இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 ஏப்ரல், 2016

உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

உன் சிரிப்பு ...
மற்றவர்களுக்கு ...
சிதறும் சில்லறை ...
எனக்கு நெற்றி
பொட்டுக்காசு.....!!!

காதல்
இழப்பை கொண்டுவரும் ....
உன்னையே இழக்கவைக்கும் ...
என்று நினைக்கவில்லை ....!!!

என்றோ ...
ஒருநாள் நீ என்னை ....
திரும்பி பார்ப்பாய் ....
அப்போது நான் ....
மாலையுடன் இருப்பேன் ...
உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K  A 0AO
1010

நான் ஓடாத மணிக்கூடு

காதலுக்கு கண் ...
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!

என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?

நீ
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான்
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 I
1009

நீ எனக்கு பாசக்கயிறா- முள்ளில் மலர்ந்த பூக்கள்

உன்
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி
கௌவ்வி எடுத்துவிடு ....!!!

கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!

நீ
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 H
1008

காதலால் கொன்றவள் - முள்ளில் மலரும் பூக்கள்

குங்குமம் போல் ....
சிவந்த முகத்துடன் ....
சிரித்து பேசியவள் ....
குங்கும பொட்டோடு ...
குனிந்து நிற்கிறாள் ....!!!

கொன்றால் பாவம் ....
அப்போ என்னை ...
காதலால் கொன்றவள் ...
நீயும் பாவி .....!!!

உன் ..
காதல் தோட்டத்தில் ...
என்னை சருகாக ....
ஏற்றுக்கொள் ....
உரமாக என் காதலை ....
வளர்க்கிறேன் ....!!!  

வியாழன், 28 ஏப்ரல், 2016

ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறது ....!!!

நீ
பார்த்தும் பார்க்காத ...
போல் என்னை கடந்து ...
சென்றாலும் ....!!!

உன்
காதல் நிறைந்த இதயம் ....
என்னிடம் வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு செல்கிறது ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

தேவதைகளின் அரசியாவாள் ....!!!

தாமரை முகம் ....
நிலா மேனி ....
மீன் கண்கள் ...
வில் புருவம் .....
அன்ன நடை ....
தோகை கூந்தல் ....
கொவ்வை உதடு ....
வலம்புரி சங்கு ....
நூல் இடை ....

இத்தனை ...
அழகையும் கொண்ட ....
என்னவள் ....
என்னை காதலித்தால் ....
தேவதைகளின் ....
அரசியாவாள் ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

பேசினால் வார்த்தை அழகு .....

உன்னுடன் பேச ....
எத்துனை ஆசையோ ....
அதே அளவுக்கு பேசாமல் ....
இருக்கவும் ....
ஆசைபப்டுகிறேன்......

வித்தியாசமாய் ....
நினைத்துவிடாதே ....
பேசினால் வார்த்தை அழகு .....
பேசாமல் விட்டால் வரிகள் அழகு ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன்

ஒரு ....
தலை காதலர்களே ....
காதலில் தோற்றவர்களே ....
கவலையே வேண்டாம் ....
காதல் கவிதையை ....
ரசியுங்கள் ....
காதல் நிச்சயம் ....
வெற்றிபெறும் ....
கவிதை காதலின் தூதுவன் ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன் 

புதன், 27 ஏப்ரல், 2016

உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

ஆயிரம் முறை ....
திரும்பி பார்த்தவள் ...
இப்போ ....
குனிந்தபடி செல்கிறாள்....!!!

பூவை கொடுத்து ...
பூவாக வர்ணித்து ....
பூவையை காதலித்தேன் ....
உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

என் கவிதையை ....
எல்லோரும் விரும்பவைத்த ....
உன் வலிகளுக்கு நன்றி ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 F

விடுகதைக்கவிதைகள் 02

பூமியில்
மூன்றில் இரண்டு....
பங்கு .....
நான் ......!!!

உடலில் மூன்றில் ....
இரண்டு பங்கு .....
நான் ....!!!

என்னில் மூன்றில் ....
இரண்டு பங்கு .....!!!
ஆனால் என்னில் ....
சூரிய ஒளி படாது ....
அப்படிஎன்றால் ....
நான் யார் .....?

&
&
&
&
&
விடை ; இளநீர்

^
சிறுவர்களுக்கான கவிதை
கவிப்புயல் இனியவன்

விடுகதைக்கவிதைகள்

அவன் .....
இல்லாவிட்டால் ....
நான் இல்லை ...
நான் இல்லாவிட்டால் ....
அவனுமில்லை ....
நாங்கள் இரட்டை ....
பிறவிகள் இல்லை ....
அப்போ நாங்கள் ....
யார் ...................?
&
&
&
&
&
விடை ; உடலும் உயிரும் ...!!!

^
சிறுவர்களுக்கான கவிதை
கவிப்புயல் இனியவன்

உன்னை வைத்து

இன்று....
கிரக தோஸமாம்....
சுவாமியின் கதவு..
மூடப்பட்டிருக்குமாம்...
உனக்கு எப்போது...
கிரக தோஸம்....
என் இதயத்தில்...
உன்னை வைத்து...
மூடனும்.....!
&
எனக்குள் காதல் மழை
கே இனியவன்

எனக்குள் காதல் மழை

மின் காந்த அலையை...
கணிக்கும் அறிவியல்...
உன் கண் காந்த அலையை...
எப்போது கணிக்குமோ....?

எனக்குள் காதல் மழை
கே இனியவன்

என்னையே பார்க்கிறாய்....!

மோனோலிஸா...
ஒவியம் எப்படி...
வைத்த்தாலும்...
எம்மை பார்ப்பது...
போல் தான் இருக்கும்...
உன் புகைப்ப்டமும்...
எங்கு வைத்தாலும்...
என்னையே பார்க்கிறாய்....!

&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்

கதையையே மாற்றிவிடுகிறேன்...

நீ
ஒருமுறை ...
பாட்டி வடை சுட்ட...
கதையில் பாட்டியாக மாறு....
கதையையே மாற்றிவிடுகிறேன்...
காக்காவாக வந்து ...
உன்னை தூக்கிச்செல்கிறேன்...
&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை

பொம்மை கடைக்குள்....
சென்று விடாதே,,,,
இந்தபொம்மைதான்....
வேண்டும் என்று,,,
உன்னை கொண்டு....
சென்று விடுவார்கள்.....!!!

&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

காதல் சோகக்கவிதை

காதலின் ஆழம் ....
கண்நீர்விடும்போது ....
மற்றவரும் சேர்ந்து ....
கண்ணீர் விடுவதில்லை ....!!!

உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!!!

^
காதல் சோகக்கவிதை
கே இனியவன் 

திங்கள், 25 ஏப்ரல், 2016

உனக்கு அது குறுஞ்செய்தி

ஒரு நாளுக்கு ....
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது  குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!

நீ
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

நீ ...
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!

ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

அதிசயக்குழந்தை - இறக்கம் 

அதிசயக்குழந்தை - இறக்கம்
-------
அதிசயக்குழந்தை .....
ஏணியில் ஏறுவதும் ....
இறங்குவதுமாய் விளையாடிக்  ...
கொண்டிருந்தான் ....!!!

அந்தவழியால் வந்த நான் ....
என்னடா செய்கிறாய் என்று ....
கேட்டேன் .....!!!

ஏறுவதும் இறங்குவதுமாய் ....
இருக்கிறேன் தெரியவில்லையா ...?
என்றான் ....?

உனக்கு
ஏற்றம் பிடிக்குமா .....?
இறக்கம் பிடிக்குமா ....?

எனக்கு இறக்கம் தான் ...
பிடிக்கும் ஆசானே ....
ஏன்டா உனக்கு எப்போதும் ....
எதிர் மறையாகதான் பிடிக்குமா ...?

இல்லை
ஆசானே எதிர் மறையின் ...
நன்மையை உணரமாட்டேன் ..
என்கிறீர்களே ....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் ....
தோல்விகள் இல்லை ....
வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!!

மலை
ஏறுபவன் இறங்கினால்-தான்
மலை ஏறியதின் சாதனை ...
தெரியவரும் .....!
பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான்
நீரின் மகிமை புரியும் ....!

அப்பில் பழம் கீழே விழுந்ததால் ...
நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் ....
வானத்து நீர் கீழே விழுந்தால் தான் ....
பூமி பசுமை அடைகிறது ....!
இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் ....
வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் .....
இழிவானவையல்ல எல்லா ....
செயல்களிலும் புரட்சிகரமானவை ...!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்


எனக்குள் காதல் மழை 22

என் விபரம் 
தெரிந்த நாளில்லிருந்து,,,, 
கவிதை எழுதவில்லை,,,, 
உன் விபரம்,,, 
தெரிந்த நாளிலிருந்து தான்,,, 
கவிதை எழுதுகிறேன்,,,, 


எனக்குள் காதல் மழை 
கே இனியவன்

எனக்குள் காதல் மழை 21

அது சரி 
கண்ணாடியை பார்த்து,,, 
என்ன பேசுகிறாய்,,,,? 

என்னோடு தானே,,, 
பேசுகிறாய்,,,, 
அப்படி என்னதான் ,,, 
பேசுகிறாய்,,,,? 

எனக்குள் காதல் மழை 
கே இனியவன்

வியாழன், 21 ஏப்ரல், 2016

என்னிடம் அடகு வை ....

உன்னிடம்
இருக்கும் புன் (நகையை )
என்னிடம் அடகு வை ....
நான் உனக்கு வட்டி ...
தருகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 20
கவிப்புயல் இனியவன்

நீ இரட்டை அழகு பெறுவாய் .

நீ
தோழியோடு பேசும்போது ....
அத்தனை அழகாய் இருகிறாய் ...
ஒருமுறை ....
என்னோடு பேசிப்பார் ...
இன்னும் அழகாய் இருப்பாய் ....
காதலோடு யார் பேசினாலும் ...
அழகுதான் - நீ
இரட்டை அழகு பெறுவாய் ....!!!

^
எனக்குள் காதல் மழை 19
கவிப்புயல் இனியவன்

நீயே சொல் ....!!!

எனக்கு ஒரு
குறி சோதிடம் சொல் ....
உன்னை ஒருத்தி ....
காதலிக்கிறாள் ...
என்று நீயே சொல் ....!!!

அப்போதிலிருந்து ....
சோதிடத்தை நம்புகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 18
கவிப்புயல் இனியவன்

புதன், 20 ஏப்ரல், 2016

அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ
ரெம்ப அழகு ....
காதலையும்  அழகாக ....
மாற்றிவிடு ....!!!

இறைவன் செய்த ....
மகா தவறு ....
எனக்கு காதலையும் ...
உனக்கு அழகையும் ....
கொடுத்தது ....!!!

ஆணை
தும்பிக்கையால் ....
தலையில் மண் ....
வாரிப்போட்டதுபோல் ...
நான் உன் மேல் வைத்த ...
நம்பிக்கையால் காதலித்து ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K  A 00 E

முள்ளில் மலர்ந்த பூக்கள் 04

என்னவளை ...
அழகாக படைத்த ....
இறைவன் ....
காதல் இல்லாமல் ....
படைத்துவிட்டான் ....!!!

என் ...
கவிதைகள் ...
கள்ளியில் உள்ள முற்கள் ....
நீ காதலித்தால் ...
முற்கள் பூவாகும் ....!!!

காதல் இல்லாமல் ....
யாரும் இருக்க முடியாது ....
பிரம்மனின் படைப்பு ...
பிழைக்காக இருக்காது ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K  A 00 D

முள்ளில் மலர்ந்த பூக்கள் 03

நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!

ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!

நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 C

முள்ளில் மலர்ந்த பூக்கள் 03

நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!

ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!

நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 C

சிகரட் - ஹைக்கூ கவிதை

சடலத்துக்கு தீ மூட்ட
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான்
சிகரட்

^

ஆறு அங்குல உயரம்
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட்

^

கே இனியவன்
ஹைக்கூ கவிதை

அதிசயக்குழந்தை - ஆசை

அதிசயக்குழந்தை - ஆசை
----------
உன்
ஆசை என்ன என்று கேட்டேன் ...
அதிசயக்குழந்தையிடம்.....?

ஆசையில்லாமல் இருக்கவே ...
ஆசை என்றான் ஒரே வரியில் ....!!!

என்னப்பா சொல்கிறாய் ....?
ஆமா ஆசானே .....!!!

ஆசையே அனைத்து துன்பத்துக்கும் ....
மூல காரணி ......!!!
நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே ....
கோபம் ,,,,,,,,,,,,!!!
கோபத்தின் வெளிப்பாடே ....
கொடூரம் ...........!!!
கோபத்தை குறையுங்கள் .....
என்பது தவறு - ஆசையை ....
குறையுங்கள் என்பதே சரியானது .....!!!

பெண் ஆசை ....
நடத்தையை கெடுக்கும் ......
மண் ஆசை .....
நாட்டை கெடுக்கும் ......
பொன் ஆசை ......
பெண்ணையே கெடுக்கும் .......!!!

ஆசையை குறைப்பது எளிதல்ல ....
ஆசையை வரிசைப்படுத்துங்கள் ....
அந்த வரிசையில் இயலுமையை ....
பாருங்கள் நிறைவேறக்கூடிய ....
அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 12

முள்ளில் மலர்ந்த பூக்கள்

உன் 
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!

காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!

நான் 
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 B

முள்ளில் மலரும் பூக்கள்

எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?

ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!

வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K  A 00 A 

கே இனியவனின் 1000 வது கஸல்

கே இனியவனின் 1000 வது கஸல்

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
 ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்
^
" முள்ளில் மலரும் பூக்கள் "
        கஸல் கவிதை

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நினைவுகளும் வலிகளும்

நம் பிரிவு
நிச்சயமாகி விட்டது ....
நினைத்துப்பார் ...
எனக்கு மிஞ்சப்போவது ....
நினைவுகளும் வலிகளும்....!!!

ஒரு
உயிர் இரு உடலாய் ....
இருந்த நாம் ....
ஒரு உடலும் சடலமுமாய் ....
வாழப்போகிறோம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

போலியாய் சிரிக்கிறது உதடு

வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!

உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 17

என்ன கொடுமை ....
உன் உதட்டை முத்தமிட ...
வாய்ப்பில்லாமல் ....
கீழே விழுந்துவிட்டதே ....
ஐஸ்கிறீம் .....!!!

எல்லாவற்றுக்கும்....
கொடுப்பனவு இருக்கணும்....
உன்னை முத்தமிடுவதற்கு .....
ஐஸ்கிறீம் .....
கொடுத்துவைக்கவில்லை ...!!!

  ^
எனக்குள் காதல் மழை 17
கவிப்புயல் இனியவன்
  

நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

ஒரு கவிஞன்
தலையில் இருந்து
பாதம் வரை வர்ணித்து ....
கவிதை எழுதுவான் ....
உன்னை எங்கிருந்து ...
ஆரம்பிப்பது ...?
திகைத்து நிற்கிறேன்
நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

^
எனக்குள் காதல் மழை 16
கவிப்புயல் இனியவன்

திங்கள், 18 ஏப்ரல், 2016

மரணத்தில் ஏன் அழுகிறாய்

மரணத்தில் ஏன் அழுகிறாய்....?
-----
குழந்தை பிறந்தது ....
பேர் சூட்டும் விழா ....
உறவினர் வந்தனர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

ஆண்டு ....
ஒன்று நிறைவு ....
பிறந்தநாள் வைபவம் ....
கேக் வெட்டினர் ....
பாட்டு பாடினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

திருமண அழைப்பு ....
உறவுகள் குவிந்தன ....
ஆசீர் வாதம் வழங்கினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

மரண அறிவிப்பு ....
உறவுகள் கூடினர் ....
ஒப்பாரி வைத்தனர் ...
ஓலமிட்டனர் ....
சோகத்தில் நின்றனர் ....!!!

எல்லா நிகழ்விலும் ....
சிரித்த மனிதன் ...
மரணத்தில் மட்டும் ....
அழுவதேன் .....???

அடுத்து தனது மரணம் ...
பயத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலமும் ...
உதவிய ஓருவன் இறந்துவிட்டானே ....
ஏக்கத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலம் அத்துணை ....
இன்பத்தை தந்தவன் ....
இறந்துவிட்டானே -என்ற ...
வருத்தத்தால் அழுகின்றானா ....?

மொத்தத்தில் மரணத்தில் அழுகை ...
சுயநலத்தின் ஒன்றாய் தான்
இருக்கவேண்டும் ......
பிறப்பு இன்பமென்றால் ....
இறப்பும் இன்பம்தானே ...
உணர்ந்தவனுக்கேன் அழுகை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**மரணத்தில் ஏன் அழுகிறாய் **
+
கவி நாட்டியரசர்
கே இனியவன்

மரணத்தில் ஏன் அழுகிறாய்

மரணத்தில் ஏன் அழுகிறாய்....?
-----
குழந்தை பிறந்தது ....
பேர் சூட்டும் விழா ....
உறவினர் வந்தனர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

ஆண்டு ....
ஒன்று நிறைவு ....
பிறந்தநாள் வைபவம் ....
கேக் வெட்டினர் ....
பாட்டு பாடினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

திருமண அழைப்பு ....
உறவுகள் குவிந்தன ....
ஆசீர் வாதம் வழங்கினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

மரண அறிவிப்பு ....
உறவுகள் கூடினர் ....
ஒப்பாரி வைத்தனர் ...
ஓலமிட்டனர் ....
சோகத்தில் நின்றனர் ....!!!

எல்லா நிகழ்விலும் ....
சிரித்த மனிதன் ...
மரணத்தில் மட்டும் ....
அழுவதேன் .....???

அடுத்து தனது மரணம் ...
பயத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலமும் ...
உதவிய ஓருவன் இறந்துவிட்டானே ....
ஏக்கத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலம் அத்துணை ....
இன்பத்தை தந்தவன் ....
இறந்துவிட்டானே -என்ற ...
வருத்தத்தால் அழுகின்றானா ....?

மொத்தத்தில் மரணத்தில் அழுகை ...
சுயநலத்தின் ஒன்றாய் தான்
இருக்கவேண்டும் ......
பிறப்பு இன்பமென்றால் ....
இறப்பும் இன்பம்தானே ...
உணர்ந்தவனுக்கேன் அழுகை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**மரணத்தில் ஏன் அழுகிறாய் **
+
கவி நாட்டியரசர்
கே இனியவன்

கவிதையாய் வருகிறாய் ...!!!

மோகத்தால் ...
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!

என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!

என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999

மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....!!!

இன்னும் காதலை -தா
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!

மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!

உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998

உன் வலி இருக்கும் ...!!!

காதல்
கண்ணாடியை ....
உடைத்துவிட்டாய் ...
உடைந்த துண்டுகளில் ...
உன் முகம் ....!!!

நான் உன்ன ஞாபகம் ...
அதுதான் அடிக்கடி ...
என்னை மறக்கிறாய் ...!!!

தேன்
வேண்டுமென்றால் ....
தேனியிடம் வலியை....
பெற வேண்டும் ...
காதல் வேண்டுமென்றால் ...
உன் வலி இருக்கும் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 997

என் நினைவுகள் உனக்கு ....!!!

நம் காதல் அழகு ...
நிலா போல் தூரத்தில் ....
இருந்து பார்க்கும்போது ....!!!

குருவி தன் குஞ்சை ....
பொத்தி பொத்தி ....
வளர்த்தாலும் -ஒருநாள் ....
உன்னைப்போல் விட்டு ....
பறக்கத்தான் போகிறது....!!!

காதலில் நீ
காண்டாவன வெயில் ....
இடை இடையே ...
சிறு மழை போல் ....
என் நினைவுகள் உனக்கு ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 996

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

எனக்குள் காதல் மழை 15

நான்
ஓடும்போது நெஞ்சை ...
பொத்தி ஓடுகிறேன் ....
மற்றவர்களுக்கு ......
வேண்டுமென்றால் ....
சட்டை பையில் இருக்கும் ....
பணம் விழாமல் இருக்க ...
என்று ஜோசிக்கட்டும் ....!!!

நீ
அப்படி நினைத்துவிடாதே ...
உனக்கு தெரியும் நெஞ்சில் ...
இருப்பது நீ ....!!!

^
எனக்குள் காதல் மழை 15
கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 14

உன் கண்கள் ...
தானியக்கி நானே ....
தொலைக்காட்சி-நீ
அசைகின்றபோதேலாம்
அசைகிறேன்....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 12
கவிப்புயல் இனியவன்
^

உனக்கும் எனக்கும் ...
எத்தனை வேறுபாடுகள் ....
அழகால் அறிவால் பணத்தால் ...
ஒரே ஒரு ஒற்றுமை ....
உன்னிடமும் என்னிடமும் ...
காதல் கொண்ட இதயம் ...
இருக்கிறது ......!!!

^
எனக்குள் காதல் மழை 14
கவிப்புயல் இனியவன்

வியாழன், 14 ஏப்ரல், 2016

எனக்குள் காதல் மழை 11

கிளியிடம்
கொத்தும் பயிற்சி ....
எடுக்கப்போகிறேன் ...
உன்னை எப்படி ...
கொத்திக்கொண்டு ...
செல்லலாம் ...?
என்பதை அறிந்து கொள்ள....?

^
எனக்குள் காதல் மழை
தூறல் 11
கவிப்புயல் இனியவன்

புதன், 13 ஏப்ரல், 2016

இனிய புத்தாண்டே வருக....!

இனிய புத்தாண்டே
இதயங்களில் இனிய
இதமான சிந்தனையை
இன்பமாய் வழங்கிவிடு...!
இல்லறத்தில் எல்லோரும்
இன்பமாய் வாழ்ந்திடவும்...
இமைப்பொழுதும்...
இறைவனை நினைத்திடவும்..
இனிய புத்தாண்டே வருக....!
இல்லாமையை நீக்கி...
இறுமாப்புக்களையகற்றி...
இழிவான செயல்களை அகற்ற...
இனிய புத்தாண்டே வருக...!
இயற்கையை பாதுகாப்போம்...
இறைவனை துதிப்போம்....
இன்பமாய் வாழ்ந்திடுவோம்...
இளமையோடு வாழ்ந்திடுவோம்...!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிதே வாழ்ந்திடுவோம்...
இனியவனின்.....
இன்பமான....
இதயமான வாழ்த்துக்கள்

காதலில் விழுந்து விட்டேன் ...!!!

காதலை ...
உதட்டளவில் சொல்லி ...
இதயத்தை காயப்படுத்தும் ....
காதலில் விழுந்து விட்டேன் ...!!!

இன்னும் ...
காதல் சிறையில் நான் ...
இன்றே அவளும் ...
மாற வேண்டும் .....
அன்றேல் என் இதயம் ...
மாறவேண்டும் ....
அவள் நினைவுகள் ...
முள்ளாய் குத்தினாலும் ...
சுகமாய் தான் இருகிறது ...!!!
^
நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03
கே இனியவன்

காதல் வலியை தந்தது ....!!!

காதலை ....
வழியை நானே ....
வலியத்தேடி....
காதலோடு வாழ்ந்தேன் ....
காதல் வலியை ....
தந்தது ....!!!

வலியோடு ...
வாழ்ந்தாலும் ...
காதலோடு வாழ்கிறேன் ...
நினைவுகள் கள்ளி
முள்ளாய் குத்தினாலும் ....
காதல் இனித்து கொண்டே ....
எப்போது இருகிறது ....!!!

^
நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02
கே இனியவன்

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

நினைவுகள் எல்லாம் ....
இனிமையில்லை ....!
அழகான ரோஜாக்கு கீழ் ...
ஆபத்தான முள் ....!
முள்ளை கவனிப்பாய் ....
யாருமில்லை ரோஜா ....
அழகாக இருப்பதால் .....!

நெஞ்சுக்குள் .....
கள்ளிச்செடியை வைத்து ....
முகத்தில் ரோஜாவுடன் .....
வாழும் காதலர்களே ....
அதிகமாக இருக்கிறார்கள் ....!!!

^
நெஞ்சுக்குள் கள்ளிச்செடி
கே இனியவன் 

என்னை உணர்பவன் செல்வந்தன்

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........என்னை உணர்பவன் செல்வந்தன்  .......

^^^^^^^^^^^^^^^^^

நான் உங்கள் நீர் ....
பேசுகிறேன் .....
உலகின் தோற்றமும் ....
உலக முடிவும் ....
நானாக இருக்கிறேன் ....!!!

என்
உடன் பிறப்புகளே ...
நிலம் காற்று நெருப்பு ஆகாயம் .....
என் குழந்தைகளே ....
நதி, அருவி,குளம் ,குட்டை ...
கிணறு ,ஓடை ,பள்ளம் ....!!!

நான்
மகிழ்ச்சியாய் இருந்தால் ...
பருவ மழை ....
கோபமாய் இருந்தால் ....
சூறாவளி.....
வெறுப்படைந்தால் ...
சுனாமி ...................!!!

என்
சகோதரி நிலம் போல் ....
நானும் ஒரு தனி உலகம் ....
அவள் மனிதன் ,மிருகம் ...
மரங்கள் .பறவை .ஊர்வன ...
என்பவற்றை படைத்து ...
காக்கிறாள் - நானும் ...
நீருலகத்தை படைத்து ....
காக்கிறேன் .....................!!!

என்னை பற்றி ....
கொஞ்சம் சொல்கிறேன் ...
அருவிதான் என் கூந்தல் ...
ஊற்றுதான் என் ஆத்மா ....
நதி என் வாழ்க்கை நெறி ....
கடல் என் கருப்பை .....
நீராவி தற்காலிக மரணம் ....!!!

நீர் பறவைகளுக்கு - நான்
விளையாட்டு மைதானம் ....
மனிதனுக்கு வாழ்வாதாரம் ....
மிருகங்களுக்கு தாக சாந்தி ....!!!

மனிதா ....
வாழ்வாதாரமே நான்தான் ....
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ...
கோபப்படுதுகிறாய்.....
என் வன்மை குணமே ....
பனிகட்டி அதனோடு சீண்டாதே ...
என் சகோதரி நிலத்தை ....
கோபப்படுத்தாதே.- புவியை ...
வெப்பமாக்காதே..........!!!

நான் உருகினால் ...
நீங்கள் அனைவரும் இல்லை ....
நான் இரக்கமானவள்
என்னை உருக்கி விடாதீர் ......
உலகின் பெரும் செல்வம் ....
தண்ணீர் என்பதை எவன் ....
உணர்கிறானோ அவனே ....
செல்வந்தன் இது உறுதி ....!!!

================
கடல் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
=================

உன் கல்யாணத்தில் (கஸல்)

உன்
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!

நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!

என்
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995

நான் கானல் நீர்‍ (கஸல்)

நீ
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர்  ...!!!

நீ
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!

காதல் செய்யும்
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994

திருமணத்தோடு முடிந்துவிட்டது(கஸல்)

நான்
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!

காதல்
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு  .....
முடிந்துவிட்டது ....!!!

நீ
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993

கண்ணீரால் வளரும் பயிர்

நீ
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?

என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!

காதல்
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992

எழுந்திரு போராடு வெற்றி

விழுவது ஒன்றும் ....
தோல்வியல்ல ...
எல்லாமே விழுந்து ...
ஆகவேண்டும் ....!!!

விழுந்து எழாமல் ...
இருப்பதே தவறு .....
அப்படியும் விழுந்தால் ...
காய்ந்து விழும் ...
சருகுபோல் இருக்கணும் ....
விழுந்தாலும் பிறருக்கு ...
உதவுவதுபோல் ...!!!

^
எழுந்திரு போராடு வெற்றி
கே இனியவன் 

எழுந்திரு போராடு வெற்றி

வெற்றி....
மன திருப்தியை ....
கொடுக்கும் ...
தோல்வி ....
மன உறுதியை ...
கொடுக்கும் .....!!!

தோல்வியென்னும் ...
அக்கினிக்குள் வெந்து ....
வெற்றியென்னும் ...
அன்னத்தை உண் ....!!!

^
எழுந்திரு போராடு வெற்றி
கே இனியவன்

திங்கள், 11 ஏப்ரல், 2016

போராட்ட பெண்ணியம்

போராட்ட பெண்ணியம்
___

அடங்கியிருந்தது
போதும் பெண்ணே ....
குட்ட குட்ட குனிவது குற்றம் ...
எத்தனை நாள் தான் ....
குனிவாய்....?

உனக்கு
இல்லாத உரிமையை ....
கேட்கவில்லையே ....
உன் உரிமையை பறிக்கும் ....
மேலாதிக்கத்திடம் தானே ....
போராடுகிறாய் ....!!!

போராடு போராடு ...
உரிமை கிடைக்கும்வரை ...
போராடு ....!!!

^^^
போராட்ட பெண்ணியம்
கவி நாட்டியரசர்
கே இனியவன

மிதவாதப் பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம்
---------
இந்த உலகம் ஒரு ...
சக்தியால் இயங்குவதுபோல் ....
ஒவ்வொருவனின் இயக்ககும் ...
ஒரு பெண்ணினால் தான் ....
இயங்குகிறது .....!!!

பெண்மைக்கு யாரும் ....
உரிமை கொடுக்கத்தேவையில்லை....
யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ...
அவர்களுக்கு எல்லா உரிமையும் ...
இருக்கிறது என்பதை ஏற்றால் ....
பெண்ணியம் வாழ்ந்துகொண்டே ....
இருக்கும் .....!!!

^^^
மிதவாதப் பெண்ணியம்
கவி நாட்டியரசர்
கே இனியவன 

உன்னைவிட்டால் எதுவுமில்லை 05

நீங்கள் ...
எதையும் ...
தானம் செய்யுங்கள் ....
இன்னொரு உயிர் வாழ ...
வழிவகுக்கும் ....!!!
காதலை தானம் ...
செய்யாதீர்கள் ....
உங்களையும் கொல்லும்...
மற்ற உயிரையும் கொள்ளும் ...!!!

^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 05
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்

எனக்குள் காதல் மழை 10

நீ யார் ...?
எதை பார்த்தாலும் ....
எதை நினைத்தாலும் ....
எதை பேசினாலும் ....
நீயாக இருக்கும் நீ யார் ...?
கோயிலில் கும்பிட்டால் ...
விக்கிரகமாக நீ
நீ என் கடவுளா ...?
மாஜக்காறியா ....?
^
எனக்குள் காதல் மழை
தூறல் 10

எனக்குள் காதல் மழை 09

யார் வீட்டு
திருமணத்துக்கும் போ ...
பெண் தோழியாய் .....
மட்டும் இருந்துவிடாதே ....
அந்த திருமணத்தை ....
நிறுத்திய குற்றதுக்குள் ....
விழுந்துவிடாதே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை
தூறல் 09

எனக்குள் காதல் மழை 08

நீ
கரும்பு .....
மிக சிறிய எறும்புக்கும் ...
மிக பெரிய யானைக்கும் ....
பிடிப்பதுபோல் -உன்னை
எல்லோருக்கும் பிடிகிறது ....
ஒரே ஒரு முறை ...
என்னை நீ ....
பிடித்துவிடேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 08

ஏங்குகிறேன் ...!!!

உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!

உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

செத்து துடிக்கிறது இதயம் ....!!!

நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால்
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!!

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

ஆறுதல் சொல்லிவிட்டு போவாயா ....?

நீ
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!

ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வரிகளுக்கு வலியாகிவிடும்...!!!

நீ
தரும் வலிகளை...
உன் முகத்துக்கு ...
சொல்ல முடியவில்லை ....
முடிந்தால் என் வரிகளை ....
பார் வலிகள் தெரியும் ...!!!

என்....
வரிகளை ....
வெறும் வரிகளாக ....
பார்க்காதே அந்த ...
வரிகளுக்கு ......
வலியாகிவிடும்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்


எனக்கு சுகமாக இருக்கிறது .

இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 07

வானத்தில் ....
நட்சத்திரங்கள் ....
கண் சிமிட்டி முகிலை ....
காதலிக்கின்றன ....!!!

பூக்கள் கண் சிமிட்டி ...
தேனீக்களை ....
காதலிக்கின்றன ...!!!

நான் ...
உன்னை காதலிக்க ...
கண் சிமிட்ட மாட்டேன்....
என் கண்ணுக்குள் ....
நீ குடியிருக்கிறாயே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை
தூறல் 07

எனக்குள் காதல் மழை 06

நிலவுக்கு ...
போக மாட்டேன் ...
நிலவாக நீயே....
இருக்கிறாயே ....!!!

பட்டாம் பூச்சிகள் ...
அழகில்லை ......
உன்னருகில் அவை ....
வரும்போதே ....
அழகாகின்றன -நீயோ
பட்டாம் பூச்சிகளின் ...
இளவரசியாய் .....
இருக்கிறாயே   ....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 06
கவிநாட்டியரசர்
கே இனியவன் 

வியாழன், 7 ஏப்ரல், 2016

ஆசைப்படுகிறாய் ....!!!

நீ 
எத்தனை நியாயங்கள்.... 
சொன்னாலும் கேட்டாலும் ...
அத்தனைக்கும் விடை தேட ...
என்னால் முடியாது ...!!!

விடை தேட முற்பட்டால் ...
அது காதலுமாகாது....!!!

நான் 
உன் கண்ணாய் இருக்கவே ...
ஆசைப்பட்கிறேன் ....
நீ கண்ணீராய் இருக்கவே ...
ஆசைப்படுகிறாய் ....!!!

&

கவிப்புயல் இனியவன் 
உருக்கமான காதல் கவிதை 
இரக்கமானவர்களுக்கு புரியும்

இதயம் இல்லாத மனிதனாய்

அறுந்து இருக்கும் ....
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ 
என் மரணமும் நீ ....!!!

பேசிய நீ 
பேசாமல் இருப்பதுதான் ....
என் பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!

இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படித்துவிடு ....!!!

&

கவிப்புயல் இனியவன் 
உருக்கமான காதல் கவிதை 
இரக்கமானவர்களுக்கு புரியும்

உருக்கமான காதல் கவிதை

ஒருமுறை .... 
கண்ணுக்குள் ....
வந்துவிடு உன்னை ....
கண்ணுக்குள் புதைத்து ....
வைத்திருக்கிறேன் .....!!!

என்னால் உனக்கு ...
கண்ணீர் வந்தால் ...
உனக்கும் சேர்த்து நானே ....
அழுதுவிடுகிறேன் .....!!!

சிலவேளை 
கண்ணில் வெளியேற ....
நீ விரும்பினால் ....
கண்களை குருடாக்கி ....
சென்றுவிடு - உன்னை தவிர ...
நான் யாரையும் பார்க்க ,,,
விருமவில்லை ....!!!

&

கவிப்புயல் இனியவன் 
உருக்கமான காதல் கவிதை 
இரக்கமானவர்களுக்கு புரியும்

புதன், 6 ஏப்ரல், 2016

கவிப்புயல் இனியவன் கஸல் - 991

உன்னை கண்டால் ....
என் கண்கள் தானாக ....
மூடுகின்றன ....!!!

நான்
வெறும் கப்பல் ....
துடுப்பும் -நீ
பாய்மரமும் நீ
தள்ளாடும் கப்பலை ...
நிறுத்து ...!!!

காதல்
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 991

உன்னை விட்டால் எதுவுமில்லை 04

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்

உன்னை விட்டால் எதுவுமில்லை 03

அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!!!

இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!!!

^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்

உன்னை விட்டால் எதுவுமில்லை 02

உங்களிடம் ....
ஒரு சொத்துமில்லையே ...
கவலைபடாதீர்கள் ....!!!

உங்களிடம் இருக்கும் ....
காதலே சொத்துகளுக்கெல்லாம்...
தலையாய சொத்து ....
காதல் செய்துபாருங்கள் .....
எல்லாம் உங்கள் வசமாகும் ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்

உன்னை விட்டால் எதுவுமில்லை

எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!!!

நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!!!

காதலே ....
எனக்கு உன்னை விட்டால் ....
யாருமில்லை ....!!! 

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்