இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 மார்ச், 2014

ஆன்மீக ஹைகூக்கள்

ஆன்மீக ஹைகூக்கள்
----------------------------------
கடவுளின் இருப்பிடம்
குழந்தையின் பிறப்பிடம்
கருவறை

---------------------------------
ஆன்மீக ஹைகூக்கள்

சிறந்த இல்லறம்
சிறந்த உள்ளம்
இறை இருப்பு

------------------------------
ஆன்மீக ஹைகூக்கள்

கூடினான் சித்தன்
குறைந்தால் பித்தன்
- அறிவு -
-------------------------------
ஆன்மீக ஹைகூக்கள்

நிமிர்ந்து நின்று வாழ்
கோபுர கலசமாவாய்
-உடல் கூரே கோபுரம் _
--------------------------------
ஆன்மீக ஹைகூக்கள்

அறிவு தாகத்தை கூட்டும்
மோகத்தை நீக்கும்
-தவம் -

நான் கரைகிறேன் ....!!!

மழை விழுந்து மண் 
கட்டி அழுவது போல் 
உன் கண்ணீர் விழுந்து 
நான் கரைகிறேன் ....!!!

மரணத்தில் கூட 
நாம் இணைய முடியாது 
நீ வடக்கே நான் தெற்கே ...!!!

நீ இதயத்தை கிழித்தாய் 
அது எனக்கு புதிய வாழ்வை 
தந்தது -காதலி இல்லாமல் 
காதல் செய்வதை ....!!!

கஸல் 672

அணையாமல் பார்ப்போம் ...!!!

உன் கூந்தலில் சிக்கி
தவிக்கும் பூவைபோல்
என் இதயத்தில் நீ
சிக்கி தவிக்கிறாய் ....!!!

ஈட்டி
முனையில் நிற்கலாம்
உன் கண் முனையில்
நிற்க முடியாது ....!!!

காதலின் விளக்குக்கு
நான் திரி
உன் கண்ணீர் நெய்
அணையாமல் பார்ப்போம் ...!!!

கஸல் 675

அழப்போவது நம் காதல் ...!!!

இணைய மாட்டோம்
என்ற நம் காதல் வாழ்க்கை
இப்போது என்ன
செய்துகொண்டிருக்கும் ...?

நான் அழுது
உன்னை பெற்றேன் -நீ
அழுது காதலை
வெளியேற்றினாய் ...!!!

நான் அருகில் வரும்
போதெல்லாம் திரும்பி
பார்க்காமல் போகிறாய்
அழப்போவது நம் காதல் ...!!!

கஸல் 674

இந்த கவிதை வரிகள் ....!!!

என் இதயத்தில் இருந்த
காதல் விளக்கை
அணைத்தபின் -வந்த
வலிகள் தான் இந்த
கவிதை வரிகள் ....!!!

நேற்று நடந்த நம்
சந்திப்பில் சந்தேகம்
தோன்றியதால் இறந்து
போனது நம் காதல் ...!!!

வா
காதல் வழியே சென்று
காதல் வழியே சாவோம்
காதல் மறு பிறப்பு எடுக்கும் ...!!!

கஸல் 673

நான் கரைகிறேன் ....!!!

மழை விழுந்து மண்
கட்டி அழுவது போல்
உன் கண்ணீர் விழுந்து
நான் கரைகிறேன் ....!!!

மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ வடக்கே நான் தெற்கே ...!!!

நீ இதயத்தை கிழித்தாய்
அது எனக்கு புதிய வாழ்வை
தந்தது -காதலி இல்லாமல்
காதல் செய்வதை ....!!!

கஸல் 672

உனக்கும் காதல் வந்ததே ...???

மழைக்கு வந்து ஒரு நாள்
வாழ்ந்துவிட்டு போன
ஈசல் போல் செத்து
கிடக்கிறது - நம் காதல்
நினைவுகள் .....!!!

என்னை மறந்த நீ ...
சிலவேளை நினைக்கலாம் ....
அமாவாசை - அன்று...
உள்ள நட்சத்திரம்  போல் ...!!!

நான் கதறி அழுகிறேன்
என்னோடு காதல்
தேவதையும் அழுகிறாள்
உனக்கும் காதல் வந்ததே ...???

கஸல் 671

ஞாயிறு, 30 மார்ச், 2014

உன் அன்பு

உன்னிடம் ஒரு நாள்
சண்டையிட்டேன்
என்னை நீ நினைப்பதே
இல்லை என்று .

எப்படி கூறுகிறாய்
என்றாய் என்னிடம்.

எனக்கு
விக்கல் எடுக்கவே இல்லை
என்றேன் கலக்கத்துடன்

சற்றே என் தலை கலைத்து
முத்தமிட்டு சொன்னாய்,

அதெல்லாம்
எப்போதாவது
நினைப்பவர்களுக்கு
தான் அப்படி,
நான் தான் உன்னை
எப்போதும்நினைத்து
கொண்டிருக்கிறேனே
என்றாய் . . .

உன் வார்த்தைகளில்
உன்னை மீறி
மிதந்து வந்தது உன் அன்பு 

வெந்துவிடுவேன் தனியே

விறகு இல்லை ..
தீயும் இல்லை ..
ஆனால்
எரிகிறேன் உன் தவிர்ப்பால்
தந்துவிடு உன்னை
இல்லை
வெந்துவிடுவேன் தனியே 

உனக்காக துடித்துக் கொண்டு இருக்க...!!

எப்போதும் உன்னை பார்க்க...
வேண்டும் என்று...... ???

இறைவனிடம் கேட்டேன்...!

விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!

கண்களாகச் சொன்னார்...

கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!

உன் உயிராகச் சொன்னார்...

பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!

பின்பு தான்..

உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!! 

இரு தலை காதலாய் ...!!!

அவளின்
அனுமதி இல்லாமல்
நான் அவளை
காதலிதேன்
ஒருதலை காதலாய் ...!!!

அவளும்
என் அனுமதி
இல்லாமல்
ஒருத்தனை
காதலித்தாள்..
இரு தலை காதலாய் ...!!!

யாரையும் எனக்கு பிடிக்காது !!!

நீ எனக்கு தந்த
வலிகளை வடுக்களை
எண்ணி பார்த்தால்
உன்னை
உனக்கே பிடிக்காது ....!!!

ஆனால்

நீ என்னதான் வலியை
ஆயிரம் ஆயிரம் தந்தாலும்
உன்னை தவிர வேறு
யாரையும்
எனக்கு பிடிக்காது !!! 

நீ இல்லாமல்....!!!!

உன்னுடன் .செல்ல
சண்டை பிடிக்கும்
ஒவ்வொரு
தருணங்களிலும்
உணர்கிறேன்...!!!
காதலின் இன்பத்தை ...
அன்று நீ என் தோளில்
சாய்ந்து அழுத்த நினைவு
இன்று வரை என்
நெஞ்சில் கனக்குதடி!
நீ இல்லாமல்....!!!!

தொலைக்க வைத்தவள் நீ .....!!!

தனிமையில்
தொலைந்துவிட்டேன்
தொலைக்க வைத்தவள்
நீ .....!!!

நீ வந்தால்
உயிர் வாழ்வேன்
உன் மார்பில்
முகம் புதைத்தபடி....!!!

உனை காணும் வரை
இன்பத்தை அறிந்திறேன்
உன்னை கண்டபின்
துன்பத்தை பார்த்திறேன்....!!!

வாழ்வை என்றும்இன்பமாக
வைக்க விரல் பிடித்து வருவாயா
என் வாழ்வின் இறுதி வரை...???
வாழ்க்கைத் துணையாய்!

உன் நிழலையும்...!!

விலகி போனாய்
நெருங்கி வந்தேன்
வெறுத்து போனாய்
விரட்டி வந்தேன்
காதலை விட்டு  போகிறாய்
நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்
உன்னை மட்டும்அல்ல
உன் நிழலையும்...!!

ஒரு பிரளயமே

உனக்காக
காத்திருப்பது
ஒரு யுகத்துக்கு
காத்திருப்பதும்
நீ என்னை விட்டு
பிரியும் போது
ஒரு பிரளயமே
ஏற்படுகிறதடி...!!!

உயிர் எழுத்தில் உடை அணி ...

உயிர் எழுத்தில் உடை அணி ...
--------------------------------------------
'அ''டக்கமாக‌ உடை அணி
''ஆ''பாசமாக‌ உடை அணியாதே
''இ''ருக்கமாக‌ உடை அணியாதே
"ஈ'' ரமான‌ உடை அணியாதே
"உ"டலுக்கேற்ற‌ உடை அணி
"ஊ"ருக்காக‌ உடை அணியாதே
"எ"ளிமையான‌ உடை அணி
"ஏ"மாற்றும் காவி உடை அணியாதே
''ஐ''யத்தை ஏற்படுத்தும் உடை அணியாதே
''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே
''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அனணியாதே
"ஔ"வை சொன்னது கந்தையானாலும் கசக்கி கட்டு 

நம் காதலின் பின் .....!!!

நான்
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக  இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!

சனி, 29 மார்ச், 2014

காதலர்கள் பார்வையிடலாம் ...!!!

உன்னை
வர்ணித்த காதல்
வரிகளை கொண்டு
அருங்காட்சி சாலை
ஒன்றை
உருவாக்கியுள்ளேன்
என் இதயத்தில் ...!!!
காதலர்கள் பார்வையிடலாம் ...!!!

என் இதயத்தில் ...!!!

படபடக்கும்
உன் கண் சிமிட்டல்
பட்டாம் பூச்சிகளின்
ராணியாக ஜொலிக்கிறாய்
உன் கண் இமைக்கு
சிறகில்லை என்றாலும்
வலம் வருகிறாய்
பட்டாம் பூச்சியாய்
என் இதயத்தில் ...!!!

அதிசய காதல்பூ -நீ

பூவை நோக்கி பறந்து
சென்ற பட்டாம் பூச்சிகள்
உன்னை கண்டதும்
பூவை மறந்து  உன்னில்
மொய்க்கின்றன ...!!!
உலகில்
அதிசய காதல்பூ -நீ 

உன் உயிரை வந்து எடுத்து விடு

உன் உயிர் நான்
என் உயிர் நீ -என்று
அவசர பட்டு ...
சொல்லி விட்டேன் ...!!!
என் உயிர்
உன்னை நினைத்து
சிறிது சிறிதாக அழிகிறது ...!!!
உன் உயிரை வந்து எடுத்து விடு
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

ஓவியங்கள் அழியாது ....!!!

