பாடசாலை ...
தவணை ஆரம்பிக்கும் போது ...
சொல்கிறேன் என்று மீண்டும் ....
பூவழகனுக்கு ஒரு குழப்பத்தை ....
ஏற்படுத்தி விட்டு சென்றாள்.....!!!
(கடந்த கவிதையின் இறுதி )
*
*
*
பாடசாலையின் விடுமுறை ,,,,
ஜோடிகளுக்கு தண்டனை காலம் ....
கைபேசி இல்லை ...
முகநூல் இல்லை எதுவுமே இல்லை ....!!!
மீண்டும் பாடசாலை ஆரம்பித்தால் ...
மட்டுமே பேச முடியும் ,பார்க்க முடியும் ....
ஒருநாள் போவது ஒரு ஜென்மம் ....
போவதுபோல் நரக வேதனையாய் ....
கழிந்துபோகும் ......!!!
ஒரு மாதிரி காலம் கடந்தது ....
பாடசாலை ஆரம்பமாகியது .....
விடிந்தால் பாடசாலை ஆரம்பம் ....
பூவழகன் முகத்தில் பூவின் அழகு ....
இரவு முழுவதும் ஏக்கத்துடன் நிறைவு ....
கதிரவன் உதித்தான் பூவழகன்
மலர்ந்தான் ...!!!
பாடசாலை ஆரம்பமாகியது .....
எல்லோரும் வந்துவிட்டார்கள் ....
பூவழகியை காணவில்லை ....
பூவழகன் வாடிப்போனான் ,,,,,
பூவா என் ஆளை காணேல்ல ...
என்ற படி வந்தான் வினோத் ....
கடுப்பான பூவழகன் எனக்கு ...
என்ன தெரியும் என்று சின்ன ....
கோபத்தோடு சொன்னான் .....
மச்சி அவள் வந்த்தவுடன் -நீ
உதவவும் என்று மீண்டும் ....
நினைவூட்டினான் "வினோத்"
^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 11
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்