பாட்டி இருக்கிறார் ....
இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!!
பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ...
வான் வெளி தூசிகளே அவை ....
நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...?
மூடநம்பிக்கையை உடைத்தெறிய ...
ஒருமுறை இறங்கி வருவாயோ ...?

வியாழன், 7 மே, 2015

தமிழன் ஆதிமனிதன் ...!!!

ஆதிமனிதன் ...
காட்டில் இருந்து ....
ஊர்ந்து ஊர்ந்து வந்தான் ....
அதுவே அவன் ஊரானது ....!!!

மீளளிப்பு நிலத்தை .....
ஊரிலிருந்து பார்க்க சென்றோம் ....
காடாய் இருக்கிறது ....!!!
இப்போதென்றாலும்....
ஏற்றுகொள்ளுங்கள் ...
தமிழன் ஆதிமனிதன் ...!!!

தமிழன் ஆதிமனிதன் ...!!!

ஆதிமனிதன் ...
காட்டில் இருந்து ....
ஊர்ந்து ஊர்ந்து வந்தான் ....
அதுவே அவன் ஊரானது ....!!!

மீளளிப்பு நிலத்தை .....
ஊரிலிருந்து பார்க்க சென்றோம் ....
காடாய் இருக்கிறது ....!!!
இப்போதென்றாலும்....
ஏற்றுகொள்ளுங்கள் ...
தமிழன்  ஆதிமனிதன் ...!!!

எது என் குடியிருப்பு ...?

ஆக்கிரமிப்பு நிலங்கள் ....
மீளளிப்பு செய்யப்படுகின்றன ....
ஆவலுடன் சென்ற மக்களின் ...
திகைப்பும் திண்டாட்டமும் ..!!!
எது என் குடியிருப்பு ...?
எது எங்கள் சுடுகாடு ...?

புதன், 6 மே, 2015

நிலா கையில் எட்டாது

நிலா
கையில் எட்டாது என்று ....
தெரிந்தும் காதல் செய்கிறோம் ....
நீயும் அப்படிதான் உயிரே ....!!!

தந்துவிடு உயிரே ....!!!

உன்னோடு
வாழும் உரிமையை ....
கொடுக்காது விட்டாலும் ...
உன்னோடு சாகும் உரிமையை ...
தந்துவிடு உயிரே ....!!!

கே இனியவனின் கஸல் - 800 வது பதிவு

நான் 
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!

நீ 
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல் 
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை 
800 வது பதிவு

சாம்பலாய் போய்விட்டது ....!!!

உன் கண்ணீரில் ...
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!

ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!

புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;799

நீ கருவாடு போடுகிறாய் ...!!! (கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை )

உன்னை பூ என்று ...
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!

கனவுலகில்
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!

நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;798

நம் காதல் இடைவெளி

மகுடிக்கு தான் பாம்பு ...
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!

உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!

உன் மௌனத்தை...
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;797


நீ அறுத்து எறிகிறாயே ....!!!

உன்
நினைவுகளை ...
எண்ண கயிற்றால் ...
கட்டுகிறேன் - நீ
அறுத்து எறிகிறாயே ....!!!

காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!

நீ
காதல் சூரியன்
காலை உதயமாய் ...
மாலை அஸ்தமனமாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;796

வெள்ளி, 1 மே, 2015

தொழிலாளர் தினம் ......!!!

தொழிலாளர் தினம் ......!!!
************************************
உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!!!

களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....
அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் ....
திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!!!

தூங்கியவர்கள்  விழித்து கொண்டனர் ....
திரட்டி கொண்டனர் தம்பலத்தை .....
நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....
நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....
வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!!!

நோக்கம் நிறைவேறும்வரை  ......
உக்கிரமானது சர்வதேசப் புரட்சி......
உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....
உழைக்கும் நேரம் எட்டுமணியாக .....
உரிமையை போராடி வென்றனர்.....!!!

போராடி வென்ற தொழிலாளர் தினம் .....
பேச்சளவில் இன்று சட்டத்திலும் ...
சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...
மனத்தால் உழைப்பின் புனிதத்தை ...
உணரும் நாள் என்று உதயமாகிறதோ ....
அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!!!