நீ
பார்த்த ஒவ்வொரு
பார்வையையும் என்
இதயம் ஓவியமாக
உன்னை வரைந்து
வைத்திருக்கிறது ...!!!
நம் காதல் அழிந்தாலும்
அந்த ஓவியங்கள்
அழியாது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்

சிறை கைதிக்கு கூட
தீர்ப்பு கிடைக்கும் ..
ஆயுள் தண்டனை ..
தூக்கு தண்டனை ..
நீ என்னை கைது செய்து
பலவருடங்கள்
நான் ஆயுள் கைதியா ..?
தூக்கு தண்டனை கைதியா ..?
தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்

உன் பதிலை எதிர் பார்க்கும்

நீ மட்டும் துடிக்கிறாய்
என்று நினைக்காதே
உன் வலியையும் சேர்த்து
நானும் துடிக்கிறேன்
சுமை கூடினால் மௌனம்
அதை நீ தவறாக புரிகிறாய்
உன் பதிலை எதிர் பார்க்கும்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

சுமக்கிறேன் உன்னையும் ...

கை கோர்த்து திரிந்த ...
காலத்தை மீட்டு பார்க்கிறேன் ...
சிறை கைதியாக...
வாழ்ந்திருக்கிறேன் ....!!!
விடுதலை ஆகியபின் தான்
கைதியின் சுமை தெரிகிறது
சுமக்கிறேன் உன்னையும் ...
பெரும் சுமையோடு ...!!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காதல் காற்று

என் மூச்சு காற்று
உன்னில் பட்டாலும்
படாவிட்டாலும்
காதல் காற்று உன்னில்
பட்டு கொண்டே இருக்கும் 

வியாழன், 27 மார்ச், 2014

உலகத்தை அழிக்கவில்லையா ...?

உலகம் அழியப்போகிறது
இந்த ஆண்டு அழியப்போகிறது
அடுத்த ஆண்டு அழியப்போகிறது
இன்னும் பத்து ஆண்டில்
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும்
உலகம் அழியவில்லையா...?

சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை  தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு
அழிந்து கொண்டு
வரவில்லையா ...?

உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?


என் மூச்சையே எடுத்துகொள் ...!!!

நான்
மூச்சு விடுவதே -என்
இதயத்தில் இருக்கும்....
நீ
வாழத்தான் -நான் ....
பிரபஞ்சத்தில் காற்று.....
குறைவாக இருந்தால்
என்
மூச்சையே  எடுத்துகொள் ...!!!

என் இதயத்தின் கை ...!!!

என்
இதயத்தை கிழித்து
வெளியே வந்து விடு
அப்போதும் ஒரு கை
உன்னை மீண்டும்
உள்ளே இழுக்கும்
என் இதயத்தின் கை ...!!!

என் காதல் தேசிய கீதம் ....!!!

வரிகள் இல்லாமல் ஒரு
பாடல் எழுதப்போகிறேன் ...!!!

ராகங்கள் இல்லாமல்
அதை இசையமைக்க
போகிறேன்......!!!

ஓசை இல்லாமல்
உணர்வுகளால் பாட
போகிறேன் ......!!!

உலகிற்கே பொருந்தும்
பாடலாக்க போகிறேன்
அதுதான் -என்
காதல் தேசிய கீதம் ....!!!

என் நிலையை உணராமல் ....???

கண்
நிறைந்த கண்ணீருடனும் ..
வலி
நிரம்பிய இதயத்துடனும் ...
என்னை
மறந்த நினைவுடனும் ...
தூக்கத்தை
தொலைத்த இரவுடனும் ...
இரவை
பகலாய் மாற்றி ...
உணவை
உணர்வாய் மதிக்காமல் ..
இருக்கிறேன் .....!!!

இன்றும் .. நேற்றும்  ....
கதைக்காமல் இருக்கிறாள்
நாளை என் நிலையை
உணராமல் ....???

அனுமதி தா ..

ஒருமுறை
உன் தோளில்  ...
சாய  அனுமதி தா ..
உன்னோடு காதல்  சுகம்
அனுபவிக்க இல்லை ..!!!

நான் தினமும்
விடும் கண்ணீரை
உன் தோள் உணரட்டும்
உயிரே ...!!!

காதலால்
காதல் செய்கிறேன் ...
காதலோடு காதலாய்
வாழ்கிறேன் .....!!!

சித்தம் துறந்தவன்

சரி விட்டு விடு என்னை ..
உன் நிலை நன்கு அறிவேன் ...
நீ யாரையும் திருமணம் செய் ..
என் காதல் மட்டும் என்றும்
தற்கொலை செய்யாது ....!!!

சிறிது காலம் நெருப்பில் ..
விழுந்த புழுயாய் துடிப்பேன் ...
மேலும் சில காலம் உயிர் ..
உள்ள சடலமாய் அலைவேன் ...
காதல் பைத்தியம் என்று ...
காதலை வியாபாரமாய் ..
செய்தவர்கள் சொல்வார்கள் ...!!!

உலகில் தெளிவானவர்கள்
இருவர் ..
ஒன்று சித்தன்
மற்றையது சித்தம் துறந்தவன்
உன்னால் தெளிவானேன் நான் ,....!!!

அழியாத வலிகள் ...!!!

வார்த்தையால் என்னை
வெட்டுவதை காட்டிலும்
வாளால் வெட்டி விடு
சொட்டும் இரத்தம் கூட
உன் பெயரையே சொல்லும் ....!!!

வெட்டு காயங்களை விட ...
உன் வெட்டி விடும் பார்வை ....
குற்றுயிராய் துடிக்கும் -என் ....
இதயம் படும் வேதனை....
இந்த ஜென்மம் அல்ல - எந்த
ஜென்மத்திலும் ...
அழியாத வலிகள் ...!!!

என் காதல் தோற்காது ......!!!

நீ என்னை வெறுத்தால்
நானும்  வெறுப்பேன்

நீ என்னை துரத்தினால்
நானும் தூரப்போவேன்

நீ என்னை மறந்தால்
நானும் மறப்பேன்

ஆனால் மறு ஜென்மம்
ஒன்று இருந்தால் -அங்கும்
உன்னை தான் காதலிப்பேன்

காலம் தான் தோற்குமே
தவிர என் காதல்
தோற்காது ......!!!

இறைவா திரும்பி பார்


விலக வேண்டாம் அன்பே

செவ்வாய், 25 மார்ச், 2014

அனுபவம்

அனுபவம்
---------------
இழந்தவற்றின் எச்சங்கள்
இழக்க போகின்றவற்றின்
கவசங்கள் .

மது

மது
------
மதியை கெடுக்கும்
மானத்தை பறிக்கும்
மாதுவை சீண்டும்
மண்டியிட வைக்கும்
மகிமையை மறைக்கும்

காதல்

காதல்
----------
சிறுகதையாக இருந்தால்
சுவை  இல்லை
தொடர் கதையாய் இருந்தால்
நிம்மதி இல்லை

கண்ணீர்

கண்ணீர்
------------
இரட்டை வேடம் போடும்
அற்புத திரவம் கண்ணீர்
ஆனந்தத்திலும் வரும்
ஆத்திரத்திலும் வரும்

சின்ன பொது கவிதை

அன்பில்லா சொற்கள்
அம்பைப்போல் குற்றும் ....!!!

பண்பிலா சொற்கள்
பாம்பைப்போல் கொத்தும் ...!!!

தெளிவில்லாத சொற்கள்
சிந்தனையை கொல்லும்....!!!

காதல் வலியை....

உனக்கு என் கவிதைகள்
பொழுது போக்கு -எனக்கு
என் நரம்பு வலியின்
வரிகள் - என்றோ ஒரு
நாள் உனக்கும் வலிக்கும்
அப்போது உணர்வாய்
காதல் வலியை....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காத்திருப்பேன்

மூச்சு விடும் நேரமெல்லாம்
உன் பேச்சையே உச்சரித்தேன்
உன் பேச்சை உச்சரித்து
என் பேச்சை மறந்தேன்
இப்போ நீ என்னை மறக்கிறாய்
காத்திருப்பேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

அவள் VS அவன் கவிதைகள் 02

அவள் VS அவன் கவிதைகள் 02
----------------------------------------------
அவள்
------------
நீ
என்னை
வேதனைபடுத்த
கவிதை எழுதுகிறாயா ..?
வேண்டுமென்றே
எழுதுகிறாயா ...?
வேடிக்கைக்கு
எழுதுகிறாயா ....?

அவன்
------------
கவிதை ஒரு அற்புத
மனநல வைத்தியன்
உன் பார்வையில் -நான்
எதுவாக இருக்கிறேனோ ..?
அதுவாக எடுத்து கொள் ...!!!
என் வரிகள் ஒவ்வொன்றும்
உன்னால் வந்த வலிகள் ...!!!

தொடரும் ...

அவள் VS அவன் கவிதைகள்

அவள் VS அவன் கவிதைகள்
-------------------------------------------

இன்னுமொரு கோணத்தில் கவிதையை எழுத
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அவள்
-------------
நான்
உன்னை நேசிக்கிறேன்
உன்னை காதலாக பார்க்க
முடியவில்லை
நீ காதலாக என்னை
பார்ப்பாய் .....
என்றால் என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
உன்னோடு நான் பேசவும்
மாட்டேன் ....!!!

அவன்
-------------
அன்பே நீ என்ன
இதயத்தை
வைத்திருக்கிறாயா ...?
இதயத்தை வாடகைக்கு
விடுகிறாயா ...?
உன்னை காதலித்தால்
என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
என்கிறாய் ...?
இதயம் கட்டிட
பொருள் இல்லை
நீ வாடகைக்கு விடுவத்தற்கு ...!!!


தொடரும்

உயிராய் காதலித்தாய் ....!!!

உனக்கு
தெரியும் உன் மீது
நான் வைத்த காதல்
உயிர் அழியும் வரை
தொடரும் என்று ....!!!

சூழ் நிலைகளை காட்டி
நீ வேண்டுமென்றால்
என்னை விட்டு பிரிந்து
செல் - ஒருதடையும்
இல்லை என்னால் ....!!!

அந்த கனமே என்னை
அடியோடு மறந்து விடு
முடியுமா ..? உன்னால் ..?
முடியாது நீயும் என்னை
உயிராய் காதலித்தாய் ....!!!

இரண்டுமே காதலில் தவறுதான் ...!!!

காதல் என்பது உடலுக்கு
அடிமை படுவதல்ல
அன்புக்கு.....
கட்டுப்படுவதும் அல்ல....!!!

உன்
உடலை காயபடுத்தினால்
நீ காதலின் உடலுக்கு
ஆசைப்படிருக்கிராய் ....!!!
சோகமாக ஒதுங்குகிறாய் 
என்றால்
அன்புக்கு அடிமைபட்டு
இருந்திருக்கிறாய்...!!!

இரண்டுமே காதலில்
தவறுதான் ...!!!

காதலில் உடலும்
உணர்வும் புனிதமானது
நட்பு காதலாக மாறமுடியும்
காதல் நட்பாக
மாறும் என்பது ஒருபோது
இருக்க முடியாது ...!!!

அந்த நட்பில் காதல்
மறைந்து இருக்கும் -இதை
உணர்வோடு காதலித்தவர்
உணர்ந்து கொண்டிருப்பர் ....!!!

திங்கள், 24 மார்ச், 2014

வேதனை தான் ....!!!

என்
கவிதை பிடித்திருக்கு
என்னை பிடிக்கவில்லை
உன்னை பிடித்திருக்கு
நீ காதல் செய்ததால் 
கவிதை அழுகிறது ....!!!

ஏட்டில் படிக்கும் போது
காதல் பிடிக்கும் உனக்கு
நான் வீட்டில் வந்தால்
பிடிக்குதில்லை ....!!!

எப்படியும்
காதலிக்கலாம்
என்ற உலகில் இப்படிதான்
காதலிக்கனும் என்று
நான் அடம் பிடிப்பது
வேதனை தான் ....!!!


கஸல் 670

காதல் விசத்தை குடித்து விட்டேன்

நீ குயிலா காகமா..?
காதல் கீதம் பாடுவாயா ..?
கரைவாயா ...?
காதல் வீணையுடன்
காத்திருக்கிறேன் ....!!!

திரும்பி பார்க்கும்
போதெல்லாம் உன்
உருவம் - இப்போ
திரும்பி பார்க்கவே
பயமாக இருக்கிறது ....!!!

காதல்
விசத்தை குடித்து
விட்டேன் -என்னை
காப்பாற்றுவாய்
என்ற ஆனந்தத்துடன் ...!!!

கஸல் 669

நீ என்னை பிரிந்த நாள்

நீ
திரும்பி பார்க்கும்
போது நான் இறந்து
விட்டேன் - நீ
அதிர்ச்சி கூட அடைய
வில்லை -உன்
இதயத்தை தா பார்க்க
வேண்டும் ...!!!

கடற்கரையில்
நம் கால் சுவடுதான்
அழிய வேண்டும்
நீ காதலையே
அழித்து விட்டாய் ....!!!

நல்ல நாள் பார்த்து
காதல் செய்தேன்
கேட்ட நாளில் காதல்
மலர்ந்தது - நீ என்னை
பிரிந்த   நாள் கேட்ட நாள் ...!!!

கஸல் 668

வைத்திருப்பது கல் கண் .....!!!

உன்னிடம் காதலை
கேட்டேன் நீ
கண்ணீரை தருகிறாய்
காதல் என்றால்
கண்ணீர்தான் ...!!!

உன் வலியால்
அழுகிறேன் -நீ
கண்ணீரை
இளநீராக பார்க்கிறாய் ...!!!

உன்னிடம் கண்
இருந்தால் காதல்
வந்திருக்கும் -நீ
வைத்திருப்பது
கல் கண் .....!!!

கஸல் 667

கவலையை தருகிறாய்

சூரியனுடன் - உன்
காதலை ஒப்பிடேன்
நீ எரிக்கிறாய்
என்பதால் -நீயோ
குளிர்கிறாய் .....!!!

காதல் காற்றில்
பட்டம் பறக்கிறது
காதல் நூல் அறுந்த
நிலையில் ....!!!

கவலை படாதே
என்று ...
சொல்லிக்கொண்டு
கவலையை தருகிறாய்
கண்ணீர் எனது என்பதால் ...!!!


கஸல் தொடர் 666

மீன் குஞ்சு கற்று தந்தது ....!!!

உறவுகளின் உக்கிர வார்த்தை
உடன் பிறப்புகளின் போலி வார்த்தை
உடன் பட்டவளின் உதறி எறிந்த வார்த்தை
உயிரோடு எரிக்கும் உக்கிர செயல் .....!!!

உள் அன்பை உக்கிரமாய் காட்டி
உயிரோடு பேசியதே இத்தனைக்கும்
உடன் காரணம் - புரிந்தேன்
உண்மையை பேசகூட எல்லை
உண்டு என்பதை புரிந்தேன் ....!!!

சலிப்படைந்து ஓரத்தில் இருந்த
ஆற்றங்கரையில் பெரு மூச்சு
விட்டபடி  வெறும் தரையில்
இருந்தேன் - கற்று தந்தது
மீன் குஞ்சுகள் வாழ்க்கை
தத்துவத்தை - எதிர்த்து வந்த
நீரோட்டத்தை சுள்ளி மீன்கள்
எதிர் நீச்சல் போட்டு செல்வதை
பார்த்தேன்  பக்குவம் அடைத்தேன் ...!!!

அளவுக்கு மீறினால்  அன்பும் விஷம்
துவண்டு விழுந்தால் தோளில்
போட்ட துண்டு கூட ஏறி மிதிக்கும்
வாழ்க்கையை எதிர் கொள்ள
வேண்டுமென்றால் எதுவும் அளவோடு
இருக்கவேண்டும் - அந்த மீன்
குஞ்சின் அளவான உடலும்
அசையாத நம்பிக்கையும் வாழ்க்கையை
கற்று தந்தது ,,,,,,!!!

நான் விரத்தியோடு வாழுகிறேன் ....!!!

நீ ஒருத்தி தான்
என்று காதலித்தேன்
நீ வேறொருத்தி
என்று ஆகியதால்
நான் விரத்தியோடு
வாழுகிறேன் ....!!!

எதிர் தாக்கம் வரகூடாது ....!!!

என்னுடன் நீ
இருக்கையில்
ஊரில் யாருக்கும்
தெரியவில்லை
நம் காதல் .....!!!

ஊருக்கெல்லாம்
தெரிந்த போது
நீ என் அருகில்
இல்லை .....!!!

காதலில் எதிர்ப்பு
வரலாம் இப்படி
எதிர் தாக்கம் வரகூடாது ....!!!

நீ கனவாய் வந்திருகிறாய்,,,,!!!

நீ அடிக்கடி கனவில்
காட்சி தந்தபோது
இன்பபட்டேன்
உன்னோடும் பகிர்ந்தேன்

இப்போதான் புரிகிறது
நீ கனவாக கலைவதற்கே
நீ கனவாய் வந்திருகிறாய்,,,,!!!

எரியாமல் இருக்கிறது ...!!!

இதயம்
என்ன சுமைதாங்கியா ...?
நீ கண்டபடி சுமையை
தருவதற்கு .....
இதயம்  ஈரமாக,,,,
இருப்பதால்....
தான் இத்தனை ...
சுமையிலும் ....
எரியாமல் இருக்கிறது ...!!!

காதல் நரம்பே ,,,,,, இல்லையென்று .....!!!

கற்பனையில் காலத்தை ,,,,
வீணாக்கி விட்டேன் ,,,,,,
உன் அன்பு கிடைக்கும்,,,,,
உன்னிடம் காதல் வரும் ,,,,,
என்று கற்பனையில்,,,,,,,,,
வாழ்ந்து விட்டேன் ...
இப்போதுதான் புரிகிறது ,,,,,
உனக்கு காதல் நரம்பே ,,,,,,
இல்லையென்று .....!!!

ஞாயிறு, 23 மார்ச், 2014

Haikoo

தவறுகளை நியாயப்படுத்தும் 
விட்ட தவறை உணர்த்தும் 
கண்ணீர்

Haikoo

நெருப்பிலும் கொடியது
புகையில்லாமல் புகையும் 
பகை

கே இனியவன் ஹைக்கூகள் 03

வென்றாலும் வலி 
தோற்றாலும் வலி 
காதல்

கே இனியவன் ஹைக்கூகள் 02

உன் அழகில் சுற்றுவேன் 
எனக்கும் மகிமை 
+வண்டு +

கே இனியவன் ஹைக்கூகள்

அன்போடு கிள்ளினாய் 
நீ மகிந்தாய்-நான் இறந்தேன் 
+ ரோஜா மலர் +

கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!

காதல் செய்யும் வயதில்
காதல் கவிதையை
நேசித்தேன் .....!!!

காதல் தோல்வி கண்ட போது
காதல் வலி கவிதையை
நேசித்தேன் ....!!!

வாழ்க்கைக்கு வந்தபோது
வாழ்க்கை கவிதையை
நேசித்தேன் .....!!!

உறவு  பிரிவை சந்தித்த வேளை
அன்பு கவிதையை
நேசித்தேன் .....!!!

பாசங்களை உணர்ந்த போது
பாச கவிதையை
நேசித்தேன் ....!!!

பட்ட கஸ்ரங்களை பகிர
நட்பு கவிதையை
நேசித்தேன் .....!!!

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த
பையடா உணர்ந்த போது
ஆன்மீக கவிதையை
நேசிக்கிறேன் .....!!!

கவிதையின் ரசனையும்
தேவையும் விருப்பு வெறுப்பும்
அவனவன் சுயநலத்தில் தான்
உள்ளது.....!!! 

சனி, 22 மார்ச், 2014

மெய் மறந்து பேசுவது நட்பல்ல

மெய் மறந்து பேசுவது நட்பல்ல
மெய் ஆக பேசுவது
நட்பு ,,,,,!!!

ஒப்பிட்டு பார்ப்பது நட்பல்ல
ஒற்றுமையை ஏற்படுத்துவது
 நட்பு ,,,,!!!

வர்த்தையாளம் காட்டுவது நட்பல்ல
வாழ்ந்து காட்டுவது
நட்பு ,,,,!!!

மன ஆறுதலுக்கு பேசுவது நட்பல்ல
மனமாக மாறுவது
நட்பு .....!!!

சோகத்தை ஆறுதல் படுத்துவது நட்பல்ல
சோகத்தை ஏற்படுத்தாமல் இருப்பது
நட்பு ,,,!!!

எல்லாவற்றுக்கும் தோள் கொடுப்பது நட்பல்ல
தேவையானதுக்கு தோள் கொடுப்பது
நட்பு ,,,,,!!!

ஒட்ட முடியாது

காதல் ஒரு கண்ணாடி 
கூஜாதான் 
பார்ப்பதற்கு அழகு 
உடைந்து விட்டால் 
ஒட்ட முடியாது

நான் எண்ணத்தால் எரிகிறேன் .....!!!

என் இதயமும் 
மெழுகு திரியும் 
ஒன்றுதான் - தனக்காக 
வாழாமல் பிறருக்காக 
எரிகிறது -நான் 
எனக்காக வாழாமல் 
உனக்காக உருகுகிறேன் 
அது எண்ணையால்
எரிகிறது 
நான் எண்ணத்தால் 
எரிகிறேன் .....!!!

நிழலாக இருந்தவள்

என் பின்னால் வரும்
நிழலாக இருந்தவள்
என்னை இப்போ
நிழலாகமாற்றி
விடுகிறாள் - நிஜம்
வரும் நினைவுடன்
காத்திருக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

உன்னை காதலிக்க வில்லை

காலத்தால் நிலைத்திருக்கும்
நம் காதல் காதல் மட்டுமல்ல
நம் உயிர் நட்பும் என்கிறேன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

மூச்சு விடுவதே உனக்காக

மூச்சு விடுவதே உனக்காக
நீ பேசமாட்டேன் என்றால்
மூச்சை துறப்பேன் உனக்காக
பேச்சுக்காக காதல் செய்யும்
வழி போக்கன் இல்லை நான்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன் 

அவள் காதலிக்கிறாளா ..?

ஒன்று மட்டும் உண்மை
செவ்வாயில் நீர் இருக்கும்
என்பதை விஞ்ஞானம்
கண்டு பிடித்தாலும்
அவளில் இதயத்தில்
நான் இருப்பதை கண்டு
பிடிக்க முடியாது ...!!!
அவள் காதலிக்கிறாளா ..?
கதகளி ஆடுறாளா ,,,?

வியாழன், 20 மார்ச், 2014

சிரிப்பு ( பூ)

பூக்கும் பூக்களுக்கும்
பொறமை வருகிறதாம்
உன் முகத்தில் மலரும்
சிரிப்பு ( பூ)  பார்த்த பிறகு.............! 

அறுவடை

அறுவடை
-------------------
உன் நினைவுகளை
எனக்குள் விதைத்த
விவசாயி நம் பிரிவு....!

வெட்டப்பட்ட மரம் கேட்கிறது ?

வெட்டப்பட்ட மரம்  கேட்கிறது ?
---------------------------------------------
மனிதா ..!
எங்களில் இருந்து ..
எத்தனையோ
சிலுவைகள் வந்து விட்டன
ஆனால்
உன்னில் இருந்து ஏன்..?
இன்னும்
ஒரு ஏசு வரவில்லை ?

எப்படியும் ஒட்டிக் கொண்டிருக்கும் ...!

சம்பல் இடித்த உரலை
எவ்வளவு துடைத்தாலும்
உரலில் ஏதாவது ஒரு
இடத்தில் சில துகள்கள்
காணப்படுவதுபோல்.
காதலை மறந்துவிட்டேன்
என்று சொன்னாலும்
சில நினைவுகள் எப்படியும்
ஒட்டிக் கொண்டிருக்கும் ...!

உண்மையான காதலை
இழந்து அதை மறக்காமல்
வாழ்ந்துகொண்டிருக்கும்
காதல் உள்ளங்களும் உயிர்
உள்ள தாஜ் மஹால் தான்....!!!

நட்புக்கும் காதலுக்கும் 10 வித்தியாசம்

நட்புக்கும் காதலுக்கும் 10 வித்தியாசம் 
--------------------------------------------------------
1) ஒரு இதயத்தைபறித்துக் கொள்வது காதல்! 
ஒரு இதயத்தையே பரிசளிப்பது நட்பு! 

2) கஷ்டங்களில்யோசித்து கைகொடுத்தது காதல்!
கஷ்டங்களில்யோசிக்காமல்கைகொடுத்தது நட்பு!

3) துயரங்களை நோக்கிஇழுத்துச்செல்வது காதல்!
உயரங்ளை நோக்கிஅழைத்துச்செல்வது நட்பு!

4) கட்டுப்பாடுகளைதளர்த்த முயற்சிப்பது காதல்!
கடமைகளைஉணர்த்த முயற்சிப்பது நட்பு!

5) உன் இலட்சியங்களைகனவாக்குவது காதல்!
உன் கனவுகளை இலட்சியமாக்குவது நட்பு!

6) உன் காதலின் வெற்றி திருமணம்
உன் நட்பின் வெற்றி உயிர் வரை தோழமை

7) பெற்றோரை ஏமாற்றுவது காதல்
பெரியோரால் ஆசீர் வதிக்கப்படுவது நட்பு

8) காத்திருக்க வைத்து கவலைப்படுத்துவது காதல்
கவலைப்படும் போது காத்திருந்து உதவும் நட்பு

9) எதிர்பால் கவர்ச்சியால் வருவது காதல்
எந்தப்பால் கவர்ச்சியில்லாமல் வருவது நட்பு

10) காயம் தரும் காதல் உனக்கு வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கேள் இறைவனிடம் .!

ஏழையின் வீட்டில்

ஏழையின்
வீட்டில் இரண்டு
அடுப்பு -ஒன்று
எப்போதும்
அணையாத வயிறு....!!!

இன்றைய நாள் வெற்றி நாள்-03

"00000 "......என எத்தனை
பூச்சியம் வந்தாலும் அதற்கு ஒரு
பெறுமதியோ பயனுமோ இல்லை .
எப்போது அதன்
முன் 1 என்ற இலக்கம் வருகிறதோ
அப்போது மிகப்பெரிய ( 100000 ) ஆவதுபோல் ..!!!
நீங்கள் என்று எத்தனை காரியங்களையும்
உங்களுக்காக செய்ததாலும் சமூக பயன்
பூச்சியமாக இருந்தால் வாழ்வில் பயனில்லை..?
இன்று ஒரு செயலை சுயநலமற்று
சமூக நலத்தில் செய்வாய் ஆனால்
இன்று நீ செய்த எந்த காரியமும் மிக
பெரிய பலனை பெறும் .....!!!
இந்த நாள் இனிமையாக இருக்க
கே இனியவனின்
இனிமையான வாழ்த்துக்கள்

நீ அழைக்கும் வரை ...?

ஒற்றை துளி கண்ணீர்

புதன், 19 மார்ச், 2014

படத்தின் கவிதை

கே இனியவன் படக்கவிதைகள் - 02

கே இனியவன் படக்கவிதைகள்

கேட்டு சொல் வெண்ணிலாவே ....!!!

Posted Imageஎன்னவன் வருவான் என்று
காத்திருக்கிறேன் - தூரத்தில்
கூட அவன் வரவை
காணவில்லை ,,,,!!!
என் எண்ண அலை
கடல் அலை விட
வேகமாக அடிப்பதை .......
நீ மறையமுன்
கேட்டு சொல்
வெண்ணிலாவே ....!!!
அவன் இன்று வரமாட்டானா?
என்றும் வரமாட்டானா ...?

நிம்மதியாய் இரு .....!!!

Posted Image
தூங்கடா தம்பி தூங்கு
நீ விழித்தால் பசி என்று
சொல்வாய் அதை கேட்கும்
கொடுமையை விட நீ
தூக்கமாய் இருகிறாய்
என்ற நிம்மதியில்
இருப்பேன்
தூங்கடா தம்பி தூங்கு ...!!!

அண்ணா நீ பேசும்
இதய ஓசை எனக்கு
கேட்கிறது
உனக்காகவே நான்
தூங்குவது போல்
நடிக்கிறேன்
எழுதிருக்க மாட்டேன்
நிம்மதியாய் இரு .....!!!

தொடரும் குறுங்கவி

நான்
உனக்கு குறுங்கவிதை
எழுதுவதால் தான்
உன் உள்ளமும்
குறுகியதோ 
தெரியவில்லை
தொடரும் குறுங்கவி
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

இவன் உன் உயிர் காதலன்

நீ என்னில் வைத்த
அன்பை உன் கண்
ஓரத்தில் வடியும்
கண்ணீர் எடுத்து
காட்டுதடி -என்
இதயம் வென்நீராய்,,,!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

இவன் உன் உயிர் காதலன்

உன் 
காதலுக்காய் காத்து 
காலம்  வீணாகிறது 
என்று தெரியும் 
தயங்க மாட்டேன் 
எறும்பு ஊர்ந்து 
கற்குழியும் என்றால் 
நீ .....?
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்

முளைக்கிறது முள் ...?

நீ நினைவு சின்னமாக
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?

என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!

காதல் செய்தாயா ,,,?

நாம் பழகியது உண்மை
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும்  காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?

என் வலி ஈன்ற வரிகள் 03

கல் எறியைவிட சொல்
எறி காயத்தை மாற்றாது
சொல் எறி என்னை காய
படுத்திய போதெல்லாம்
துவண்டு விழுந்தேன் ...!!!

இப்போதுதான் மீட்டு
பார்கிறேன்  அவர்கள்
எறியாவிட்டால் - என்
சிகரத்தை தொட்டிருக்க
முடியாது என்பதை
அன்றைய சொல் எறிகள்
இன்று வெற்றி பூக்கள்

செவ்வாய், 18 மார்ச், 2014

என் வலி ஈன்ற வரிகள் 02

கிரிகட் விளையாடி 
அரைசதமும் அடித்தேன் 
ஆட்டம் இழக்காமல் இருந்தேன் 
சக ஆட்டக்காரர் பத்து பேரும்
ஆட்டமிழந்தனர் -என்னையும் 
சேர்த்து ஆல் அவுட் என்றனர் 

இப்போதுதான் உணர்கிறேன் 
நம் தோல்விக்கும் கவலைக்கும் 
நாம் காரணம் இல்லாமலும் 
ஏற்படும் என்று - எதற்கு 
நாம் காரணமில்லாமல் தோல்வி 
அடைகிறோமோ அது
நம் வெற்றி.....!!!

என் வலி ஈன்ற வரிகள்

இளவயதில்தோல்வியை ....
கண்டு துவண்டு எல்லோரையும்..... 
போல் விழுந்தேன் தோலிவியின் .....
வலிகள் தெரிந்ததே தவிர ....
தோல்விகள் மறைந்திருந்த ...
வரிகள் இப்போ தான் புரிகிறது ....!!!

தோல்வி என்பது ஒவ்வொரு 
வாழ்க்கை வரிகள் கண்டு 
கொண்டவன் 
வெற்றி பெறுகிறான் ,,,,,!!!

உனக்கும் வலியை தருகிறேன்

நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

நீ வேறு நான் வேறு இல்லை

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

------------------------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

பேசும் போது மட்டும் காதல் தேவையில்லை .....

நான் பார்க்கும் இடமெல்லாம்
நீ தான் என்று இருக்கிறேன்
நீ பார்க்கும் இடமெல்லாம்
நானாக இருக்க வேண்டும்
அதுதான் உண்மை காதல்
பேசும் போது மட்டும் காதல்
தேவையில்லை .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன் 

அதையே எதிர் பார்க்கிறேன்

வாழ்க்கைக்கு ஒரு காதலையும்
வார்த்தைக்கு ஒரு காதலையும்
நான் செய்ய  வில்லை
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை
தூய காதல் -உன்னிடம் இருந்து
அதையே எதிர் பார்க்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன் 

உயிராய் நினைதேன்

உன்னை
உயிராய் நினைதேன்
என் உயிரை எடுக்கிறாய்
நினைவுகளால் இறந்து
கொண்டிருக்கிறேன்
சடலத்தை வந்து எடுத்து
செல் உயிரே .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

என்ன என்று மட்டும் கேட்டு விடாதே ...???

திரும்ப  திரும்ப நான்
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!

சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி  பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!

செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???

திங்கள், 17 மார்ச், 2014

காத்திருக்கிறேன் வாடாமல் பூவாக ...!!!


பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!

நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ  ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?

ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!

என் கைரேகை சோதிடர்

என்
கைரேகை சோதிடர்
நீ தான்  ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ

சிறைக்கைதியாகி விடுவேன்

என்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன் 

உயிர் மூன்றெழுத்து 05

நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?

------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

உயிர் மூன்றெழுத்து 04

உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

உயிர் மூன்றெழுத்து 03

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும் 
கவிதை எழுது உலகம் சுத்தமாகும் 
இரண்டையும் செய்பவன் ஞானி 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி