இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 மார்ச், 2014

சித்தம் துறந்தவன்

சரி விட்டு விடு என்னை ..
உன் நிலை நன்கு அறிவேன் ...
நீ யாரையும் திருமணம் செய் ..
என் காதல் மட்டும் என்றும்
தற்கொலை செய்யாது ....!!!

சிறிது காலம் நெருப்பில் ..
விழுந்த புழுயாய் துடிப்பேன் ...
மேலும் சில காலம் உயிர் ..
உள்ள சடலமாய் அலைவேன் ...
காதல் பைத்தியம் என்று ...
காதலை வியாபாரமாய் ..
செய்தவர்கள் சொல்வார்கள் ...!!!

உலகில் தெளிவானவர்கள்
இருவர் ..
ஒன்று சித்தன்
மற்றையது சித்தம் துறந்தவன்
உன்னால் தெளிவானேன் நான் ,....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக